ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்க என்னென்ன செய்யலாம்.. (காமெடி கலாட்டா)ப்ளாக், ட்விட்டர், ஃபேஸ்புக்“னு நாம தினம் தினம் உபயோகிக்கிற வலைதளங்கள்ல நமக்கிருக்குற பல கவலைகள்ல ஒண்ணு, ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை.
மாங்கு மாங்குனு பதிவுகள் எழுதி தள்ளினாலும் ஃபாலோயர்ஸ் பட்டியல் ஒரு அளவுக்கு மேல அதிகமாகவே மாட்டீங்குதேனு கவலைப்பட்றீங்களா?
சீரியஸ் பதிவுகள்னாலும் சரி.. மொக்கை பதிவுகள்னாலும் சரி.. வந்து படிச்சுட்டுப் போறாங்களே ஒழிய, யாரும் ஃபாலோயர் ஆக மாட்டீங்குறாங்கனு புலம்புறீங்களா?
நம்மளோட வலைப்பக்கத்துல ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகமாகனும்னா நாம சில வாக்குறுதிகள அள்ளி வீசணும். (அத நிறைவேத்துறோமாங்குறது ரெண்டாவது பிரச்சனை). அது என்னென்ன்னு பாக்கலாம்.
வாக்குறுதி 1
என்னோட வலைப்பக்கத்துல ஃபாலோயராகுறவங்களுக்கு, ஆண்களாக இருந்தால் - ஹன்சிகா, அனுஷ்கா, ரிச்சா, சமீரா, அமலா பால்.. இவங்களோட பர்சனல் செல் நம்பரும், பெண்களாக இருந்தால் - சூர்யா, ஆர்யா, கார்த்தி.. இவங்களோட செல் நம்பரும் வழங்கப்படும்.
வாக்குறுதி 2
ஃபாலோயராகுபவர்களுக்கு பதிவர் சந்திப்பின்போது, கூடுதலாக ஸ்நாக்ஸ் வழங்கப்படும்.
வாக்குறுதி 3
ஃபாலோயராகும் ஒவ்வொருத்தருக்கும் தலப்பாகட்டு பிரியாணி பார்சல் வழங்கப்படும். கூடவே லெக் பீசும் தரப்படும்.
வாக்குறுதி 4
ஃபாலோயராகுபவர்களுக்கு டெம்ப்ளேட் கமெண்ட் போடுவதற்கான இலவச லைசன்ஸ் வழங்கப்படும்.
வாக்குறுதி 5
ஃபாலோயராகும் பதிவர்களுக்கு “பாசக்கார பதிவர்“ என்ற அவார்டு இலவசமாக வழங்கப்படும். தங்கள் வலைப்பக்கத்தில் அதனை ஒட்டிவைத்துக்கொள்ளலாம்.
வாக்குறுதி 6
ஃபாலோயராகும் நண்பர்களுக்கு காதல் கவிதைகள் இலவசமாக வழங்கப்படும். அதனை அவங்கவங்க ஆளுக்கு தாமே எழுதியதாய் குடுத்து அசத்தலாம்.
வாக்குறுதி 7
ஃபாலோயராகுபவர்கள் கணக்கு வைத்திருக்கும் வலைதளங்களில் (கமிஷன் வாங்காமல்) சிறந்த முறையில் கும்மியடிக்கப்படும் என்று உறுதியளிக்கப்படும்.
வாக்குறுதி 8
ஃபாலோயராகும் அனைவரின் பெயர்களும் ஹாலிவுட் படங்களில் நடிக்க சிபாரிசு செய்யப்படும்.
வாக்குறுதி 9
ஃபாலோயராகும் ஒவ்வொருவருக்கும் உள்குத்துப் பதிவெழுதுவது எப்படி என்று பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும்.
வாக்குறுதி 10
ஃபாலோயர் ஆகாதவர்களுக்கு, “ஆனந்த தொல்லை“ டிவிடி இலவசமாக வழங்கப்படும்.
.
இவ்ளோ வாக்குறுதிகளைக் குடுத்ததுக்கு அப்புறமும் ஃபாலோயர் ஆக மாட்டேன்னு தெனாவெட்டா சொல்றாங்களா??? சரி விடுங்க.. செய்வினை வச்சுடலாம்.
.
.

Comments

இதுபோதாது...
இன்னும் எதிர்பார்க்கிறோம்...
/////
ஃபாலோயர் ஆகாதவர்களுக்கு, “ஆனந்த தொல்லை“ டிவிடி இலவசமாக வழங்கப்படும்.
///////


இப்படி சொன்ன இருக்கிறவர்களும் ஓடுறதுக்கா...
வாக்குறுதி 10
ஃபாலோயர் ஆகாதவர்களுக்கு, “ஆனந்த தொல்லை“ டிவிடி இலவசமாக வழங்கப்படும்............/////////////

எனக்கு அது வேணும் நான் ஏற்கனவே உங்க பாலோயர் இப்போ நான் என்ன பண்றது ஐயோ சொக்கா பவர் ஸ்டார் படமாச்சே ..
பவர் ஸ்டார் படமாச்சே ..எனக்கு இல்லை எனக்கு இல்லை ..மண்டபத்துல யாரோ தட்டீட்டு போகபோறான் எனக்கு இல்லை எனக்கு இல்லை .
அய்யோ அம்மா...நான் வர்லீங்க...மீ பாவம்!
இப்படியெல்லாம் கஷ்டப்படுவதற்கு பதிலாக, இங்கு தரமான பதிவுகள் மட்டும் தரப்படும் என்று அறிவித்து,அதற்கான முயற்சிகளில் இறங்கலாமே!
RAMVI said…
என்ன இந்திரா வாக்குறுதிகளை அள்ளி வீசரீங்க!! அரசியல்ல இறங்கப் போறீன்க்களா??
Anonymous said…
yakka... padu payankrama mokka poduriye samy........ enna la mudiyala.....
கனி என்பது... அதுவா கணிந்தால்தான் அக்கனி "ருசி"யாய் இருக்கும்...!
புகையும்...சுண்ணாம்பு கல்லும் போட்டு கனிய வைக்க நினைக்கிறீங்க...!
அக்கனி... ருசிக்கவும் செய்யாது....! உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்...!

பாலயோர்ஸ் இப்படி இலவசத்தால் புடிக்க நினைச்சா...!
பலபேர் வருவாங்க...!
ஆனா உங்க பதிவு தரமானதாய் இருக்காது...!
சிலபேரை... அதாவது.... உண்மையான "பாலோயர்சை" இழக்கவேண்டிய நிலை வரும்...!
அப்புறம்...!
தேடினாலும் கிடைக்காது...!
வேண்டினாலும் வராது...!

என்னைக்கும்...
நீங்க நீங்களாவே இருங்க...!
மற்றவர்களுக்காக... உங்களை

மாற்றிக்கொள்ளாதீர்...!

அதாவது...! "இந்திரா...! இந்திராவாகவே" இருங்க...!
இதுவும்...!

காமெடிக்குத்தான்...!
K.s.s.Rajh said…
நல்ல ஜடியா மேடம்

ஏனைய ஆலோசனைகள் சரிவருதோ இல்லையோ பாலோவர்ஸ் ஆகாதவர்களுக்கு ஆனந்த தொல்லை டிவிடி வழங்கப்படும் என்றால் உடனே எல்லோறும் பாலோவர்ஸ் ஆகிவிடுவாங்க அவ்வ்வ்வ்வ்வ்
selvan said…
நான் உங்களின் பழைய பாளோயர் எங்களுக்கு எதாவது EXTRA உண்டா...
களம் காண முன்னோட்டமா? கண்டிப்பா என் ஒட்டு உங்களுக்கு.... ஹிஹிஹிஹிஹிஹி
Rathnavel said…
அருமை.
ஹேமா said…
இந்திரா...ஒரு வாக்குறுதிகூட எனக்கு ஏத்தமாதிரி இல்லையே !
what you plan to give for your followers...
ஒரே ஆளு பத்து ஐடில வந்து பாலோயர் ஆனா நீங்க சொன்ன எல்லாமே பத்தா கிடைக்குமா?...
ஹி..ஹி... டவுட்டு
வணக்கம் அக்கா
எல்லா ஐடியாக்களும் ஓக்கே.
ஆனால் கொசுறாக
ப்ளாக்கில டைம் கிடைக்கும் போது பதிவும் எழுதனும் என்றோர் ஐடியாவை சேர்த்திருந்தா இன்னும் சூப்பரா இருக்குமே;-))))
அன்பின் இந்திரா - நான் ஃபாலோ பண்ரேனா இல்லையா - தெரில - பாத்து ஏதாச்சும் கொஞ்சம் அனுப்புங்க சரியா - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
கணேஷ் said…
அடேங்கப்பா... இவ்வளவு ஐடியாக்கள் இந்த விஷயத்துக்கு இருக்கறது இவ்வளவு நாள் தெரியாமப் போச்சே... உங்களுக்கு ஃபாலோயர்ஸ் ஏன் அதிகமாகறாங்கன்னு இப்பத்தான் தெரியுது. ஹி... ஹி...
“ஆனந்த தொல்லை“
//சி.பி.செந்தில்குமார் said...

1st mokkai follower//


வெல்கம் செந்தில் சார்..
//குடந்தை அன்புமணி said...

இதுபோதாது...
இன்னும் எதிர்பார்க்கிறோம்...//


வாக்குறுதிகளா???

கம்பெனி கட்டுபடியாகாது பாஸூ..
//கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
ஃபாலோயர் ஆகாதவர்களுக்கு, “ஆனந்த தொல்லை“ டிவிடி இலவசமாக வழங்கப்படும்.
///////


இப்படி சொன்ன இருக்கிறவர்களும் ஓடுறதுக்கா...//


ஆகாதவங்களுக்குனு தானே சொல்லியிருக்கேன்.
அது சரி.. நீங்க லிஸ்ட்ல இருக்கீங்களா??
//அஞ்சா சிங்கம் said...

வாக்குறுதி 10
ஃபாலோயர் ஆகாதவர்களுக்கு, “ஆனந்த தொல்லை“ டிவிடி இலவசமாக வழங்கப்படும்............/////////////

எனக்கு அது வேணும் நான் ஏற்கனவே உங்க பாலோயர் இப்போ நான் என்ன பண்றது ஐயோ சொக்கா பவர் ஸ்டார் படமாச்சே ..
பவர் ஸ்டார் படமாச்சே ..எனக்கு இல்லை எனக்கு இல்லை ..மண்டபத்துல யாரோ தட்டீட்டு போகபோறான் எனக்கு இல்லை எனக்கு இல்லை .//


சரி விடுங்க. ரொம்ப பீல் பண்றீங்க.. மேதை டிவிடி குடுத்துடலாமா??
//விக்கியுலகம் said...

அய்யோ அம்மா...நான் வர்லீங்க...மீ பாவம்!//


அதெல்லாம் முடியாது.. யாரும் தப்பிக்க முடியாது. அப்புறம் ஆனந்த தொல்லை டிவிடி தான்.. ஜாஆஆஆக்கிறதை..
//வை.கோபாலகிருஷ்ணன் said...

இப்படியெல்லாம் கஷ்டப்படுவதற்கு பதிலாக, இங்கு தரமான பதிவுகள் மட்டும் தரப்படும் என்று அறிவித்து,அதற்கான முயற்சிகளில் இறங்கலாமே!//


அடப்போங்க நீங்க.. காமெடி பண்ணிகிட்டு.
//RAMVI said...

என்ன இந்திரா வாக்குறுதிகளை அள்ளி வீசரீங்க!! அரசியல்ல இறங்கப் போறீன்க்களா??//


ஏங்க?? நா நல்லாயிருக்குறது உங்களுக்குப் பிடிக்கலையா?
//Balasenthil said...

yakka... padu payankrama mokka poduriye samy........ enna la mudiyala.....//


சரி சரி.. டைலாக்கெல்லாம் இருக்கட்டும். பட்டியல்ல சேர்ந்துட்டீங்களா இல்லையா????
//காஞ்சி முரளி //


வொய் இவ்ளோ சீரியஸ்????
மொக்கை பதிவுதானே முரளி சார்..
ஈஸியா எடுத்துக்கங்க.


//"இந்திரா...! இந்திராவாகவே" இருங்க...!//


கண்டிப்பா சார்.. பதிவுகளிலும் சரி, தனிப்பட்டும் சரி.. அதுல என்னைக்கும் எந்தவித மாற்றமும் இருக்காது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி சார்.
//காஞ்சி முரளி said...

இதுவும்...!

காமெடிக்குத்தான்...!//


தாங்க்ஸ்ங்க..
வருகை தொடரட்டும்..
//K.s.s.Rajh said...

நல்ல ஜடியா மேடம்

ஏனைய ஆலோசனைகள் சரிவருதோ இல்லையோ பாலோவர்ஸ் ஆகாதவர்களுக்கு ஆனந்த தொல்லை டிவிடி வழங்கப்படும் என்றால் உடனே எல்லோறும் பாலோவர்ஸ் ஆகிவிடுவாங்க அவ்வ்வ்வ்வ்வ்//


ஹாஹா.. எப்டி..
பவர் ஸ்டார் பேர சொன்னாலே சும்மா அதிருதுல்ல..
இதையும் மீறி... ஃபாலோயரா சேர மாட்டேன் சொல்றவங்களை கூப்பிட்டு போய் பவர் ஸ்டார் கூட போட்டோ எடுத்து facebook ல போட்டுடுவோம் சொல்லுங்க அடுத்து 10 நிமிஷத்தில் 1000 ஃபாலோயர் வந்திருவாங்க.... :)))
//selvan said...

நான் உங்களின் பழைய பாளோயர் எங்களுக்கு எதாவது EXTRA உண்டா...//


ஆனந்த தொல்லை தராம இருக்குறதே பெரிய extra தானே..
வேணும்னா மேதை தந்துடலாமா???
//மனசாட்சி said...

களம் காண முன்னோட்டமா? கண்டிப்பா என் ஒட்டு உங்களுக்கு.... ஹிஹிஹிஹிஹிஹி//


ஹிஹி தாங்க்ஸ்ங்க..
//Rathnavel said...

அருமை.//


நன்றிங்க..
//ஹேமா said...

இந்திரா...ஒரு வாக்குறுதிகூட எனக்கு ஏத்தமாதிரி இல்லையே !//


என்னங்க இப்படி சொல்லிட்டீங்க??
ஆனந்த தொல்லை வேணும்னு சொல்றீங்களா? இல்ல வேணாம்னு சொல்றீங்களா?
//விஜயன் said...

what you plan to give for your followers...//


மேதை குடுக்கலாம்னு இருக்கேன்.
நீங்க என்ன சொல்றீங்க?
//தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒரே ஆளு பத்து ஐடில வந்து பாலோயர் ஆனா நீங்க சொன்ன எல்லாமே பத்தா கிடைக்குமா?...
ஹி..ஹி... டவுட்டு//


அட.. குடுத்துட்டாப்போச்சு..
அப்படிப்பட்ட நல்லவர் யாருங்க??
//நிரூபன் said...

வணக்கம் அக்கா
எல்லா ஐடியாக்களும் ஓக்கே.
ஆனால் கொசுறாக
ப்ளாக்கில டைம் கிடைக்கும் போது பதிவும் எழுதனும் என்றோர் ஐடியாவை சேர்த்திருந்தா இன்னும் சூப்பரா இருக்குமே;-))))//


ப்ளாக் இல்லாதவங்களும் ஃபாலோயராகும்போது அப்டி சொல்ல முடியாதே.. எப்டி நம்ம ஐடியா???
//cheena (சீனா) said...

அன்பின் இந்திரா - நான் ஃபாலோ பண்ரேனா இல்லையா - தெரில - பாத்து ஏதாச்சும் கொஞ்சம் அனுப்புங்க சரியா - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா//


கவலைப்படாதீங்க.. நீங்க ஃபாலோயர் தான். உங்களுக்கு ஆனந்த தொல்லை டிவிடி இல்ல.
//கணேஷ் said...

அடேங்கப்பா... இவ்வளவு ஐடியாக்கள் இந்த விஷயத்துக்கு இருக்கறது இவ்வளவு நாள் தெரியாமப் போச்சே... உங்களுக்கு ஃபாலோயர்ஸ் ஏன் அதிகமாகறாங்கன்னு இப்பத்தான் தெரியுது. ஹி... ஹி...//


அதிகமாகுறாங்களா??
பழைய ப்ளாக்ல 248 பேர் இருந்தாங்க. இந்த ப்ளாகல இப்ப தான் 177 வந்துருக்காங்க.
அதெல்லாம் கண்டுக்குறது இல்லீங்க.. வர்றவங்க வரட்டும்.
கிண்டலுக்கு எழுதப்பட்ட பதிவு தான். மத்தபடி ஒண்ணுமில்லீங்க.
//இராஜராஜேஸ்வரி said...

“ஆனந்த தொல்லை“//


ம்ம்ம் ஜாஆஆஆஆக்கிரதை...
//சௌந்தர் said...

இதையும் மீறி... ஃபாலோயரா சேர மாட்டேன் சொல்றவங்களை கூப்பிட்டு போய் பவர் ஸ்டார் கூட போட்டோ எடுத்து facebook ல போட்டுடுவோம் சொல்லுங்க அடுத்து 10 நிமிஷத்தில் 1000 ஃபாலோயர் வந்திருவாங்க.... :)))//


அட.. இந்த ஐடியா நல்லாயிருக்கே.. அது சரி நீங்க லிஸ்ட்ல சேர்ந்துட்டீங்களா இல்லையா??? கிளம்புங்க பவர் ஸ்டாரைப் பார்க்க.

(அவர் கடுப்பாகி அடியப் போட்றப் போறாரு.. பாத்து..)
Moortthi JK said…
கை வலி சரியாகாத காரணத்தினால், எழுதணும்ன்னு நினைகிறதை எழுத முடியவில்லை. மன்னிக்கவும். கடந்த இரண்டு பதிவுமே அருமை (சிரிக்க)
// ஃபாலோயர் ஆகாதவர்களுக்கு, “ஆனந்த தொல்லை“ டிவிடி இலவசமாக வழங்கப்படும். //

நல்லா கெளப்பறாங்கையா பீதியை..!!
ha...ha...ha....manam vittu siriththen. Pakirvukku Nanri Sago.!
//Moortthi JK said...

கை வலி சரியாகாத காரணத்தினால், எழுதணும்ன்னு நினைகிறதை எழுத முடியவில்லை. மன்னிக்கவும். கடந்த இரண்டு பதிவுமே அருமை (சிரிக்க)//


நன்றிங்க..
சீக்கிரம் வலி குணமடையட்டும்.
//வெங்கட் said...

// ஃபாலோயர் ஆகாதவர்களுக்கு, “ஆனந்த தொல்லை“ டிவிடி இலவசமாக வழங்கப்படும். //

நல்லா கெளப்பறாங்கையா பீதியை..!!//


ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும் வெங்கட்..
//துரைடேனியல் said...

ha...ha...ha....manam vittu siriththen. Pakirvukku Nanri Sago.!//


நன்றி துரைடேனியல்.
வருகைக்கும் கருத்துக்கும்.. மனம் விட்டு சிரித்ததற்கும்..
dhanasekaran .S said…
ஃபாலோயராகும் ஒவ்வொருத்தருக்கும் தலப்பாகட்டு பிரியாணி பார்சல் வழங்கப்படும். கூடவே லெக் பீசும் தரப்படும்.


நான் சேர்ந்துடேன் எப்ப கொடுக்க போறிங்க மேடம்.
Ramani said…
ஆடித் தள்ளுபடியின் போது சேலை வாங்கும்
சாமத்தியக்காரர்கள் போலே
தங்கள் சலுகைகளைப் பார்த்து அசந்து
தொடர்பவராகிவிட்டேன்
தொடர்ந்து வருகிறேன்
தொடர வாழ்த்துக்கள்
Yoga.S.FR said…
வணக்கம் இந்திரா!ஒரு காலத்துல உங்க பேரை அது தான் இது இது தான் அதுன்னு...........புலம்புறனோ???டெரெக்டா சொல்லிடுறேன்!இந்திரா தான் இந்தியா,இந்தியா தான் இந்திரான்னு சொல்லுவாங்க!அதுக்கு ஏத்தாப்புல பதிவு போட்டிருக்கீங்க!இன்னிக்கு நாள் நல்லால்ல,அப்புறமா ஃபலோயரா சேந்துக்கிறேன்!என்கிட்டயும் ப்ளாக்(பேருக்கு) இருக்கு!!!!!!!
சகோ இதைவிட இன்னும் ஒரு ஐடியா இருக்கு புதுசா வாற பதிவரலிடம் போய் ரகசியமாய் பொல்லோவ் பண்ணச் சொல்லி கேட்கலாம்...
//வாக்குறுதி 8
ஃபாலோயராகும் அனைவரின் பெயர்களும் ஹாலிவுட் படங்களில் நடிக்க சிபாரிசு செய்யப்படும்//
இதைத்தவிர மற்றதை பின்பற்றலாம் போல இருக்கே
நல்ல நகைச்சுவை உணர்வுடன் எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
(நான் ஃபாலோயரா ஆயிட்டேன்)
நல்லாதான் இருக்கு.
ராஜி said…
வாக்குறுதி 3
ஃபாலோயராகும் ஒவ்வொருத்தருக்கும் தலப்பாகட்டு பிரியாணி பார்சல் வழங்கப்படும். கூடவே லெக் பீசும் தரப்படும்.
>>>
ஒருவேளை பதிவர் வெஜ் ஆசாமியா இருந்துட்டால் என்ன செய்வது?
Mahan.Thamesh said…
நல்ல ஐடியா தான் சொல்லி இருக்கிங்க. சில ரகசிய ஒப்பந்தங்கள் நல்லாவே கை கொடுக்கும் .
Mahan.Thamesh said…
அட நாம இப்போ உங்க விசிறி ஆகிட்டோம் . சரி உங்க வாக்குறுதியில முதலாவத நிறைவேற்றுங்கள் .
//dhanasekaran .S said...

ஃபாலோயராகும் ஒவ்வொருத்தருக்கும் தலப்பாகட்டு பிரியாணி பார்சல் வழங்கப்படும். கூடவே லெக் பீசும் தரப்படும்.


நான் சேர்ந்துடேன் எப்ப கொடுக்க போறிங்க மேடம்.//


சீக்க்க்க்க்கிரமே..
//Ramani said...

ஆடித் தள்ளுபடியின் போது சேலை வாங்கும்
சாமத்தியக்காரர்கள் போலே
தங்கள் சலுகைகளைப் பார்த்து அசந்து
தொடர்பவராகிவிட்டேன்
தொடர்ந்து வருகிறேன்
தொடர வாழ்த்துக்கள்//நன்றி.. நன்றி... நன்றி..
//Yoga.S.FR said...

வணக்கம் இந்திரா!ஒரு காலத்துல உங்க பேரை அது தான் இது இது தான் அதுன்னு...........புலம்புறனோ???டெரெக்டா சொல்லிடுறேன்!இந்திரா தான் இந்தியா,இந்தியா தான் இந்திரான்னு சொல்லுவாங்க!அதுக்கு ஏத்தாப்புல பதிவு போட்டிருக்கீங்க!இன்னிக்கு நாள் நல்லால்ல,அப்புறமா ஃபலோயரா சேந்துக்கிறேன்!என்கிட்டயும் ப்ளாக்(பேருக்கு) இருக்கு!!!!!!!//


இந்தியா.. இந்திரா.. அவ்வ்வ்வ்..
இடம் மாறி வந்துட்டீங்களா??
இந்திரா“னு வேற பதிவர் இருக்காங்களோ???
எப்டியோ... வருகைக்கு நன்றிங்க..
//vinu said...

presentu//


but late'uuuuuu...
//♔ம.தி.சுதா♔ said...

சகோ இதைவிட இன்னும் ஒரு ஐடியா இருக்கு புதுசா வாற பதிவரலிடம் போய் ரகசியமாய் பொல்லோவ் பண்ணச் சொல்லி கேட்கலாம்...//


ஆனா கமிஷன் கட்டுபடியாகாதே..
//வியபதி said...

//வாக்குறுதி 8
ஃபாலோயராகும் அனைவரின் பெயர்களும் ஹாலிவுட் படங்களில் நடிக்க சிபாரிசு செய்யப்படும்//
இதைத்தவிர மற்றதை பின்பற்றலாம் போல இருக்கே
நல்ல நகைச்சுவை உணர்வுடன் எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
(நான் ஃபாலோயரா ஆயிட்டேன்)//


நன்றிங்க... வருகைக்கும் கருத்துக்கும் பட்டியல்ல இணைந்ததற்கும்..
:))
//பட்டிகாட்டு தம்பி said...

நல்லாதான் இருக்கு.//


ஹிஹி.. நன்றிங்க..
//ராஜி said...


ஒருவேளை பதிவர் வெஜ் ஆசாமியா இருந்துட்டால் என்ன செய்வது?//


ஊறுகாயும் தயிர் சாதமும் குடுத்துடலாமா?
//Mahan.Thamesh said...

நல்ல ஐடியா தான் சொல்லி இருக்கிங்க. சில ரகசிய ஒப்பந்தங்கள் நல்லாவே கை கொடுக்கும் .

அட நாம இப்போ உங்க விசிறி ஆகிட்டோம் . சரி உங்க வாக்குறுதியில முதலாவத நிறைவேற்றுங்கள் .//

கண்டிப்பா...
எனக்கு அவங்க நம்பர் கிடைச்சதும் முதல்ல உங்களுக்கு சொல்லிட்றேன்..
எப்ப கிடைக்குதோ...!!!