நான், நீங்கள், அவர்கள்..!
குஷி திரைப்படம் வெளியான தருணம் அது. தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பும் காட்சிகள் ஸ்வாரஸ்யமாய் இருக்கும். ஒரு சாயந்திர வேலையில் அம்மா , அப்பா , மாமா சகிதம் வரவேற்பறையில் பார்த்துக்கொண்டிருந்த காட்சி அது. விஜய் தொலைபேசியில் தன் அம்மாவிடம் ‘ ஐ லவ் யூ ’ சொல்லிக்கொண்டிருப்பார். நான் வெகு சாதாரணமாய் மாமாவின் பக்கம் திரும்பி “ விஜய் மாதிரி நீங்க உங்க அம்மாகிட்ட ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களா மாமா ?“ என்றேன். அதற்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று இப்போதும் எனக்கு நினைவில்லை. மாற ாக அடுப்படியில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த பாட்டியின் (மாமாவின் அம்மா) அழுகைச் சத்தம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. என்ன ஏதேன எங்களுக்குப் புரியும் முன்னமே விருவிருவென வெளியே வந்தவள் “ எத்தாத்தன்டி வார்த்தை சொன்னா கேட்டியா ? இதையெல்லாம் கேட்டுகிட்டு நா உயிரோட இருக்கணுமா ?” என்று கத்த ஆரம்பித்தாள். நான் திரும்பவும் அதையே சொன்னேன். ” ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களானு தானே கேட்டேன். வேற என்ன தப்பா கேட்டேன் ?“. மறுபடியும் ஆங்காரமாய் கத்த ஆரம்பித்தவளை அன்று முழுவதும் ஆளாளுக்கு சமாதானம் செய்து கொண்டிருந்த...