செம்மொழியான டமிழ் மொழியே....


அது ஒரு பன்னாட்டு நிறுவனம். தமிழகத்தின் தலைசிறந்த கம்பெனிகளில் அதுவும் ஒன்று. அதில் வேலைக்கு சேர்வது சாதாரண விஷயமில்லை. பட்டதாரிகளை திறமை, படிப்பு, ஒழுக்கம் என்று பல்வேறு கோணங்களில் தேர்வுகள் நடத்தி பொறுப்பான பதவிகளில் வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.

அத்தகைய நிறுவனத்தில் அன்று இறுதிக் கட்டமாக நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நபர்களும் தயாராக வந்திருந்தனர். சரியாக பத்து மணிக்கு இண்டர்வியு ஆரம்பிக்கும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்ததால் சில நிமிடங்கள் முன்னதாகவே வந்து அமர்ந்திருந்த அவர்கள், பலதரப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்கள். சிபாரிசோ லஞ்சமோ அறவே ஏற்கப்படாது என்பது நிறுவனத்தின் கொள்கை. அது அவர்களின் திறமைக்கு சாதகமாக அமைந்திருந்தது.

ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பொதுஅறிவினை கிரகித்துக்கொண்டு வந்திருந்தனர். சகஐமான விசாரிப்புகள் இருந்தபோதிலும் உள்ளுக்குள் தங்கள் மீதிருந்த அலாதியான நம்பிக்கையால், வெற்றியைக் கைப்பற்றிக்கொள்ளும் எண்ணமும் மேலோங்கத் தவறவில்லை. படிப்பிற்குண்டானதும் விளையாட்டு மற்றும் இன்னபிற சான்றிதழ்களும் அள்ளிக்கொண்டு வந்திருந்தனர். இன் பண்ணப்பட்ட சட்டை, அயர்ன் பண்ணிய பேண்ட், அதன் பெல்ட், டை, ஷூ, இவைகளோடு சேர்ந்து அவர்களது பெர்ஃபியும் வாசனையும் அந்த அறையையே ஆக்கிரமித்தது.

சரியாக, சுவர்க்கடிகாரம் பத்துமுறை மணியெழுப்பிய மறுவினாடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இயல்பான அறிமுகங்களுக்கும் சான்றிதழ் ஆய்வுகளும் நடைபெற்றபின் கேள்வி கேட்கப்பட்டது.

ஒரே ஒரு கேள்வி தான். ஆனால் சொல்லிவைத்தாற் போல ஆறு பேருக்குமே அதற்குண்டான விடை தெரியவில்லை. சிறப்பான முறையில், தங்களால் இயன்ற அளவிற்கு தயாராக வந்திருந்தபோதிலும், கேள்விக்குண்டான பதில் தெரியாததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

கேள்வி :  அன்றைய தமிழ் வருடம், மாதம், தேதி என்ன?

 

தூரத்தில் எங்கோ ஒலித்துக்கொண்டிருந்தது..

செம்மொழியான தமிழ் மொழியேஏஏஏஏ......

.

Comments

இது உண்மைச்சம்பவமா? கதையா?
R.Gopi said…
செம்மொழியாம் தமிழ் மொழியை பாதுகாக்க பல வழிகள் உள்ளன...

இவையெல்லாம் கற்றறிந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் வல்லுநர்கள், பேராசிரியர்கள் (அன்பழகன் போன்ற கழகத்தார் அல்ல, கற்றறிந்தோர்) போன்றோரை கொண்ட ஒரு குழு அமைத்து, அவர்களின் வழிகாணலில் செய்ய வேண்டியது...

இந்திய திரையுலகின் இசையமைப்பின் உச்சத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் இசை வாங்கி ஒரு பாடல் பாடுவதாலேயே தமிழ் செம்மொழி என்றும் நீண்டு வாழும் என்று நினைப்பதும் அறியாமை...

அந்த நேர்முக தேர்வில் கேட்ட கேள்விக்கு இன்று நம்மில் பலருக்கும் விடை தெரியாதென்பதே வருந்தத்தக்க, கசப்பான உண்மை..
siva said…
தமிழ் பற்று கொண்ட ஒரு சிறுகதை பதிவர்..
விரைவில் சிறுகதை ஆசிரியர்...
பதிவு உலகத்திற்கு ரெடி...
பட் இப்படி எல்லாம் கஷ்டமான கேள்விகள் எல்லாம் கேட்க கூடாது.
நல்ல இருக்குங்க.
Chitra said…
டமில்ல இப்டிலாம் கேல்வி இர்க்கா?
சரி விடை என்னங்க?
நாங்கள்
பிறந்தது தமிழனுக்கு...
பிறந்திருப்பது தமிழ்நாட்டில்...
ஆனால்
நாங்கள் "நீச மொழி" யான தமிழில் பேசமாட்டோம்...
வீட்டில் தாய்மொழியில் பேசமாட்டோம்....!
பள்ளியில் தமிழ்வழிக் கல்வி கற்கமாட்டோம்...!
தாய்மண்ணின் பாரம்பரிய... தமிழ் கலாச்சார உடையணிய மாட்டோம்...!
நாங்கள்... உலகிற்கே கலாச்சாரத்தை கற்றுத் தந்த தமிழன்....!

எங்களுக்கு எப்படி...!
ஸ்ரீ விக்ருதி ஆண்டு என்றும்.... புரட்டாசி மாதம் என்றும்.... 5ஆம் நாள் என்றும் தெரியும்...!
மிகவும் வேதனையான விசயம்.
siva said…
எங்களுக்கு எப்படி...!
ஸ்ரீ விக்ருதி ஆண்டு என்றும்.... புரட்டாசி மாதம் என்றும்.... 5ஆம் நாள் என்றும் தெரியும்...!
--appada..thanks annatha..
siva said…
டமில்ல இப்டிலாம் கேல்வி இர்க்கா?--enaku theriayama eppadi ellam oru langu wage erukka???

chitra akka..ethu ellam tappu..(yaro ennaiya adikravapila theriuthu am escape...)
Google ல தேடி சொல்லிருக்கலாம். இல்லைனா கலைஞருக்கு போன் போட்டு கேட்டிருக்கலாம்.
ஒரு வேளை முதல்வர் ஆர்டரா இருந்திருக்குமோ
அன்னு said…
அட்றா சக்க! அட்றா சக்க!!
என்னமா யோசிக்குது பாரேன் இந்த பொண்ணு!

காலண்டர்ல இனிமே பெருசா தமிழ் தேதியை குறிப்பிட சொல்லலாம்!
தமிழக அரசு ஆணையிடுமா!?
உனக்கிரு(?)க்கு மூளை!!... கொஞ்சநாட்களிலே நம்ம எல்லோரையும் விற்று கடலை மிட்டாய் வாங்கி தின்னாலும் தின்னுருவா... மீ த எஸ்கேபு ...
மிகவும் வேதனையான விசயம்... அதுதான் செம்மொழியின் உண்மையான நிலையும்.. பகிர்வுக்கு நன்றி. வலைச்சரம் அறிமுகம் நான்.
Jey said…
நல்ல கேள்வி???.

சரி, இது அந்த பணி சம்பந்தமா, தேவைக்காக கேட்கப்பட்டதா?.
சபாஷ்! சரியான கேள்வி!
kalai said…
yosika vachutinga indhira
HariShankar said…
ரொம்ப சின்ன கதை தாங்க.. ஆனா நெத்தியடி தலைப்பு , பதிவு கேள்வி... ரொம்பவே யோசிக்க வைக்குது

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..