Posts

Showing posts from October, 2015

பல்புகள் பலவிதம்..

Image
உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்த நாட்கள் அவை. அங்க நேரடி ஒளிபரப்பெல்லாம் கிடையாதுங்குறது பெரும் ஆறுதல். மதியம் 12:30 மணி செய்திக்கு 10:30க்கு ஷூட்டிங் ஆரம்பிக்கும். சாயந்திரம் 7:00 மணி செய்திக்கு4:30க்கு உள்ள இருக்கணும். சாயந்திர செய்தியையே நைட் 10:00 மணிக்கு மறுஒளிபரப்பு செய்வாங்க. கிரிக்கெட் செய்திகள் “இந்தியா வெற்றி“ “இந்தியா தோல்வி“னு ரெண்டு விதமா எங்களை வாசிக்க சொல்லி எடுத்து வச்சுக்குவாங்க. ரன் பற்றிய விபரங்கள் காட்சிகளுக்குப் பின்னணியா வாசிக்குறதால அதை மட்டும் 9.45க்கு அங்கயிருக்குற டெக்னீசியன் யாராவது பேசி ரெக்கார்ட் பண்ணிக்குவாங்க. அன்னைக்கு நல்ல மழை. மாலை செய்திகள்னு ஷூட்டிங் கிளம்பிகிட்டு இருந்தேன். TVS-50ல போறதால 4:15க்கு வீட்லருந்து கிளம்பினேன். போகப் போக மழை ஜாஸ்தியானதால ஒரு கோவில்ல வண்டியை நிறுத்திட்டு வெய்ட் பண்ணினேன். அங்கயே மணி 4:30. அப்போ செல்போன் புழக்கத்துல இல்லாத சமயம். டைரக்டருக்கு தகவல் சொல்லியாகணும். தாமதமாகும் பட்சத்துல இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே சொல்லணும்னு கண்டிசன். வர்றவரைக்கும் இன்னொரு வாசிப்பாளரோட பகுதியை எடுத்துகிட்டு இருப…