ஆங்கோர் காதல்..!
வெகுநேரப் பேச்சிற்குப்பின்
கிளம்பிச்செல்ல எத்தனிக்கிறேன்..
விரல்கள் கோர்த்தபடி
விட்டகல மறுக்கிறாய்..!
விருட்சமாய் வளர்ந்திருப்பினும்
வேரூன்றித் துளிர் விடுகிறது
ஆங்கோர் காதல்..!!
.
 
விரல்கள் பிணைத்துக்கொள்வதைப் போல
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை...
பிணைத்த விரல்களிலிருந்து விடுவித்துச் செல்வது..!!
.

Comments

s suresh said…
அருமை! அருமை! மெல்லிய காதலை அருமையாய் சொல்லியது கவிதை!
மனதை விடுவித்துச் செல்வது சிரமம் தான்...
Ramani S said…
அருமை அருமை
சமயங்களில் சிக்கிக் கொண்டதுபோல்
திணற அடிக்கவும் செய்கிறது
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்