Posts

Showing posts with the label படித்ததில் பிடித்தது

அணுவைத் துளைத்து..

Image
அணுமின் நிலையம் என்பது என்ன ? அதில் என்னென்ன ஆபத்துக்கள் இருக்கின்றன.. கதிர்வீச்சு.. புரோட்டான்.. நியூட்ரான்.. இன்னும் நிறைய நிறைய தகவல்கள் அடங்கிய நாவல் இது. அறிவியல் ரீதியாய் ஃபார்முலா சொல்லி குழப்பாம , முடிந்தவரைக்கும் புரியிற மாதிரி விளக்கியிருக்கிறார்   செய்யாறு தி.தா.நாராயணன் . ( அப்படியுமே சில தகவல்களை உள்வாங்க , திரும்பத் திரும்ப படிக்க வேண்டியதாயிற்று. என்ன பண்றது ?? நமக்கு அந்த அளவுக்கு தான் அறிவு..)   வெறுமனே தனிமங்கள் , திரவங்கள்னு சொற்பொழிவு செய்து மொக்கை போடாம , கதைக்களம் ஒரு அணுமின் நிலையம் , அதன் ஊழியர்கள் , நடுவே ஒரு மெல்லிய காதல் , சில கொலைகள் , கடத்தல்கள் , சில மர்மங்கள் , நிறைய அறிவியல் , போலீஸ் , இறுதியாய் ஒரு வில்லன்..னு ஸ்வாரஸ்யமாய் கொண்டுசென்ற விதம் யதார்த்தம்.   மர்ம நாவல்கள்ல கடைசி வரைக்கும் யார்மேல சந்தேகம் வரலையோ அவங்க தான் வில்லன் “ னு காலங்காலமா கடைபிடிச்சுகிட்டு வரும் விதிகள் நமக்கு அத்துப்படியாதலால் , அப்பாவியான கதாப்பாத்திரத்தின் மீது தான் நமக்கு முதலில் சந்தேகம் வருது.. அது கடைசியில் ஊர்ஜிதமாகவும் ஆகுது. (முடிவில் புரோட்டான் கொண்...

லாக்கப் – சாமான்யனின் குறிப்புகள்..

Image
சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட நான்குபேர், காவல் நிலையத்தில் என்னென்ன கொடுமைகளை அனுபவித்தார்களென எழுத்தாளர் மு.சந்திரகுமாரின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட உண்மைச் சம்பவங்கள் அடங்கிய புத்தகம் இது. சில புத்தகங்கள், வாங்கிவிட்ட காரணத்துக்காகவே வேறுவழியின்றி படிக்கப்படும். சில, பாதி கூட தாண்டாது. ‘ லாக்கப் ’ படிக்கும்போதே, பிடிபட்ட நால்வருடன் நம் பயணமும் ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொருமுறை சிறையின் கதவுகள் திறப்பதாய் படிக்கும் வினாடிகளில், அடி வாங்கப்போகிறார்களே என இதயத்துடிப்பு கணிசமாய் கூடுவதை என்னால் உணரமுடிந்தது. 1983ல் குண்டூரில் ஒரு காவல் நிலையத்தில் ஆரம்பிக்கிறது கதை. எங்கோ நடந்த கடைத் திருட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்கப்பட்ட ரவி, மொய்தீன், நெல்சன் மற்றும் குமார் (சந்திரகுமார்) ஆகியோரை சிறையில் அடைத்து, தவறை ஒத்துக்கொள்ளும்படி அடித்து சித்திரவதைப்படுத்துவது தான் முழுக்கதையும். மொழி தெரியாத ஊரில், போதுமான தண்ணீரோ சாப்பாடோ கிடைக்காமல், மலம் கழிக்க இயலாமல், லட்டியால் விளாசும் அடிகளை வாங்கி அலறும்போதெல்லாம்.. ஒவ்வொரு முறை சிறைக்கதவு தி...

ஒரு மோதிரம் இரு கொலைகள்: ஷெர்லாக் ஹோம்ஸ்..

Image
ஆர்தர் கோனான் டாயில் என்ற ஆங்கில எழுத்தாளர் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் முதலாவது ‘ A Study in Scarlet ’ . அது “ ஒரு மோதிரம் இரு கொலைகள்“ என தமிழாக்கம் செய்யப்பட்டது. டாக்டர் ஆர்தர் கோனன் டாயில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம் தான் ஷெர்லாக் ஹோம்ஸ். அந்தக் கதாப்பாத்திரத்தை, துப்பறியும் கலையில் கை தேர்ந்தவராக சித்தரித்திருப்பார்.   நுட்பமான அறிவாற்றல் கொண்டவராகவும் , எப்படிப்பட்ட சிக்கலான வழக்குகளையும் திறம்பட ஆராய்ந்து உண்மையை கண்டறியும் வல்லுனராகவும் இந்தப் பாத்திரத்தை அவர் படைத்திருப்பார். இக்கதை முழுவதும், ஷெர்லாக் ஹோம்ஸின் அறைத்தோழர் டாக்டர் ஜான் வாட்சனின் பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கும். துப்பறியும் தொழிலில் ஈடுபடாத, ஆனால் அதில் ஆர்வமுள்ள, யூகத்தில் தேர்ந்தவராக ஹோம்ஸ்... அருமையான புத்திசாலித்தனம். அவர் நடவடிக்கைகள் மீதான நண்பர் வாட்சனின் ஆச்சர்யம், படிக்கும் நமக்கும் தொற்றிக்கொள்வதில் ஆச்சர்யமேயில்லை. ரத்தக்கறையை அடையாளம் காணும் கலவையை கண்டுபிடிப்பதில் ஆரம்பித்து, இரட்டைக் கொலையை வெகு சாதாரணமாய் துப்பறிந்து முடிவு சொல்லுவது வரை ஹோம்ஸ் கல...

விலகிச் செல்லும் வாழ்க்கை.. (படித்ததில் பிடித்தது)

Image
இன்றும் ஒன்றை என்னைவிட்டு வழியனுப்ப நேர்கிறது.. நேற்றும் அதற்கு முன்பும் கூட.. இது வாசல் வரை சென்று வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல. ஒவ்வொரு வழியனுப்புதலும் வயதை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வை வழியனுப்புதல் போல இதயத்தை கணக்க வைக்கிறது. இப்படியே நம் நண்பர்களை நம் நினைவுகளை நம் சிந்தனைகளை என தினமும் ஏதாவது ஒன்றை வழியனுப்பிக் கொண்டிருப்பதை நாம் யாரும் ஆழமாய் அறிவதில்லை..!! ஆனால் பயணத்தில் விலகிப் போகும் ஒற்றை மரத்தின் நிழலையும் என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்..! இந்த வாசலில் மிகவும் விரும்பத்தக்க எதையோ எதிர்பார்த்து எப்போதும் தனித்திருக்கிறோம்.. ஆனால் எப்போதும் யாராலுமே விரும்ப இயலாத கள்ளிச் செடிகள் மட்டும்தான் நம் வாழ்க்கை முழுவதற்குமான மலர்ச் செண்டுகளாய் அனுப்பப்படுகின்றன..!! . .

ஒரு நிமிடம்.. கவிதை (படித்ததில் பிடித்தது)

Image
“ஒரு நிமிஷம் இருடா“ என ஓடைக்குள் சென்ற அப்பா விடிந்துதான் வந்து சேர்ந்தார் வாந்தி நாற்றத்தோடும் வீழ்ந்து கிடந்ததன் வலிகளோடும் “ஒரு நிமிஷம் பார்த்துக்க“ என்று சொல்லி புதருக்குள் ஒளிந்த பக்கத்து கொல்லைக்காரி அந்தி சாய்கையில் தான் வந்து சேர்ந்தாள் கலைந்த தலையோடும் கொஞ்சம் கதகதப்போடும். “ஒரு நிமிஷம் காட்டுடா“ என்ற பள்ளித்தொழி பின்பு பிடுங்கிக் கொண்ட மெயின் ஷீட்டை பேப்பர் கட்டும்வரை கொடுக்கவே இல்லை அரசாங்கத் தேர்வு ஒன்றில். “ஒன் மினிட் ப்ளீஸ்“ என்று பேனா வாங்கிய பேண்ட் ஆசாமி இப்போதும் புரட்டிக் கொண்டிருக்க வேண்டும் சன்டே ஹிண்டுவில் ஆப்பர்ச்சூனிட்டி பக்கங்களை. “ஒரு நிமிஷம் ப்ளீஸ்“ என்று வாங்கிய பக்கத்து இருக்கைக்காரர் இந்த நிறுத்தத்தில்தான் இறங்கியிருப்பார் திருப்பிக் கொடுக்காத தினசரியோடு. ஒரு நிமிடத்திற்கு யாரேனும் அறுபது நொடியென்றால் நம்பவே முடிவதில்லை இப்போது. ஒரு நிமிடத்தை ஒரு நிமிடமாய் இருக்கவிட்டதில்லை எப்போதும் நாம். ------------ (“பட்டாம் பூச்சிகளின் சாபம்“ புத்தகத்திலிருந்து..) . .