Friday, 30 September 2011

புகைப்படம் பார்த்து பதில் சொல்லுங்க..

கீழ இருக்குற படத்த சொடுக்கி பெருசு பண்ணி, வெள்ளை கலர் டிரெஸ் போட்டிருக்குற பொண்ணோட சட்டைல எத்தனை ப்ளூ கலர் புள்ளிகள் இருக்குனு கண்டுபிடிச்சு சொல்லுங்க பாக்கலாம்.. நல்லா உத்த்த்த்துப் பாக்கணும் சொல்லிட்டேன்..Tuesday, 27 September 2011

மீசைக்காரன் வாங்குன பல்பு..எப்ப பாத்தாலும் நா தான் பல்பு வாங்குறேன்னு நெனச்சுகிட்டு இருந்தேன். ஆனா நேத்து மீசைக்காரன் செம பல்பு வாங்குனான்.. இப்ப தான் எனக்கு ஆறுதலா இருக்கு.
அவ, தனியார் கம்பெனில அக்கவுண்டன்ட்டா வேலை பாத்துகிட்டிருக்குறா. ஆனாலும் புது வேலைக்காக, ஒரு பெரிய கம்பெனில வேலைக்கு அப்ளிகேஷன் போட்டிருந்தா. நேத்து சாயந்திரம் அந்த கம்பெனில இருந்து அவளுக்கு போன் பண்ணாங்க. அவளப் பத்தின தகவலெல்லாம் கேட்டுகிட்டு இருந்தாங்க. அவளும் பொறுமையா பதில் சொல்லிகிட்டு இருந்தா.
நமக்கொரு பழக்கம் இருக்கும். என்ன தான் நாம வாய் பேசினாலும், ஒரு மதிக்கத்தக்க இடத்துலயோ இல்ல வெளி நபர்கிட்டயோ ரொம்ம்ம்பவே டீசன்டா பேசுவோம். அதாவது நா ஒரு எச்சக்கல.. ஸாரி எஜூகேட்டட்“னு அடுத்தவங்க நெனைக்கனும்னு சீன் போடுவோம். அது மாதிரி தான் அவளும், நேத்து அவங்ககிட்ட போன்ல பேசும்போது, எஸ் சார்.. ஓகே சார், ஸ்யூர் சார்“னு ரொம்ம்ம்பவே தன்மையா பேசினா.. (கொய்யாலே.. ஃபார்வர்ட் மெசேஜ்க்கு அர்த்தம் கேக்கும்போது வச்சுக்குறேன்டி..)
இவ போட்ட சீன், அவங்களுக்கு இவ மேல ஒரு மரியாதைய ஏற்படுத்திடுச்சு போல.. “நாளைக்கு நேர்ல வாங்க, சின்னதா ஒரு நேர்முக இன்டர்வியூ வச்சு செலக்ட் பண்ணிக்கிறோம்“னு சொன்னாங்க. அவளும் சரினு சொன்னா..
இப்ப தான் நீங்க நல்லா கவனிக்கணும்.. மீசைக்காரன், ஏற்கனவே தற்காலிகமா ஒரு கம்பெனில வேலை பார்க்குறதால, புது வேலைல எப்ப ஜாயிண்ட் பண்ண முடியும்னு அவங்க கேட்டாங்க. அதுக்கு அவ, “நோ ப்ராப்ளம் சார். நீங்க ஜாய்ண்ட் பண்ண சொல்ற டேட்ல நா கரெக்ட்டா சேர்ந்திட்றேன்“னு சொன்னா. அதுக்கு அவரு “ஆஃப்டர் (After) தீபாவளி?னு கேட்டாரு.. இவ காதுல “ஹேப்பி தீபாவளி“னு விழுந்திருக்கு. (ஹா ஹா ஹா.. அசிங்கப்பட்டான் டா ஆட்டோக்காரன்..)
உடனே பிள்ளைக்கு சந்தோசம் தாங்கல.. “ஓ தாங்க்யூ சார். சேம் டு யூ சார்.. உங்க ஃபேமிலிக்கும் சொல்லிடுங்க சார்“னு சொல்லி கெக்கே பெக்கேனு சிரிச்சுகிட்டேயிருந்தா.. கொஞ்ச நேரம் பேசாம இருந்த அவரு, “ஹேப்பி தீபாவளி இல்லம்மா.. After தீபாவளினு சொன்னேன், சரி சரி நாளைக்கு வாங்க பாத்துக்கலாம்“னு சொல்லிட்டு போன வச்சுட்டார்.
செம பல்பு இல்ல??? அதுக்கப்புறம் மீசைக்காரன் முகம் எப்டி இருந்துச்சுனு நீங்களே கற்பனை பண்ணிப் பாத்துக்கங்க..
.
.

Monday, 26 September 2011

தூக்கத்தில் குழந்தைகள் உச்சா போவதைத் தடுக்க – சில ஆலோசனைகள்..இரவில் தூங்கும்போது குழந்தை படுக்கையை நனைத்துவிடும் பழக்கத்தை Nocturnal enuresis என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் பெரும்பாலும் படுக்கையில் சிறுநீர் கழிக்க மூன்று காரணங்களைச் சொல்லலாம்.
1.       சிறுநீர்ப் பையின் கொள்ளளவு குறைவாக இருந்தால் சிறுநீரை அடக்க முடியாமல் போகலாம். (ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அடக்க முடியாது நனைத்து விடலாம்).
2.       இரவு படுக்கைக்குச் செல்லும்முன் நிறைய தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கச் செல்வதாலும் இருக்கலாம்.
3.       மனரீதியான பிரச்சனைகளாலும் இருக்கலாம்.
அடிப்படைக் காரணம்:
பொதுவாகவே குழந்தையின் மூளை முதிர்ச்சியடைய சுமார் ஐந்தாண்டுகள் ஆகும். எனவே 5-6 வயது வரை படுக்கையை நனைத்தால் அது இயற்கைதான். அதற்குமேல் இருந்தால் சிறுநீர் உறுப்புகளில் கோளாறு இருந்தாலோ, நரம்புத் தளர்ச்சி இருந்தாலோ அல்லது மனரீதியாகப் பாதிப்பு இருந்தாலோ படுக்கையை நனைக்க வாய்ப்புண்டு.
தடுக்க எளிய முறைகள்:
1.       பகல் நேரத்தில் சிறுநீர் கழிக்க விரும்பும்போது சிறிது நேரம் அடக்கப் பயிற்சி கொடுத்தால் சிறுநீர்ப் பையின் கொள்ளளவு பெரிதாகும்.
2.       இரவு 7.30 மணிக்குள் உணவு கொடுத்து விடுங்கள்.
3.       இரவு உணவு உலர்ந்த வகையாக இட்லி, புளிசாதம், தேங்காய் சாதம் போன்ற வகையாகக் கொடுங்கள். பால் கொடுத்தால் எட்டு மணிக்குள் கொடுத்து விடுங்கள்.
4.       மற்றவர்கள் எதிரில் குழந்தையைத் திட்டவோ, கேலி செய்யவோ கூடாது.
5.       முக்கியமாக டாக்டரிடம் காட்டி அவர் கூறும் ஆலோசனைப்படி மூக்கில் விடும் சொட்டு மருந்து கொடுக்கலாம்.
முக்கியமாக உங்களுடைய அரவணைப்பு மிக அவசியம். படுக்கையை நனைக்காத நாள் எது என்று கவனித்து வாருங்கள். ஐந்து நாள் தொடர்ந்தால் குழந்தையைப் பாராட்டி பரிசு ஒன்று கொடுங்களேன். பலன் கிடைக்கும். வெளியிடங்களில் சரியான தூக்கமில்லாமல் இருப்பதால் விழிப்பு ஏற்பட்டு டாய்லெட்டில் சிறுநீர் கழிக்க எழுந்துவிடும்.
மனோதத்துவ ரீதியான காரணங்கள்:
புதிதாகப் பள்ளி சேர்தல் அல்லது ஆசிரியை திட்டுதல் அல்லது தனக்குப் பின் புதிய வரவாக வீட்டில் மற்றொரு குழந்தை பிறந்ததால்  அதற்கு முன்னுரை தந்து தன்னை நீங்கள் மறந்துவிடுதல் அல்லது தனக்குப் பிடித்த தாத்தா பாட்டி இறந்துவிடுதல் அல்லது பெற்றோர்களாகிய உங்களிடம் சண்டை சச்சரவுகள் இவை குழந்தை மனதைப் பாதித்து விடும்.
பிஞ்சுமனம் கொண்ட குழந்தை படுக்கையை நனைத்துவிட்ட அற்ப காரணத்துக்காக அவர்களை நோகடிக்காது அரவணையுங்கள். உங்கள் குழந்தைக்கு நல்ல பழக்கங்கள் பிடிபட நீங்கள் உதவ வேண்டும். தவறாது கடைப்பிடிப்பதால் பழக்கங்கள் இயல்பான தன்மைபோல என்றும் நிலைத்து விடும். ஆனால் சக்திக்கு ஏற்றவாறு பழக்கங்களைப் புகுத்துங்கள். அதுவும் அன்பாக நயமாக இரண்டும் கலந்த முறையில் நடைபெறட்டும்.
.
(குழந்தை வளர்ப்புக் கலை புத்தகத்திலிருந்து)
.
.

Wednesday, 21 September 2011

தடுக்கி விழும்போது தாங்கிப் பிடிச்சா லவ் வருதுடோய்... எப்ப தான் இவனுக திருந்துவாய்ங்களோ..
நேத்து 8.30 மணிக்கு விஜய் டிவில சரவணன் மீனாட்சி தொடர் பாத்தேன். பொதுவா எனக்கு சீரியல் பாக்குற பழக்கம் இல்லீங்க... ஏற்கனவே ட்ரெய்லர் பார்த்துருக்கேன். புது தொடர், லவ் ஸ்டோரி,  அதுனால ஒரு ஆர்வத்துல பாத்தேன்.
சீரியல் என்னவோ அரைமணி நேரம்னு சொன்னாங்க. அதுல பத்து நிமிஷம் விளம்பரம் போட்டுட்டாங்க. மீதியிருந்த இருவது நிமிஷத்துல ஹீரோவும் ஹீரோயினும் லுக் விடவே சரியாப் போய்டுச்சு. பேக்ரவுண்ட்“ல பழைய காதல் பாட்ட ஓட விட்டுட்டு மாறி மாறி ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டேயிருக்காங்க.
ஒரு சீன்ல, ஆட்டோவுல பக்கத்து பக்கத்துல உக்காந்து போகுற மாதிரி காட்டினாங்க. ஆட்டோ குலுங்கும்போதெல்லாம் ரெண்டுபேரும் உரசிக்கும்போது ரொமாண்டிக்கா லுக் விட்டுக்குவாங்க. அப்புறம், சாப்பிட்றதுக்கு ஹோட்டல் போவாங்க. முதல்ல எதிரெதிர்ல உக்காருவாங்க. கொஞ்சநேரம் கழிச்சு கூட்டமாயிருக்குனு பக்கத்து பக்கத்துல உக்கார வேண்டிய சூழ்நிலை வரும்.. உடனே ரொமாண்டிக் லுக்கு தான்.
அப்புறம் ஒரு சீன்ல கோவிலுக்கு போவாங்க. அங்க ரெண்டு பேரோட செருப்பையும் ஒண்ணா கழட்டி வைப்பாங்க.. உடனே வெக்கப்பட்டுகிட்டே லுக் விட்டுக்குவாங்க. குளத்துல கால் நெனச்சுட்டு கோவிலுக்குள்ள போகணும்னு சொல்லி ரெண்டு பேரும் இறங்குவாங்க. அப்ப பாத்து ஹீரோவுக்கு கால் வழுக்கிடும். உடனே ஹீரோயின், அவனோட கைய தாங்கிப் பிடிப்பா.. உடனே ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க.. அட அட... காதல் காட்சில பிண்றாங்களாம்.
எப்ப தான் இவனுக திருந்துவாய்ங்களோ தெரியல. தமிழ் சினிமால காலங்காலமா இப்படித்தான் காதல் காட்சி இருந்துச்சு. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மாறிகிட்டு வராங்க. அது இப்ப சீரியல்ல ஆரம்பிச்சிடுச்சு.
நா தெரியாமத் தான் கேக்குறேன்.. அதெப்டிங்க??? பக்கத்துல உக்காந்தா லவ் வருது??? தடுக்கி விழுறவங்கள தாங்கினா லவ் வருது??? ஒரே புத்தகத்த ரெண்டு பேரும் எடுத்தா லவ் வருது??? கீழ விழுந்த பேனாவ எடுத்து குடுத்தா லவ் வருது??? போன்ல ஹலோ சொன்னா லவ் வருது??? பஸ்ல பேக்“க வாங்கினா லவ் வருது??? கக்கூஸ்“க்கு எதிரெதிர் க்யூவுல நின்னா கூட லவ் வரும் போல..
என்னடானு கேட்டா.. போன ஜென்மத்து விட்ட குறை தொட்ட குறையாம்.. மண்ணாங்கட்டி.
இந்த மாதிரி சினிமாத்தனமான காட்சிகள்ல, லவ் வர்ற சந்தர்ப்பங்கள் தான் இப்படினா, லவ் வந்த்துக்கப்புறம் நடக்குற காட்சிகள்னு போடுவாங்க பாருங்க... அந்தக் கொடுமைய தாங்க முடியாது.
பேதி மாத்திரைய முழுங்கின மாதிரி, எந்நேரமும் நெழுஞ்சுகிட்டு உக்கார்ரதும்.. (வெக்கப்பட்றாங்களாமாம்..), லேசா விரல் பட்டுட்டா கூட கண்ணையும் உதட்டையும் தனித்தனியா ஜூம் போட்டு காட்றதும்.., தடுக்கி விழுறதும் தாங்கிப் பிடிக்கிறதும்.. கனவுக்காட்சினு ஏதேதோ பிணாத்துறதும்.. ஷ்ஷ்ஷ்ப்ப்பா.. ம்ம்ம்முடியல..
யதார்த்தமா, நண்பர்கள் மாதிரி, எந்த வித தயக்கமோ சலனமோ இல்லாம, சராசரியா பழகுற காதலர்களும் இருக்கத்தானே செய்றாங்க...??? அதையெல்லாம் விட்டுட்டு, பெரும்பாலான சினிமாக்கள்லயும் சீரியல்லயும் ஏன் இன்னும் ஆதிகாலத்து குண்டுச்சட்டியவே படமாக்குறாங்க?? இந்த மாதிரி எடுக்கப்படும் காட்சிகள்ல, உணர்வுகளை விட உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தர்றாங்க.
இந்த மாதிரியான மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், நிஜ வாழ்க்கைலயும் நடக்குதா??? அப்படியே நடந்தாலும் அந்த காதல் நிலைக்குதா??? அனுபவப்பட்டவங்க யாராவது தெளிவுபடுத்துங்கப்பா..
.
.

Tuesday, 20 September 2011

100 பேர் பிரியாணி ஆயிட்டாங்க.. (சும்மா ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம...)ஒரு வழியா என் மொக்கை ப்ளாக்ல நூறு பேர் இணைஞ்சிருக்காங்க. (பழைய ப்ளாக்ல 248 பேர் இருந்தாங்க.. ம்ம்ம்.. இட்ஸ் ஆல் இன் த கேம் யா..). இன்னும் தொடரப்போகும் என்னோட மொக்கை பதிவுகள நிறைய பேர் படிச்சு ஒரு வழியாகணும்னு கேட்டுக்குறேன்...
(பழைய ப்ளாக்ல இப்படித்தான் 100 ஃபாலோயர்ஸ் வந்துட்டாங்கனு பதிவு போட்டேன். போட்ட அஞ்சாவது நிமிசம் அது 99 ஆய்டுச்சு. அந்த நல்ல புள்ளை யாருனு தெரில.. அவ்வ்வ்வ்வ்...)
இதுவரைக்கும் என்னோட தளத்துல பிரியாணி ஆனவங்களுக்கு நன்றி.. இனிமேல் ஆகப்போறவங்களுக்கு என் (அனுதாப) வாழ்த்துக்கள்.
சரி சரி.. வழக்கம்போல அடுத்த (மொக்கை) பதிவுல சந்திக்கலாமுங்க..
.
.

Friday, 16 September 2011

எனக்கொரு டவுட்டு..


பாடல் ஒன்றை டவுன்லோட் செய்வதற்காக இணைத்தில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது தரவிறக்கம் செய்யும் லிங்க்கை சொடுக்கியவுடன் கீழுள்ள விபரம் கேட்கப்பட்டது. ஏன் இப்படி கேக்குறாங்கனு புரியல.
Code நம்பர டைப் பண்ண சொன்னா பத்தாதா?
Please verify that you are human னு வருது..
காலக்கொடுமை டா..


.
.

Wednesday, 14 September 2011

கடுப்பேத்துறதுக்குனே கல்யாணம் பண்ணிக்கிறாய்ங்க...போன வாரம், ராசிப்பொண்ணுக்கு விருந்து குடுத்தோம். மீசைக்காரனும் நானும் தான் சமையல். மட்டன், சிக்கன், மீன்“னு எல்லாமே சமைச்சிருந்தோம். (நம்புங்க.. நா நல்லா சமைப்பேன்..). அரட்டை அடிச்சுகிட்டே சமைச்சதுனால, சமையல் முடிய மதியம் 3.30 ஆய்டுச்சு. எல்லாருக்கும் நல்ல பசி. ஒரு வழியா சாப்பிட உக்காந்தாங்க.
சமைச்சதை எல்லாம் டைனிங் டேபிள்ல எடுத்துவச்சுகிட்டு இருந்தோம். கடைசியா மீன் குழம்ப வேற பாத்திரத்துல மாத்திகட்டு இருந்தேன். பாத்திரம் வெயிட்டா இருந்ததால, குழம்புல இருந்த மீனை எல்லாம் முதல்ல கரண்டில எடுத்து மாத்திட்டு, அப்புறம் குழம்ப அதுல ஊத்திகிட்டு இருந்தேன். பசி தாங்க முடியாம உள்ள வந்த ராசிப்பொண்ணு அத பாத்துட்டு “என்னடி பண்ற?“னு கேட்டா. உடனே நா ரெண்டு பாத்திரங்களையும் காட்டி “இது மீனு, இது புளி குழம்பு, ரெண்டையும் ஒண்ணா ஊத்துனா மீன் குழம்பாயிடும்“னு சொன்னேன். “ஓ அப்படியா? சரி சீக்கிரம் கொண்டு வா, எனக்குப் பசிக்குது“னு சொல்லிட்டு எந்த ரியாக்சனும் குடுக்காம போயிட்டா. (உருப்ட்ட மாதிரி தான்..)
*******************************************
என் மொபைல்ல சார்ஜ் சுத்தமா இல்லனு கனெக்டர் உபயோகப்படுத்தி மீசைக்காரனோட சார்ஜர்ல போட்ருந்தேன்.  சாப்பிட்டுட்டு மறுபடியும் அரட்டைய கண்டினியூ பண்ணினோம். பேசிகிட்டு இருக்கும்போது திடீருனு எனக்கு போன் வந்துச்சு. (கனெக்டர கழட்டாம) சார்ஜர மட்டும் கழட்டிவிட்டுட்டு ஆன் பண்ணி பேசினேன். என்னையவே பாத்துகிட்டு இருந்த ராசிப்பொண்ணு, “ஏண்டி கனெக்டர கழட்டாம பேசுற?“னு கேட்டா. உடனே நா “கனெக்டரோட பேசினா டவர் நல்லா கிடைக்கும்டி“னு சொன்னேன். “ஓ அப்படியா?“னு கேட்டுட்டு பேசாம போயிட்டா. (நம்மள நம்புறதுக்கும் ஒரு ஜீவன் இருக்குதே..)
*******************************************
அன்னைக்கு சாயந்திரம் எல்லாரும் வெளில போய் சாப்பிடலாம்னு பேசிவச்சிருந்தோம். புதுசா கல்யாணமானதால அது ராசிப்பொண்ணோட ட்ரீட்னு சொல்லிருந்தோம். அவளும் சரினு சொல்லிட்டா. மனசுக்குள்ள வேண்டிகிட்டே இருந்தா போல, கரெக்டா சாயந்திரம் 4 மணியில இருந்து மழை பிடிச்சிக்கிச்சு. வேற வழியில்லாம ஃபாத்திமா காலேஜ் பக்கத்துல இருக்குற கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்க்கு போய் ஆளுக்கொரு ஜூஸ், ஐஸ்கிரீமாவது சாப்பிடலாம்னு போனோம்.  கடைக்குள்ள போனதுதான் தாமதம், திரும்பி பாத்தா ராசிப்பொண்ணையும் (புது மாப்பிள்ளை) பலியாடையும்  காணோம். பொறுத்துப் பொறுத்துப் பாத்துட்டு எனக்கும் மீசைக்காரனுக்கும் ஐஸ்கிரீம் வாங்கிட்டு, மத்தவங்களுக்கு ஜூஸ் வாங்கிக்குடுத்துட்டோம். (பில்லு என் தலைல விழுந்துச்சு.. அவ்வ்வ்வ்).
கொஞ்ச நேரம் கழிச்சு கடைக்குள்ளயிருந்து அதுக ரெண்டும் கை கோர்த்து நடந்து வந்துச்சுக. கடுப்பாகி “எங்கடி போன“னு கேட்டா... “அவரு எனக்காக கிப்ட் வாங்கி தரேன்னு சொன்னாரு.. அதான் அப்படியே கடைக்குள்ள வாக் போயிட்டு வந்தோம். அதுல நம்ம ட்ரீட்ட சுத்தமா மறந்துட்டேன், சாரி“னு கூலா சொல்றா.. (படுபாவி..)
*******************************************
மறுநாள் எக்கோ பார்க் போயிருந்தோம். அங்க சாயந்திரமானா, பெரிய உயரமான ஃபவுண்டெயின் ஒண்ணு ஆன் பண்ணுவாங்க. எல்லாரும் சாதாரணமா வேடிக்கை பாத்துகிட்டு இருந்தோம். யதார்த்தமா திரும்பி பாத்தா... ராசிப்பொண்ணு, பலியாடோட கைய பிடிச்சுகிட்டு என்னவோ முதல் தடவையா அந்த ஃபவுண்டெயின பாக்குற மாதிரி “ஹே.. எவ்ளோ அழகா இருக்கு பாருங்களேன்“னு சினிமா ஹீரோயின் மாதிரி சீன் போட்டுகிட்டு இருந்தா. அப்பப்ப அந்த சாரல் முகத்துல படும்போதெல்லாம் அத தடுக்குற மாதிரி ஸ்டில்லு குடுத்துகிட்டா. (இதுக்கு முன்னாடி பல தடவ இந்த பார்க் வந்திருக்குறா, ஆனா இந்த அளவுக்கு சீன் போட்டதேயில்ல..)
*******************************************
அது என்னவோ தெரில.. பொதுவாவே, கல்யாணமான புது ஜோடிகள், கூட இருக்குறவங்கள கண்டுக்கவே மாட்டிங்குறாங்க. எப்பப் பாத்தாலும் கைய கோர்த்துகிட்டு நடக்குறதும், தோள்ல சாஞ்சுக்குறதும், ஒருத்தர ஒருத்தர் ரசிச்சுக்குறதும்.. யப்பா. முடியலடா சாமி.... இது கூட பரவாயில்ல.. பல்லு விளக்குறதுல இருந்து, செருப்பு மாட்றது வரைக்கும் எல்லாத்தையுமே ஒருத்தருக்கொருத்தர் ரசிப்பாய்ங்க.. (என் பொண்டாட்டி பல்லு விளக்குற அழகே அழகு“னு பக்கத்துல இருக்குற நம்மகிட்ட சொல்லும்போது சப்“புனு அறையலாம்போல வரும் பாருங்க.. கொடுமைடா சாமி..)
புதுசா கல்யாணமான ஜோடிங்க மட்டும் ஏன்தான் இப்படி ஓவரா பண்ணுதுகளோ... கடுப்புகள கிளப்புறாய்ங்கப்பா..
பதிவ படிச்சிட்டு இந்த வீடியோ காட்சியையும் பாருங்க.. என்னோட ஆதங்கம் புரியும்..

 .
.

Thursday, 8 September 2011

இந்தப் பதிவுக்கு நீங்களே ஒரு தலைப்பு சொல்லுங்க..


இது திமிரா? கொழுப்பா? ஆர்வக்கோளாறா? எப்படி சொல்றதுனு தெரில.
இணைக்கப்பட்டிருக்குற வீடியோ காட்சிய பாத்துட்டு அதற்கேற்ற தலைப்ப நீங்களே சொல்லுங்க..
மேலும் விபரம் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

 .
.

Tuesday, 6 September 2011

விண்வெளி - பொதுஅறிவுத் தகவல்கள்நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்தது தான் விண்வெளி. என்னதான் விஞ்ஞானம் மூலம் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும் இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடைத்துக்கொண்டே தான் இருக்கின்றன. சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றிய எனக்குத் தெரிந்த சில தகவல்கள் இங்கே..
1. சூரியனில் ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம் தோன்றுகிறது.
2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ.
3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி மட்டும் சூரியன் உதயமாகும்.
4. விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம் லைக்கா (Laika) என்ற நாய்.
5. விண்வெளி வீர்ர்களுக்கு உணவாகப் பயன்படுவது பாசி குளோரெல்லா.
6. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக் கடக்க 18 ஆண்டுகள் ஆகும்.
7. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 23 மணிநேரமும் 56 நிமிடங்களும் ஆகின்றன.
8. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பெயர் நாசா.
9. இரவு வானில் கிட்டத்தட்ட 3000 நட்சத்திரங்களை, வெறும் கண்களாலேயே நம்மால் பார்க்க முடியும்.
10. பூமி விண்வெளியில் சுமார் 1,07,343 கி.மீ வேகத்தில் சுற்றுகிறது.
11. சூரிய கிரகணம் சுமார் 8 நிமிடங்கள் மட்டுமே நிகழும். ஆனால் சந்திர கிரகணம் 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கலாம்.
12. நட்சத்திரங்கள் என்பது சொந்த ஒளியைக் கொண்டு மிளிரும். கிரகம் என்பது சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும்.
13. சூரிய வெளிச்சத்தில் பூமியின் நிழல் சுமார் 8,59,000 மைல்கள் தூரம் விழும்.
14. ஒரு விண்மீன் வெடித்துச் சிதறும் ஒளி, நம் கண்ணுக்குத் தெரிய ஆகும் காலம் 1,70,000 ஆண்டுகள்.
15. 1866-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பவுர்ணமியே தோன்றவில்லை. அதே ஆண்டு ஜனவரி மற்றும் மர்ர்ச் மாதங்களில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றின. இது போன்று அதிசயம் 25 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் தோன்றுமாம்.
16. ஒவ்வொரு வருடமும் பூமியிலிருந்து 3.82 செ.மீ தூரம் நிலா விலகிச் செல்கிறது.
17. சூரிய மண்டலத்தைப் பற்றிய படிப்பு ஆஸ்டீரியோலஜி எனப்படும்.
18. உலக அளவில் ஆண்டுதோறும் 800 கோடி டன் கார்பன்-டை-ஆக்ஸைடு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் நாம் இயற்கையை மாசுபடுத்துவதால் வளி மண்டலத்திற்குள் திணிக்கப்படுகிறது.
19. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 3,64,000 கி.மீ
20. உலகிலேயே முதல் வான்வெளிப் புகைப்படம், அமெரிக்க உள்நாட்டுச் சண்டையின்போது பாராசூட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
21. யுரேனஸ் கிரகத்தில் கோடைகாலம் 21 ஆண்டுகளும், குளிர்காலம் அதையடுத்த 21 ஆண்டுகளும் நீடிக்கின்றன.
22. மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய 14வது நாடு இந்தியா.
23. 1970ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி பூமியிலிருந்து இயக்கப்பட்ட லூனா கோடி என்ற ஆளற்ற ஓடமே சந்திரனில் இறங்கிய முதல் ஓடமாகும்.
24. ஒரு மின்னல் 250 கோடி வோல்ட்ஸ் மின்சக்தி கொண்டது.
25. நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.
26. நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாகப் பார்த்தவர் கலிலியோ.
27. பூமி சந்திரனுக்கு மிக அருகில் வருவது டிசம்பர் மாதத்தில். பூமி சூரியனுக்கு மிக தொலைவில் போவது ஜூலை மாதத்தில்.
பூமியிலிருந்து சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நிலைநிறுத்தப்பட்ட செயற்கை கோள் மூலம் பூமியின் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம். அதாவது பூமியின் ஏதாவதொரு இடத்தில் நடக்கும் சம்பவங்களை, சிக்னல்கள் அனுப்பியும் பெற்றும் கண்காணிக்க முடியும். சாதாரணமாக ஒரு தெருவில் கீழே கிடக்கும் ஒரு தபால் தலையின் அச்சிடப்பட்ட முகத்தைக் கூட பார்க்க முடியும் என்பதே இதன் சிறப்பு. இந்த தொழில்நுட்ப உதவியைக் கொண்டு சீற்றங்களை முன் கூட்டியே அறியலாம். இந்தப் புவி ஆய்வு முறையை ஆங்கிலத்தில் Global Positioning System (GPS) என்று அழைக்கிறார்கள்.
பூமி சூரியனைச் சுற்றுவது நமக்குத் தெரியும். அதேபோல் விண்வெளியின் மையத்தைச் சூரியன் சுற்றும். வட்டப் பதையில் இது நொடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும். ஒரு முறை மையத்தைச் சுற்றி முடிக்க 250 மில்லியன் வருடங்களாகும். இது ஒரு காஸ்மிக் வருடம் (Cosmic year) எனப்படுகிறது.
இன்னும் நம் கண்களுக்குப் புலப்படாத பல அதிசயங்கள் வான்வெளியில் உள்ளன. எத்தனை எத்தனையோ புதுமைகள் கிடைக்கப்பெறலாம். வளர்ந்து வரும் விஞ்ஞானமே இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...