உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..



என்னுடன் நீ பேச மாட்டாயாமே..
அதை உன் விழிகளிடம் சொல்லவில்லையா?
பிடித்ததை கண்சிமிட்டியும்
பிடிக்காததை புருவம் உயர்த்தியும்
எனக்குத் தெரிவிக்கிறதே..

சமாதானமாக நான் பேசும்போதெல்லாம்
செவிகளை எனக்கும்
விழிகளை சுவற்றுக்கும் கொடுக்கிறாய்..

அருகிருந்தும் கைபேசி தூதுப் பறவையாகிப் போகிறது..
என்னிடமிருந்து 'லவ் யூ'வும்
உன்னிடமிருந்து 'ஹேட் யூ'வும்
பரிமாறப்படுகிறது..

பேசும் நேரங்களை விட
பேசாத நேரங்களில்
காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள்..

'
சாப்பிடு' என்று நான் கெஞ்சவேண்டும்
என்பதற்காகவே ..
பசியோடு காத்திருக்கிறாய்..
கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.

பின்கூட்டி அணைக்கிறேன்..
பிடிக்காதது போல உதறுகிறாய்..
இறுக்காத பிடியிலும் கூட
இறுகியதாய் தடுமாறுகிறாய்..

ஏனோ தெரிவதில்லை..
உன்னை செல்லமாக சீண்டும் தருணங்களில்
நான் இருமடங்கு காதல் வயப்படுகிறேன்..

உனக்குப் பிடிக்காத சேனல் மாற்றி
உன்னை வெறுப்பெற்றுகிறேன்..
பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய்..
தொலைக்காட்சியை..

எனது சேஷ்டைகளைப்
போலியாக வெறுக்கும்
உன் நடிப்பு
ஆஸ்கரையும் மிஞ்சும்..

உன் குழந்தைத் தனமான கோபங்களில்
அவ்வப்போது கரைந்து தான் போய்விடுகிறேன்..

என்னென்னவோ கோமாளித்தனங்கள் செய்து
ஒருவழியாக உன் மௌனத்தை கலைத்துவிட்டேன்..
'
பழம்' என்று சிறுவர்கள் விரல் நீட்டி சொல்வது போல..

ஆனாலும் மீண்டும் காத்திருக்கிறேன்..
நமக்குள் சுவாரஸ்யமாய் அரங்கேறும்
ஊடல் எனும் நாடகத்திற்காக..


----------------------------- இந்திரா

.

Comments

அடடே வடையும் நமக்குதானா.......
//எனது சேஷ்டைகளைப்
போலியாக வெறுக்கும்
உன் நடிப்பு
ஆஸ்கரையும் மிஞ்சும்..//


டாப்பே..........................
//ஆனாலும் மீண்டும் காத்திருக்கிறேன்..
நமக்குள் சுவாரஸ்யமாய் அரங்கேறும்
ஊடல் எனும் நாடகத்திற்காக//

உண்மை தான்...

கவிதை கலக்கலாக இருக்கிறது...
காதல் கவிதை...
அருமையிலும் அருமை.
ரேவா said…
பேசும் நேரங்களை விட
பேசாத நேரங்களில்
காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள்..

'சாப்பிடு' என்று நான் கெஞ்சவேண்டும்
என்பதற்காகவே ..
பசியோடு காத்திருக்கிறாய்..
கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.
கவிதை அருமை தோழி..வாழ்த்துக்கள்
sulthanonline said…
சாப்பிடு' என்று நான் கெஞ்சவேண்டும்
என்பதற்காகவே ..
பசியோடு காத்திருக்கிறாய்..
கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.



ஆனாலும் மீண்டும் காத்திருக்கிறேன்..
நமக்குள் சுவாரஸ்யமாய் அரங்கேறும்
ஊடல் எனும் நாடகத்திற்காக





யதார்த்தமாக அருமையாக உள்ளது கவிதை
//பேசும் நேரங்களை விட
பேசாத நேரங்களில்
காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள்..//

அருமைங்க....
Ramani said…
இயல்பான வார்த்தைகளால்
இதமாக நெஞ்சைத் தொடும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
>>>
பேசும் நேரங்களை விட
பேசாத நேரங்களில்
காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள்..


உண்மைதான் இந்திரா
அருமையான காதல் கவிதை..
S Maharajan said…
//பின்கூட்டி அணைக்கிறேன்..
பிடிக்காதது போல உதறுகிறாய்..
இறுக்காத பிடியிலும் கூட
இறுகியதாய் தடுமாறுகிறாய்..//

ஆஹா இது தான் காதல்..........
ஆணின் இடத்திலிருந்து அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்.
தொடரட்டும் மயிலிறகு வருடல்
Balaji saravana said…
ஊடல் உடைபடும் நிமிடங்களின் நர்த்தனம் அழகு இந்திரா! :)
நல்லாயிருக்குங்க :)
vinu said…
orea kaathal nirambi valigirathu;

nadaththunga nadaththunga
R.Gopi said…
//எனது சேஷ்டைகளைப்
போலியாக வெறுக்கும்
உன் நடிப்பு
ஆஸ்கரையும் மிஞ்சும்..//

********

இந்திரா... படு சூப்பர்...

வர வர உலக நாயகனுக்கே உள்குத்தா?
// MANO நாஞ்சில் மனோ //

//Thanjai Vasan (தஞ்சை.வாசன்//

// சங்கவி //

// சே.குமார்//

// ரேவா //

//sulthanonline//

// வெட்டிப்பேச்சு //

// Ramani//

// Speed Master //

//சி.பி.செந்தில்குமார் //

//வெறும்பய //

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) //

// S Maharajan //

// சேக்காளி //


// Balaji saravana//

// ☀நான் ஆதவன்☀ //

// vinu//

// R.Gopi //




நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
///பேசும் நேரங்களை விட
பேசாத நேரங்களில்
காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள்////

simply said.. "Superb"...!
mahavijay said…
அருகிருந்தும் கைபேசி தூதுப் பறவையாகிப் போகிறது..
என்னிடமிருந்து 'லவ் யூ'வும்
உன்னிடமிருந்து 'ஹேட் யூ'வும்
பரிமாறப்படுகிறது..

எனது சேஷ்டைகளைப்
போலியாக வெறுக்கும்
உன் நடிப்பு
ஆஸ்கரையும் மிஞ்சும்..

ஆனாலும் மீண்டும் காத்திருக்கிறேன்..
நமக்குள் சுவாரஸ்யமாய் அரங்கேறும்
ஊடல் எனும் நாடகத்திற்காக

இந்த வரிகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு..
அருமையான காதல் கவிதை இந்திரா
யம்மாமாமாமாமா... நா வரலை இந்த விளையாட்டுக்கு....கவிதை காதாலாய்..
//காஞ்சி முரளி //

//mahavijay//

//தோழி பிரஷா //

//தமிழரசி //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
கவிதையை படிக்க படிக்க எனக்கும் கோபமா வருது...

அவளுக்கும் என்னை பிடிக்குமா? காதலிப்பாளா? என்று பார்க்கிறேன்...

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்