Tuesday, 31 January 2012

அதை மட்டும் திருப்பிக்கொடு.. (படித்ததில் பாதித்தது)
ஒவ்வொரு முறையும்
மறக்கத்தான் நினைக்கிறேன்..
கன்னங்களில் வழியும் கண்ணீரை
துடைத்த பின்

காதலை எந்த
வடிவில் கண்டாலும்,
மறுபடியும் கண்ணீர்
வருவதை ஏன் என்னால்
தடுக்க முடிவதில்லை?

மெமரி கார்டில்
என்னை அழித்துவிட்டாய்..
என் மெமரியை
என்ன செய்ய முடிந்தது உன்னால்?

யாருக்கெல்லாமோ கால் செய்தேன்.
உனக்கு மட்டுமே காதல் செய்தேன்.
கால் கொண்டு எட்டி உதைத்தாய்..
அட, எட்டி உதைத்தாலும்
உன்னிலே ஒட்டிக்கொள்ளும்
ஒட்டுண்ணியாய்
வேடிக்கை காட்டுகிறது பார் என் காதல்.

நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை.
என் வாழ்க்கையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?

எடுத்துக்கொள் என்று
இயல்பாக சொல்கிறாய்.
வர மாட்டேன் என
அடம்பிடிக்கும் இதயத்தை
சிலுவையிலா அறைய முடியும்?

அதுவும் சரிதான்.
நேற்று என் இதயத்தை
சிறையில் வைத்தாய்..
இன்று சிலுவையில்....

எப்போதும் இல்லாமல்
விழித்திரை இப்போதெல்லாம்
அதிகநேரம் வேலை செய்கிறது.
தூக்கத்தை விடவும்
துடிப்பதைதான் அவைகள் அதிகம்
விரும்புகின்றன போலும்.

கண்ணில் விழுந்த தூசியை
முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.
இப்போதெல்லாம் ஊசி கொண்டு
எடுக்கிறாய்..

உணவைக்கூட
இதழிலிருந்து இதழிற்கு
தடம் மாற்றினாய்.
ஏன் உணர்வை மட்டும்
மறுத்து விட்டாய்?

எத்தனை காதல் கடந்து வந்தாலும்
உன் இதயம் மட்டும்தான்
என் காதலுக்கான தாஜ்மகால்.

அங்கே எனக்கு
பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அனுமதி கொடு

இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?

நான் கொடுத்த எல்லாவற்றையும்
திருப்பி கொடுத்தாய்...
ஒன்றைத்தவிர..
அதை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்துவிடு.

திருப்பிக்கூட தரவேண்டாம்
ஒரே ஒரு முறை
கண்ணிலாவது காட்டிப்போ..
நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..
ஆம். அனைவரும்
என்னிடம் கேட்கிறார்கள்.

தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு

-----  என் சிரிப்பை..

.

.

நன்றி - http://kavithaikadhalan.blogspot.in/2011/02/blog-post.html
.

Friday, 27 January 2012

பிரபல பதிவர்களும் அவர்களது கணினிக்களும் – காமெடி புகைப்படங்கள்..


நம்மல்ல பலருக்கு ஒரு நாளைக்கு ஒரு பதிவு எழுதவே நேரமிருக்க மாட்டீங்குது.. வேலை காரணமா தினமும் ஒண்ணுங்குறது மாறி, ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு, அப்புறம் வாரத்திற்கு ரெண்டுனு குறைய ஆரம்பிச்சிடுச்சு.. ஆனாலும் ஒரு சில பதிவர்கள் ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு மூணு பதிவாவது எழுதுறாங்க.. மாசத்துக்குனு கணக்குப் பாத்தா இருபத்தஞ்சு முப்பதுனு குவியுது.. ஆச்சர்யமான விசயம் தான். எனக்கொரு டவுட்டு.. அவங்களோட கம்ப்யூட்டர்கள் இப்படித்தான் இருக்குமோ???.
.

Tuesday, 24 January 2012

உலகின் மிகச் சிறந்த காதலர்கள் - ஒரு வாழ்த்துப் பதிவு..ரெண்டு நாளைக்கு முன்னாடி சொல்ல வேண்டிய வாழ்த்துப் பதிவு.. கொஞ்சம் வேலையா இருந்ததால இந்தப் பக்கம் வர முடியல. அதான் கொஞ்சம் லேட்டாய்டுச்சு.
என்னப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துலயே மிகச் சிறந்த காதலர்கள்னா அது என்னோட அப்பா, அம்மா தான். மேட் ஃபார் ஈச் அதர்ங்குற வாக்கியமே இவங்களுக்காகத் தான் படச்சிருக்காங்களோனு நா பலமுறை நெனச்சிருக்கேன். ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு நடந்துக்குறதும், கேலியா கிண்டல் பண்ணிக்கிறதும், ஆறுதலா பேசிக்கிறதும், எண்ணங்களப் பகிர்ந்துக்குறதும்.. ஈகோ பாக்காம விட்டுக்குடுக்குறதும்னு..... கணவன் மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்னு பல தடவை நானே அவங்களப் பாத்து கண்ணு வச்சிருக்கேன்.
இந்த அளவுக்கு ஒருத்தர ஒருத்தர் உயிரா காதலிக்க முடியுமானு ஆச்சர்யப்பட வைக்கிற காதலர்கள். அவங்களுக்குள்ள இருக்குற காதல், வார்த்தைகளால வர்ணிக்க முடியாதது.
தலைமுறை இடைவெளினு தள்ளிவச்சுப் பாக்காம நண்பர்கள் மாதிரி எங்களோட அரட்டை அடிக்கும்போதெல்லாம் சந்தோசத்துக்கு அளவே இருக்காது. ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சுக்கும்போதும், எங்களோட சரிக்கு சரியா ஆட்டம் போடும்போதும் இத விட சிறந்த நட்பு இருக்க முடியாதுனு தோணும்.
தங்களோட மூணு பொண்ணுங்கதான் இவங்களோட உலகமே... 24 மணி நேரமும் எங்களுக்காகவே வாழ்ற இவங்களுக்கு ரெண்டு நாளைக்கு முன் (22.01.2012) திருமண நாள்..
என்னோடு சேர்ந்து நீங்களும் இவங்கள மனசார வாழ்த்துங்க...
என் முதல் நண்பர்களான அப்பா, அம்மாவுக்கு..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..
என்னைய மாதிரி ஒரு இம்சைய சகிச்சுகிட்டு இருக்குறதுக்கே இவங்கள ஸ்பெஷலா வாழ்த்தணும். (அப்பாடா இனிமேயாவது மூத்த பொண்ணா பொறுப்பா நடந்துருக்கியானு அடிக்கடி திட்டமாட்டாங்க..)
அப்புறம் ஒரு விசயம்.. இவங்களோட திருமண நாள் அன்னைக்கு தான் இவங்க மூத்த பொண்ணுக்கும் பிறந்த நாள். அவங்க ஒரு மொக்கைப் பதிவர். (புரியுதா??)
(பதிவ முழுசாப் படிக்காதவங்க யாருனு இப்ப தெரிஞ்சிடும்.. ஹிஹிஹி மாட்டிக்கிட்டீங்களா.. மாட்டிக்கிட்டீங்களா..)
.
(போன வருஷமும் இதையே தான் சொன்னேன். அதுனால என்ன? வாழ்த்துறது தானே முக்கியம்.)
அடுத்த பதிவுல சந்திக்கலாம்.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...