Posts

Showing posts from September, 2010

பேனர் பைத்தியங்கள்..

Image
முன்னெல்லாம் யாருக்காவது கல்யாணம் நடந்தா அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேந்து அங்கங்க செவுத்துல சின்னதா வாழ்த்து நோட்டீஸ் ஒட்டுவாங்க. சின்ன பேப்பர்ல வாழ்த்து செய்தி அச்சடிச்சு அதோட சாக்குலேட்ட பின் பண்ணி எல்லாருக்கும் தருவாங்க. ஆனா இப்ப ஃப்ளக்ஸ் பேனர் வந்தாலும் வந்துச்சு, காதுகுத்து, கல்யாணம்னு ஆரம்பிச்சு யாராவது மண்டையப் போட்டா கூட பெருசு பெருசா பேனர் வச்சிட்றாங்க. இதுல என்ன கொடுமைனா, அந்த பேனர்ல ஒரு கும்பல் போட்டோவே இருக்கும். சம்பந்தப்பட்டவங்க யாரு, வாழ்த்துறவங்க யாருனே நமக்கு வௌங்க மாட்டிங்குது. என்னவோ சினிமால ஹீரோ சான்ஸ்க்கு ஆள் எடுக்குறமாதிரி ஸ்டைலா போஸ் குடுத்துட்டு நிப்பாய்ங்க. பெரிய பெரிய சோ்ல உக்காந்து, ஃபோன் பேசுற மாதிரி, ஏதோ உலக சமாதானத்துக்காக யோசிக்கிற மாதிரி, நகைக் கடை, டூத் பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிற மாதிரினு பயங்கரமான ஸ்டில்ஸ் எல்லாம் வச்சிருப்பாய்ங்க. இவங்க நிக்கிறது மட்டுமில்லாம இவங்க வீட்டு குட்டீஸ் பட்டாளத்தையும் நிக்க வச்சிருப்பாய்ங்க. ஏதோ போனா போகுதுனு சம்பந்தப்பட்ட கல்யாண ஜோடிகளை ஒரு ஓரமா இத்துனூண்டா போட்ருப்பாங்க. பத்தாததுக்கு சினிமா ஹீரோக்களோட போட்டோவையும் பாத

அடப்பாவிகளா.. நீங்க நல்லா இருப்பீங்களா???

Image
ராஜீ : ஹலோ சிவா : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க? ராஜீ : ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா? சிவா : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா.. ராஜீ : அடி வாங்கப் போற. சிவா : எங்க.. அடி பாக்கலாம்.. ராஜீ : ----- (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்? சிவா : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ் ராஜீ : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது.. சிவா : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்.. ராஜீ : ம்ம்ம்.. அப்புறம்?? சிவா : நீ தான் சொல்லனும்.. ராஜீ : என்ன சொல்லனும்? சிவா : ஏதாவது சொல்லு.. ராஜீ : என்ன சொல்றது?? சிவா : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்? ராஜீ : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான். சிவா : ம்ம்.. அப்புறம்.. ராஜீ : வேறென்ன?? சிவா : நீ தான் சொல்லணும். ராஜீ : தூக்கம் வரலயா? சிவா : ஏன் உனக்கு வருதா? ராஜீ : இல்லப்பா.. சிவா : பின்ன? ராஜீ : சும்மா தான் கேட்டேன்.. சிவா : ம்ம்.. அப்புறம்?? ராஜீ : வேறென்ன?? சிவா : நாளைக்கு என்ன ஸ்பெஷல்?? ராஜீ : எப்பவும் போல தான்.. சிவா : ம்ம்.. ராஜீ : அப்புறம்?? சிவா : சொல்லு.. ராஜீ : என்ன சொல்லனும்? சிவா : ஏதாவது சொல்லு.. . அ

உனக்கோர் செல்லப்பெயர்..

Image
காதல் மிளிர்ந்து வெகுநாட்களாகியும் ஏனோ உனை அழைக்கவில்லை ஒரு செல்லப்பெயரிட்டு.. பலமுறை கேட்டும் மழுப்பலே பதிலாக. தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை மறைத்து. எனக்கு என்றும் உரிமையானதாய்.. என்னை மட்டும் நினைவூட்டுவதாய்.. என்னுள்ளே துலாவலானேன்.. உனக்கோர் பெயரை. தேர்ந்த தேடலுக்குப் பின் தேர்வு செய்தேன் என் தேவதை உன் புதிய பெயர்தனை.. என்னுள்ளே ஆசையாய் உச்சரித்து அழகு பார்த்து ஆவலாய் உனை நெருங்குகையில்.. உன் நண்பர் கூட்டத்தில் எவனோ உனை அழைக்க.. உடைந்து போய் நின்றேன். என் தேடல் முடிவு அவன் வார்த்தையில். நட்பின் உரிமையென்று சமாதானித்துக் கொண்டாலும்.. ஏனோ தெரியவில்லை. இன்று வரை அழைக்கிறேன். உன் முழுப்பெயரையே. .

செம்மொழியான டமிழ் மொழியே....

Image
அது ஒரு பன்னாட்டு நிறுவனம். தமிழகத்தின் தலைசிறந்த கம்பெனிகளில் அதுவும் ஒன்று. அதில் வேலைக்கு சேர்வது சாதாரண விஷயமில்லை. பட்டதாரிகளை திறமை, படிப்பு, ஒழுக்கம் என்று பல்வேறு கோணங்களில் தேர்வுகள் நடத்தி பொறுப்பான பதவிகளில் வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அத்தகைய நிறுவனத்தில் அன்று இறுதிக் கட்டமாக நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நபர்களும் தயாராக வந்திருந்தனர். சரியாக பத்து மணிக்கு இண்டர்வியு ஆரம்பிக்கும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்ததால் சில நிமிடங்கள் முன்னதாகவே வந்து அமர்ந்திருந்த அவர்கள், பலதரப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்கள். சிபாரிசோ லஞ்சமோ அறவே ஏற்கப்படாது என்பது நிறுவனத்தின் கொள்கை. அது அவர்களின் திறமைக்கு சாதகமாக அமைந்திருந்தது. ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பொதுஅறிவினை கிரகித்துக்கொண்டு வந்திருந்தனர். சகஐமான விசாரிப்புகள் இருந்தபோதிலும் உள்ளுக்குள் தங்கள் மீதிருந்த அலாதியான நம்பிக்கையால், வெற்றியைக் கைப்பற்றிக்கொள்ளும் எண்ணமும் மேலோங்கத் தவறவில்லை. படிப்பிற்குண்டானதும் விளையாட்டு மற்றும் இன்னபிற சான்றிதழ்களும் அள்ளிக்கொண்டு வந்திருந

நான் வாங்கிய பல்பு..

Image
நான் ஒரு தடவை தற்காலிகமா உள்ளுர் கேபிள் சேனலில், செய்தி வாசிப்பாளரா (நம்புங்கப்பா) கொஞ்ச நாள் வேலை பாத்துகிட்டிருந்தேன். அங்க அடிக்கடி மற்ற நிகழ்ச்சிகளுக்கு நேரடி ஒளிபரப்பு எல்லாம் நடக்கும். ஒரு தடவை கேம் ஷோ ஒன்னு நடத்துனாங்க. அதாவது, நிகழ்ச்சிக்கு போன் பண்றவங்க கிட்ட ஏதாவது கேள்வி, கேட்டு பதில் சொல்றவங்களுக்கு பரிசு அறிவிக்கணும். . அந்த சேனல்ல செய்திகளையெல்லாம் கொஞ்சம் முன்னதாவே பதிவு பண்ணி ஒளிபரப்புவாங்க. அதுனால எனக்கும் நேரடி ஒளிபரப்புக்கும் தொடர்பில்ல. . அப்படிதான் ஒரு நாள் நா வேலைய முடிச்சுட்டு கௌம்பிகிட்டு இருந்தேன். திடீருனு எங்க மேனேஜர் என்கிட்ட ஓடி வந்து அன்னைக்கு லைவ் ஷோ பண்ற பொண்ணு வரலனும் வேற ஏற்பாடு பண்ண முடியாதனால நான் அந்த நிகழ்ச்சி பண்ணனும்னும் பதட்டமா சொன்னாரு. எனக்கு தூக்கிவாரிப்போட்டுச்சு. ஆனாலும் வேற வழியில்லாதனால சரின்னு சொன்னேன். . உடனே அவசர அவசரமா லைட்டா மேக்அப் போட்டுகிட்டு (அழகுக்கு அழகா?) நிகழ்ச்சிக்கு தயாரானேன். புரோக்ராம் டைரக்டர் என்கிட்ட வந்து ”நீ என்ன பண்ணுவியோ தெரியாது, போன் பண்றவங்களுக்கு எத்தன க்ளு வேணும்னாலும் குடு, அவங்கள ஜெயிக்க வச்சிடனும், அப்பதான்

மன்னாதி மன்னன் - தொடர்பதிவு

Image
நம்மளையும் மதிச்சு (!!!) தொடர்பதிவுக்கு கூப்பிட்ட வெறும்பயலுக்கு நன்றி. இராஜராஜ சோழர் , ஆசோகர் , அலெக்சாண்டர் , கட்டபொம்மன் , இம்சை அரசன் 23 ம் புலிகேசி (!!) இப்படி நெறைய மன்னாதி மன்னர்கள் இருந்தாலும் , தலைப்பைப் படித்ததும் எனக்கு முதலில் தோன்றியது திப்பு சுல்தானின் நினைவு தான். இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து எவ்வளவு போராட்டங்கள் நடந்திருந்தாலும் அதற்கெல்லாம் முதலில் வித்திட்டது இவரது ஆட்சியில் தான். ” நான் எதற்காகவும் அஞ்சவில்லை , திப்பு சுல்தானைத் தவிர ” என்று ஒரு ஆங்கிலேய கவர்னர் சொன்னதாக எங்கோ படித்ததாக நினைவு. அவரைப் பற்றி நான் தெரிந்து கொண்ட தகவல்களை சுருக்கமாக எழுதியுள்ளேன். திப்பு சுல்தான் நவம்பர் 20, 1750 ல் தேவனஹல்லியில் பிறந்தார். தந்தை ஹைதர் அலி , தாய் ஃபக்ர் உன்னிசா , இளைய சகோதரர் கரீம். இவரது தந்தை சாதாரண இளநிலை அதிகாரியாக இருந்து படிப்படியாக அரசரின் நம்பிக்கை மூலம் ஆட்சியை ஒப்படைக்கப்பெற்றவர். திப்பு சுல்தானை ஆரம்பத்தில் இறைபணிக்காக அர்பணிக்க எண்ணிய ஹைதர் அலி , பின் காலப்போக்கில் மனது மாறி வலிமையான அரசனாக உருவாக்கினார். திப்பு சுல்தானின் பதினைந்தாவது

நாளை கண்டிப்பாக...

Image
புல் மீது விழும் பூவின் மௌனமாய் உன் மீதெழும் காதல் என்னுள்ளாய்.. *** உனது துப்பட்டாவில் பட்டு சிதறிச் செல்வது காற்று மற்றுமல்ல என் காதலும் தான். *** கிறுக்கல்கள் கூட காவியமாய்.. உளறல்கள் கூட ரகசியமாய்.. எனக்கான ஓருலகம் ஓவியமாய். *** நீளும் என் இரவுகள் விடியாமல் விழிப்புடன்.. நாளும் உன் நினைவுகள் முடியாமல் தவிப்புடன்.. *** எத்தனையோ விழுப்புண்கள் தாங்கிக்கொள்ள முடிந்தது தாங்க முடியாமல் தவிக்கிறேன். உன் விழி்ப்புண் பட்டதை.. *** எனைக் கடக்கும் உன் பார்வைக்கு, ஏற்றதொரு அர்த்தத்தை எப்போதும் தருவதில்லை எந்த ஒரு அகராதியும்.. *** கடலையும் நிலவையும் புதிதாய் ரசிக்கக் கற்றுக்கொடுத்த நீ காதலைத் தெரிவிக்க கற்பிக்கவில்லையே.. *** இதோ.. கொடுக்கப்படாத உனக்கான என் கடிதங்கள், இன்றும் என் அலமாரியில்.. தயக்கங்கள் என்ற பெயரில். *** வழக்கம்போல் சொல்லிக்கொண்டேன். “நாளை கண்டிப்பாக”. ***

கும்மியடிக்கும் பதிவர்களுக்கு..

Image
நண்பர் வால்பையனின் சமீபத்திய பதிவு ஒன்றினைப் படித்தேன். அதில், பதிவுலகம் தற்போது வெகுவாக முன்னேறி வருவதாகவும், செய்தித்தாள்களில் இடம் பிடிக்கத் துவங்கிய வலைப்பதிவர்கள் தற்போது தொலைக்காட்சியையும் விட்டுவைக்கவில்லை என்றும், இது ஆரோக்கியமான விசயம் என்றும் அவர் கூறியிருந்தார். அவருடைய இந்தக் கருத்துக்களில் எந்த அளவு உண்மை இருக்கிறதோ, அதற்கு ஈடான வருந்தத்தக்க நடைமுறையும் நிலவுகிறது என்பதே எனது பார்வை. இன்றைய வலைப்பதிவாளர்களும் சரி, புதிதாக வலையுலகில் காலடி எடுத்து வைப்பவர்களும் சரி, பெரும்பாலானவர்கள் தங்களின் நகைச்சுவை உணர்வினை மற்றவர்களுடன் பகிரும் ஊடகமாகவே வலைப்பதிவினை நோக்குகின்றனர். பதிவுகள் போட்டாக வேண்டுமே என்பதற்காக, அன்றன்று தமக்கு நடைபெறும் நிகழ்வுகள், நகைச்சுவையாக மாறிய தருணங்கள், கிண்டல்கள், நையாண்டிகள், பரிகாசங்கள், குறிப்பிட்டவர்களுக்குள் நடைபெறும் கருத்துமோதல்களின் பிரதிபலிப்புகள், திரைப்பட விமர்சனங்கள், புகைப்படங்கள், அதிகம் போனால் சிறுகதைகள் மற்றும் காதல் கவிதைகள் என்று மிகச் சாதாரணமான பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பதிவுகளை இடுகின்றனர். கவலைவேண்டாம், இந்தப் பட்டியலில் என்னைய