Thursday, 13 January 2011

மரணவலி தரும் உன் மௌனம்..என் ஆன்மாவை

ஆணிவேரோடு பிடுங்கி

அழகு பார்த்திடும்

உன் ஆணவத்தில்

என் அனைத்து ஆரம்பங்களும்

அடங்கித்தான் போயின..

.

தனிமையெனும் தீவில்

துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும்

தற்காலிகமான தற்கொலைக்குத்

தூண்டும் உன் நினைவுகள்..

.

நாட்கள் நிறைந்த நொடிகளும்

வருடம் நிறைந்த நிமிடங்களுமாய்

நகராது நோகடிக்கிறது நாசூக்காய்..

.

உன்னை நினைத்தே

நுரைத்துக் கிடக்கிறது

என் நுரையீரல்..

.

நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு

நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்..

.

என் கட்டுக்கடங்காத பிரியங்களைக்

கலைத்தும் தொலைத்தும்

விளையாடும் உனக்கு

கண்கள் மட்டுமா கருணையும் இல்லை.

.

மண்புழுவாய்த் துடிக்கும்

என் மனதினுள்

மயானம் அமைத்து

மறவாமல் அடிக்கிறாய்

உன் மௌனச் சவுக்கால்..

.

பட்டும் படாமலுமான

உன் பார்வை நகத்தினால்

படுகாயப்படுத்துகிறாய்

பாழாய்ப்போன என் இதயத்தை.

.

நிர்வாணமாய்த் திரியும்

என் நிம்மதிகளுக்கும்

நார் நாராய்க் கிழிந்த

என் காதலுக்கும்

நீண்ட துணை

உன்னாலான என் ரணங்கள் தான்.

.

பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன்

நீ தந்த வலிகளை.

ஆறாத வேதனைகளும்

உன் முகச்சாயலில் இருப்பதால்

.

மௌனம் என்பது

மனதின் இயல்பு.

எனினும் மரணவலி தருமென்பதை

இப்போது உணர்கிறேன்.

.

.-------------------------------------- இந்திரா

.

73 comments:

வெட்டிப்பேச்சு said...

//பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன்

நீ தந்த வலிகளை.

ஆறாத வேதனைகளும்

உன் முகச்சாயலில் இருப்பதால்//

அருமை..

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்குங்க :)

யார் எழுதினதுன்னு போடவே இல்லையே? :))

இந்திரா said...

//வெட்டிப்பேச்சு said...

//பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன்

நீ தந்த வலிகளை.

ஆறாத வேதனைகளும்

உன் முகச்சாயலில் இருப்பதால்//

அருமை..//


நன்றி நண்பரே..

கவிதை காதலன் said...

என்னைப்பொறுத்தவரைக்கும் அந்த டிஸ்கி கூட தேவையில்லாததுன்னு நினைக்கிறேன்

கவிதை காதலன் said...

அந்த ஆழமான காதலுக்கு துணையாக இருப்பது
அந்த ரணங்கள்தான் என்று சொல்லும் போது அந்தவலிக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு அழமான காதல் தெரிகிறது..

Arun Prasath said...

ப்ரெசென்ட் சார் சீ மேடம்

RAZIN ABDUL RAHMAN said...

/என் ஆன்மாவை
ஆணிவேரோடு பிடுங்கி
அழகு பார்த்திடும்
உன் ஆணவத்தில்
என் அனைத்து ஆரம்பங்களும்
அடங்கித்தான் போயின../

உண்மை..

அன்புடன்
ரஜின்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு

நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்..///

nice

மங்குனி அமைச்சர் said...

.

நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு

நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்..///

nice

THOPPITHOPPI said...

//உன்னை நினைத்தே

நுரைத்துக் கிடக்கிறது

என் நுரையீரல்..//

SUPERB

R.Gopi said...

வார்த்தைகளை தாண்டி படிப்போரை வலிக்க செய்யும் வரிகள்...

துன்பத்தை கூட இவ்வளவு அழகாக (வலிமையாகவும்), சொல்ல முடியுமா?

வாழ்த்துக்கள் இந்திரா...

karthikkumar said...

nice one :))

Chitra said...

மௌனம் என்பது

மனதின் இயல்பு.

எனினும் மரணவலி தருமென்பதை

இப்போது உணர்கிறேன்.


....well expressed!

சே.குமார் said...

//நினைவுகளை தானமாகத் தந்துவிட்ட
நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்..//
வலி நிறைந்த கவிதையை வார்த்தைகளால் வடித்திருக்கிறீர்கள்.
ரொம்ப நல்லாயிருக்கு.

தம்பி கூர்மதியன் said...

:-) :-)

அருண் பிரசாத் said...

//பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன்

நீ தந்த வலிகளை.

ஆறாத வேதனைகளும்

உன் முகச்சாயலில் இருப்பதால்//
சூப்பர் இந்திரா....

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.....

தம்பி கூர்மதியன் said...

இல்ல ஸ்மைலி மட்டும் போட்டா அபராதம்னு போட்டிருந்தீங்களே அதான் போட்டுபாத்தன்.. இப்ப கவிதைய பாப்போம்.. என்ன இருக்க...

//பட்டும் படாமலுமான
உன் பார்வை நகத்தினால்
படுகாயப்படுத்துகிறாய்
பாழாய்ப்போன என் இதயத்தை.//

ம்ம்.. இது நல்லாயிருக்கு.. அப்பரம் எல்லாரும் ஏம்பா காதல் கவிதையே எழுதுறீங்க.??? இந்திரா நீங்க கூட அதிகமா காதல் கவிதை தான் எழுதியிருக்கீங்க..

அப்பரம் அந்த டிஸ்கி எடுத்துடுங்க.. ஒண்ணு நடந்தா அதையேவா நினச்சிட்டு இருப்பாங்க.. அத எடுங்கன்னு தாழ்மையோடு கேட்டுகிறன்..

S Maharajan said...

//நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு
நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்..//

அருமை

Balaji saravana said...

தனிமை சித்ரவதை! மௌனம் கொல்லும்! பிரிவின் ரணங்களை மிகச் சிறப்பாய் சொல்லியிருக்கீங்க இந்திரா!

இந்திரா said...

//☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்குங்க :)

யார் எழுதினதுன்னு போடவே இல்லையே? :))//


கடைசி வரில போட்டுட்டேன்.
இப்ப திருப்தியா???

இந்திரா said...

//Arun Prasath said...

ப்ரெசென்ட் சார் சீ மேடம்//


ஓகே.. அட்டண்டன்ஸ் போட்டாச்சு.

இந்திரா said...

//கவிதை காதலன் said...

அந்த ஆழமான காதலுக்கு துணையாக இருப்பது
அந்த ரணங்கள்தான் என்று சொல்லும் போது அந்தவலிக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு அழமான காதல் தெரிகிறது..//

நன்றி நண்பரே.


//என்னைப்பொறுத்தவரைக்கும் அந்த டிஸ்கி கூட தேவையில்லாததுன்னு நினைக்கிறேன்//


எடுத்துவிட்டேன் எடுத்துவிட்டேன்.

இந்திரா said...

//மங்குனி அமைச்சர் said...

.

நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு

நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்..///

nice//


டாங்க்ஸ்ங்க அமைச்சரே..

இந்திரா said...

//RAZIN ABDUL RAHMAN said...

/என் ஆன்மாவை
ஆணிவேரோடு பிடுங்கி
அழகு பார்த்திடும்
உன் ஆணவத்தில்
என் அனைத்து ஆரம்பங்களும்
அடங்கித்தான் போயின../

உண்மை..

அன்புடன்
ரஜின்//


கருத்துக்கு நன்றி ரஜினி

இந்திரா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு

நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்..///

nice//


டாங்க்ஸ்ங்க அமைச்சரே.. சாரி உங்கள மாதிரியே நானும் காபி பண்ணி பேஸ்ட் பண்ணிட்டேன்.
டாங்க்ஸ் ரமேஷ்..

இந்திரா said...

//R.Gopi said...

வார்த்தைகளை தாண்டி படிப்போரை வலிக்க செய்யும் வரிகள்...

துன்பத்தை கூட இவ்வளவு அழகாக (வலிமையாகவும்), சொல்ல முடியுமா?

வாழ்த்துக்கள் இந்திரா...//


துன்பங்களையும் சகஜமான நிகழ்வாக எடுத்துக்கொள்வது தான் வலிகளை மறக்கச் செய்யும். சரிதானே கோபி???

இந்திரா said...

//karthikkumar said...

nice one :))//


நன்றி கார்த்திக்

இந்திரா said...

//THOPPITHOPPI said...

//உன்னை நினைத்தே

நுரைத்துக் கிடக்கிறது

என் நுரையீரல்..//

SUPERB//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

இந்திரா said...

//Chitra said...

மௌனம் என்பது

மனதின் இயல்பு.

எனினும் மரணவலி தருமென்பதை

இப்போது உணர்கிறேன்.


....well expressed!//


வாங்க சித்ரா.. கருத்துக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரப்பூ.................

இந்திரா said...

//தம்பி கூர்மதியன் said...

:-) :-)//


இரண்டு ஸ்மைலி..
அபராதம் 2000 ரூபாய்ங்க.

இந்திரா said...

//சே.குமார் said...

//நினைவுகளை தானமாகத் தந்துவிட்ட
நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்..//
வலி நிறைந்த கவிதையை வார்த்தைகளால் வடித்திருக்கிறீர்கள்.
ரொம்ப நல்லாயிருக்கு.//


உங்கள் பாராட்டிற்கு நன்றி குமார்.

இந்திரா said...

//அருண் பிரசாத் said...

//பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன்

நீ தந்த வலிகளை.

ஆறாத வேதனைகளும்

உன் முகச்சாயலில் இருப்பதால்//
சூப்பர் இந்திரா....//


நன்றி அருண்.. வருகைக்கும் கருத்துக்கும்.

//போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.....//

போகட்டும் போகட்டும்.

இந்திரா said...

//S Maharajan said...

//நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு
நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்..//

அருமை//


நன்றி மஹாராஜன்..

இந்திரா said...

//தம்பி கூர்மதியன் said...

//பட்டும் படாமலுமான
உன் பார்வை நகத்தினால்
படுகாயப்படுத்துகிறாய்
பாழாய்ப்போன என் இதயத்தை.//

ம்ம்.. இது நல்லாயிருக்கு.. //


நன்றிங்க.//அப்பரம் எல்லாரும் ஏம்பா காதல் கவிதையே எழுதுறீங்க.??? இந்திரா நீங்க கூட அதிகமா காதல் கவிதை தான் எழுதியிருக்கீங்க..//

கவிதை எப்போதும் அழகு தான். அதிலும் காதல் கவிதை என்று வரும்போது கற்பனைகள் அற்புதமாக வெளிப்படுவதாகத் தோன்றுகிறது. ஆனாலும் நீங்கள் சொல்வதுபோல காதல் மட்டுமல்லாது மற்ற வகைகளிலும் இனி கலந்து எழுதுகிறேன்.உங்கள் அக்கறைக்கு என் நன்றிகள்.//அப்பரம் அந்த டிஸ்கி எடுத்துடுங்க.. ஒண்ணு நடந்தா அதையேவா நினச்சிட்டு இருப்பாங்க.. அத எடுங்கன்னு தாழ்மையோடு கேட்டுகிறன்..//


எடுத்துவிட்டேன். நடந்ததை மறந்துவிடுவது தான் என் இயல்பு. வழக்கமான என் பதிவுகள் எப்போதும் போல தொடரும். (அதாவது மொக்கைகள் தொடரும்னு சொல்றேங்க..)

காஞ்சி முரளி said...

ஏற்கனவே உங்க கவிதை பதிவுக்கு நான் சொன்ன கருத்துரைதான் இதற்கும்....!

very rich words உள்ள கவிதை...!
அதாவது...
சொற்மதிப்பில்லாத வார்த்தைகள் (தாங்கள் எழுதிள்ள சில வரிகளின் வார்த்தைக்கு... சொல்லுக்கு ஈடுஇணையில்லா) கொண்ட கவிதை...!

இந்திரா said...

//MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரப்பூ.................//


டாங்க்ஸ்ப்பூ

இந்திரா said...

//Balaji saravana said...

தனிமை சித்ரவதை! மௌனம் கொல்லும்! பிரிவின் ரணங்களை மிகச் சிறப்பாய் சொல்லியிருக்கீங்க இந்திரா!//


பிரிவின் வலிகளும் பொக்கிஷங்கள் தானே..
கருத்துக்கு நன்றி பாலாஜி.

இந்திரா said...

//காஞ்சி முரளி said...

ஏற்கனவே உங்க கவிதை பதிவுக்கு நான் சொன்ன கருத்துரைதான் இதற்கும்....!

very rich words உள்ள கவிதை...!
அதாவது...
சொற்மதிப்பில்லாத வார்த்தைகள் (தாங்கள் எழுதிள்ள சில வரிகளின் வார்த்தைக்கு... சொல்லுக்கு ஈடுஇணையில்லா) கொண்ட கவிதை...!//நன்றி முரளி. உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் வணக்கங்கள். உங்களைப் போன்ற பல நண்பர்களின் ஆதரவுகள் என்னை சந்தோச ப்ரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. பிரச்சனைகளின் போது துணை நிற்பதில் தான் நல்ல நட்பிற்கான அடையாளம் வெளிப்படுகிறது. உண்மையான நட்பிற்கும் நம்பிக்கைக்கும் என் நன்றிகள்.

எல் கே said...

கவிதை நன்றாக உள்ளது இந்திரா

sulthanonline said...

//நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு
நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்..//

பொதுவாகவே காதலில் சோகத்தை தரக்கூடிய நினைவுகள் நீங்கள் சொன்னாதைப்போல நிதானமாகத்தான் கொன்று கொண்டிருக்கும்.
கவிதை நன்றாக உள்ளது...

காஞ்சி முரளி said...

///உங்களைப் போன்ற பல நண்பர்களின் ஆதரவுகள் என்னை சந்தோச ப்ரம்மிப்பில் ஆழ்த்துகின்றன.///

சீர்
கொண்டுவந்தால்தான் தங்கை....!
கொண்டுவந்தாலும்... வராவிட்டாலும் தாய்...!
உயிர் காப்பான் தோழன்...!........... என "தூக்கித் தூக்கி" படத்தில் வந்த வசனம்...!
இது என்றும் என் மனதில் "scoral"லாய் ஓடிக்கொண்டே இருக்கும்...!

அதோடு...
நீ..
சோகத்தில்...
சிக்கலில் இருக்கும்போதுதான்
"உறவு"களின் உண்மைசொரூபமும் ...!
"நட்பு"களின் நடத்தையும்...!
தெரியும்னு ஒரு "தத்துவஞானி" சொன்னதை உங்களுக்கும் சொல்றேன்...

(ஹி... ஹி... அந்த "தத்துவஞானி" வேற யாருமல்ல... நான்தான்.. ஹி.. ஹி...)

இந்திரா said...

//காஞ்சி முரளி said...


சீர்
கொண்டுவந்தால்தான் தங்கை....!
கொண்டுவந்தாலும்... வராவிட்டாலும் தாய்...!
உயிர் காப்பான் தோழன்...!........... என "தூக்கித் தூக்கி" படத்தில் வந்த வசனம்...!
இது என்றும் என் மனதில் "scoral"லாய் ஓடிக்கொண்டே இருக்கும்...!

அதோடு...
நீ..
சோகத்தில்...
சிக்கலில் இருக்கும்போதுதான்
"உறவு"களின் உண்மைசொரூபமும் ...!
"நட்பு"களின் நடத்தையும்...!
தெரியும்னு ஒரு "தத்துவஞானி" சொன்னதை உங்களுக்கும் சொல்றேன்...

(ஹி... ஹி... அந்த "தத்துவஞானி" வேற யாருமல்ல... நான்தான்.. ஹி.. ஹி...)
//தத்துவஞானி முரளி வாழ்க்

தமிழரசி said...

என் வலியை நீ வாங்கி எழுதிய மாதிரி இருக்கு இந்திரா.. நல்லாயிருக்குன்னு கவிதையை பாராட்டினா வலியின் வீரியம் புரியாமல் போயிடுமோன்னு நினைக்கிறேன்.காயம் ஏற்படுத்தும் மனங்கள் அதில் நாம் கசங்கி போவோம் என ஏன் அறிய மாட்டார்கள் தெரியலை...

logu.. said...

hayyo..

ovvvvoru varigalaium rasithu padithen..

Romba arumaiya.. iyalbai sollirukeenga.


valigal..
varthaigalil solla mudiumngarathey ippothan theriuthu.

யாதவன் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

அஞ்சா சிங்கம் said...

பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன்
நீ தந்த வலிகளை........../////

அற்புதமான வரிகள்

வெறும்பய said...

வலிகள் சொல்லும் வரிகளால் ஒரு கவிதை...

வால்பையன் said...

பெட்ராமாக்ஸ் லைட்டே தான் வேணுமா!?

வாய்ஸை மொபைலில் ரிக்கார்டெல்லாம் பண்ணி வச்சிக்க மாட்டிங்களா!?

Jeni said...

என் ஆன்மாவை

ஆணிவேரோடு பிடுங்கி

அழகு பார்த்திடும்

உன் ஆணவத்தில்

என் அனைத்து ஆரம்பங்களும்

அடங்கித்தான் போயின..


Aarambame amakkalam ka, romba nalla iruku.

Keep rocking.....

இந்திரா said...

//தமிழரசி said...

என் வலியை நீ வாங்கி எழுதிய மாதிரி இருக்கு இந்திரா.. நல்லாயிருக்குன்னு கவிதையை பாராட்டினா வலியின் வீரியம் புரியாமல் போயிடுமோன்னு நினைக்கிறேன்.காயம் ஏற்படுத்தும் மனங்கள் அதில் நாம் கசங்கி போவோம் என ஏன் அறிய மாட்டார்கள் தெரியலை...
//


கருத்திற்கு நன்றி தமிழ். காலப்போக்கில் காயங்களனைத்தும் மாயமாகிவிடும்.

இந்திரா said...

//யாதவன் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்//


வாழ்த்துக்களுக்கு நன்றி

இந்திரா said...

//logu.. said...

hayyo..

ovvvvoru varigalaium rasithu padithen..

Romba arumaiya.. iyalbai sollirukeenga.


valigal..
varthaigalil solla mudiumngarathey ippothan theriuthu.//


கருத்துக்களுக்கு நன்றி நண்பரே..

இந்திரா said...

//வெறும்பய said...

வலிகள் சொல்லும் வரிகளால் ஒரு கவிதை...//


அட.. இது கூட நல்லாயிருக்கே.. நன்றி நண்பரே.

இந்திரா said...

//அஞ்சா சிங்கம் said...

பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன்
நீ தந்த வலிகளை........../////

அற்புதமான வரிகள்//


ரசித்தமைக்கு நன்றி

இந்திரா said...

//Jeni said...

என் ஆன்மாவை

ஆணிவேரோடு பிடுங்கி

அழகு பார்த்திடும்

உன் ஆணவத்தில்

என் அனைத்து ஆரம்பங்களும்

அடங்கித்தான் போயின..


Aarambame amakkalam ka, romba nalla iruku.

Keep rocking.....//


கருத்திற்கு நன்றி ஜெனி.

இந்திரா said...

//வால்பையன் said...

பெட்ராமாக்ஸ் லைட்டே தான் வேணுமா!?

வாய்ஸை மொபைலில் ரிக்கார்டெல்லாம் பண்ணி வச்சிக்க மாட்டிங்களா!?//


என்னதான் நிழல் துணையாக இருந்தாலும் நிஜத்திற்கு ஈடு இல்லையே..
கருத்திற்கு நன்றி வால்.

vinu said...

ungalin katturay migavum algaaga irrunthathu mikka magilchi;


ungalidam irrunthu ithea pondru palverau vithamaana kattraigalaiyum; mokkaigalayum; kurippaagaa thangalin kadantha pathippai pondra migach chirantha puthumaiyaana, puratchigara ennagalaith thaangiya; puthu maatraththaikk konduvaruvathu pondra pathivugalai aavalodu eathirpaarkirom;


nandri;

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

மரணவலிக்கு மெளனம் மட்டும்தான் காரணம்... மருந்தும் மெளனம் தான் மரணவலிக்கு...

கவிதையின் வழியில் மரணத்தின் வலியினை உணரமுடிந்தது...

உணர்வுபூர்வமான வரிகளுக்கு வாழ்த்துகள்...


தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...

காஞ்சி முரளி said...

என் இதயமார்ந்த
"தமிழர்...
தை..
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்"...

ரசிகன்! said...

மரணக்குறிப்பு :-)

vinu said...

உங்களின் கட்டுரை மிகவும் அழகாக இர்ருந்தது மிக்க மகிழ்ச்சி;

உங்களிடம் இர்ருந்து இதிய போன்று பல்வேறு விதமான கட்டுரைகளையும்; மொக்கைகளையும்; குறிப்பாக தங்களின் கடந்த பதிப்பை போன்ற மிகச் சிறந்த புதுமையான, புரட்சிகர எண்ணங்களைத் தாங்கிய; புது மாற்றதைக்க் கொண்டுவருவது போன்ற பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்;


நன்றி;

vinu said...

உங்களின் கட்டுரை மிகவும் அழகாக இர்ருந்தது மிக்க மகிழ்ச்சி;

உங்களிடம் இர்ருந்து இதிய போன்று பல்வேறு விதமான கட்டுரைகளையும்; மொக்கைகளையும்; குறிப்பாக தங்களின் கடந்த பதிப்பை போன்ற மிகச் சிறந்த புதுமையான, புரட்சிகர எண்ணங்களைத் தாங்கிய; புது மாற்றதைக்க் கொண்டுவருவது போன்ற பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்;


நன்றி;

விஜய் said...

யாமத்தின் தனிமையில் வலிக்கும் காயங்கள்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

இந்திரா said...

//தஞ்சை.வாசன் said...

மரணவலிக்கு மெளனம் மட்டும்தான் காரணம்... மருந்தும் மெளனம் தான் மரணவலிக்கு...

கவிதையின் வழியில் மரணத்தின் வலியினை உணரமுடிந்தது...

உணர்வுபூர்வமான வரிகளுக்கு வாழ்த்துகள்...


தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...//


நன்றி வாசன்.
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்திரா said...

//vinu said...

ungalin katturay migavum algaaga irrunthathu mikka magilchi;


ungalidam irrunthu ithea pondru palverau vithamaana kattraigalaiyum; mokkaigalayum; kurippaagaa thangalin kadantha pathippai pondra migach chirantha puthumaiyaana, puratchigara ennagalaith thaangiya; puthu maatraththaikk konduvaruvathu pondra pathivugalai aavalodu eathirpaarkirom;


nandri;//


வினு.. நீங்க பஸ் நம்பர் மாறி ஏறிட்டீங்கனு நெனைக்கிறேன்.

இந்திரா said...

//ரசிகன்! said...

மரணக்குறிப்பு :-)//


ரசிகனுக்கு என் நன்றிகள்.

இந்திரா said...

//காஞ்சி முரளி said...

என் இதயமார்ந்த
"தமிழர்...
தை..
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்"...//


நன்றி முரளி. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்திரா said...

//விஜய் said...

யாமத்தின் தனிமையில் வலிக்கும் காயங்கள்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்//நன்றி விஜய்.

இந்திரா said...

//vinu said...

உங்களின் கட்டுரை மிகவும் அழகாக இர்ருந்தது மிக்க மகிழ்ச்சி;

உங்களிடம் இர்ருந்து இதிய போன்று பல்வேறு விதமான கட்டுரைகளையும்; மொக்கைகளையும்; குறிப்பாக தங்களின் கடந்த பதிப்பை போன்ற மிகச் சிறந்த புதுமையான, புரட்சிகர எண்ணங்களைத் தாங்கிய; புது மாற்றதைக்க் கொண்டுவருவது போன்ற பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்;


நன்றி;//


இதுக்கு முதல்ல சொன்ன கமெண்ட்டே பரவாயில்ல..
இதுக்கும் அதே பதில் தாங்க..
வினு.. நீங்க பஸ் நம்பர் மாறி ஏறிட்டீங்கனு நெனைக்கிறேன்.

Kavi said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Thoufiq said...

Indira - Excellent poem...!! It reminded me of my life - when I was with the dreams of meeting my soul-mate and of the time when I was in love with my beloved....!! thanks and appreciate.. !! :)

கிரேஸ் said...

நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை!

Related Posts Plugin for WordPress, Blogger...