Posts

Showing posts from March, 2012

தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..

Image
மன்னிப்புக் கேட்பது பற்றி இதற்குமுன் ஒரு பதிவுல எழுதியிருந்தேன்.. நான் பார்த்தவரைக்கும் மனதார தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்வோர் மிக மிகக் குறைவுனு சத்தியமே செய்யலாம். ஏனோ தெரியல... இந்தப் பழக்கம் மட்டும் பெரும்பாலானவர்களிடம் இருக்குறதே இல்ல.. ஒரு தப்பு பண்ணிட்டோம்னா, அதை செய்யும்போது இருக்குற தைரியம், ஒத்துக்கும்போது இருக்குறது கிடையாது. யாராவது சுட்டிக்காட்டினாலும் வீண் வாக்குவாதம் செய்கிறார்களே ஒழிய பணிந்து போகும் பழக்கம் இருப்பதே இல்ல. தன்மேல் குறை சொல்லிட்டாங்களே.. என்று ஆதங்கப்படுறவங்களே இங்கு அதிகம். இதில் அவர் இவர் என்று பாரபட்சம் இல்லாம நான் உட்பட பல சமயங்கள்ல வாக்குவாதம் செய்ததுண்டு. (என்னையும் சொல்லிகிட்டேன்.. இப்ப சந்தோசமா??) என் நட்பு வட்டாரங்களில் இது மாதிரி பலரைப் பார்த்திருக்கேன். ஏதாவது தவறு செஞ்சிருந்து, அதை சுட்டிக்காட்டிய சந்தர்ப்பங்களில், அவங்களோட வாக்குவாதங்கள் முற்றிப்போய் பிரிவு வரைக்கும் கொண்டுவந்து விட்டிருக்குது. வாதம் எந்த விளிம்புக்குப் போனாலும்கூட “நீ சொல்றதும் சரிதான்.. இது என்னுடைய தவறுதான். மன்னிச்சிடு“ என்ற வார்

எல்லோர்க்கும் ஏதாவதொரு..

Image
எல்லோருக்கும் ஏதாவதொரு கோழைத்தனம் இருக்கத்தான் செய்கிறது.. தூக்கு மாட்டியவன் ஊன்று முயன்று தோற்றுப்போன பெருவிரல் போல... எல்லோருக்கும் ஏதாவதொரு நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.. வெளிச்சென்ற மூச்சு அடுத்த நொடி உள்வரும் என்பதைப் போல.. எல்லோருக்கும் ஏதாவதொரு ஏமாற்றம் இருக்கத்தான் செய்கிறது.. சப்பி வந்த குச்சி மிட்டாயைத் தவறவிட்ட குழந்தை மனம் போல.. எல்லோருக்கும் ஏதாவதொரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது.. ஒப்பாரியின் நடுவிலும் கவனம் ஈர்க்கும் மழலைச் சிரிப்பு போல.. எல்லோருக்கும் ஏதாவதொரு கோபம் இருக்கத்தான் செய்கிறது.. இயலாமையின் போது கண்ணாடிமுன் திட்டிக்கொள்ளும் ஆற்றாமை போல.. எல்லோருக்கும் ஏதாவதொரு காதல் இருக்கத்தான் செய்கிறது.. அடைத்த கதவின் இடுக்கிலும் கசியும் சாரல் மழை போல.. எல்லோருக்கும் ஏதாவதொரு வெறுமை இருக்கத்தான் செய்கிறது.. புறப்பட்ட பயணத்தில் பெறப்பட்ட கடைசி கையாட்டல் போல.. எல்லோருக்கும் ஏதாவதொரு காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.. வாழ்வின் நொடிகளை நகர்த்துவதற்கான சமாளிப்பு நடிப்புகள் போல.. . .

மறக்கப்பட்ட பொருட்கள்.. சில புகைப்படங்கள்

Image

“கழுகு“ வலைதளத்தில் வெளியான என்னுடைய பதிவு..

Image
பெண்களா... ?? சதைப்பிண்டங்களா.. ?? (“ கழுகு “ வலைதளத்தில் வெளியான என்னுடைய பதிவு..) என் அலுவலகத்தில் இரண்டு நாளைக்கு முன் ஆடிட் நடந்தது. சென்னையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு வந்திருந்தனர். அதில் ஒரு பெண்ணும் இருந்தார். நடுத்தர வயதுடைய , மதிக்கத்தக்க தோற்றத்துடையவராய் தெரிந்தார். அன்று அலுவலகம் முழுவதுமே காலையிலிருந்தே பரபரப்பாய் இருந்தது. எல்லா ஃபைல்களையும் பரிசோதித்து ஒவ்வொன்றாக சரிபார்த்தனர். அதிலிருந்த சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டவும் செய்தனர். அந்தப் பெண்மணி கொஞ்சம் கோபப்படுபவர் போல.. தாள்களில் இருந்த தவறுகளை எடுத்துக்காட்டி திட்டிக்கொண்டிருந்தார். பின் ஒருவழியாக ஆடிட் முடிந்து ரிப்போர்ட் கொடுத்தாயிற்று. இதெல்லாம் எல்லா அலுவலகத்துலயும் நடக்குறது தானே “ னு நெனைக்கலாம். நான் சொல்ல வந்தது அன்று நடந்தது பற்றியல்ல.. அவர்கள் சென்றபின் வந்த அடுத்தநாள் பற்றியது. ஆடிட் முடிந்த மறுநாள் மதியம் எல்லா பணியாளர்களும் அவரவர் கேபின்களில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பணியாளர் மெதுவாக ஆடிட் பற்றி பேச்செடுக்க , பின் அதுபற்றி உரையாடல

மின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)

Image
படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லீங்கோ... நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பயன்படுத்தி ஒளி பெற்று வந்தார்கள். பட்டனைத் தட்டியதும் பல்பு எரியக்கூடிய மின்சாரம் அப்போது கிடையாது. இப்போதோ ஏராளமான வடிவங்களில் மின்சார விளக்குகள் நமது வாழ்க்கையில் பயன்படுகின்றன. தொழிற்காலைகளில் பயன்படுத்தும் இயந்திரங்கள் எல்லாமே மின்சாரத்தினால் இயக்கப்படுகின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்துகிற ரயில், விமானம், தண்ணீர் இறைக்கும் மோட்டார் போன்ற முக்கியமானவை எல்லாமே மின்சாரத்தின் பயனால் உருவானவையே. மனித குலமான நமக்கு மின்சாரம் ஒரு வரப்பிரசாதமாகும். மின்சாரத்தை உண்டாக்கும் இயந்திரத்தை ” டைனமோ ” அல்லது “ஜெனரேட்டர் ” என்று கூறுகிறார்கள். இதில் பெரியதும், சக்தி வாய்ந்ததுமான காந்தம் உள்ளது. இந்த காந்த்த்தை “புலக் காந்தம்“ ( Field Magnet) என்று வழங்குகிறார்கள். புலக் காந்த்த்தின் இரண்டு உலோக வளையங்களால் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வளையங்கள் வெளியேயுள்ள கார்பன் துண்டு ஒன்றைத் தொட்டுக் கொண்டிருக்கும். டைனமோவில் உண்டாக்கப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகள்

என் பள்ளி நாட்கள் - தொடர்பதிவு..

Image
தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் பிரகாஷ் க்கு நன்றி.. நாம எவ்ளோ தான் வாழ்க்கைல முன்னேறினாலும், நம்மளோட ஆரம்பகாலத்தை நெனச்சுப் பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும். நாம இப்படியெல்லாம் இருந்திருக்கோமா?ங்குற கேள்வி நமக்குள்ள கட்டாயம் எழும். அது சில நேரம் சிரிப்பைத் தரலாம்.. சில சமயம் அழுகையை.. ஆனா அந்த நினைவுகள் என்னைக்கும் நம்ம மனசை விட்டு நீங்குறது இல்ல. அப்படிப்பட்ட நினைவுகள்ல நம்மளோட பள்ளிக் கால வாழ்க்கைக்கு பெரும்பங்கு உண்டு. இன்னைக்கும்.. என்னைக்கும் பசுமையான நாட்களா நமக்குள்ள இருந்துகிட்டே இருக்கும். நண்பர் பிரகாஷ் மாதிரி, வகுப்பு வாரியா பிரிச்சு சொல்ல முடியாதுனாலும் என்னோட பள்ளி வாழ்க்கைல குறிப்பிடக்கூடிய ஒரு சில நிகழ்வுகள் இங்கே... 1. இப்ப நா இருக்குறது மதுரையானாலும், எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல் தான். அங்க இருக்குற சென் ஜோசஃப் மெட்ரிக்குலேசன்ல தான் எல்கேஜில இருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். ஐந்தாவது படிக்கும்போது தான் அப்பா முதன்முதலா சைக்கிள் வாங்கி குடுத்தாரு. என்னதான் நான் தனியா சைக்கிள்ல போனாலும் அப்பா இன்னொரு சைக்கிள்ல பின்னாடியே வந்