அணுவைத் துளைத்து..


அணுமின் நிலையம் என்பது என்ன? அதில் என்னென்ன ஆபத்துக்கள் இருக்கின்றன.. கதிர்வீச்சு.. புரோட்டான்.. நியூட்ரான்.. இன்னும் நிறைய நிறைய தகவல்கள் அடங்கிய நாவல் இது. அறிவியல் ரீதியாய் ஃபார்முலா சொல்லி குழப்பாம, முடிந்தவரைக்கும் புரியிற மாதிரி விளக்கியிருக்கிறார் செய்யாறு தி.தா.நாராயணன். (அப்படியுமே சில தகவல்களை உள்வாங்க, திரும்பத் திரும்ப படிக்க வேண்டியதாயிற்று. என்ன பண்றது?? நமக்கு அந்த அளவுக்கு தான் அறிவு..)
 வெறுமனே தனிமங்கள், திரவங்கள்னு சொற்பொழிவு செய்து மொக்கை போடாம, கதைக்களம் ஒரு அணுமின் நிலையம், அதன் ஊழியர்கள், நடுவே ஒரு மெல்லிய காதல், சில கொலைகள், கடத்தல்கள், சில மர்மங்கள், நிறைய அறிவியல், போலீஸ், இறுதியாய் ஒரு வில்லன்..னு ஸ்வாரஸ்யமாய் கொண்டுசென்ற விதம் யதார்த்தம்.
 மர்ம நாவல்கள்ல கடைசி வரைக்கும் யார்மேல சந்தேகம் வரலையோ அவங்க தான் வில்லன்னு காலங்காலமா கடைபிடிச்சுகிட்டு வரும் விதிகள் நமக்கு அத்துப்படியாதலால், அப்பாவியான கதாப்பாத்திரத்தின் மீது தான் நமக்கு முதலில் சந்தேகம் வருது.. அது கடைசியில் ஊர்ஜிதமாகவும் ஆகுது. (முடிவில் புரோட்டான் கொண்டு தங்க உலோகம் செய்யிறது..னு செய்முறை விளக்கம் கொடுத்து கதையை ச்சப்புனு ஆக்கிட்டாரு).
 கதிர்வீச்சு அபாயம் எந்த அளவிற்கு ஆபத்தானது என்றும், அதன் வீரியம் பற்றியும் புரியும்படி தெளிவாய் விவரித்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
 அணுமின் நிலையம் பற்றி தெரியாதவங்க, தெரிந்துகொள்ள கொஞ்சமேனும் ஆர்வமிருப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
 அணுவைத் துளைத்து
செய்யாறு தி. தா. நாராயணன்
திருமகள் நிலையம்
.
.

Comments

Anonymous said…
வணக்கம்

கதைக்களம் ஒரு அணுமின் நிலையம், அதன் ஊழியர்கள், நடுவே ஒரு மெல்லிய காதல், சில கொலைகள், கடத்தல்கள், சில மர்மங்கள், நிறைய அறிவியல், போலீஸ், இறுதியாய் ஒரு வில்லன்..னு ஸ்வாரஸ்யமாய் கொண்டுசென்ற விதம் யதார்த்தம்

கதையின் கருவைப்பார்த்தால் மிக அருமையாக இருக்கும் என்று நம்புகிறேன்....தகவலுக்கு நன்றி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Anonymous said…
வணக்கம்

கதைக்களம் ஒரு அணுமின் நிலையம், அதன் ஊழியர்கள், நடுவே ஒரு மெல்லிய காதல், சில கொலைகள், கடத்தல்கள், சில மர்மங்கள், நிறைய அறிவியல், போலீஸ், இறுதியாய் ஒரு வில்லன்..னு ஸ்வாரஸ்யமாய் கொண்டுசென்ற விதம் யதார்த்தம்

கதையின் கருவைப்பார்த்தால் மிக அருமையாக இருக்கும் என்று நம்புகிறேன்....தகவலுக்கு நன்றி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லா விமர்சனம் செய்து பகிர்ந்துருக்கீங்க..நன்றி! ஆனால் மர்மம்னாலே எனக்குப் பயமே...

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..