Posts

Showing posts from January, 2013

ஆங்கோர் காதல்..!

Image
வெகுநேரப் பேச்சிற்குப்பின் கிளம்பிச்செல்ல எத்தனிக்கிறேன்.. விரல்கள் கோர்த்தபடி விட்டகல மறுக்கிறாய்..! விருட்சமாய் வளர்ந்திருப்பினும் வேரூன்றித் துளிர் விடுகிறது ஆங்கோர் காதல்..!! .   விரல்கள் பிணைத்துக்கொள்வதைப் போல அவ்வளவு எளிதாக இருப்பதில்லை... பிணைத்த விரல்களிலிருந்து விடுவித்துச் செல்வது..!! .

ஒரு மோதிரம் இரு கொலைகள்: ஷெர்லாக் ஹோம்ஸ்..

Image
ஆர்தர் கோனான் டாயில் என்ற ஆங்கில எழுத்தாளர் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் முதலாவது ‘ A Study in Scarlet ’ . அது “ ஒரு மோதிரம் இரு கொலைகள்“ என தமிழாக்கம் செய்யப்பட்டது. டாக்டர் ஆர்தர் கோனன் டாயில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம் தான் ஷெர்லாக் ஹோம்ஸ். அந்தக் கதாப்பாத்திரத்தை, துப்பறியும் கலையில் கை தேர்ந்தவராக சித்தரித்திருப்பார்.   நுட்பமான அறிவாற்றல் கொண்டவராகவும் , எப்படிப்பட்ட சிக்கலான வழக்குகளையும் திறம்பட ஆராய்ந்து உண்மையை கண்டறியும் வல்லுனராகவும் இந்தப் பாத்திரத்தை அவர் படைத்திருப்பார். இக்கதை முழுவதும், ஷெர்லாக் ஹோம்ஸின் அறைத்தோழர் டாக்டர் ஜான் வாட்சனின் பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கும். துப்பறியும் தொழிலில் ஈடுபடாத, ஆனால் அதில் ஆர்வமுள்ள, யூகத்தில் தேர்ந்தவராக ஹோம்ஸ்... அருமையான புத்திசாலித்தனம். அவர் நடவடிக்கைகள் மீதான நண்பர் வாட்சனின் ஆச்சர்யம், படிக்கும் நமக்கும் தொற்றிக்கொள்வதில் ஆச்சர்யமேயில்லை. ரத்தக்கறையை அடையாளம் காணும் கலவையை கண்டுபிடிப்பதில் ஆரம்பித்து, இரட்டைக் கொலையை வெகு சாதாரணமாய் துப்பறிந்து முடிவு சொல்லுவது வரை ஹோம்ஸ் கலக்கி

“அவனும் அவளும்“..

Image
“அவனும் அவளும்“ என்று ஆரம்பிக்கும்போதே கள்ளப்பார்வையும் காதலோ என்ற கேள்வியுமாய் அசட்டுச் சிரிப்புடன் ஆர்வமாய் பிரகாசிக்கிறாய்..! அருகருகே நடந்து செல்பவர்களை உற்று நோக்கி கலிகாலம் என்று காரி உமிழ்கிறாய்..! பயண நெரிசலில்கூட பக்கத்திலமர்வது பாவமென்று குறுக்கிக்கொள்கிறாய் உனக்கான யதார்த்தங்களை..! ரத்தமும் சதையுமான மனிதர்கள் என்பதைத்தாண்டி ஆணென்றும் பெண்ணென்றும் பாகுபடுத்திப் பாழாக்குகிறாய்..! தனித்துவமென்றும் தனிமைப்படுத்தலென்றும் தற்பெருமைபேசியே தள்ளிவைத்துப் பழக்குகிறாய்..! பலருடன் படுத்தெழுந்தாலும் “ஆண்“ என்ற ஜம்பத்தையும் நினைத்தாலே நடத்தை தவறிய “பெண்“ என்ற சமாளிப்பையும் கேட்டுக் கேட்டுப் பழகிய உனக்கு என்றுமே புரிவதில்லை பால் வேறுபாடில்லா தோழமையின் உறுதிப்பாடு..! கழுத்துக்குக் கீழே குறிவைக்கும் உனக்கு கண்கள் மட்டும் பார்க்கும் நட்பின் நிலைப்பாடு என்றுமே புரிதலுக்கு உட்படாத புதிர்தான்..! இச்சைக் குப்பைகள் குமிந்துகிடக்கும் உனக்கு என்றுமே பிடிபடப்போவதில்லை.. தாய்ப்பாலுக்கும் காமத்துப்பாலுக்குமான வித்தியாசங்கள்..!! . .

வன்புணர்வு.. வன்கொடுமை.. விருப்பப்பாடல்..!

Image
அதனைத் தவிர்த்தோ அல்லது வேகமாகக் கடந்தோ சென்று விடலாம்..! பிற வேலைகளை முடித்த அயர்ச்சியின் ஆசுவாசமாய், சராசரிக்கும் சற்றே சாதாரணமான சம்பவமாய் சஞ்சரிக்கலாம்..! நட்புக்களின் அரட்டையிலும், காதலின் கொஞ்சல்களிலும் உறவுகளின் விருந்தோம்பலிலும், விருப்பங்களின் தேடல்களிலும் எங்கோ.. யாருக்கோ.. எப்பொழுதோவென அவை மறந்து, மறைந்து, மறத்து மரித்துப் போகலாம்..! பொது அறிவின் பறைசாற்றலாய்.. கூட்ட நெரிசலின் பெருமை பீற்றலாய்.. கண்சிமிட்டும் நொடியில் காணாமல் போகலாம்..! இல்லாத தைரியங்களும், பொய்யான மனசாட்சிகளும், மிகைப்படுத்தியே பழக்கப்பட்ட கற்புக்களும், கேவலமான சமாதானங்களும், இருத்தலை நிரூபித்துக்கொள்ளும்வரை வட்டத்திற்காய் உள்ளிழுத்துக்கொள்ளலாம்..! பத்தோடு பதினொன்றாகப் பழக்கப்பட்டதற்குப்பின் வன்புணர்வென்றாலும் வன்கொடுமையென்றாலும் விளம்பரங்களின் விளம்பர இடைவேளையாய் விட்டகற்றிவிட்டு விருப்பப்பாடலுக்கு செவிசாய்ப்போம்..!! . .