அர்த்தமற்ற நம் முகமூடிகள்..போலிகள் நிறைந்த வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை முகமூடிகள்??? துக்கத்தை மறைத்து சிரிப்பதுபோல.. சிரிப்பை அடக்கி துக்கப்படுவது போல.. பொறாமையை உள்வைத்த பாராட்டுக்கள் போல, அவமானங்களை தன்வைத்த வாழ்த்துக்கள் போல, துரோகம் உள்ளடக்கிய நட்பைப் போல.. நட்பெனும் பெயரில் காதல் போல.. காதல் பொய்யில் எழும் காமம் போல.. உண்மையை மறைக்க முனையும் பொய்களைப் போல.. இன்னும் இன்னும் எவ்வளவோ..
அன்றாட வாழ்வின் இம்முகமூடிகளைக் களைந்துவிடின், நொடிளுக்கான நகர்தல்கள் பரிதாபத்திற்குரியதே.. ஆயினும், நம்மை நாமாகக் காட்ட நமக்குத் துணிவில்லையென்பதே இம்மூடிகளுக்கான ஆதாரம். எச்சூழலையும், இயல்பென ஏற்றுக்கொள்ளவும், யதார்த்தமாய்ப் பகிர்ந்துகொள்ளவும் எவருக்கும் மனமிருப்பதில்லை இந்நாட்களில். உண்மை முகம் மறைக்கும் போலியாய், எல்லோருக்கும் தேவைப்படுகிறது ஏதாவதொரு வேஷங்கள்.
அர்த்தமற்ற இந்நடிப்புகளில் மறைந்து மறந்துபோய்க்கொண்டிருக்கிறது நமக்கான இயல்புகள். சட்டென உணர்வுகளை வெளிப்படுத்தி, பின் யதார்த்தத்திற்குத் திரும்பி, விளைவுகளை ஏற்றுக்கொண்டு, உண்மையாய் இருக்க எவரொருவரும் தயாராய் இருப்பதில்லை எப்போதும்.
வருங்காலம் இனிமையாய் இருக்குமென்ற இருமாப்பில், நிகழ்காலத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்..
எவரையும் பாதிக்காதமைக்கு வந்துபோகட்டுமென பாசாங்கிட்டாலும், எப்போதும் அடுத்தவருக்காய் வாழ்வதற்கே என உருமாறிப்போகிறது, பாழாய்ப்போன நம் வாழ்க்கை.
.
.

Comments

Unknown said…
எல்லாரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் முகமூடி அணியத்தான் வேண்டியுள்ளது ....
உண்மை தான் இந்திரா, யதார்த்தவாதி வெகுசன விரோதியாகின்றான். இப்படி இருக்கும் போது முகமூடி இல்லாது சுய முகத்தோடு யாரால் தான் இந்த உலகில் நின்று பிடிக்க முடியும்.
என்ன செய்வது?.இயல்பை இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்வரை முகமூடிகள் சில நேரங்களில் தேவைப் படத்தான் செய்கின்றன.
Unknown said…
சில சமயங்களில் முகமூடி இல்லாவிடில் கவலை நம்மிடமிருந்து பிறருக்கும் செல்லும். அதற்காகவேனும் முகமூடி தேவை..
MARI The Great said…
மனிதத்துவம் கொண்ட மனிதனுக்கு முகமூடி அவசியமில்லை ..! அப்படிப்பட்ட மனிதர்களை காண்பது இப்போது அபூர்வமாகவே நிகழ்கிறது ..!
ஆத்மா said…
எல்லா சந்தர்ப்பத்துக்கும் இந்த போலி வாழ்க்கை பொருந்தாது...

வரலாற்று சாதனையாளர்கள் முகமூடி அணிந்திருந்தால்..?

தோணிச்சி எழுதிட்டன்
"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என அவ்வையார் சொன்னது தப்போ என எண்ணத் தோன்றுகிறது...!

காரணம்...!

மனிதன் தன்....
"அம்மானை" பருவம் முதல்
"முக்கால்" பருவம் வரை....!
மனதிற்கு "மனமூடி" அணிந்து கொண்டும் ...
முகத்திற்கு "முகமூடி" அணிந்து கொண்டும்...
வாழ்தலே... வாழ்க்கை என
தனக்குள்ளேயே ஓர் எல்லையை வகுத்து வாழ்ந்து வருகிறான்...!

முகமூடி அணியா மனிதன்
முழு மனிதனே அல்ல...! என்ற
மாயதோற்றத்தை... ஓர்
பிம்பத்தை
கற்பனையை உருவாக்கி...
மனதினுள் விதைத்துகொண்டான்...! அது இன்று
விண்ணையே தொடுமளவுக்கு
மாபெரும் விருட்ஷமாய் ஓங்கி வளர்ந்துவிட்டது...!


இதிலும் சிலபேர்
நான் முகமூடி அணிவதில்லை என அப்பட்டமாய் பொய்சொல்லி...

தன்னையே தான் ஏமாற்றிக்கொண்டு...
நம்மையும் ஏமாற்றுகிறார்கள்...!

அவர்கள் உண்மையில் எத்தர்கள்...!

இவன்
தன்னை சுற்றி இருப்பவர்களிடையே பொய்சொன்னால் பரவாயில்லை...!

தனக்குத்தானே... தன்னிடமே பொய் சொல்லிக்கொள்வது...!

அதோடு...

தனக்கு உயிர் கொடுத்த தந்தையிடம்..

தனக்கு உடல் கொடுத்த தாயிடம்....!

தன் நகமும் சதையுமான சகோதரத்திடம்...!

தன்னில் பாதியேனும் துணையிடம்...!

தன்னால் வடிக்கப்பட்ட குழந்தைகளிடம்...!

தான் நடமாடும் இச்சமூகத்திடம்...!

"தான் முகமூடி அணியவில்லை" என பொய் சொல்வது...
எவ்வளவு கேப்மாரித்தனம்... மொள்ளமாரித்தனம்...!

இதைத்தான் வைரமுத்து ஓர் பாடலில்...
"முகமூடி வாழ்க்கை
முகம் மட்டும் இல்லை"

என சொல்லியிருப்பார்....!

நல்ல பதிவு...! இந்திரா...!
vinu said…
presenttu presenttuuuuuuu
வருங்காலம் இனிமையாய் இருக்குமென்ற இருமாப்பில், நிகழ்காலத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்.
//எஸ்தர் சபி //

//கலைவிழி //

//T.N.MURALIDHARAN //

//Hareeshwar Jeffrey //

//வரலாற்று சுவடுகள் //

//சிட்டுக்குருவி //

//காஞ்சி முரளி //

//vinu //

//ச. ராமானுசம் //


நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்..

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..