எங்கே சென்றாய் என்னுயிரே..

எங்கே சென்றாய் என்னுயிரே..
ஏக்கம் நெஞ்சை துளைத்திடுதே.

துயரம் தாளாமல் துடிக்கிறேன்..
தூக்கம் இன்றித் தவிக்கிறேன்.

கண்ணீரும் வற்றியது என்கண்ணில்..
காற்றாய்ப் போனதோ என் காதல்?

விழிகளால் சாமரம் வீசியவளே..
வலிகளைத் தந்ததேன் என்னவளே..

உள்ளம் உருகி வாடுகிறேன்..
இந்த ஊமையின் மௌனம் கேளாயோ?

நீயின்றி என் இதயம் வெறுமையாய்த் துடிக்கிறது..
நினைவே நீ எங்கே என உடைகிறது.

வாழ்க்கை, தனிமையில் கடந்திடுமோ..
வேதனை எப்போதும் தொடர்ந்திடுமோ..

ஒடிக்கப்பட்ட மனச்சிறகு
ஓயாமல் கதறுகிறது..
காயத்திற்கு மருந்து எதடி?
அது கலங்கியது உன்னைத்தேடி.

வார்த்தைகளும் வறண்டது கண்மணியே..
விரல்கள் கோர்க்க வருவாயோ என்னுயிரே..

நிழல் செய்த மாயம் என்ன?
நீங்காமல் உன்னைத் தொடர்கிறது..
நீ என்னைப் பிரிந்ததினால்
அந்த நிழல் கூட என்னை வெறுக்கிறது.

மொழியறியா குழந்தையென் பரிதாபம்
புரியவில்லையா தேவதையே என்னுள் உன் சாபம்

இருள் சூழும் காலச்சுமை
ஈடுகட்டுமா உன் பிரிவை?

அமைதியாய்க் கேட்கிறாயோ என் அழுகையின் சப்தம்?
ஆயுள் வேண்டாம் என்பதே அதன் அர்த்தம்.


Comments

பிரிவு துயர் .. காதலில் மட்டும் எல்லோரையும் பாடாய்ப் படுத்தி வைக்கிறது
Chitra said…
ஒடிக்கப்பட்ட மனச்சிறகு
ஓயாமல் கதறுகிறது..
காயத்திற்கு மருந்து எதடி?
அது கலங்கியது உன்னைத்தேடி.

..... காதல் பிரிவில் உள்ள மன வலியை அருமையாக சொல்லும் வரிகள்.
//கே.ஆர்.பி. செந்தில்..

பிரிவு துயர் .. காதலில் மட்டும் எல்லோரையும் பாடாய்ப் படுத்தி வைக்கிறது//

உண்மை தான் செந்தில்..


//chitra ..

காதல் பிரிவில் உள்ள மன வலியை அருமையாக சொல்லும் வரிகள்.//

நன்றி சித்ரா..
My days(Gops) said…
வழக்கம் போல பதிவு அதாவது கவிதை சூப்பர்.. எப்போதுமே ஒருதலை காதல் கவிதை தானா?
My days(Gops) said…
..எங்கே சென்றாய் என்னுயிரே..
ஏக்கம் நெஞ்சை துளைத்திடுதே.


துயரம் தாளாமல் துடிக்கிறேன்..
தூக்கம் இன்றித் தவிக்கிறேன்..\\

டிவீ சீரியல் பார்க்கும் போது கரண்ட் கட் ஆனா இப்படிதான் புலம்புவாங்க சில பேர் :D
My days(Gops) said…
//ஒடிக்கப்பட்ட மனச்சிறகு
ஓயாமல் கதறுகிறது..
காயத்திற்கு மருந்து எதடி?
அது கலங்கியது உன்னைத்தேடி//

டாப் இதுதான்
Anonymous said…
:(

கேபிள் சங்கர்
பிரிவின் வலி தெரிகிறது கவிதைகளில்..!!
//அமைதியாய்க் கேட்கிறாயோ என் அழுகையின் சப்தம்?
ஆயுள் வேண்டாம் என்பதே அதன் அர்த்தம்.//

nice
//கண்ணீரும் வற்றியது என்கண்ணில்..
காற்றாய்ப் போனதோ என் காதல்? //

ரசிக்கும் வார்த்தைகள்

ஏங்க உங்களுக்கு ஒரு விருது கொடுத்தேனே எங்க காணொம்
காதலின் வலி கசிகிறது . பகிர்வுக்கு நன்றி
Kadhalin vali therigiradhu nanba
வலி மிகுந்த வரிகள்...நல்ல கவிதை...
################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################
வார்த்தைகளும் வறண்டது கண்மணியே..
விரல்கள் கோர்க்க வருவாயோ என்னுயிரே..

///


ரொம்ப நல்ல எதிர்பார்ப்பு
HariShankar said…
அந்த காதலன் பத்தி நினைக்கவே பாவமா இருக்கு :(

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..