எனக்குப் பிடித்தமான உன் பிரிவு..

 

சின்னச் சின்ன சம்பவங்களில் கூட
சிதறாது வந்துவிடுகிறாய்..!
நிறங்களில், பாடல்களில், எழுத்துக்களில் என
என் எல்லாவற்றையும் ஆட்கொள்கிறாய்..!
சிரித்தாலும் சிந்தித்தாலும்
அழுதாலும் அமைதியானாலும்
அத்தனையிலும் நீயே தெரிகிறாய்..!
விடுபட்டாலும் விலகாதிருக்கிறாய்..
நீயாய் இல்லையெனினும் நினைவுகளாய்..!!

உன் நினைவுகளைத் தின்று
பசியாற்றிக் கொள்கிறது என் கவிதைகள..
உன் இல்லாமையைத் தின்று
இயங்கிக்கொண்டிருக்கிறது என் வலிகள்.. 
தனிமை..
சிலநேரம் பிடித்தமானதாய் இருக்கலாம்!
பலநேரம் பிடித்தவர்களுக்காய் இருக்கலாம்!!
மிகச்சிலநேரம் பிடிப்பில்லாததால் இருக்கலாம்!!!

கழிவறைக்குச் சென்று சோம்பல் முறிக்கும்
தொழிற்சாலைப் பணிப்பெண் போல
ஏதோ ஒரு அசௌகரியம்
எல்லோருக்குள்ளும் இருக்கலாம்..!
பிடித்தவர்களின் பிரிவுகள் கூட
சில நேரம் பிடித்துப்போகலாம்..
பிடித்தடைத்த பறவையின் விடுதலை போல..!!
என்றாவது நீ உணரலாம்
உதாசீனத்தின் உக்கிரத்தை..!
யாராவது உனக்குணர்த்தலாம்
அலட்சியப்படுத்துவதன் அர்த்தத்தை..!
அப்போதுனைப் பார்த்து நகைக்கும் குரூரம்
நிச்சயம் எனதாயிருக்காது.. தைரியமாயிரு!!
.
.

Comments

Sasi Kala said…
அப்போதுனைப் பார்த்து நகைக்கும் குரூரம்
நிச்சயம் எனதாயிருக்காது.. தைரியமாயிரு!!

மிக மிக ரசித்துப் படித்தேன் .
கவிதை கலக்குது...

ஒரு வேளை போட்டி கவிதையோ டவுட்டு
கவிதைகளும் படங்கள் சேகரிப்பும் அருமை..பிடித்தது.
Ramani said…
எந்தவரியைச் சொல்லி சிறப்பு எனக்
குறிப்பிடுவது என உண்மையில்
திணறித்தான் போகிறேன்
பிடித்தடைத்த பறவையின் விடுதலையும்
கழிவறையில் சோம்பல் முறிக்கும் பணிப்பெண்ணும
படித்து வெகு நேரமாகியும் மனதை குடைந்து
கொண்டுதானிருக்கிறார்கள்
மனம் தொட்ட அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Ramani said…
எந்தவரியைச் சொல்லி சிறப்பு எனக்
குறிப்பிடுவது என உண்மையில்
திணறித்தான் போகிறேன்
பிடித்தடைத்த பறவையின் விடுதலையும்
கழிவறையில் சோம்பல் முறிக்கும் பணிப்பெண்ணும
படித்து வெகு நேரமாகியும் மனதை குடைந்து
கொண்டுதானிருக்கிறார்கள்
மனம் தொட்ட அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சொக்க வைக்கும் வரிகள்...
///////
உன் நினைவுகளைத் தின்று
பசியாற்றிக் கொள்கிறது என் கவிதைகள..
உன் இல்லாமையைத் தின்று
இயங்கிக்கொண்டிருக்கிறது என் வலிகள்..
/////////


என்னை கவர்ந்த வரிகள்
இன்னிக்கு தாங்க..உங்க பக்கம் வர்றேன்..இனி எல்லாத்தையும் படிக்கணும்...
krishna ravi said…
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் உணர்ந்த உண்மைகளை கவிதையாய் தந்தமைக்கு நன்றி மீனு!
நல்ல கவிதை(கள்)...

உனது சிந்தனையில்..
எனது உணர்வுகள்...
எனது வார்த்தைகள்...

என்று எங்கேயோ படித்த வரிகளைப் போல...

நல்ல கவிதைகள்...!

My days(Gops) said…
//சிலநேரம் பிடித்தமானதாய் இருக்கலாம்!
பலநேரம் பிடித்தவர்களுக்காய் இருக்கலாம்!!
மிகச்சிலநேரம் பிடிப்பில்லாததால் இருக்கலாம்!!!//

//பிடித்தவர்களின் பிரிவுகள் கூட
சில நேரம் பிடித்துப்போகலாம்..
பிடித்தடைத்த பறவையின் விடுதலை போல..!!//


yaaaaang indha nyangam ellaam eppadi? pirandhathil irundha illa ???

super ah irukunga indha kavidhai.... pinna sondha anubavam soda bottle maaadhiri sodha'va irukum? keep writing :)...
// Sasi Kala //

//சங்கவி //

//மதுமதி //

//Ramani //

//கவிதை வீதி... // சௌந்தர் //

//கோவை நேரம் //

//krishna ravi //

//காஞ்சி முரளி//


நண்பர்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்..
// My days(Gops) //


நீஈஈஈஈண்ட நாளைக்குப் பிறகு வருகை தந்திருக்குறீங்க. ரொம்ப சந்தோசமா இருக்குங்க.
கருத்துக்கும் நன்றி.
:-)
.
//உன் இல்லாமையைத் தின்று
இயங்கிக்கொண்டிருக்கிறது என் வலிகள்..
யப்பா!சூப்பர்!