சிகரம் – என் பார்வையில்..

நான் இதுவரைக்கும் விமர்சனம்னு எழுதினது இல்ல. இதுவும் விமர்சனம் இல்ல. ரொம்ப நாளைக்குப் பிறகு நேத்து ராஜ் டிஜிடலில் “சிகரம்“ படம் பார்த்தேன். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டுமொரு முறை பார்க்கத்தூண்டும் படங்களில் இதுவும் ஒன்று. எதனாலோ அது பற்றி பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு.
சிகரம் - காதல், நட்பு, கணவன் மனைவி அந்நியோன்யம், நம்பிக்கை, இழப்பு, யதார்த்தம்னு எல்லாம் கலந்த கவலையா இந்தப் படத்தைச் சொல்லலாம்.
ரேகா, ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன், நிழல்கள் ரவினு மற்ற கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் மனசுல நிக்கிறது என்னவோ, ராதா - எஸ்பிபி இந்த இருவருக்குமிடையேயான நட்பு ரீதியான காதல் தான்.
இதில் எனக்குப் பிடித்த காட்சிகளெனில், தான் காதலித்த பெண்ணை பல வருடங்கழித்து தனக்கான மருத்துவராக சந்தித்து, பின் நட்பு கொண்டு, பழைய நினைவுகள் பற்றிய எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் காட்சிகள். குறிப்பா..
“நா இல்லாம நீங்க இல்ல.. நீங்க இல்லாம நா இல்லனெல்லாம் பேசினோம். ஆனா இப்ப.. நா இல்லாம நீங்க இருக்கீங்க. அது மாதரி நானும் இருக்கேன். சொல்லப்போனா இன்னும் ஹெல்த்தியாவே இருக்கேன். வெய்ட் வேற ஜாஸ்த்தியாகிட்டே போகுது..“
என்று சிரித்துக்கொண்டே சொல்வது மிகவும் யதார்த்தம்.
“நா உன்னை நோகடிச்சுட்டேன்.. அழிச்சுட்டேன்“னு எஸ்பிபி சொன்னதும் “தப்பா சொல்றீங்க. நா இன்னும் அழியல“னு ராதா சொல்றதும் அருமையான காட்சி. அந்த நிதானம் ரசிப்புக்குரியது.
பக்குவப்பட்ட ஒரு காதலை, முதிர்ச்சியடைந்த ஒரு நட்பை அதுல பார்க்கமுடியும்.
அதே சமயம், ரம்யா கிருஷணன், ஆனந்த் பாபுவுக்கு இடையேயான காதலைப் புரிந்துகொள்வதற்கு, கொஞ்சம் கடினமாக இருக்கலாம். கலாச்சார சீரழவுனு பலருக்குத் தோணலாம். அது பிறரின் புரிதல்களைப் பொறுத்தது.

“உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்..
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்..
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள். “ங்குற ஆத்மா நாம் வரிகளை ராதா சொல்லும் காட்சியில், அதை ரசிக்காம இருக்க முடியாது.

அனாவசியக் கேள்விகளும் அனாவசிய பதில்களும் நம்மையும் பலநேரம் குழப்பிக்கொண்டிருப்பது வாஸ்தவம் தானே..!

ரசனைக்குரிய திரைப்படம்.
.

Comments

பாலச்சந்தரின் உதவியாளராய் பல படங்களில் பணியாற்றிய அனந்து இயக்கிய ஒரே படம்

நேற்று ராஜ் டிஜிட்டலில் போட்டனர். பாதி வரை பார்த்து விட்டு பின் உறங்கி விட்டோம்

கடைசியில் பகிர்ந்த ஆத்மாநாம் கவிதை அழகு
joe.....! said…
“நா இல்லாம நீங்க இல்ல.. நீங்க இல்லாம நா இல்லனெல்லாம் பேசினோம். ஆனா இப்ப.. நா இல்லாம நீங்க இருக்கீங்க. அது மாதரி நானும் இருக்கேன். சொல்லப்போனா இன்னும் ஹெல்த்தியாவே இருக்கேன். வெய்ட் வேற ஜாஸ்த்தியாகிட்டே போகுது..“
என்று சிரித்துக்கொண்டே சொல்வது மிகவும் யதார்த்தம்.
“நா உன்னை நோகடிச்சுட்டேன்.. அழிச்சுட்டேன்“னு எஸ்பிபி சொன்னதும் “தப்பா சொல்றீங்க. நா இன்னும் அழியல“னு ராதா சொல்றதும் அருமையான காட்சி. அந்த நிதானம் ரசிப்புக்குரியது.
பக்குவப்பட்ட ஒரு காதலை, முதிர்ச்சியடைந்த ஒரு நட்பை அதுல பார்க்கமுடியும்.

THAT WAS WRITER INDRA TUCH NICEEEE
Anonymous said…
இது கொஞ்சம் ஓவராத் தெரியல... நண்பி...

போன நுற்றாண்டில் வெளிவந்த படத்துக்கு...
இந்த நுற்றாண்டில் விமர்சனமா?

நாங்க அன்னைக்கே பார்த்த படம்தான்...

அதிலும்...
அகரம் இப்ப சிகரம் ஆச்சு...
தகரம் இப்ப தங்கம் ஆச்சு...
காற்றுமூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு...
சங்கீதமே... என்ற பாடல் இன்றும் என் மனதின் உதடுகள் உச்சரித்துக கொண்டிருக்கும் பாடல்தான்...

சரி...சரி...
இப்பவாச்சும் பார்த்து ரசிச்சு எழுதினீங்களே... சந்தோஷம்
s suresh said…
நல்லதொரு படம்! நல்லதொரு விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!
Semmalai Akash! said…
ம்ம்ம் ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க நண்பரே, வாழ்த்துகள்
இதுபோல் விமர்சனமும் எழுதுங்கள் தொடர்கிறோம்.
Anonymous said…
வாழ்த்துகள்.....
//மோகன் குமார்//

//joe.....! //

//suresh //

//Semmalai Akash! //


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Anonymous said…
நானும்...
பலதடவை கமெண்ட் போட்டு பார்த்துட்டேன்...

டிஸ்பிளே ஆகமாட்டேங்குது...
Anonymous said…
சரி... சரி...
போட்ட கமெண்ட்ட ரீபிட் பண்றேன்...

சென்ற நுற்றாண்டில் வந்த படத்துக்கு...
இந்த நுற்றாண்டில் விமர்சனமா நண்பி....

இது கொஞ்சம் ஓவராத் தெரியல...?


இருந்தாலும்...

நாங்க ரீசிலினாப்பவே பார்த்தாச்சு... பார்த்தாச்சு...


“அகரம் இப்ப சிகரம் ஆச்சு..
தகரம் இப்ப தங்கம் ஆச்சு...
காற்று மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு...
சங்கீதமே... சன்னதி...” என்ற பாடல்.. அன்றும், இன்றும், என்றும் என்மனது அவ்வப்போது உச்சரித்துக் கொண்டிருக்கும் பாடல்...