Posts

Showing posts from June, 2010

எங்கே சென்றாய் என்னுயிரே..

Image
எங்கே சென்றாய் என்னுயிரே..ஏக்கம் நெஞ்சை துளைத்திடுதே.
துயரம் தாளாமல் துடிக்கிறேன்.. தூக்கம் இன்றித் தவிக்கிறேன்.
கண்ணீரும் வற்றியது என்கண்ணில்.. காற்றாய்ப் போனதோ என் காதல்?
விழிகளால் சாமரம் வீசியவளே.. வலிகளைத் தந்ததேன் என்னவளே..
உள்ளம் உருகி வாடுகிறேன்.. இந்த ஊமையின் மௌனம் கேளாயோ?
நீயின்றி என் இதயம் வெறுமையாய்த் துடிக்கிறது.. நினைவே நீ எங்கே என உடைகிறது.
வாழ்க்கை, தனிமையில் கடந்திடுமோ.. வேதனை எப்போதும் தொடர்ந்திடுமோ..
ஒடிக்கப்பட்ட மனச்சிறகு ஓயாமல் கதறுகிறது.. காயத்திற்கு மருந்து எதடி? அது கலங்கியது உன்னைத்தேடி.
வார்த்தைகளும் வறண்டது கண்மணியே.. விரல்கள் கோர்க்க வருவாயோ என்னுயிரே..
நிழல் செய்த மாயம் என்ன? நீங்காமல் உன்னைத் தொடர்கிறது.. நீ என்னைப் பிரிந்ததினால் அந்த நிழல் கூட என்னை வெறுக்கிறது.
மொழியறியா குழந்தையென் பரிதாபம் புரியவில்லையா தேவதையே என்னுள் உன் சாபம்
இருள் சூழும் காலச்சுமை ஈடுகட்டுமா உன் பிரிவை?
அமைதியாய்க் கேட்கிறாயோ என் அழுகையின் சப்தம்? ஆயுள் வேண்டாம் என்பதே அதன் அர்த்தம்.

நீ எனக்கு

Image
பிறவிக் குருடனுக்கு கிடைத்த ஐந்து நிமிடப் பார்வை - நீ
பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் தாயின் முத்தம் - நீ
தூக்குக் கைதிக்கு நிறைவேற்றப்படும் கடைசி விருப்பம் - நீ
திருந்தியவனுக்கு வழங்கப்படும் பாவமன்னிப்பு - நீ
தொடர் தோல்விக்குப் பின் பெறும் முதல் வாய்ப்பு - நீ
அடைமழையில் சிறுவன் பொறுக்கும் ஆலங்கட்டி - நீ
பதில் எதிர்பார்க்கும், தெரிவிக்கப்பட்ட ஒரு தலைக் காதல் - நீ
விதவை நினைவிலிருக்கும் காதல் வாழ்க்கை - நீ
முதல் பதவியை தவறவிட்ட ஒற்றை மதிப்பெண் - நீ
அடிமை வேலைக்கு கிடைத்த விடுமுறை நாட்கள் - நீ
முத்துக் குளிப்பவன் அடக்கும் ஆழ மூச்சு - நீ
திரும்பக் கிடைத்த தொலைந்த சான்றிதழ் - நீ
பாலைவன மணல் மீது விழும் சிறு தூரல் - நீ
யுகங்கள் தவமிருக்கும் யோகிக்குத் தெரியும் ஜோதி - நீ
சிறுமியின் புத்தகம் நடுவிலிருக்கும் ஒற்றை மயிலிறகு - நீ
அன்னை ரசிக்கும் மழலையின் உறக்கப் புன்னகை - நீ
நாளிதழில் பரீட்சை எண் தேடும் மாணவப் பதற்றம் - நீ
தனிமையில் நினைவலைகள் சிந்தும் கண்ணீர்த்துளி ௦- நீ
சந்தித்த தோழர்களுக்கு இடையே நிகழும் முகமலர்ச்சி - நீ
பேச ஏங்கிய தோழியிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பு - நீ
என் வாழ்வின் வசந்த கால அத்தியாயங்க…

மரணம் கூட மகிழ்ச்சி தான்

Image
ஏதோ மாற்றம் எனக்குள்..என்ன நிகழ்ந்தது என்னுள்?

மின்னலாய் வந்தவள் நீதானே..மீளாமல் தவிக்கிறேன்உன்னாலே.

என்னை மறந்தேன்..உன் நினைவில் மிதந்தேன்.

புவியீர்ப்பு அரங்கத்தில் பனிச்சிற்பமே..உன் விழி ஈர்ப்பு அரங்கேற்றமா?

எங்கோ பறந்து

எதிலோ கலந்துஎதுவோ எடுத்து

எனை எதிலோ பதித்தது.

காவியமாய் உனைப் பார்த்தேன்..காற்றால் கடத்தப்படும் கைதியானேன்.

விடுவிப்பாயோ என்னை?வரம் தருவாயோ உன் காதலை?

என் காதலுக்கு கண் அசைவாய்உன் காதணிகளும் காற்ச்சலங்கையும்

தலையசைத்தால் போதுமா?என் மனதுள் புயலென மையம் கொண்டவளே..பூக்களும் புன்னகைக்கின்றன என்னைப்பார்த்து.