Posts

Showing posts from December, 2011

ஏண்டா இப்படி மானத்தை வாங்குறீங்க??

Image
காலேல அலுவலகத்துல வேலை பார்த்துகிட்டு இருந்தேன். திடீருனு என்னோட சீனியர் ஒருத்தர்,  போன் பேசிகிட்டே என் பக்கத்து நாற்காலில உக்காந்து, நெட்“ல கூகுள் இமேஜஸ் எடுங்கனு சொன்னாரு. நானும் சரினு எடுத்தேன். அதுல “National Flag of India “னு தேட சொன்னாரு. நானும் எதுக்கோ கேக்குறாரு“னு நெனச்சு புகைப்படத்த எடுத்தேன். அவர் அத பாத்துட்டு, போன்ல “சிகப்பு வெள்ளை பச்சை தான்“னு சொன்னாரு. சொல்லிட்டு என்னைப் பார்த்து “தேங்க்ஸ்“னு சொல்லி எழுந்தாரு. நா புரியாம “என்ன விஷயம் சார்“னு கேட்டேன். அவரோட பொண்ணு ஒன்றாம் வகுப்பு படிக்குதாம். அவங்க மிஸ் தேசியகொடி வரைய சொன்னாங்களாம். கொடியோட வண்ணம் என்னானு கேட்டுச்சாம். “மூணு கலர் என்னென்னனு தெரியும்.. ஆனா அதோட வரிசை மறந்துடுச்சு. பச்சை வெள்ளை சிகப்பா?? இல்ல சிகப்பு வெள்ளை பச்சையா“னு குழப்பமாய்டுச்சு. அதான் நெட்ல பாத்து சொன்னேன்“னு சொன்னாரு. என்ன சார், இதையெல்லாம் மறக்கலாமா“னு கேட்டா.. “நல்லா தெரிஞ்ச விஷயமே திடீருனு கேட்கும்போது மறந்துடுது.. என்ன செய்ய“னு கேனத்தனமா ஒரு சமாளிப்பு வேற.. இந்த மாதிரி ஆளுங்கள என்ன சொல்றதுனு தெரியல. கிரிக்கெட

வந்துட்டேன்.. வந்துட்டேன்...

Image
ஒரு வழியா நெட் பிரச்சனை சரியாகி திரும்ப வந்துட்டேன். நானும் எத்தனை தடவை தான் திரும்ப வந்துட்டேன்.. திரும்ப வந்துட்டேன்“னு சொல்றது??? நல்லா பதிவெழுதுறேன்னு திருஷ்டி படுது போல... (அட... காரி துப்புறத நிறுத்துங்க பாஸூ...) முதல்ல என் பழைய ப்ளாக் தொலைஞ்சு போய் புது ப்ளாக் ஆரம்பிச்சப்ப “ நா திரும்ப வந்துட்டேன் “னு சொன்னேன். அப்புறம் கொஞ்சம் உடம்பு சரியில்லாம போய் பதிவெழுதுறதுல இடைவெளி விட்டுட்டேன். அப்ப மறுபடியும் “ திரும்ப வந்துட்டேன்“ னு சொன்னேன். அதுக்கப்புறம் இப்ப இன்னொரு தடவை சொல்லிக்கிறேன்.. (ஆமா.. உனக்கு வேற வேலையில்ல...“னு நீங்க முனங்குறது தெரியுது..) ஒரு பிரபல.. (ஐய்யயோ.... வேணாம் வேணாம்..) நல்ல பதிவர்“னு பேர் எடுக்குறதுக்கு (ம்கும்..) எத்தன சோதனைய கடக்க வேண்டியதாயிருக்கு.. சரி சரி கடுப்பாகாதீங்க.. இதுனால நா சொல்ல வர்றது என்னனா... இனி மொக்கை பதிவுகள் வழக்கம்போல தொடரும்.. நீங்க கதறிக் கதறி அழுதாலும் பதிவுகள படிச்சுட்டு தான் போகணும் சொல்லிட்டேன். இனி வழக்கம்போல தொடரப் போகும் (மொக்கை) பதிவுகள்ல சந்திக்கிறேங்க.. . .

உப்புமா பதிவு.. (13.12.2011)

Image
தினமும் வகை வகையா சமைச்சிட்டு, ஏதாவதொரு நாள் சோம்பேறித்தனமாவோ.. இல்ல நேரமில்லாமலோ இருந்தா, அவசரத்துக்கு உப்புமா செஞ்சு சாப்பிடுவோம். அது மாதிரி பதிவெழுத நேரமில்லாதனால (ம்கும்..) அவசரத்துக்கு ஒரு உப்புமா பதிவு.. *********************** நா அருமையா (!!!) பதிவெழுதுறது எங்க ஆபீஸ்ல யாருக்கோ பிடிக்கல போல.. பத்து நாளா கணிணில கொஞ்சம் இன்டர்நெட் பிரச்சனை.. ப்ளாக்கோ.. ட்விட்டரோ.. அட.. மெயில் கூட பாக்க முடியல.. எல்லாமே போன்ல தான். வர்ற பின்னூட்டங்களுக்கு கூட ரிப்ளை பண்ண முடியல.. மத்த பளாக்குக்கும் கமெண்ட் போட முடியல. கடுப்பு கடுப்பா வருது.. இப்ப கூட திருட்டுத்தனமா வேற ஒருத்தரோட கணிணில தான் இந்தப் பதிவ எழுதுறேன்.. என்ன கொடுமை சார் இது???? ************************ ரெண்டு நாளுக்கு முன்னாடி மீசைக்காரனுக்குப் பிறந்தநாள். போன வருஷம் வாழ்த்து சொல்லிப் பதிவு போட்டேன். ஆனா இந்த வருஷம் முடியல. அதுக்கு ஓவரா சண்டை போட்டா. அப்புறம் வேற வழியில்லாம ஆசிர்வாதம் பண்ணி ஒரு நூறு ரூபாய் குடுத்தேன்.. (கால்ல விழுகுறேன்னு கூட கெஞ்சினா.. நா தான் வேணாம்னு சொல்லிட்டேன்.. ஹிஹிஹி..). முழு பதிவா போட முடியலனாலும் இந்த உப்புமா