கருப்பா இருக்கீங்களா?? கர்வமா இருங்க..
நேத்து டிவில முக க்ரீம் விளம்பரம் ஒண்ணு பார்த்தேன். எவ்ளோ தான் யோசிச்சாலும் க்ரீம் பேரு நினைவுக்கு வர மாட்டீங்குது. இத்தனை நாள் சிகப்பா மாறுவதற்குனு விளம்பரம் செஞ்சுகிட்டிருந்தாங்க. ஆனா இந்த விளம்பரத்துல “கண்ட கண்ட க்ரீம் உபயோகிச்சதால வெளுத்துப்போன மாதிரி இருக்குற சிகப்பு நிறத்தை, அழகான சிகப்பு நிறமா மாத்துவோம்“னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அத பாக்கும்போது வேடிக்கையா இருந்துச்சு. நம்மள்ல பலர், கருப்பா இருக்குறவங்க சிகப்பாகணும்னு ஆசைப்பட்றாங்க. சிகப்பா இருக்குறவங்க இன்னும் சிகப்பாகணும்னு முயற்சி எடுக்குறாங்க. கருப்பு நிறத்தை பெரும்பாலும் யாரும் விரும்புறதே இல்லை. அது அசிங்கமான ஒரு அடையாளமா தான் சமுதாயத்துல நினைக்கிறாங்க. வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும்போது கூட வெளி அழகு தான் முதல் கன்டிஷனா இருக்குது. பொண்ணு கருப்பா இருக்குதுனா, வாய்கூசாம வரதட்சணைல பத்து பவுன் நகை ஜாஸ்தியா கேக்குற மாப்பிள்ளை வீடுகளும் உண்டு. அதுக்கு விதியேனு நெனச்சு சம்மதிக்கிற பெத்தவங்களும் இருக்காங்க. குழந்தை சிகப்பா பொறக்கணும்னு குங்குமப்பூவை அள்ளி சாப்பிட்ற தாய்மார்கள் நம்ம ...