முகமறியாதவன்..!!
அது நீங்களாக இருக்கலாம்..
சில சமயம் நானாகக் கூட..!
ஒரு முறை சாலையில்..
சில முறை பயணத்தில்..
வேறொரு முறை மருத்துவமனையில்..
பிரிதொரு முறை எங்கோவென
அவனைக் கடந்து சென்றிருக்கலாம்..!!

வற்றிப்போன கண்களும்
வரண்டுபோன இதயமுமாய்
வெறுமையான நினைவலைகளுடன்
எதையோ தேடிக்கொண்டிருப்பவனாய்
நம் அருகிலேயே அமர்ந்திருக்கலாம்..!
அழுகைகளும் அவமானங்களும்
உள்ளுக்குள் அரித்துக்கொண்டிருக்க,
வெளிக்காட்டாதவனாய் எதிர் வந்துகொண்டிருக்கலாம்..!

நேசிப்பின் இழப்பை சந்தித்தவனாய்..
நட்பின் துரோகத்தில் மூழ்கியவனாய்..
உறவின் பிரிவை ஏற்றுக்கொண்டவனாய்..
வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவனாய்..
எல்லாம் மறைத்து நம்முடன் பேசிக்கொண்டிருக்கலாம்..!!

“எனக்கு மட்டும் ஏன் இப்படி“ என்று
சலித்துக்கொள்ளும் நம்மைப் பார்த்து
உள்ளுக்குள் புன்முறுவல் புரிந்தவனாய்..
முகமறியாதவனாய்.. முகவரி தொலைத்தவனாய்..
நம்முடனே இருக்கக்கூடும்.. நமக்குத் தெரியாமலேயே!!
.
.

Comments

//நம்முடனே இருக்கக்கூடும்.. நமக்குத் தெரியாமலேயே//

Ramani said…
இறுதி வரி மிக மிக அருமை
முகமறியாதவனை மிகத் தெளிவாக
கவிதை மூலம் படம்பிடித்துக் காட்டியமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
கடைசி வரிகள் அருமை.வாழ்த்துக்கள்
நமக்குள் இருப்பதை தான் கண்டு பிடிக்க வேண்டும்...

நல்ல வரிகள்... அருமை...
tm4
யாருப்பா அது crowedu கூப்பிடுறாங்க பாரு!
வந்தான்
சென்றான்

இது தான் எவனுக்கான உலகமும்.
அழகிய கவிதை..
அழகான வார்த்தைப் பிரயோகம்....
இந்திரா கவிதை கவிதை...

இனி கவிஞர் இந்திரா என்று அழைப்போம்...
s suresh said…
அருமையான கவிதை! சிறப்பு! வாழ்த்துக்கள்!
Anonymous said…
இதயத்தின்
இரத்தநாளங்களை
இழுக்கும்
இந்தத் தேடல் வரிகளைத்தான்
“இந்திரா”விடம்
இயல்பாய் எதிர்பார்க்கிறேன்...

இதைவிடுத்து...

ரங்கநாதன் தெருவில் (சென்னை,சரவணாஸ்டோர்ஸ் உள்ள தெரு)
தீபாவளித்திருநாள் முந்தையநாள்...
திரியும் கூட்டத்தின் ஒருவராய்...
‘‘தொலைந்துபோனவர்களில் ஒருவராய்”...
“இந்திரா”வை காண விரும்பவில்லை...

என்ன எழுத்துக்கள்...
என்ன வரிகள்...
புத்தம்புது வார்த்தைகள்...

திரும்பதிரும்ப படித்துப் பார்க்கிறேன்...

“மிகமிக அருமை” இந்திரா...

இந்தக் கவிதையிலும்,
இந்தக் கவிதைவரிகளிலும்
மீண்டும்
“பழைய இந்திரா”வை (புரியும் என நினைக்கிறேன்) நான் பார்க்கிறேன்...

வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சி...
//மதுமதி //

//Ramani //

//தொழிற்களம் குழு //

//திண்டுக்கல் தனபாலன் //

//வால்பையன் //

//மகேந்திரன் //

//சங்கவி//

//s suresh //


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.