ஆண் குழந்தை மோகம்..போன வாரம் தான் ராசிப்பொண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துச்சு. தாயும் சேயும் நலமாக இருக்குறாங்க. அவளுக்கு நல்லபடியா பிரசவமாகணும் வாழ்த்துன நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
சரி பதிவுக்கு வரேன்.
ராசிப்பொண்ணு பிரசவமாகும்போது அறைக்கு வெளில நாங்க வெய்ட் பண்ணிகிட்டு இருந்தோம். அப்போ, அவளோட மாமியார் ஆண் குழந்தை தான் பிறக்கணும்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்தாங்க. நானும் என் அம்மாவும் “என்ன குழந்தையா இருந்தா என்ன? ஆரோக்யமா பிறக்கணும்னு நெனைங்க..“னு அவரை சத்தம்போட்டோம்.
அப்புறம் குழந்தை பிறந்து அழுகுற சத்தம் கேட்டுச்சு. பக்கத்துல நின்னுகிட்டிருந்த உறவினர், அழுகும் சத்தத்தைக் கேட்டா பொம்பளைக் குழந்தை மாதிரிதான் தெரியுதுனு சொன்னார். உடனே அந்த அம்மா அவரிடம் சண்டைக்குப் போயிட்டாங்க. குழந்தை ஆண்னு தெரிஞ்சதும் தான் நிம்மதியானாங்க. சிங்கக்குட்டி பிறந்துருக்கு.. எங்க வாரிசு பிறந்துருச்சு.. அப்படி இப்படினு குதிச்சு கும்மாளம் போட்டுட்டாங்க. எனக்கு இதெல்லாம் பார்க்கும்போது கடுப்பா இருந்துச்சு.
வயித்துல இருக்குற குழந்தை ஆரோக்கியமா எந்தப் பிரச்சனையுமில்லாம பிறக்கணும்னு நினைக்குறது தான் நியாயம். அத விட்டுட்டு, ஆண் குழந்தை தான் பிறக்கணும்னு பிரார்த்தனை பண்றது.. பெண்ணாக இருக்கும்பட்சத்தில் ஏமாற்றமடைவதுங்குறது மிகப்பெரிய அறியாமையின் வெளிப்பாடுனு தான் சொல்லணும்.
பழங்காலத்துல தான் பெண்களை அடிமை மாதிரி நடத்துனாங்க. படிக்க அனுப்பாம, பத்து பன்னிரெண்டு வயசுலயே கட்டிக்குடுத்து, பிள்ளை பெத்துக்குற மெஷின் மாதிரி உபயோகிச்சாங்க. ஆனா இப்ப காலம் மாறிடுச்சே.. ஆண்களுக்கு சமமா, அவங்களும் படிக்கிறாங்க.. வேலைக்குப் போறாங்க. குடும்பத்தை கவனிச்சுக்குறாங்க. பொருளாதார ரீதியான முன்னேற்றத்துக்கு பாடுபடுறாங்க. அப்படியிருக்கும்போது இன்னமும் ஆண் குழந்தைதான் வேணும்னு ஆசைப்படுறதும்.. பெண் பிறந்துட்டா கோபப்படுறதும்னு இந்த மாதிரி ஆட்கள் நடந்துக்குறதப் பார்த்தா ஓங்கி அறையலாம் போல இருக்கு. அதுலயும் ஒரு சிலர், தங்களோட ஆண்குழந்தைகளுக்கு ஜட்டி கூட போட்டு விடமாட்டாங்க. கேட்டா, பையன்குற பெருமைய எல்லாருக்கும் “காட்டுறாங்களாம்“.. கொடுமைடா!!
குழந்தையே பிறக்காம எத்தனையோ தம்பதிகள் கவலைய மறச்சு, யதார்தத்தை ஏத்துக்கிட்டு  வாழப் பழகிக்குறாங்க.. அதையாவது இவங்க நெனச்சுப் பார்க்கலாம். இதுல என்ன பெரிய கொடுமைனா, தத்தெடுக்கும்போது கூட, ஆண்குழந்தையாகப் பார்த்துதான் எடுப்பார்கள். பெண்கள் என்றாலே செலவு.. கஷ்டம்னு இவங்க நெனைக்கிறாங்க. ஆணா இருந்தா கடைசி காலத்துல கஞ்சி ஊத்துவான், சொத்தைக் காப்பாற்றுவான், வரதட்சணை வாங்கலாம்.. வருமானம் வரும் அப்படி இப்படினு ஆயிரத்தெட்டு காரணம் சொல்றாங்க. எல்லாமே கடஞ்செடுத்த முட்டாள்தனங்கள்.
ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் படிக்க வச்சு வேலை வாங்கித் தந்து கல்யாணம் செஞ்சு வைக்கணும். பெத்தவங்களை கஷ்டப்படுத்துறதும் சந்தோசப்படுத்துறதும் அதனதன் வளர்ப்பு முறைகள்லயும் பின்னணிச் சூழ்நிலையின் காரணத்திலயும் தான் இருக்கு. எத்தனையோ பேர் இப்ப வரதட்சணை வாங்க மாட்டேன் தரமாட்டேன்னு சொல்ற காலம் வந்தாச்சு. இன்னமும் இந்தப் பழமையான எண்ணங்கள்ல மூழ்கியிருக்குறது பரிதாபத்திற்குரியது தான்.
எங்க வீட்ல நாங்க மூணு பொண்ணுங்க. பையன் இல்லையேங்குற குறை எப்பவும் என் பெத்தவங்களுக்கு இருந்ததேயில்ல. பொருளாதார ரீதியாகட்டும், உடல் உழைப்பாகட்டும்.. எல்லாவிதத்துலயும் எங்க குடும்பத்துக்கு நாங்க ஆதரவு குடுத்துகிட்டு தான் இருக்கோம். நாம ஆணா பிறந்துருக்கலாமோங்குற ஒரு ஆதங்கமோ ஏக்கமோ எப்பவும் வந்ததில்ல.
இத ஏன் சொல்றேன்னா, நிறைய வீட்டுல ஆண் பிள்ளைகளை ஒரு மாதிரியும் பெண் பிள்ளைகளை ஒரு மாதிரியும் வளர்ப்பாங்க. குடும்பக் கஷ்டங்களையும் யதார்த்தங்களையும் கத்துக்கொடுத்து வளர்க்கும் குழந்தைகள் நிச்சயம் நல்லவிதமாகத் தான் வளரும். சூழ்நிலை காரணமாக வேண்டுமானால் கெட்டுப்போகலாமே தவிர, அதுக்கு ஆண் பெண்ணுங்குற பாகுபாடு தேவையில்ல.
மாறிவரும் காலம், இனி இன்னும் முழுமையடைய வேண்டும் மாற்றங்களுடன்..
அடுத்த பதிவில் சந்திப்போம்..
.
.

Comments

நல்லாச் சொன்னீங்க....
ஆண் என்ன ? பெண் என்ன ? எத்தனை பேர் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள்...
இந்தக் கொடுமை எப்போது தீருமோ ?

என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
s suresh said…
என்று தணியும் இந்த ஆண்குழந்தை மோகம்? சரியான சவுக்கடிபதிவு! வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_24.html
பெத்தவங்களை கஷ்டப்படுத்துறதும் சந்தோசப்படுத்துறதும் அதனதன் வளர்ப்பு முறைகள்லயும் பின்னணிச் சூழ்நிலையின் காரணத்திலயும் தான் இருக்கு.

அருமையாகச் சொன்னீர்கள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
அருமையான கருத்துக்கள்!
அருமையான கருத்துக்கள். உண்மையான கருத்துக்கள். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்று ஆண் கவிஞன் பெருமைப்பட்டான். பெண்மையின் பெருமையை உணராமல் ஆண் குழந்தைக்காய் ஏங்கும் பெண்கள்... வினோதம்தான்.
ஆண் குழந்தை மோகம் பொதுவாக அனைத்து தரப்பினரிடத்தில் இருக்கும் ஒன்றுதான்.ஆனால் பெண்மை வெறுப்பது என்பது கொடுமையானது..

பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு
Hemanth said…
அட என்னமோ போங்க பொதுவா பையன் வேணும்னு சொல்றவங்காத அதிகம், ஆனா பாருங்க எங்க அம்மாவும் நானும் பொண்ணு வேணும்னு ரொம்பவே வேண்டிதல் பண்ணி இருந்தோம், கடைசில என்னோட மாமியாரு ஆசைப்படி பையன பிறந்துட்டான்..
Hemanth said…
myself and my mother very much awaits for a girl baby, but my mother in law wished baby boy, at last it was a baby boy,what to do any how its not in our hands.
அருமையான பகிர்வு .பெண்களை ஆண்கள் அடிமையாக நடத்துவதாக ஒரு கருத்து உள்ளது அதுக்கு காரணமே இந்த
மாதிரி ஒரு எதிர்பார்ப்பு பெண்களிடமும் இருப்பதுதான் சகோ .இந்த நிலை மாற வேண்டும் .பாரதி தேடிய புதுமைப் பெண்கள் உருவாகி சுதந்திரமாக இவ்வுலகில் வாழ வேண்டும் .மிக்க
நன்றி பகிர்வுக்கு தொடர வாழ்த்துக்கள் .
பெண் குழந்தைகளே ஆண்களை விட பெற்றோரிடம் அன்பு காட்டுகிறார்கள்.
ஒரு டாக்டர் சொன்ன தகவல்.வயதானவர்களை மருத்துமனைக்கு அழைத்து வருபவர்களில் பெரும்பாலோனோர் மகளும் மருமகனும்தானாம்.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள். அப்படியே என்னுடைய தளத்துக்கும் வரவேற்கிறேன். http://newsigaram.blogspot.com
நண்பர்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்..
நண்பனொருவன் IVF தோல்வியில் முடிய துவண்டு இருக்கிறான். என்ன செய்ய

இல்லாதவர்களுக்கு ஒரு குழந்தைதான் வேண்டும். கிடைப்பவர்களுக்கு இதுதான் வேண்டும்
Praveen said…
சமுதாயத்தை கண்டு பொங்கி இருக்கீங்க...

//பழங்காலத்துல தான் பெண்களை அடிமை மாதிரி நடத்துனாங்க//

இன்னுமும் பெரும்பாலான பெண்கள் அடிமைகளாகத்தான் இருக்காங்க...
nathin said…
ஒரு டாக்டர் சொன்ன தகவல்.வயதானவர்களை மருத்துமனைக்கு அழைத்து வருபவர்களில் பெரும்பாலோனோர் மகளும் மருமகனும்தானாம்.
பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் இப்போது நன்றாக குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்கள். மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொள்வதற்கு, அவன் சம்பாதிக்கும் பணத்தை மகளை ஏவிவிட்டு பிடுங்குவதற்கு, மகளின் கள்ளக்காதலை மாப்பிள்ளை கண்டும் காணாமல் இருக்கச் செய்வதற்கு