கோபத்தைக் குறைக்க சில பழைய, புதிய டிப்ஸ்.. (கோவப்படாம படிங்க..)..



இந்த வருஷத்தோட முதல் பதிவு.. உருப்படியா ஏதாவது எழுதணும்னு ரொம்ப நேரமா ஜிந்திச்சேன்.. (போன வருஷமும் இப்டி ஜிந்திச்சு தான் ஒரு முக்கியமான பதிவு எழுதினேன்..)
சரி விஷயத்துக்கு வரேன். நிறைய பேரோட முக்கியமான பிரச்சனையா இருக்குறது கோபம். சிலருக்கு முன்கோபம் அதிகமா இருக்கும், எதுக்கெடுத்தாலும் கோபப்படுவாங்க. ஒரு சின்ன விஷயம்னா கூட உடனே டென்சனாகி, கோவப்பட்டு கத்த ஆரம்பிச்சுடுவாங்க. எதுக்கெடுத்தாலும் நிதானமில்லாம கோவப்பட்றவங்க, டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிக்கணும். ஆனாலும் நமக்கு நாமே கோபத்தைக் குறைக்க முயற்சி செய்யணும்.
இதையெல்லாம்விட ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு, தேவையில்லாம வீண் வாக்குவாதம் பண்ணி நம்மள டென்சனாக்குறதுக்குனே சிலர் இருக்காங்க.. அவங்களோட கத்தி கத்தி நம்ம எனர்ஜி தான் வீணாகுது.. அப்படி நம்மள கடுப்பேத்துறவங்க கிட்ட, எப்படி கோவப்படாம நிதானமா இருக்கலாம்னு பாக்கலாம் வாங்க..
கோபத்தை கட்டுப்படுத்த சில பழைய்ய்ய டிப்ஸ்..
1.       எதிராளி நம்மள கோவப்படுத்தும்போது, கண்ண மூடிகிட்டு, பத்துல இருந்து ஒன்னு வரைக்கும் தலைகீழா எண்ணலாம்.. (அதுக்கே தனியா கோவப்படணும்..)
2.       தண்ணிய வாய்ல வச்சுகிட்டு முழுங்காம கொஞ்ச நேரம் இருக்கலாம்.. (கோவத்துல அவங்க மூஞ்சில துப்பிட வாய்ப்பிருக்கு...)
3.       உடனே கண்ண மூடி தியானம் பண்ணலாம்.. (அவ்ளோ பொறுமையிருந்தா நமக்கேன் கோவம் வருது??)
4.       பேசாம குப்புறப்படுத்து குறட்டை விட்டு தூங்கிடலாம்.. (அவசியம் குறட்டை விடணுமானு கேக்காதீங்க... கோவப்பட்ருவேன்.. ஜாக்குறதை..)
5.       பக்கத்து தெருவுல இருக்குற ஏதாவதொரு கோவில்ல, கோவம் வராம இருக்கணும்னு மந்திரிச்சு ஒரு தாயத்து வாங்கி கைலயோ இடுப்புலயோ கட்டிக்கங்க.. (கொடுமடா சாமி..)

சில புது டிப்ஸ்.. (ஹிஹி.. நானே ஜிந்திச்சேன்..)



1.       எதிராளி நம்மள கோவப்படுத்துற மாதிரி ஏதாவது பேசினா, பதிலுக்கு கோவப்பட்டு உங்க எனர்ஜிய வீணாக்காதீங்க.. அதுக்கு பதிலா, அவர் முன்னாடியே பெருசா கொட்டாவி விடுங்க.. அடிக்கடி வாட்சைப் பாருங்க.. காது குடையுங்க.. (இத விட அவங்கள டென்சன் பண்ணவே முடியாது..)
2.       ஒரு பேப்பரை எடுத்து அதுல கண்டமேனிக்கு கிறுக்குங்க.. எழுதணும்னு கூட அவசியமில்ல.. கோடு கோடா கிறுக்கினா கூட பரவாயில்ல. பேனாவை உடச்சிடாதீங்க.. கட்டுபடியாகாது. அப்புறம் அந்த பேப்பர நார் நாரா கிழிச்சு கசக்கி தூக்கிப்போட்ருங்க.. (கொஞ்சம் கோவம் குறையலாம்..)
3.       வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் மாதிரி கோவத்த சிரிப்பா வெளிப்படுத்த முயற்சி பண்ணுங்க. கஷ்டம் தான்.. ஆனாலும் ஒரு மணி நேர கத்தலுக்கு, ஒரு நக்கல் சிரிப்பு சமம்.. சரிதானே..??
4.       உங்கள கோவப்படுத்துறவர் ஒரு முட்டாள்னு நெனச்சுக்கங்க.. நாயகன்“ல வர்ற “நா அடிச்சா நீ செத்துடுவ“ங்குற டைலாக்க மனசுக்குள்ள சொல்லிக்கங்க.. (சத்தமா சொல்லித் தொலச்சிடாதீங்க..)
5.       உங்க மனசுக்கு ரொம்ம்ம்ப பிடிச்ச பொண்ணோ பையனோ, மறைமுகமா உங்க நடவடிக்கைய கவனிக்கிற மாதிரி கற்பனை பண்ணிக்கங்க. தன்னால கோவம் குறைஞ்சு அமைதியாய்டுவீங்க..
6.       செல்போன் ஹெட்செட்“ட காதுல மாட்டி, வேகமான பாட்ட சத்தமா வச்சு கேளுங்க. அதுக்கு நீங்க ஆக்ரோசமா டான்ஸ் ஆட்ற மாதிரி மனசுக்குள்ள நெனச்சுக்கங்க. (சினிமா ஹீரோயினெல்லாம் கோவமா பரதநாட்டியம் ஆடுவாங்களே.. அது மாதிரி..)
7.       அவங்க பாக்குற மாதிரி ஒரு கொசுவத்திய பொறுத்தி வையுங்க. (கொசுத் தொல்லை தாங்க முடியலனு சொல்லாம சொல்லணும்..) இல்லேனா (ஓவரா பேசாத“னு சொல்றதுக்கு பதிலா) ஒரு செம்புல தண்ணி கொண்டுவந்து அவங்க முன்னாடி வச்சுட்டு, அப்பாவி மாதிரி அமைதியா உக்காந்துடுங்க.
பதிலுக்கு பதில் கோவப்பட்டு கத்தி நம்ம சக்திய வீணாக்குறதுக்கு, இந்த ஆலோசனைகள்  எவ்ளவோ மேல்.. என்ன நா சொல்றது???
நம்மமேல உண்மையான அக்கறை இருக்குறவங்க, ஏதாவது சீரியஸா அட்வைஸ் பண்ணும்போது இதையெல்லாம் பண்ணித்தொலைக்காதீங்க.. நா இங்க குடுத்துருக்குற டிப்ஸ், தேவையில்லாம நம்மள கடுப்பேத்துறவங்கமேல நமக்கு வர்ற கோபத்தை கட்டுப்படுத்துறதுக்கு தான்.
ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வருது...
Husband:  When I got mad at you, you never fight back, How do you control your anger?
Wife: I clean the toilet.
Husband: How does that help?
Wife: I use your toothbrush
.
.

Comments

Unknown said…
:) kirrrrrrrrrrrrr
Unknown said…
இந்த வருடம் அமோகமா கமெண்ட் வர வாழ்த்துக்கள்

புத்தாண்டு இப்படியா தொடங்கணும் ?

அட்வைஸ் அம்புஜம் போல நம்ம இந்திரா ஆகிட்டாங்க
பகிர்வுக்கு நன்றி
உண்மையில் உகந்த பதிவு
நல்ல ஆலோசனை தான்
//siva sankar said...

இந்த வருடம் அமோகமா கமெண்ட் வர வாழ்த்துக்கள்

புத்தாண்டு இப்படியா தொடங்கணும் ?

அட்வைஸ் அம்புஜம் போல நம்ம இந்திரா ஆகிட்டாங்க
பகிர்வுக்கு நன்றி
உண்மையில் உகந்த பதிவு//


கருத்துக்கு நன்றி சிவா..
இதையெல்லாம் பார்த்ததா அட்வைஸ் மாதிரியா தெரியுது?????
அடப்போங்க சிவா.. காமெடி பண்றீங்க..
//காஞ்சி முரளி said...

It's Good..!

Keepit up...!//


என்ன முரளி சார்... ரொம்ப பிஸியாயிட்டீங்க போல.. பின்னூட்ட அளவு குறஞ்சிடுச்சே.. இந்தப் பதிவுக்கு இவ்ளோ போதும்னு நெனச்சிட்டீங்களா???
ம்ம்ம்ம்???


புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//sasikala said...

நல்ல ஆலோசனை தான்//


நன்றிங்க..
Using Toothbrush? கிர்ர்ர்ர்ர்! உங்களோட சொந்த ஜிந்தனைகள் ரொம்பவே நல்லாருக்கு...
வாழ்த்துக்கள்.
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
//என்ன முரளி சார்... ரொம்ப பிஸியாயிட்டீங்க போல.. பின்னூட்ட அளவு குறஞ்சிடுச்சே.. இந்தப் பதிவுக்கு இவ்ளோ போதும்னு நெனச்சிட்டீங்களா??? ம்ம்ம்ம்???///

வருஷ மொதமொத பதிவு...! இதுல வந்து கலாய்க்கக்கூடாதுன்னுதான்...!

இந்த பதிவுல மொதோ போட்டோவுல இருக்குற ஆளு டைப்புதான் நான்...!

என்னப்போய்...! திருந்தச்சொன்னா...!
ஹா., ஹா., ஹா...

நல்ல காமெடி... ரொம்ப நாள் கழிச்சி
ரசிச்சி சிரிச்சேன்..!
நல்ல ஜிந்தனை! ஹா ஹா!
ரொம்ப கூலா வந்தேன் படிச்சேன் செம கோவத்தில் இருக்கேன். ஹி ஹி ஹி...


//ரொம்ப நேரமா ஜிந்திச்சேன்.//


ரூம் போட்டு....ஹா ஹா ஹா
Unknown said…
சகோ மத்தது எல்லாம் பரவாயில்ல அந்த கடைசி இங்கி பீசு ஜோக்கு தான் பயமா இருக்கு...!
என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

அட்வான்ஸ் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

அது எப்பனு மட்டும் கேட்க கூடாது.. எப்ப வந்தாலும் அதுக்கு இப்பவே வாழ்த்துகள்....
//கணேஷ் said...

Using Toothbrush? கிர்ர்ர்ர்ர்! உங்களோட சொந்த ஜிந்தனைகள் ரொம்பவே நல்லாருக்கு...//


ஹிஹி.. நன்றிங்க..
//என்றும் இனியவன் said...

வாழ்த்துக்கள்.
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.//


ஓகேங்க..
வருகைக்கு நன்றிங்க..
//காஞ்சி முரளி said...

வருஷ மொதமொத பதிவு...! இதுல வந்து கலாய்க்கக்கூடாதுன்னுதான்...!

இந்த பதிவுல மொதோ போட்டோவுல இருக்குற ஆளு டைப்புதான் நான்...!

என்னப்போய்...! திருந்தச்சொன்னா...!//


அட.. என்னாங்க நீங்க.. நா பதிவுல சொன்னது மாதிரி ஒரு மணி நேரம் காட்டு கத்தல் கத்துறதும் நக்கலா எடக்கா ஒரு சிரிப்பு சிரிக்கிறதும் ஒண்ணு.. நம்மளோட எனர்ஜி போகாது பாருங்க..
சரி விடுங்க..
தொடரட்டும் உங்க வருகை.
நன்றி முரளி சார்..
//வெங்கட் said...

ஹா., ஹா., ஹா...

நல்ல காமெடி... ரொம்ப நாள் கழிச்சி
ரசிச்சி சிரிச்சேன்..!//


ரசிச்சதுக்கும் சிரிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்..
தொடரட்டும் உங்கள் வருகை.
//திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ஜிந்தனை! ஹா ஹா!//


ஹாஹா
டாங்க்ஸ்ங்க..
//மனசாட்சி said...

ரொம்ப கூலா வந்தேன் படிச்சேன் செம கோவத்தில் இருக்கேன். ஹி ஹி ஹி...


//ரொம்ப நேரமா ஜிந்திச்சேன்.//


ரூம் போட்டு....ஹா ஹா ஹா//


கோவமா பின்னூட்டம் போட்டுட்டீங்களா???
ஹிஹிஹி... தாங்க்ஸ்ங்க..
//விக்கியுலகம் said...

சகோ மத்தது எல்லாம் பரவாயில்ல அந்த கடைசி இங்கி பீசு ஜோக்கு தான் பயமா இருக்கு...!//


ஜோக்கு பயமா இருக்கா??? இல்ல இங்கிலிபீசுல இருக்குறதுனால பயமா இருக்கா??
//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

அட்வான்ஸ் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

அது எப்பனு மட்டும் கேட்க கூடாது.. எப்ப வந்தாலும் அதுக்கு இப்பவே வாழ்த்துகள்....//


தீபாவளி, பொங்கல் எல்லாம் விட்டுட்டீங்க..
(எப்படியெல்லாம் பயமுறுத்தி இந்தப் பக்கம் வரவழைக்க வேண்டியதாயிருக்கு... கண்ண கட்டுதுடா சாமி..)
>>நான் இந்திரா இம்சிக்கிறேன்..

நான் இந்திரா மிரட்டுகிறேன்.

இப்படி மாற்றவும் ஹி ஹி .
>>இந்திரா said...

//விக்கியுலகம் said...

சகோ மத்தது எல்லாம் பரவாயில்ல அந்த கடைசி இங்கி பீசு ஜோக்கு தான் பயமா இருக்கு...!//


ஜோக்கு பயமா இருக்கா??? இல்ல இங்கிலிபீசுல இருக்குறதுனால பயமா இருக்கா??

அதாவது மேடம், விக்கியே ஒரு பதிவுலக தாதா, அவனே பயந்துட்டான்னா நாங்க எல்லாம் ........................
KANA VARO said…
நாங்க அன்றாட வாழ்க்கையில படுற கோவத்தை விட, பதிவுலகில நிறைய கோபம் வரும் போல! ஏன்னா எழுத்துக்களாக சில விடயங்களை வாசிக்கும் போது கோபம் உச்சந்தலைக்கு ஏறுது.
நான் இனிமே கோபப் படமாடேன்னு போன நியூ இயருக்கே சொன்னேன்.இன்னும் நம்ப மாட்டேன்கிறீங்க. அப்புறம் அவ்வளவுதான்.
நல்ல ஜிந்தனைகள் இந்திரா..

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
அட!!

நல்லாயிருக்கே..

பின்பற்றலாம்..
என்ன இருந்தாலும் நீங்கள் முயற்சி செய்து, சோதித்து விட்டு தளமேற்றாதில் ஒரு சிறு கோபம் தான் :)
Moortthi JK said…
யாருக்கு தேவையோ இல்லையோ இது எனக்கு தேவையானது இந்திரா.. என்ன கடுப்பேத்தி பாக்கறதுக்கு நிறைய கும்பல் இருக்கு. கையில் ஏற்பட்ட சிறிய விபத்தின் காரணமாக என்னால் எழுத இயலவில்லை. விரைவில் வருவேன் உங்களை இம்சிக்க (நீங்க எல்லாரையும் இம்சை பண்ணா உங்கள இம்ச பண்ண ஒருவர் வேண்டாமா ? கோவபடாதிங்க
//சி.பி.செந்தில்குமார் //

//KANA VARO //

//T.N.MURALIDHARAN //

//RAMVI //

//guna thamizh //

//முகமூடியணிந்த பேனா!! //

//Moortthi JK//


நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்..

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்