Posts

சிகரம் – என் பார்வையில்..

Image
நான் இதுவரைக்கும் விமர்சனம்னு எழுதினது இல்ல. இதுவும் விமர்சனம் இல்ல. ரொம்ப நாளைக்குப் பிறகு நேத்து ராஜ் டிஜிடலில் “சிகரம்“ படம் பார்த்தேன். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டுமொரு முறை பார்க்கத்தூண்டும் படங்களில் இதுவும் ஒன்று. எதனாலோ அது பற்றி பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு. சிகரம் - காதல், நட்பு, கணவன் மனைவி அந்நியோன்யம், நம்பிக்கை, இழப்பு, யதார்த்தம்னு எல்லாம் கலந்த கவலையா இந்தப் படத்தைச் சொல்லலாம். ரேகா, ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன், நிழல்கள் ரவினு மற்ற கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் மனசுல நிக்கிறது என்னவோ, ராதா - எஸ்பிபி இந்த இருவருக்குமிடையேயான நட்பு ரீதியான காதல் தான். இதில் எனக்குப் பிடித்த காட்சிகளெனில், தான் காதலித்த பெண்ணை பல வருடங்கழித்து தனக்கான மருத்துவராக சந்தித்து, பின் நட்பு கொண்டு, பழைய நினைவுகள் பற்றிய எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் காட்சிகள். குறிப்பா.. “நா இல்லாம நீங்க இல்ல.. நீங்க இல்லாம நா இல்லனெல்லாம் பேசினோம். ஆனா இப்ப.. நா இல்லாம நீங்க இருக்கீங்க. அது மாதரி நானும் இருக்கேன். சொல்லப்போனா இன்னும் ஹெல்த்தியாவே இருக்கேன். வெய்ட் வேற ஜாஸ்த்தியாகிட்டே போகுது..“...

முகமறியாதவன்..!!

Image
அது நீங்களாக இருக்கலாம்.. சில சமயம் நானாகக் கூட..! ஒரு முறை சாலையில்.. சில முறை பயணத்தில்.. வேறொரு முறை மருத்துவமனையில்.. பிரிதொரு முறை எங்கோவென அவனைக் கடந்து சென்றிருக்கலாம்..!! வற்றிப்போன கண்களும் வரண்டுபோன இதயமுமாய் வெறுமையான நினைவலைகளுடன் எதையோ தேடிக்கொண்டிருப்பவனாய் நம் அருகிலேயே அமர்ந்திருக்கலாம்..! அழுகைகளும் அவமானங்களும் உள்ளுக்குள் அரித்துக்கொண்டிருக்க, வெளிக்காட்டாதவனாய் எதிர் வந்துகொண்டிருக்கலாம்..! நேசிப்பின் இழப்பை சந்தித்தவனாய்.. நட்பின் துரோகத்தில் மூழ்கியவனாய்.. உறவின் பிரிவை ஏற்றுக்கொண்டவனாய்.. வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவனாய்.. எல்லாம் மறைத்து நம்முடன் பேசிக்கொண்டிருக்கலாம்..!! “எனக்கு மட்டும் ஏன் இப்படி“ என்று சலித்துக்கொள்ளும் நம்மைப் பார்த்து உள்ளுக்குள் புன்முறுவல் புரிந்தவனாய்.. முகமறியாதவனாய்.. முகவரி தொலைத்தவனாய்.. நம்முடனே இருக்கக்கூடும்.. நமக்குத் தெரியாமலேயே!! . .

உனக்கான தேடல் – எனக்கான தொலைதல்..

Image
எவ்வளவு வெறுத்தாலும் எள்ளளவும் விலகுவதில்லை.. உனக்கான என் பிரியங்கள்..! . மூன்று வார்த்தைகளுக்குள் முழு நேசத்தை அடக்கிடலாமெனில் எனக்கு மௌனமே போதுமானது.. . எல்லாவற்றின் ஆரம்பங்களும் உன் நினைவில் முடிவடைய , முடிவற்ற ஆரம்பமாய் நீ மட்டும்..!! . உனக்கான தேடலில் ஊர்ஜிதப்படுத்துகிறேன் என் தொலைதலை..! . பேச்சுக்கள் நீங்கிய மௌனங்களும் பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும் ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும் பழக்கமாய்ப் பக்கம்வர , வலிக்காதொரு வலி மட்டும் விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!! .