மனதிற்கும் உண்டோ ஓர் அரிதாரம்??
வெறுப்பின் உச்சகட்டம் நம் பிரிவு..
பார்க்க மாட்டேன் என நானும்
நினைக்கக்கூட மாட்டேன் என நீயும்..!!
.
அடக்கிவைத்த அத்தனை கோபங்களையும்
கொட்டித் தீர்த்துவிட்டுக் கிளம்ப,
அந்நொடிமுதல் ஆரம்பித்தது நாமில்லா நமது வாழ்க்கை.
.
சுதந்திரம் கிடைத்ததென..
கட்டுப்பாடுகள் இல்லையென..
கடிவாளங்கள் அறுந்ததென..
அடிமைத்தனம் முடிந்ததென..
போலியான சமாதானங்கள் நமக்குள்ளே!!
.
நிம்மதியாய் இருக்கிறோமென
நமக்கு நாமே சொல்லிப் பழக்கினோம்..
மாற்றங்கள் நம் அலைபேசி எண்களிலும்
மின்னஞ்சல் கடவுச்சொல்லிலும் புகுத்தினோம்,
அதுவே மனதிற்கும் என்ற நாடகமாய்..!!
.
வந்துபோகும் நினைவுகளையும்
வலுக்கட்டாயமாய் தள்ளிவிட்டு
கெட்ட கனவுகள் என்றும் கறுப்பு அத்தியாயம் என்றும்
பொய்யாகப் பொய்யுரைத்தோம்.
.
எல்லாம் சரிதான்.. ஆனாலும்..
நாம் பேசியமர்ந்த இடத்தைக் கடக்கும்போதும்
உனக்குப் பிடித்த பாடல் காதில் விழும்போதும்
உன் விருப்ப நாயகனைத் திரையில் பார்க்கும்போதும்
உனக்குப் பிடித்த உணவை உண்ணும்போதும்
ஏன்.... இந்த வரிகளை எழுதும்போதும் கூட..
சட்டென ஸ்தம்பித்து உண்டாகும்
ஏனோ ஆழ்மனதில் ஒருவித வலி!!
.
இது தான்.. இப்படித் தான் என்று
தேற்றிக்கொண்டு சகஜமானாலும்,
ஒரு சில கேள்விகளுக்கும் வலிகளுக்கும்
என்றைக்குமே விடை கிடைப்பதில்லை..!!
.
மனிதர்களுக்கு அரிதாரமிடலாமே தவிர
மனதிற்கு எப்போதும் முடிவதில்லை..!!
.
.

Comments

BHUHARI said…
வணக்கம் இந்திரா....தோழி....!உங்கள் ப்ளாக் இப்போ தான் முதன் முதலாக பார்க்கிறேன்....எல்லாமே நன்றாக மிகவும் அருமை(எல்லாமே இல்லை நான் படிச்ச வரிக்கும்)இது மேலும் மேலும் தொடரவும் தொடர என் வாழ்த்துக்கள்....என்றும் நன்றியுடன் உங்கள் நண்பர்களின் ஒருவன்....!
அருமையான கவிதை அதற்கேற்ற ஏற்ற புகைப்படம்., வாழ்த்துக்கள் சகோ.!
//மனிதர்களுக்கு அரிதாரமிடலாமே தவிர
மனதிற்கு எப்போதும் முடிவதில்லை..!!//
உண்மையைச் சொல்லும் அழகான வரிகள்
ஆமினா said…
உண்மைக்காதலுக்கு பிரிவு என்பது தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளூம் வேஷம் தான்... நிச்சயம் நம்மால் அடியோடு மறக்க முடியாது என தெரிந்தே தான் ஈகொவில் பிரிகிறோம். நிச்சயம் ஏதேனும் ஒரு விஷயம் பழைய நினைவுகளை தட்டி எழுப்பும் போது மறைந்ததாய் நினைத்து புண்ணிலிருந்து மீண்டும் வலி உண்டாகும். உணர்ந்தவர்களுக்குதான் இதன் அருமை புரியும்.

அழகான கவிதை இந்திரா. ரொம்ப ரசிச்சேன்
அடக்கிவைத்த அத்தனை கோபங்களையும்
கொட்டித் தீர்த்துவிட்டுக் கிளம்ப,
அந்நொடிமுதல் ஆரம்பித்தது நாமில்லா நமது வாழ்க்கை.

ரசித்த இடம்..அருமை..
ரேவா said…
பிரிவின் மூலம் அரிதாரம் பூச நினைத்து தோற்றுப்போன மனதின் நிலையை வெகு இயல்பாய் கவிதையில் ஏற்றியுள்ளீர்கள் இந்திரா...

இன்றைய தலைமுறை தம்பதிகளை கண்முன்னே கட்டிப்போடுகிறது இந்த கவிதை...

கனவுகளை கறுப்பு அத்தியாயம் என்று சொல்லும் இடமாகட்டும், ஏதோ ஒரு இடத்தில் மீண்டும் துளிர்விடும் நினைவுகளை
தவர்க்க துணிகின்ற இடமாகட்டும்
இதுதான் எதார்த்தமென்று வலிகளை பழக்கப்படுத்திகொள்ள தோன்றும் இடமாகட்டும்
வலிகளுக்குவிடைகிடைப்பதில்லை என்று ஒரு தீர்க்கமான முடிவில் முடிந்துபோன இடமாகட்டும்

அரிதாரம் மனதிற்கு இல்லையென்பதை அழுத்தமாய் சொல்லிப்போகிறது...... வலி நிறைந்த கவிதைக்கு அரிதாரம் போடாது மறுமொழியிடுகின்றேன்.......... :)
பொருட் செறிவு நிறைந்த அருமையான கவிதை....
Anonymous said…
உறவும் அதன் பின் பிரிவும் நெஞ்சினில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்திவிடுவது நிஜம்! அதனால் தான் , மனதிற்கு அரிதாரம் பூச முடிவதில்லை! அருமை! அருமை!
http://atchaya-krishnalaya.blogspot.com
அருமையான வரிகள். மனதைத்தொட்டது. தொடருங்கள் வாழ்த்துகள்
அழகான வரிகள்! பிரிவின் வலியையும் அதை ஏற்றுக்கொண்டு வாழ நம் மனதை தயார் படுத்துவதாய் நம்மை நாமே ஏமாற்றிகொள்வதும்! அது இயலாது போகும் வலியும் அருமைங்க!
ஈகோ இல்லைனா பல பிரச்சனைகள் வரவே வராது.
ஈகோ இல்லைனா பல பிரச்சனைகள் வரவே வராது.
Sasi Kala said…
இது தான்.. இப்படித் தான் என்று
தேற்றிக்கொண்டு சகஜமானாலும்,
ஒரு சில கேள்விகளுக்கும் வலிகளுக்கும்
என்றைக்குமே விடை கிடைப்பதில்லை..!!// ஆதங்க வரிகள் அருமை .
மனிதர்களுக்கு அரிதாரமிடலாமே தவிர
மனதிற்கு எப்போதும் முடிவதில்லை..!!//

சத்தியமான வரிகள்....!
சீனு said…
//மனிதர்களுக்கு அரிதாரமிடலாமே தவிர
மனதிற்கு எப்போதும் முடிவதில்லை..!!//

நினைத்தவுடன் கவி எழுத திறமை வேண்டும்
நினைத்ததை கவிதையாக எழுத தனித்திறமை வேண்டும்
அத்திறமை உள்ள உங்களைப் பார்த்து வியக்கிறேன்படித்துப் பாருங்கள்

வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்

///மனிதர்களுக்கு அரிதாரமிடலாமே தவிர
மனதிற்கு எப்போதும் முடிவதில்லை..!!/////அதெப்படி முடியும்...!ஊரார் முன் நடிக்கமுடியும்...!

உனக்குள் நீயே நடிக்க முடியுமா?நல்லாத்தான் இருக்கு...!

ஆனா...!

சாதரணமான ஓர் "ஈர்ப்பை" இவ்வளவு தூரம் தூக்கிவைத்து கொண்டாடவேண்டுமா? என்பதுதான் என் கேள்வி...!
மனிதர்களுக்கு அரிதாரமிடலாமே தவிர
மனதிற்கு எப்போதும் முடிவதில்லை..!!

.. touching lines.... http://www.rishvan.com