"அந்த ஆளு ஒண்ணுக்குப் போயிட்டாரு.."



அன்புள்ள ஹேமாவுக்கு,

எப்படி எழுதுவேன்? முதன் முறையாக ஒரு கடிதம் எழுதுகையில் என் கைகள் நடுங்குகின்றன. இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள என் இதயத்திற்கு வலுவில்லை. சமூகத்தில் ஒரு தனிமனிதனின் பலவீனத்தை இப்போதுதான் ஆழமாய் உணர்கிறேன்.
.
ஒருசில நாட்களே பழகிய ஒருவர் வீட்டுத் திருமணத்திற்கு, விருப்பமாய்ப் போய் விருந்து சாப்பிட்டு “மொய்“ எழுதிய போதெல்லாம் பக்கத்திலிருந்த நீ, ஒரு குழந்தையின் அழுகையைத் துடைக்க வேண்டிய நேரத்தில் தூரத்திலிருக்கிறாய்.
.
அம்புஜத்தின் மகள் கண்ணம்மாக் குட்டியைப் பற்றி சென்ற கடிதத்தில் விசாரித்திருந்தாய். கடிதத்தில் நீ காட்டிய கரிசனம், கண்களில் கண்ணீர்த்துளிகளாய் தளும்புகிறது.
.
ஒரு முறை சமையலறையில் உன் சேலை முனையில் தீப்பிடித்துக்கொள்ள, ஓடிப்போய் செம்புத் தண்ணீரை ஊற்றி அணைத்தாளே.. நம் பையன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, லாரி ஒன்று விரைந்து வர, ஒரே பாய்ச்சலில் குழந்தையை தூக்கி வந்தாளே.. என்ன சாதுர்யம் என்று எத்தனையோ நாட்கள் ஆச்சர்யப்பட்டுப் பேசியிருக்கிறோம்.
.
அவளுக்கு நேர்ந்ததை எழுதினால் ஒரு குறை அழுதாலும் அழுதுவிடுவாய். அவள் அம்மாவின் முகத்தில் சுரத்தே இல்லாமல் போய்விட்டது. நம் வீட்டுப் பத்துப் பாத்திரம் தேய்க்கும்போது அழுது கொண்டேயிருக்கிறாள்.
.
கண்ணம்மாகுட்டி மிரள மிரள பார்க்கிறாள். அதிர்ச்சியாயிருக்கிறது ஹேமா. அவள் எதுவுமே பேசவில்லை. எப்போதும் துறுதுறுவென்று இருந்தவள் எப்படியோ மாறிப்போய்விட்டாள். டியூசனில் கூட எல்லோருக்கும் முன்னாடி கணக்குப் போட்டு முடிப்பாளே!! இப்போது பேயறைந்து உட்கார்ந்துவிட்டாள்.
.
ஆதரவற்றோருக்காக நடத்தப்படும் அனாதை இல்லத்தில் ஒரு காமவெறியனுக்கு, குழந்தை கண்ணம்மா குட்டி பலியாகியிருக்கிறது. அந்த வடு நீங்குவதற்கு அவள் இன்னும் எத்தனை வருடங்கள் கடக்க வேண்டியிருக்குமோ? வடு என்பது நீங்கக் கூடியதுதானா?
.
நேற்று அம்புஜத்திடம் சொல்லி கண்ணம்மாகுட்டியை வீட்டுக்குக் கூட்டி வரச் சொன்னேன். ஆறுதலுக்காக அவள் தலையைக் கோதிவட நெருங்குகையில் சடாரென ஒதுங்கிக்கொண்டாள். அவளின் கண்களில் தெரிந்த மிரட்சி என்னை அதிர வைத்துவிட்டது. அதில் ஒரு வக்கிரம் பிடித்தவனின் மிருகவாடை அடிக்கிறது.
.
ஒரு மிருகம், சட்டென அவள் மீது பாய்ந்து எகிறிப்போனால் அவளால் எப்படிப் பேச முடியும்? ஒரு மொழியைத் தோற்கடிக்கும் அந்த தருணத்தில், சோகத்தின் ஒட்டு மொத்தமாய் அவள் வாயிலிருந்து வெளிவந்திருக்கும் ஒற்றை வார்த்தை “அம்மா“. ஆனால் அம்புஜம் போன்ற அம்மாக்களால் கண்ணம்மாக்குட்டிகளை காப்பாற்ற முடியுமா என்ன?
.
ஒரு பெண்ணுக்கு நேரக்கூடாத இந்த மாபெரும் சோகத்தை மானம் போய்விடும் என்று மறைக்கப் பார்க்கிறாள் அவளின் அம்மா அம்புஜம். இந்த பாழாய்ப்போன சமூகம் அவர்களை எப்படிப் பழக்கி வைத்திருக்கிறது பார்த்தாயா?
.
வெளியில் தெரியாதபடிக்கு ஒரு விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. கண்ணம்மாகுட்டி சொன்ன பதிலை அம்புஜம் என்னிடம் சொன்னபோது நான் உறைந்து போனேன்.
.
கண்ணம்மாகுட்டி, விசாரித்தவர்களிடம் சொன்ன பதில் இதுதான்.
”அந்த ஆளு என்மேல ஒண்ணுக்குப் போயிட்டாரு”
.
சகல சாட்சியங்களையும் தவிடுபொடியாக்கிவிடும் நம்மூர் நீதிமன்றங்களில், கண்ணம்மாகுட்டி அந்த காமந்தகன் பற்றி சொன்ன குற்றப்பத்திரிகை இம்மட்டும்தான்!
.
பலியாகிப் போனவளின் குழந்தைதனத்தை, குற்றவாளி சாதகமாக்கித் தப்பித்துக்கொண்டான். சட்டம் வெறும் தடித்த புத்தகமாகவே காட்சி தருகிறது. இனியென்ன எழுத?
.
ஹேமா.. உடனடியாய் வா. கண்ணம்மாகுட்டியின் மன உலகம் சிதைந்து கிடக்கிறது.
.
இப்படிக்கு
உன் வரவை எதிர்நோக்கும்
உன் அன்புக் கணவன்
அருள்
.
(அருள் என்பவர் எழுதிய ”மற்றவை நேரில்” என்ற புத்தகத்திலிருந்து என்னை பாதித்த கடிதம் இது)
.

Comments

Balaji saravana said…
வக்கிரம் நிறைந்த மிருகங்களின் பசிக்கு இரையாகும் பெண்டிரைக்கண்டால் நெஞ்சு பதறுது காண்!
மனதை கணக்க வைத்து விட்டது.
மனது கனத்துவிட்டது...
Chitra said…
மனதில் வலி - கண்களில் ஈரம்.
Riyas said…
nice letter & nice post
//”அந்த ஆளு என்மேல ஒண்ணுக்குப் போயிட்டாரு”//

தலைப்பு பார்த்து நகைச்சுவையா இருக்கும்ன்னு வந்தேன் ஆனால் வருந்த வைத்தது ஹும்...
நெஞ்சம் பதை பதைக்கிறது!
உங்களை பாதித்தது.. எங்களையும் பாதிக்க வைத்துவிட்டீர்கள்.. அருமை
@@@வசந்த் said...

//”அந்த ஆளு என்மேல ஒண்ணுக்குப் போயிட்டாரு”//

தலைப்பு பார்த்து நகைச்சுவையா இருக்கும்ன்னு வந்தேன் ஆனால் வருந்த வைத்தது ஹும்...//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
//ஒரு பெண்ணுக்கு நேரக்கூடாத இந்த மாபெரும் சோகத்தை மானம் போய்விடும் என்று மறைக்கப் பார்க்கிறாள் அவளின் அம்மா அம்புஜம். இந்த பாழாய்ப்போன சமூகம் அவர்களை எப்படிப் பழக்கி வைத்திருக்கிறது பார்த்தாயா?//
onnum solla thonalla....oruvar seignitra kuttam eththanai perai pathikkinrathu. ottu moththa samuthayathaiye kuttam solla vaikkintrathu.
மேடம் இன்னைக்கு புல்லா நாள்ல மொக்க மைண்டுல இருந்தேன் , இங்க பதிவ படிச்சிட்டு ஓரம்ப டிஸ்ட்ரப் ஆகிட்டேன்
இதை வாசிக்கும் போது மணி இப்போ இரவு 11.45. இனிமேல் எனக்கு உறக்கம் என்பது கனவு தான். இதயத்தில் பாரமேற்றுகிற பதிவு :(
அன்னு said…
என்ன சொல்ல இந்திராக்கா. இதே போன்ற செய்திகளின் மீதுதான் கவனம் இப்போது. பிஞ்சு நெஞ்சங்களை குறி வைத்து அவர்களின் வாழ்வை நாசமாக்குவதில் என்ன பயன் கிடைத்திடும் என்று புரிபடவில்லை. இப்படி நெஞ்சில் ஏந்தும் காயங்கள், பின்னால் மண்வாழ்வில் வந்து சீழ் பிடிக்கின்றன. அதை சொல்லவும் முடியாமல், உமிழவும் முடியாமல் நிறைய பேர் பிரச்சினைக்குள்ளாவதையும் படித்து படித்து வெறுத்துப் போகிறது வாழ்க்கை!!
குழந்தை பாலியல் பலத்காரம் உலகெங்கும் இருக்கும் உளவியல் பிரச்சனை!

அய்யனாரின் “சிதைவுகுட்பட்ட மெளனங்களை மொழிபெயர்த்தல்” சிறுகதையை படிப்பவர்களுக்கு அதில் இருக்கும் யாதார்த்தமும் உளவியல் வெளிப்பாடும் புரியும்!

குழந்தைகளுக்கு எது சரியான தொடுதல், எது தவறானது என புரிய வைக்க வேண்டியது தாயின் கடமை!
ரொம்ப முக்கியம், இது பெண் குழந்தைகளுக்கு மட்டும் தான் நடக்கும் என முன்முடிவு செய்வது, இரண்டாவது புகார் செய்ய வரும் குழந்தையை அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என நிராகரிப்பது!

தயவுசெய்து குழந்தைகளுக்கு உங்கள் செவியை கொடுங்கள், நட்புடன் இருங்கள்!
HariShankar said…
இதை அருமைனு சொல்ல முடியாது ... ஒரே கோபமா வருது ... வருத்தமாவும் இருக்கு .. வாழ் பயன் சொன்னது ஒரு நல்ல யோசனை

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்