ஈமு போனா என்ன.. பன்னி வரலாம்!! ஏமாற ரெடியா இருப்போம்.




முதல்ல நிதி நிறுவனங்கள்ல பணத்தப் போட்டு ஏமாந்தாங்க.. அப்புறம் பாலிசி போடுறேன்னு தனியார் நிறுவனத்துல கட்டி ஏமாந்தாங்க.. அப்புறம் வெளிநாடு போறேன்னு பணத்தக்கட்டி ஏமாந்தாங்க.. வெளிநாடு போய் தான் சம்பாதிக்க முடியல.. வீட்டுலயே சுயதொழில் தொடங்கலாம்னு எங்கயாவது மூலதனத்தைக் கட்டி தெரியாத தொழில்ல இறங்கி, அப்புறம் அவன் ஏமாத்திட்டான்னு போட்டதை எடுக்க முடியாம ஏமாந்தாங்க..
சமீபத்துல அப்ரோ நிறுவனத்துல ஆரம்பிச்சு இப்ப லேட்டஸ்ட்டா ஈமுல வந்து நிக்குது..
குடும்ப கஷ்டம், வறுமை, பணத்துக்குப் பாதுகாப்பு, பணத்தேவைனு நிறைய காரணங்களை அடுக்கிக்கிட்டே போனாலும் இதுக்கெல்லாத்துக்கும் மூல காரணம்.. விக்ரமன் படத்துல ஒரே பாட்டுல முன்னுக்கு வர்ற மாதிரி சீக்கிரம் சம்பாதிக்கணும்.. நிறைய பணம் சேர்த்துடணும்குறது தான்.
மக்களைப் பெரும்பாலும் தன்பக்கம் ஈர்க்குறது, இலாப விகிதம் அதிகம்குற விளம்பரங்கள் தான். அரசாங்க வங்கிகள்ல போடுற பணத்துக்குண்டான வட்டியை விட, தனியார் நிதி நிறுவனங்கள்ல கொடுக்கப்படுற வட்டி அதிகம்னு சொல்றதை நம்பி பணத்தை அதில் போடலாம்னு முடிவெடுக்குறாங்க. இப்ப கூட ஈமு கோழி விளம்பரத்துல, மாசத்துக்கு பத்தாயிரத்துலருந்து ஐம்பதாயிரம் வரைக்கும் சம்பாதிக்கலாம்.. அதுவும் ஒரு நாளைக்கு இருபது நிமிஷம் ஒதுக்குனாலே போதும்னு திரைப்பட நடிகர்களையெல்லாம் வச்சு ஏகபோகமா அறிவிச்சு தள்ளுனாங்க.
இது சாத்தியமானு யாரும் யோசிக்கிறதே கிடையாது. அக்கம்பக்கம் கடன் வாங்கியும், நகைகளை அடகு வச்சும் நிறைய பேர் இந்த தொழில்ல உடனடியா ஈடுபட்டாங்க. ஆனா இன்னைக்கு செய்திப்படி, போட்ட முதல் கிடைக்குமாங்குறதே சந்தேகமா இருக்காம்..
இந்த தவறுக்கு தன்னைத் தவிர யாரையும் பொறுப்பேற்க சொல்ல முடியாது. இதுக்கு அறியாமை.. இயலாமை.. என்பதைத் தாண்டி பேராசை என்பதே சரியான காரணம்.
ஒரு சம்பவம் நடந்ததுக்கப்புறம் தான் நமக்கு எச்சரிக்கையுடன் இருக்கணும்னு புத்தி வரும். ஆனா, அடுத்து கொஞ்ச நாள்ல பன்னி வளர்க்க அதிக பணம் கொடுக்குறோம்னு விளம்பரம் வந்தா அதுக்கும் பணம் கட்டுவாங்க. தான் பார்த்துக்கொண்டிருக்குற வேலைய ஒழுங்கா பார்த்தாலே போதும். அதுல எப்படி முன்னேறுறது.. எப்படி இலாபம் அதிகம் பெறலாம்னு யோசிச்சாலே போதும்.. இந்த மாதிரி ஏமாந்த பணத்தையெல்லாம் தன்னோட தொழில்ல போட்ருந்தா கொஞ்சமாவது ப்ரயோஜனம் இருந்துருக்குமோ என்னவோ..
இன்னும் எத்தனையெத்தனை மோசடி நிறுவனங்கள் வரப்போகுதோ தெரியல.. ஆனா நிச்சயம் அதுல ஏமாந்துபோறவங்களுக்குப் பஞ்சமே இருக்காது. ஏமாந்துபோறவன் இருக்குறவரைக்கும் ஏமாத்துறவன் தன் பணியை திறம்பட செய்துகொண்டுதான் இருப்பான்.
அடுத்த பதிவுல சந்திப்போம்..
.
.

Comments

..ம்.. என்ன செய்வது... மக்களின் அறியாமை...

நெருங்கி உறவினரின் நிலைமையை நினைத்தால் மனது கஷ்டமாக உள்ளது...

நன்றி… தொடர வாழ்த்துக்கள்...
என்னை மேய்க்கிறதுக்கு கூட ஸ்கீம் வருமா என்ன?
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பாங்க...
Unknown said…
ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் ஒருங்கே சங்கமிக்கிற இடம் தான் பணம்... என்ன பண்ண பணம்ங்கிற மாயக்கட்டு மனுசன யோசிக்கவிடாத விலங்கா மாத்திடுது, அதோடு விருப்பமான நடிகர்கள் விளம்பரங்களில் கொடுக்கிற ஆதரவை உண்மைனு நம்பி ஏமாறுறவங்க நெறையா இருக்காங்க,

இப்போதைக்கு தேதியில விளை நிலங்கள ஆக்கிரமிச்சிருக்கிற ரியல் எஸ்டேட்ல தொடங்கி இந்த ஈமு வரை எல்லாம் நமக்கு நாமே ஊதிக்கிற சங்கு தான் இந்திரா வேற ஒன்னும் சொல்லுறாப்புல இல்லை...
தொடர்ந்து ஏமாறும் மக்களைத்தான் குறை சொல்ல வேண்டும்! அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்கிறார்கள்!

இன்று என் தளத்தில்!
சென்ரியுவாய் திருக்குறள்
எம்புள்ளைய படிக்கவைங்க!
உடைகிறது தே.மு.தி.க
http://thalirssb.blogspot.in
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்...!

ஆசை... அளவோடு இருப்பின்...
வாழ்க்கை அமிர்தமாகும்....!

ஆசை... இரட்டிப்பாகி பேராசை பிடித்தால்...
வாழ்க்கை நஞ்சாகும்.....!

பேராசையின் பெருவிளைவே இத்தகு ஏமாற்றத்தின் காரணம்...!

வடிவேல் பாஷைல சொல்லணும்னா..!


"இவ எவ்வளவு ஏமாத்தினாலும் தாங்கிகினு.... மீண்டும் வந்து ஏமாறாண்டா...! இவ ரொம்ப நல்லவன்டா...!"
MARI The Great said…
இந்த பணம் இருக்கே......மனுசனை பாடாய்படுத்துது போங்க.. என்னத்த சொல்லுறது. :(
KowThee said…
இதில் கொடுமை என்னவென்றால், இன்னும் மக்கள் நம்பி கொண்டுதான் உள்ளார்கள். “சுசி ஈமுலதான் பிரச்சினை மத்த ஈமு நல்லாதா இருக்குனு சொல்லறாங்க!!!”

என்ன கொடுமை சார் இது!!!

பட்டால்தான் புத்தி வரும்.....
அடுத்த முறை ஏமாற போகும் போது என்னை விட்டுட்டு போய்டாதீங்க அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும்.
பங்கு சந்தையே அப்படிதான் இருக்கிறது. ஆனா மக்கள் என்ன செய்றாங்க
Athisaya said…
அறியாமை தான் அது மட்டும் தான் காரணம்.பட்டாலும் புரிகிறார்கள் இல்ல.கொஞ்சம் சோப்பு போட்டு பவுடாட அடிச்சு வந்தா மறுபடியும் இன்னொன்னுன்னு நினைச்சு அங்கயே போய்றாங்க.
Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்