Posts

Showing posts from August, 2010

உங்கள் காதலிக்குப் பிடித்தமானவரா நீங்கள்??

Image
நீங்கள் காதலித்துக்கொண்டிருப்பவராக இருந்தால் உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள இதோ சில ஆலோசனைகள்.. (அபத்தமானதாக இருந்தாலும் சகித்துக்கொள்ளுங்கள்). அடிக்கடி அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள் இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு, நீ சிரிக்கிறது அழகாயிருக்கு, உனக்கிந்த ஹேர் ஸ்டைல் நல்லாயிருக்குனு பாக்கும்போதெல்லாம் எதையாவது சொல்லனும் அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடலை ரிங்டோனா வச்சுக்கங்க. அடிக்கடி SMS பண்ணுங்க. குறிப்பா காலையில் எழுந்தவுடனேயும் தூங்கும் முன்னும் மறக்காம அனுப்புங்க.. (அதாவது உங்கள் நாளின் ஆரம்பமும் முடிவும் அவர்களுடன் தான் என்பதை உணர்த்துங்கள்) கேட்ட கேள்விக்கு மட்டுமோ அல்லது வெறும் ‘K’ (OK) என்று ஒற்றை வார்த்தையிலோ ரிப்ளை செய்தால் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். போன் பேசும்போது சண்டை வந்தால் எக்காரணம் கொண்டும் நீங்களா கட் பண்ண கூடாது.. (அத அவங்க செய்யலாம்) அவங்க கேக்கலனாலும் அப்பப்போ அவங்க போனுக்

பெண்களைக் கவர சில டிப்ஸ்

Image
” நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. ” இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்) பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. ” பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில ” ” அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான் ” அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல) இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.. 1. ஆக்டிவா இருக்கணும் மந்துனு எதையோ ப றி கொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது ) 2. ஸ்மைலிங் ஃபேஸ் என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சி ரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.) 3. ஓவர் ஆக்‌ஷன் உடம்புக்கு ஆகாது ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந

அழகாய் ஒரு ' அ '

Image
வெகு நேரம் ஆகியும் ஓயவில்லை பக்கத்து வீட்டுச் சிறுவனின் அழுகைச் சத்தம். பொறுக்க முடியாமல் பெற்றவளிடம் வினவினேன். கோபத்தில் அடித்ததாக சிடுசிடுத்தாள்.. பதிலேதும் பேசாமல் திரும்பி வந்தேன். மறுநாளும் தொடரவே மறுபடியும் பதறினேன்.. அடுத்து வந்த நாளும் அப்படியே தொடரவே பொறுக்கமுடியாமல் துலாவினேன் காரணியை. சிலேட்டில் ”அ” போடவில்லையாம். இதற்கா இப்படி என அங்கலாய்த்தேன்.. தொடர்கிறதே!! என சலித்துக்கொண்டாள். பொறுப்பேற்று அழைத்து வந்தேன் அழுபவனை. விசும்பல் ஓய காத்திருந்து விளையாட்டுச் சிறுவனிடம் சிலேடெடுத்தேன். ”யூ டூ புரூட்டஸ்” என்பது போல் பதுங்கினான். அடுத்த நாளும் கூட்டி வந்தேன் முறைத்த தாயை கவனியாதது போல.. ஒருவழியாய் கரம் பிடித்து “அ” முயன்றேன். அழகாய் வரவே அடுத்ததாய் அவன் முறையென தனியே எழுதச் சொன்னேன்.. மழங்க மழங்க விழித்தவன் ௦௦மெதுவாய் கிறுக்கினான்.. முட்டை மட்டும் போட்டுவிட்டு முழுதாய் தப்பித்தான். மறுண்ட விழிகளுடன் மறுநாளும் அதே பாடு தான்.. மயக்கமே வந்ததாய் மறுபடியும் தொடர்ந்தேன்.. ம்ஹும்... மாறவே இல்லை அவன் பிடிவாதம். நாட்கள் தொடரவே நானும் திகைத்தேன்.. இன்று மட்டுமென இளிப்புடன் சலுகை கேட்டேன்

ராங் நம்பரா? ராங் நபரா?

Image
ஒருமுறை எனக்கு, தெரியாத நம்பர்ல இருந்து ”ஹாய்” மெசெஜ் வந்தது. யார்னு தெரியாதனால பதில் அனுப்பல.. தொடர்ந்து நாலஞ்சு தடவை வந்ததுனால ”Who r u?” அப்டினு அனுப்பினேன். உடனே அந்த நம்பர்ல இருந்து போன் வந்தது. ”திவ்யா இருக்காங்களா”னு ஓரு ஆண் குரல் கேட்டது. நானும் ”இங்க திவ்யானு யாரும் இல்லங்க. சாரி ராங் நம்பர்”னு வச்சிட்டேன். மறுபடியும் ரெண்டு மூணு தடவ, என்னவோ தெரிஞ்சவன் மாதிரி ”எப்படி இருக்கீங்க.. சாப்டீங்களா?? குட் மார்னிங்.. ” அப்டியெல்லாம் மெசெஜ் வந்துகிட்டே இருந்தது. தொடர்ந்து இப்டி வந்ததால எனக்கு கோவம் வந்துடுச்சு. போன் பண்ணி திட்டிட்டேன். இது தான் டாக்டர் நடந்தது. அவன் என்ன பண்ணினானோ தெரியல.. வேற வேற நம்பர்ல இருந்து தினமும் நெறைய மெசெஜ் வர ஆரம்பிச்சுது. அடிக்கடி போன் பண்ணிட்டே இருந்தாங்க. சில சமயம் காலி மெசெஜா வரும்.. ஒன்னு ரெண்டு இல்ல.. நூற தாண்டி கூட போகும். swith off பண்ணி வைக்கவும் முடியாது. அலுவலக நிமித்தமாகவும் நண்பர்களிடமிருந்தும் அழைப்பு வரும். கடுப்பாகி திட்டி மெசெஜ் அனுப்புவேன். பதிலுக்கு ஏதாவது அசிங்கமான ஜோக் அனுப்பினாங்க. அதயெல்லாம் படிக்கவே முடியாது. வேற வேற நம்பர்ங்குறதுனால

டாக்டர் என்ற காமெடி பீஸ்கள்

Image
பொதுவா மருத்துவர்கள் மரியாதைக்குரியவங்க தான். ஆனா தமிழ் சினிமாவுல வரும் டாக்டர் கதாப்பாத்திரம் இருக்குதே.. அந்த கொடுமைய யார்கிட்ட சொல்றதுனே தெரியல.. லேசா நரச்ச முடி.. சிவப்பு நிறம்.. முடிந்தவரை கண்ணாடி போட்ருக்கணும். ஒரு வெள்ளை கோட், குறிப்பா ஸ்டெதஸ்கோப் தோளில் மாட்டியிருக்கணும்.. முக்கியமா ஹீரோவைப் பார்த்து ஒரு காட்சியிலாவது ”இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கல்” அப்டினு டயலாக் பேசணும். முகத்துல ஒரு மாஸ்க்கும் கைல கிளவுசும் போட்டுட்டு ஆபரேசன் தியேட்டர் கதவ தெறந்து வெளிய வந்து (கண்ணாடி போட்ருந்தா அத கழட்டிட்டு) சோகமா தலைய ஆட்டிகிட்டே ”எங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணோம்.. ஆனா பேசண்ட காப்பாத்த முடில” அப்டினு சொல்லனும்.. காலங்காலமா இந்த இம்சை தான் நடக்குது.. சினிமாவுல தான் இந்த கொடுமையெல்லாம்னு பார்த்தால்.. விளம்பரங்களில் அதை விட இம்சை பண்றாங்க.. மாத்திரைகள், ஆயின்மென்ட்கள் மட்டுமில்லாம டூத் பேஸ்ட் விளம்பரத்துல ஆரம்பிச்சு ஷாம்பு, டேட்ஸ் சிரப், குழந்தைகள் நாப்கின், ஹார்லிக்ஸ், காம்ப்ளான், ஃபேஷ் க்ரீம் இப்படி பெரும்பாலான விளம்பரங்களில் வந்து, ஏதோ ஒரு நிறுவனப் பெயர் சொல்லி (அநேகமா அது வெளிநாட்ல தான

காகத்தின் விடுமுறைக்காக...

Image
காகம் வடை தூக்கிச் சென்றதாம்.. கதை கேட்டபடி சாதம் உண்டேன்.. ஒரு நாளில்.. கிறுக்கலாக வரைந்த படத்தில் கருமை கொடுத்து காகம் என்றேன்.. இன்னொரு நாளில்.. தொலைந்த பொருள் எங்கே? எனக் கேட்டவரிடம் “காக்கா தூக்கிட்டுப் போய்டுச்சு“ என்று அழகு காட்டினேன்.. மற்றொரு நாளில்.. காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார்களாம்.. கொணரும் தின்பண்டத்திற்காக எதிர்நோக்கி இருந்தேன்.. மேலும் ஒரு நாளில்.. இறந்துபோன தாத்தா மாறுவேடத்தில் வருவாரென அப்பா கூறியதை நம்பி ஓட்டின் மீது படையல் வைத்தேன்.. வேறொரு நாளில்.. பட்டாசுக்கு பயந்து பறந்தோடும் காகங்களை வேடிக்கையாய்ப் பார்த்தேன்.. பிரிதொரு நாளில்.. மின்சாரக் கம்பத்தில் மடிந்த ஒன்றைச் சுற்றி மற்றவை கரைந்தபோது வெறுமையாய்ப் பார்த்தேன்.. சுடுதலாக ஒரு நாளில்.. வாட்டிய பசியும் வறண்டு போன இதயமுமாய் அண்டைவீட்டு சுவற்றில் வைக்கப்பட்ட பித்ருக்களின் உணவருகே காத்திருக்கிறேன் காகத்தின் விடுமுறைக்காக.. இன்றெனும் ஒரு நாளில்.. .

எங்கு போய் முட்டிக்கொள்வது..??

Image
சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.. திக்கெட்டும் சுதந்திர ஒளி பரவட்டும்.. தொலைக்காட்சியில் அவ்வப்போது காட்டுக் கத்தல் கத்திக்கொண்டிருந்தனர்.. போனால் போகிறதென்று ஒரு அரை மணி நேரம் இந்திய சுதந்திரத்தைப் பற்றியும் மகாத்மாவைப் பற்றியும் ஏதோ பெரிய மனது பண்ணி ஒளிபரப்பினர். அதன் பிறகு வந்தவை எல்லாமே சினிமா சினிமா சினிமா தான்.. பெயருக்கு, நாங்களும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம் போ்வழி என்று, தொலைக்காட்சியின் ஏதோ ஒரு மூலையில் சுதந்திரக் கொடியின் அடையாளத்தை பதித்திருந்தனார்.. அவ்வப்போது எங்கோ ஒரு சேனலில் வந்தே மாதரம் என்று நித்யஷ்ரி மகாதேவணும் லதா மகேஸ்கரும் பாடிக்கொண்டனார். ஃபேன்சி சேலையிலும் அயர்ன் செய்த சர்ட்டிலும் தேசியக் கொடியை குத்திக் கொண்டனர்.. மற்றபடி எல்லா நிகழ்ச்சிகளும் முகத்தை சுளிக்க வைக்கும் ஒரே மாதிரியானவைகள் தான்.. பள்ளிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லாமல் தொலைக்காட்சியில் சிறப்புத் திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள்.. நினைக்கவே பெருமையாக இருந்தது.. அடிக்கடி கேசத்தைக் கோதிக்கொண்டே ஒரு தொகுப்பாளினி சுதந்திர தின வாழ்த்துக்கள் சொன்னாள்.. அத

தலைக்கு வந்த கண்டம்..

Image
காலையில் ஜோசியரைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்தே எனக்குப் பதட்டமாக இருந்தது. போதாகுறைக்கு அம்மா வேறு புலம்பி அவனைக் கூடுதலாக தன்பங்கிற்குப் பயமுறுத்திக் கொண்டு இருந்தாள். ” நீ எங்களுக்கு ஒரே புள்ள ராசா.. ஏற்கனவே ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நாம பட்டது போதும்பா. அந்த ஜோசியர் சொல்றத கேளு செல்வா.. காளியாத்தா நீ தான் எம்புள்ள கூட துணையா இருக்கணும்..” கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து அடுப்படிக்குப் போனாள். அம்மாவின் பயமும் நியாமானது தான். ”இன்னும் அறுபது நாட்களுக்கு உங்கள் பிள்ளையின் தலைக்கு கண்டம் இருக்கிறது.. கவனமாக இருக்கச் சொல்லுங்கள்..” என்று குடும்ப ஜோசியர் ஆணித்தரமாகச் சொன்னால் எந்தத் தாய் தான் பயப்பட மாட்டாள். என் குடும்பத்தைப் பொறுத்தவரை அவ்வப்போது அவர் வாக்கு எங்களுக்கு அப்படியே பலித்துவிடும், ரெண்டு வருடத்திற்கு முன் அவர் சொன்னது போலவே என் அப்பாவிற்கு விபத்து நடந்து நூலிலையில் உயிர் தப்பினார். அதற்க்குப் பின் அந்த ஜோசியர் தான் எஙகள் கடவுள். அப்பா என்னையே கவலையாகப் பார்த்துக்கொண்டிருந்தார், ”நா சொல்றத கேளு செல்வம். இன்னும் 60 நாளைக்கு நீ எங்கயும் போக வேண்டாம். ஆபீசுக்கு லீவு சொல்லிட

எல்லாரும் கணக்கு நோட்ட எடுங்க..

Image
ஒண்ணுல இருந்து பத்துக்குள்ள ஒரு நம்பர நெனச்சுக்கங்க.. (எங்கிட்ட ஒன்னும் சொல்ல வேணாம்) இப்போ நீங்க நெனச்ச நம்பர அதோட மறுபடியும் கூட்டுங்க.. (விரல் கடன் தரமாட்டேன்..) வந்த விடையோட ஆற (6) கூட்டுங்க.. (கூட்டுன்னா சாப்பிட்ற கூட்டு இல்ல..) என்ன கூட்டியாச்சா?? கடைசியா விடையா வந்த நம்பர இப்ப சரிபாதியா பிரிங்க.. (சொத்தையா பிரிக்க சொல்றேன்.. சீக்கிரம் பிரிங்கப்பா..) இப்ப நீங்க மொதல்ல நெனச்ச நம்பர கழிங்க.. (முழிக்க சொல்லல.. கழிக்க சொன்னேன்..) இருங்க இருங்க.. நீங்க விடை சொல்ல வேணாம்.. நான் தான் சொல்வேனாக்கும்.. மூணு (3). என்ன சத்தத்தையே காணோம்.. (முறைக்குறீங்களா?? கண்ண நோண்டிடுவேன்..) எப்படினு கண்டுபிடிச்சுட்டீங்களா?? (சரி சரி இது நமக்குள்ளயே இருக்கட்டும்..) இத சொல்லிக்குடுத்தது என்னோட பக்கத்து வீட்டு குட்டிப்பொண்ணு.. (”அதான பாத்தேன்”னு சொல்லுவீங்களே..)

கொஞ்சம் வெளிப்படையாக..

Image
என் பெயர் இந்திரா. என்ன திடீரென்று இந்த அறிமுகம் என்று யோசிக்கிறீர்களா.. முறையான அறிமுகம் எதுவுமே இல்லாமல் தான் நான் பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்தேன். ஆரம்ப நாட்களில் ஒரு சில வலைப்பூக்களை படித்திருந்தேன். அது போல நாமும் எழுத வேண்டும் என்ற ஆசையால் பதிவுகள் இட ஆரம்பித்தேன் . வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் பல கசப்பான அனுபவங்களை மறப்பதற்காக, என்னை நானே திசை திருப்புவதற்காகவே எனக்கென ஒரு தளத்தை திறந்தேன். இந்த வலைப்பூ எனக்கு நிறையவே கற்றுக்கொடுத்தது, கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆரம்ப நாட்களில் ஏதோ கடமைக்காக, பதிவுகள் போடவேண்டுமே என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்தேன்... ஆனால் போகப் போக வலையுலகம் என்னைத் தன்பக்கம் வெகுவாக ஈர்த்துக்கொண்டது.. பிற பதிவாளர்களின் வலைகளைப் பார்க்கும்போது எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். நாமும் நம்மால் முடிந்த அளவு சிறப்பான பதிவுகளை எழுத வேண்டுமென்ற நம்பிக்கையில் தொடர ஆரம்பித்தேன். மற்ற நேரங்களில் முடியாதெனினும் வலையுலகத்தில் இருக்கும்போது பல ரணங்கள் மறக்கப் படுகிறது .. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆறுதலாக எண்ணுகிறேன். இந்த வலையுலகின் மூலம் எனக்கு சி

என் அம்மாவுக்குப் பிறந்தநாள்..

Image
வழக்கம்போல காலேல எந்திரிச்சதும் அம்மாவுக்கு போன் பண்ணி வாழ்த்து சொன்னேன். நான் தான் முதல்ல வாழ்த்தினேன். ஆரம்பநாட்கள்ள அவங்களோட பிறந்த நாள் என்னைக்குன்னு அவங்களுக்கே தெரியாம தான் இருந்தது.. பாட்டி கிட்ட கேட்டதுக்கு ஆடி மாசம் தான், ஆனா தேதி மறந்துடுச்சுன்னு சொன்னாங்க. அதுனால நான், என் அப்பா, என் சகோதரிகள் எல்லாரும் சேர்ந்து ஆடி மாசத்துல ஒரு தேதி முடிவு பண்ணி வருஷா வருஷம் கொண்டாட ஆரம்பிச்சோம்.. ஆடி 21 . நீங்களும் வாழ்த்துங்க.. அம்மா ரொம்ப சந்தோசப்படுவாங்க. அப்புறம் என்னோட முந்தைய பதிவுக்கு பதில் சொல்றேன்னு சொன்னேன்ல.. அது சவப்பெட்டி. இப்ப என்னோட கேள்வி சரிதானே??

உங்களுக்கு ஒரு கேள்வி..

Image
இது ஒரு பொருள். இந்தப் பொருளால் வாங்குபவனுக்கும் மகிழ்ச்சி இல்லை. விற்பவனுக்கும் மகிழ்ச்சி இல்லை. இதை உபயோகிப்பவர்க்கோ தான் இதனை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை.. அந்தப் பொருள் என்னவென்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.. விடையை எனது அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.. (அப்பாடா ஒரு பதிவு போட்டாச்சு)

படித்ததில் பிடித்தது..

Image
படுக்கையில் கழன்று கிடக்கிறது உன் கொலுசு.. காணாமல் போன திருகாணியாய் என் மனசு.. இது என் சொந்த கற்பனை இல்லை.. ஒரு புத்தகத்தில் படித்தேன். (திருட்டுப்பதிவு தொல்லை தாங்க முடியல. அதுக்கு தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை)