Posts

Showing posts from November, 2015

Miracle in Cell No.7 - என் பார்வையில்..

Image
குழந்தை எழுத்தாளர் (உமாநாத்) விழியன், மழலைக் கதைகளில் ஒரு முறை தன் பாரீஸ் அனுபவத்தை எழுதியிருந்தார். ஒரு இடத்தில் மரங்களுக்குப் பின்னாலிருந்து சூரியன் உதயமாகிக் கொண்டிருந்ததாம். உடனே அவர் தனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவனிடம், “இப்போது அந்த மரத்திலிருந்து சூரியன் முளைக்கும் பாரேன் ” என்று சொன்னாராம். அதேபோல் மரக்கூட்டத்திலிருந்து சூரியன் தோன்றவும் அவன் அதை உண்மையென ஆச்சர்யமாய் ரசித்துக்கொண்டிருந்தானாம். (அதற்குள் அவனுடைய அம்மா உண்மையை சொல்லி அக்கற்பனை உலகத்தில் கல்லெறிந்தது வேறு விஷயம்). பேபி ஷாலினி நடித்த படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, “ இப்ப எப்படி இருக்காங்க இந்த அக்கா?“ என்று கேட்ட பக்கத்து வீட்டு சிறுமிகளுக்கு, நாளிதழ்களையும் டிவி சேனல்களையும் மாற்றி மாற்றி தேடிப்பார்த்து கடைசியாய் நடிகை ஷாலினியாக நான் காட்டியபோது, ஒட்டு மொத்த கூட்டமும் “ஐயோ.. இவங்க அஜித் ஆன்ட்டி“ என்று கோரஸ் பாடிய ஸ்வாரஸ்யம் ரசிக்கத்தக்கது. குழந்தைகளுக்கான உலகில், குழந்தைகளாகவே நுழையும் திறமை பெற்ற பெரியவர்கள் அதிஷ்டசாலிகள். இந்தப் படமும் இரு குழந்தைகளுக்கு இடையிலான உலகம் பற்றிய கதைதான