Friday, 28 October 2011

மொக்கை இலவசம்.. (படிச்சு நொந்தது)..பொறுக்கி :- மாப்பு வாழ்க்கையே புடிக்க மாட்டேங்குதுடா
கிறுக்கன் :- அடேய் வாழ்க்கை உன்னை என்ன பண்ணுனது?
பொ:- இல்லடா, நான் 3 வருஷமா, உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு என்னை புடிக்கலைனு சொல்லிட்டா'டா
கிறு:- உயிருக்கு உயிரா'னா எப்படி? நீ உங்க வீட்டுல ஒரு கரப்பான் பூச்சிய சாகடிச்சா, அவ அவங்க வீட்டுல எலியை சாகடிப்பாலா?
பொ:- முடியலடா..உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு..
கிறு:- சரி சரிலூஸ்ல வுடு.. இத்தனை நாள் உன்னை லவ் பண்ணுனவ இன்னைக்கு ஏன் வேண்டாம்'னு சொன்னா..
பொ:- இன்னைக்கு சொல்ல'ல டா முந்தா நேற்றே சொல்லிட்டா..
கிறு:- இதோடா, எனக்கே வா?
பொ:- சாரிடா, லூஸு கிட்ட பேசுனா லூஸாவாங்க இல்ல? அது மாதிரி தான் இதுவும்..
கிறு:- அப்போ என்னை லூஸு'னு சொல்லுற?
பொ:- அப்படி லூஸை கேவல படுத்துற அளவுக்கு நான் ஒன்னும் முடிச்சவுக்கி இல்லை
கிறு:- அப்போ முடிச்சி போடுறவனு சொல்லுறியா?
பொ:- உன்கிட்ட தெரியாமா சொல்லிட்டேன்….. லெட் பீ சீரிய்ஸ் டா
கிறு:- சரி சரி மொபைல் கொஞ்சம் கொடு ஒரு கால் பண்ணிக்கிறேன்..
பொ:- அப்போ கை பண்ணுறத்துக்கு என்ன கேட்ப்ப?
கிறு:- வேண்டாம் சொல்லிட்டேன்..
பொ:- கூல்.. இந்தா போன்.. யாருக்கு பேச போற?
கிறு:- ஆம்புலன்ஸ்க்கு
பொ:- ஏன்?
கிறு:- நீ தான் லெட் பீ சீரிய்ஸு னு சொன்ன?
பொ:- ராசா பீளிஸ்உன்னை பற்றி தெரியாம
கிறு:- அது.. சரி சரி மேட்டருக்கு வா..
பொ:- வா ஒரு கட்டிங் போட்டுக்கிட்டே பேசுவோம்..
கிறு:- ஏன்'டா எனக்கு இருக்கிறதே தலையில நாலு முடி.. அதையும் கட் பண்ணிட்டா அடிக்கிற வெயில்'ல முன்னாடி வரவங்களுக்கு கண்னு கூசிட போகுது….
பொ:- ??? இப்ப எதுக்கு தேவை இல்லாம உன் சேப்பாக்கம் மைதானத்தை இழுக்குற?
கிறு:- நீ தானே கட்டிங் போடலாம்;னு சொன்ன? அப்போ நாம சலூன்க்கு போகலையா?
பொ:- உனக்கு சாயாங்காலம் போடுற கட்டிங்'னா தெரியாது?
கிறு:- ஓ அந்த கட்டிங்கா? வா வா அதை முதல்ல புட்டிங் போட்டுடலாம்… :)
ஒரு மணி நேரத்துக்கு அப்புறம்
பொ:- டேய் கட்டிங் மட்டும் போடலாம்'னு வந்தா நீ இங்க பில்டிங் பைப் பிட்டிங் மாதிரி இழுத்துக்கிட்டே போறியே…. பேச வந்ததை பேசுவோமா?
கிறு:- அட ஆமாம்'ல சொல்லு சொல்லு.. அப்படியே இன்னொரு சிக்கன் டிக்காவும் சொல்லிடு….
பொ:- ம்ம்ம். முதல்'ல என்னத்த சொல்ல? கதையை'யா இல்லை சிக்கன் டிக்கா வா?
கிறு:- கண்டிப்பா சிக்கன் டிக்காவை முதல்ல சொல்லிடு..
பொ:- "கண்டிப்பா சிக்கன் டிக்காவை முதல்ல" சொல்லிட்டேன் டா.. போதுமா?
கிறு:- சார் ஜோக் அடிச்சீங்களாக்கும்?
பொ:- நாயே, உன் முன்னாடி தானே காசு கொடுத்து நெப்போலியன் half வாங்குனேன்? இப்ப ஜோக் அடிச்சியானு நாக்கு மேல பல்லை போட்டாலும் பரவாயில்லை நீ காலை போட்டு இப்படி கேட்டுட்டியே?
கிறு:- பரவாயில்லைடா நெப்போலியன் உள்ளே போன பயங்கரமா தான் எல்லாத்தையும் பேச வைக்கிறார்..
பொ:- டேய் பிளிஸ் டா .. கொஞ்சம் சீரியஸா பேசுவோம் டா…..
கிறு:- சரி சரி, கொஞ்சம் மொபைல் போனை கொடுவேன்
பொ:- டேய் திரும்பியுமா? ??????
கிறு:- சே சே, பயப்படாத, வீட்டுக்கு தான் ஒரு கால் பண்ணி வர லேட்டாகும்னு சொல்லிடறேன்என் மொபைல்'ல சார்ஜ் இல்லை.
பொ:- தெளிவா தான்'டா இருக்க நீ..
கிறு:- ஆமாம் வாங்குனதே half தான் அதுல கட்டிங் மட்டும் தான் எனக்கு..அதுல நான் மட்டை ஆகுனேன்'னா அந்த மாவீரன் நெப்போலியனுக்கே அசிங்கம் டா
பொ:- கட்டிங்'க்கு எல்லாம் நீ மாவீரனை இழுக்க கூடாது.. அப்புறம் நான் டென்ஷன் ஆகிடுவேன்.. பார்த்துக்கோ
கிறு:- சரி சரி, பக்கோடால இருந்து கையை எடுத்துட்டு ஊருகாய்க்கு கையை மாத்து…….பக்கோடவ கேட்டா, இங்க கருவேப்பில்லைய வருத்து தராங்கேஹி ஹி ஹி..
பொ:- ஏன்'டா நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லனும்'னு உன்னை தேடி வந்தா நீ இப்படி பக்கோடாவ பத்தி லெக்சர் கொடுத்து கிட்டு இருக்கியே
கிறு:- நீ லெக்சர்னோன தான் நியாபகம் வருது எனக்கு…..
பொ:- என்னடா?
கிறு:- இங்க மிக்சர் கிடைக்குமா'னு கேட்டு பாருடா…. Side டிஷ்க்கு நல்லா இருக்கும்
பொ:- நீ எதையுமே சீரியஸாவே எடுத்துக்க மாட்டியா டா?
கிறு:- சரி சரி இப்ப சொல்லு
பொ:- இப்ப
கிறு:- ம்ம்ம்ம் மேல சொல்லு
பொ:- மேல
கிறு:- ஹா ஹா மாட்டிக்கிட்டநான் உன்னை ம்ம்ம்ம் மேல சொல்லுனு தானே சொன்னேன்.. நீ மேல'னு மட்டும் சொல்லிட்ட.. சோ, யூ ஆர் அவுட் ஆப் தி கேம்.. ஹி ஹி ஹிஎப்படி?
பொ:- நான் கிளம்புறேன்'டா…..
கிறு:- கூல்டா……. என் மேல கோவப்ப்டாதே…. கண்டிப்பா நாம அடுத்த எபிசோட்'ல் உன் காதலை பற்றி பேசுவோம்இப்ப 11மணி ஆச்சி….. 11.30 க்கு மேல ரெயிட் இருக்கும்என்கிட்ட காஜா பீடி வாங்க கூட காசு இல்லை….. லைசென்ஸ் வேற இல்லை.. அதனால் இப்ப கிளம்புவோம்உன் கதையை அடுத்த மீட்ல புட்டு வை சரியா?
பொ:- டேய் எனக்கு சுடு தண்ணியே வைக்க தெரியாது.. இதுல எங்கத்த புட்டு வைக்கிறது?
கிறு:- பேசுடா பேசு…… உனக்கு ரிப்பிட்டு அடுத்த வாரம் கொடுக்கிறேன் கிளம்புறேன்..
-----------------------------------------------------
மாரல் ஆப் தி பதிவு :- யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா...
சரி சரி துப்பிட்டுப் போங்க..
.
மொக்கை from கோபி
http://pakkatamilan.blogspot.com/2008/05/blog-post_29.html
.
.

Thursday, 20 October 2011

உயரதிகாரிகிட்ட “டீ“ போட சொன்னது தப்பா??? அவ்வ்வ்வ்வ்...பொதுவா எல்லா ஆபீஸ்லயும் வருகை பதிவேடு (Attendance Register) இருக்கும். காலேல வந்ததும் எல்லாரும் அதுல கையெழுத்து போட்றது வழக்கமா நடக்கும்.. தனியார் அலுவலகத்துல எப்படியோ தெரியாது. ஆனா இந்த அரசாங்க அலுவலகத்துல, சில அப்பாடக்கர்கள் பண்ற அழும்பு இருக்கே.. தாங்க முடியாது.
என்னோட அலுவலகத்துல அந்த பதிவேடு, அலுவலக உதவியாளர் பொறுப்புல இருக்கும். தினமும் எல்லாரும் கையெழுத்து போட்டு முடிச்சதும் தலைமைப் பொறுப்புல இருக்குற அதிகாரி கிட்ட ஒப்படைக்கணும். அப்புறம் அவர் செக் பண்ணிட்டு இறுதிக் கையெழுத்து போடணும். இதுல பர்மிஷன் போட்றவங்க, அரை நாள் அல்லது முழு நாள் லீவ் போட்றவங்கனு தனிப் பட்டியலும் சேர்ந்து போகும்.
இதுல என்ன விஷயம்னா.. வாசலுக்குப் பக்கத்துலயே ஒரு டேபிள்ல அந்த ரெஜிஸ்டர் வச்சிருப்போம். அத தாண்டி தான் எல்லாரும் உள்ள போகணும். ஆனாலும் சில அப்பாடக்கர்ஸ் அதுல கையெழுத்து போடாம போய் சீட்ல உக்காந்துடுவாங்க. அவங்கள தேடிப் போய் அந்த உதவியாளர் கையெழுத்து வாங்கணும். அதுலயும் யாருக்காகவோ வேலை செய்யிற மாதிரி ரொம்ம்ம்ப சலிச்சுக்குட்டு கையெழுத்துப் போடுவாங்க.
(இத நோட் பண்ணிக்கங்க..) வந்த அரைமணி நேரத்துலயே டீ, காபி சாப்பிட்றேன்னு கேன்டீன் போயிடுவாங்க. அங்க போய் அரட்டைய போட்டுகிட்டு சாவகாசமா வருவாங்க. இப்ப கொஞ்ச நாளா, கேன்டீன்ல டீ நல்லாயில்லைனு சொல்லி, அலுவலகத்துலயே சரஸ்வதி“னு ஒரு வயதான பெண்மணிய டீ போட சொல்லிருக்காங்க. (ஆனாலும் வடை சாப்பிட கேன்டீன் போய்டுவாங்க..) எலெக்ட்ரிக் அடுப்பு, சீனி, காபி தூள், டீ தூள், பால் பாக்கெட்னு எல்லாமே வாங்கி குடுத்துருக்காங்க. (என் கெட்ட நேரம்.. சம்பவம் நடந்த அன்னைக்கு அந்த டீ போடும் பெண்மணி லீவு போட்ருந்தாங்க..)
கடந்த ரெண்டு நாளா எங்க ஆபீஸ் அப்பாடக்கர்ல ஒருத்தர் அலுவலக விஷயமா டூர் போயிருந்தார். பொதுவா தனிப்பட்ட முறைல லீவு போட்டா, ரெஜிஸ்டர்ல “CL“ போடுவாங்க. அஃபீசியல் டூர் போனா “T“ போடுவாங்க. ஆனா அவர் எதுவுமே குறிக்காம இருந்தத நா கவனிச்சு அந்த உதவியாளர் கிட்ட சொன்னேன். உடனே என்கிட்டயே அந்த பொறுப்ப குடுத்துட்டாரு. (வாய வச்சுகிட்டு சும்மா இருந்திருக்கலாம்..)
சரினு நானும் வேகமா அந்த அப்பாடக்கர் இருக்கிற கேபினுக்கு போனேன். யாரோ ரெண்டு மூணு பேர்கிட்ட சீரியஸா டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருந்தாரு. “Excuse me sirனு மெதுவா கேட்டுட்டு உள்ள போனேன். “சொல்லும்மா“னு என் முகத்தைப் பார்த்தார். நானும் ரொம்பவே பணிவான குரல்ல “சார், ரெண்டு நாளா டீ போடலயாம்.. அதுனால உங்கள இன்னைக்கு டீ போட சொன்னாங்க“னு சொன்னேன். (இது தான் டாக்டர் நடந்தது..).
கேபின்ல இருந்தவங்க எல்லாரும் என்னையும் அந்த சாரையும் மாறி மாறி பாத்தாங்க.. ஏன்னு தெரில.. “என்னது?”னு திரும்ப கேட்டாரு.. நானும் அவருக்கு காது கேக்கல போலனு நெனச்சு, சத்தமா “உங்கள டீ போட சொன்னாங்க“னு சொன்னேன்.
சொன்னது தான் தாமதம்.. “நான்சென்ஸ்“னு சத்தமா கத்திட்டாரு.. ஏன் அப்டி கத்தினாரு??? “T” போட சொன்னது ஒரு தப்பா??? நீங்களே சொல்லுங்க....
.
.

Wednesday, 12 October 2011

“முடியாது“ என்று சொல்லிப் பழகுங்கள்..


தலைப்புல இருக்குற “முடியாது“ங்குற வார்த்தை, தன்னம்பிக்கைய குறைக்குறது தொடர்பானதுனு நீங்க நெனச்சா அது தப்பு. இன்னைக்கு அன்றாட வாழ்க்கைல நண்பர்கள், காதலர்கள், சொந்தக்காரவுங்க, அடுத்த வீட்டுக்காரங்க, ரோட்ல நடக்குற யாரோ சிலர்“னு நிறைய பேரை தினம் தினம் சந்திச்சுகிட்டு இருக்கோம். இவங்களுக்குள்ள ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்க வேண்டிய அல்லது ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரங்கள்ல தன்னால் அவங்களோட எதிர்பார்ப்ப நிறைவேத்த முடியாதுனு நிச்சயமா தோணுறபட்சத்துல “முடியாது“னு வெளிப்படையா சொல்லிடணும். (தலைப்புக்கு வந்துட்டேனா??)
ஒரு சிலர் இருக்காங்க, வெளிப்படையா சொன்னா சம்மந்தப்பட்டவங்க தப்பா நெனச்சுக்குவாங்கனு கவுரவம் பாத்துகிட்டே, பண்ணிட்றேன், பார்க்கலாம், கொஞ்சம் டைம் ஆகும், முயற்சி செய்யிறேன்“னு இழுத்தடிச்சுகிட்டே இருப்பாங்க. அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு எவ்வளவோ முயற்சி செஞ்சேன், முடியல“னு அசட்டுத்தனமா சொல்லுவாங்க. இத முதல்லயே சொல்லிருந்தா, அவங்க வேற யார் மூலமாவாவது அந்த காரியத்தை செஞ்சு முடிச்சிருப்பாங்க.
பண விஷயமாகட்டும், பொருள் கடனா குடுக்குற விஷயமாகட்டும்.. அவசரத்துல ஏதாவது வாக்குறுதி குடுத்துட்டு அப்புறம் எப்படி சமாளிக்கிறதுனு தெரியாம முழிக்கிறதே பெரும்பாலானவர்க்கு வழக்கமாய்டுச்சு.
உதாரணத்துக்கு, அலுவலகத்துல நம்மள நம்பி ஒரு வேலைய குடுக்கும்போது, மத்தவங்க முன்னாடி கெத்தா இருக்கும்ணு சரி சரி“னு தலையாட்டிட்டு, அப்புறம் பாத்ரூம் கண்ணாடி முன்னாடி நின்னு “உனக்கேன் இந்த வேண்டாத வேலை??? எப்படி செஞ்சு முடிக்கப்போறோனோ..“னு தன்னைத் தானே திட்டிக்க வேண்டியது.. (ஹிஹிஹி.. எல்லாம் ஒரு அனுபவம் தான்..).


மத்தவங்க நம்மளப் பத்தி புரிஞ்சுவச்சிருக்குறத விட, எப்பவுமே நம்மள நாமே கணித்து வச்சுக்கணும்.. ஒரு குறிப்பிட்ட உதவியை அடுத்தவங்க நம்மகிட்ட கேக்கும்போது, முழுதாகவோ அல்லாது ஓரளவிற்கோ அல்லது முற்றிலும் செய்ய இயலாமலோ.. எந்த அளவுக்கு நம்மளால அதை செய்ய முடியும்னு உணர்ந்தோம்னா உடனே அவங்ககிட்ட நிலைமைய விளக்கி சொல்லிடலாம். பந்தாவுக்கு தலையாட்டிட்டு திருட்டுத்தனமா வேற ஒருத்தர்கிட்ட உதவி கேட்குறதெல்லாம்.... எதுக்கிந்த மானங்கெட்ட பொழப்பு?? அதுக்கு “முடியாது“னு சொல்லித் தொலஞ்சிடலாமே...
இன்னும் தெளிவா சொல்லணும்னா, காதல் விஷயத்தை சொல்லலாம். (இப்ப புரியுமே...). ஒருத்தர பிடிக்கலனாலோ இல்ல காதலிக்கலனாலோ உடனே வெளிப்படையா சொல்லிடலாம், அத விட்டுட்டு மாசக்கணக்கா இழுத்தடிச்சு, நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்னு சொல்லி ஒருத்தர காயப்படுத்துறது....... நிராகரிக்கப்பட்றத விட கொடுமையான தண்டனை. ஒருத்தரோட எதிர்பார்ப்ப நிறைவேற்ற முடியாதபட்சத்தில், அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்கலாம்.. தப்பேயில்லை.
இந்த பிரச்சனை காதலில் மட்டுமில்ல, நண்பர்களுக்குள்ளேயும் இருக்கு. ஒரு சிலர் இருக்காங்க.. “அவன் என்ன சொன்னாலும் நான் செய்வேன்.. அந்த அளவுக்கு சின்ன வயசுலருந்து பழக்கம்“னு சொல்வாங்க.. நல்ல விஷயம் தான். அதுக்காக, அவன் தண்ணியடிக்கும் போது கம்பெனி குடு“னு சொன்னான். என்னால தட்ட முடியல, அதுனால லைட்டா சாப்டேன்“னு சொல்வாங்க.. “எனக்கு இஷ்டமில்ல, என்னால முடியாது“னு நேருக்கு நேரா சொல்றதுனால என்ன கெட்டுப்போய்டும்??? நண்பன் கிண்டல் பண்ணுவானா?? பண்ணிட்டுப்போகட்டுமே? கையயும் காலையும் கட்டிப்போட்டு வாயத்தெறந்து சங்குல ஊத்துவாய்ங்களா??? இல்லேல. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்துல, ஆரம்பத்துலயே முகம் சுழிச்சு முடியாதுனு உறுதியா சொல்லிட்டீங்கனா அடுத்த முறை கேட்க யோசிப்பாங்க.
ஏதோ குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் காட்டி ஏமாத்துற மாதிரி, பார்க்கலாம் பார்க்கலாம்னு சொல்லி பதிலைத் தள்ளிப் போடாம, யோசித்துப் பார்த்து உடனுக்குடன் வெளிப்படையா சொல்லிட்றது நல்லது.. வீண் எதிர்பார்ப்பாவது தடுக்கப்படலாம்.
தன்னால முடியுமானு முயற்சி செஞ்சு பாக்கலாம்.. வேணாம்னு சொல்லல. ஆனா அது தனக்குனு வரும் சந்தர்ப்பத்துல செய்யலாம். வீணா நம்மளோட டெஸ்ட்டுக்கு அடுத்தவங்கள கஷ்டப்படுத்தக் கூடாதுனு சொல்றேன். “ஸாரிங்க.. என்னால இந்த செயலை செய்ய முடியும்னு தோணல, நீங்க வேற யார்கிட்டயாவது கேட்டுப்பாருங்க“னு வெளிப்படையா சொல்றதால நம்ம தலைல இருக்குற க்ரீடம் ஒண்ணும் கீழ விழுந்துடாது. தன்னால இயலாத ஒரு செயலுக்கு, தேவையில்லாம உங்க நேரத்தையும் வீணாக்கி அடுத்தவங்க எதிர்பார்ப்பையும் வீணாக்குவது வேண்டாமே.. அதுனால..
“முடியாது“னு சொல்லிப் பழகுங்க...
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...