நான் விதிவிலக்கா? உதாரணமா?
சாதாரண நாட்களில் நீ சொல்லும் “ ஐ லவ் யூ “ க்களை விட சண்டையிடும் நாட்களில் நீ சொல்லும் “ ஐ ஹேட் யூ “ க்கள் அதிகமாய் உன்னை நேசிக்க வைக்கின்றன.. உனக்கான என் காத்திருப்புகள் ஒட்டுமொத்தமாய் உருக்குலைந்த அந்நொடியில் உண்மையாகவே உணரப்பட்டேன்.. உள்மனதில் ஏதோ ஒரு ஊனம் உள்ளூரக் குடிபுகுந்ததுபோல..!! பட்டாம்பூச்சிகளைக் கூட அடைத்துவைக்கப் பிடிக்காதவள் நான். ஆனால் என் நினைவுச் சிறைக்குள் உனை அடக்கிவிடவே துடிக்கிறேன்..!! நாமில்லா நமது நாட்களும் நம்மை நிறைத்தே நகர்ந்துவிடுகிறது.. நமக்கான நினைவுகளைச் சுமந்தபடி..!! நீ இல்லை என்பது மனதிற்குப் புரிந்தாலும் , எனக்காக நீ காத்திருந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் அனிச்சையாய் உனைத் தேடும் என் கண்களை என்ன செய்வது ? விதிவிலக்குகள் உதாரணங்களாகாது என்பார்கள். உன்னை வெறுக்கிறேன்.. நேசித்தவாறே.. நான் விதிவிலக்கா ? உதாரணமா ? உடல் கிழித்து ரத்தம் குடிக்காமல் , உணர்வு கிழிக்கப்பட்டு நினைவுகளைக் குடித்துக்கொண்டிருக்கிறேன்.. காட்டுமிராண்ட...