Posts

Showing posts from February, 2012

உப்புமா.. (27.02.2012)

Image
இன்னைக்கு ராசிப்பொண்ணுக்கு பிறந்தநாள். அவளோட கல்யாணத்துக்கப்புறம் வர்ற முதல் பிறந்தநாள்“ங்குறதால கொஞ்சம் ஸ்பெஷல். காலேலயே எல்லாரும் போன் பண்ணி வாழ்த்திட்டோம். எங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்“னு புலம்பினா.. அம்மா ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இன்டியாவாயிட்டாங்க.. ஒரே அழுவாச்சி தான் போங்க.. ஹாப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.. ********************** நேத்து சன்-மியூசிக்“ல வெடி படத்துலயிருந்து “இப்படி மழையடித்தால்“ பாட்டு பார்த்தேன். அட.. அட.. என்னமா இருக்கு தெரியுமா??? விஷால், சமீராவோட டிரெஸ்ஸிங் இருக்கே.. கலக்கல் போங்க.. அதுலயும் அவங்க நடனம்குற பேர்ல ஏதோ ஆடுவாங்க பாருங்க... பாட்டு முழுக்க கண்ணுக்குள்ளயே நிக்குது.. யாருப்பா அந்த டான்ஸ் மாஸ்டரு??? சுத்திப்போடுங்கப்பா.. பாக்கியராஜ், பாண்டியராஜன், ராமராஜன் டான்ஸ் எல்லாம் போட்டி போடணும் போங்க... அப்படியொரு ஸ்டெப்ஸ்.. (பேசாம நாம கூட டான்ஸ் மாஸ்டர் ஆகிடலாம்போல.. கொடுமடா சாமி..) *********************** விஜய் டிவில புதுசா “உங்களில் யார் அடுத்த அழுமூஞ்சி? ” னு நிகழ்ச்சி வைக்க சொல்லணும். சீரியல்ல தான் அழுது குவிக்குறாங்கனா

மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..

Image
1.        இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள் 2.        ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை. 3.        நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கும் அளவு 400 கன அடி காற்று. 4.        மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராணவாயுவில் 20 சதவிகித அளவு. 5.        உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடதுபக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது. 6.        உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது. 7.        ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள். 8.        இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணு லியூக்கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது. 9.        இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன. 10.        மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது. 11.        ரெடினா என்பது விழித்திரை 12.        ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறிகுறி சுவை குறைந்து விடும். 13.        ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் ப

கிறுக்கல்களுக்கு வயது இரண்டு..

Image
நேத்து தான் கிறுக்க ஆரம்பிச்ச மாதிரியிருக்குது. ரெண்டு வருஷம் ஓடிருச்சு. (பதிவுகள படிச்சுட்டு எத்தன பேர் ஓடுனாங்கனு நாம அப்பாலிக்கா டீல் பண்ணிக்குவோம்.) முதன் முதலா பதிவு எழுத ஆரம்பிச்சது இதே நாள்ல தான்.. நடுவுல ப்ளாக் தொலைஞ்சுபோய் மறுபடியும் (இரண்டாவதா) முதல் பதிவு“னு எழுதுனது வேற விஷயம். (அதுக்கு இன்னொரு நாள் பிறந்த நாள் கொண்டாடிக்கலாம். ஆனா ட்ரீட் எல்லாம் கேகப்படாது சொல்லிட்டேன்..) என்னோட கிறுக்கல்களுக்கு தொடர்ந்து ஆதரவு (என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்...) குடுத்துகிட்டு இருக்குற எல்லாருக்கும் நன்றிங்க.. இனி எழுதப்போகிற கிறுக்கல்களைப் படிக்கப்போற நண்பர்களுக்கும் (அனுதாபங்கள் கலந்த) நன்றிகள்.. (யாருப்பா அது ஓடுறது???). மறுபடியும் சொல்லிக்கிறேன்........ சக பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.. நன்றி.. நன்றி.. மூணாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் அடுத்த கிறுக்கலில் சந்திக்கிறேங்க.. நன்றிகளுடன் --------- இந்திரா . .