அத்துணையும் அர்த்தமற்றதாய்..



என் பெயர்.. 
எப்போதும் நினைவிருப்பதில்லை
பிச்சைக்காரன்என்பதைத் தவிர..!


எதிர்காலம் பற்றிய ப்ரஞ்கையில்லாது
பிற எச்சிலின் மிச்சத்திற்காகவே 
காத்துக்கொண்டிருக்கிறேன்..!

கள்வனாயும் கையேந்தியவனாயும்
காலப்போக்கை கடத்திச்செல்கிறேன்..!

புறக்கணிப்பும் பரிகாசமும்
புதைகுழியாய் இழுத்துக்கொண்டிருக்க
புறம்பாய் வெளித்தள்ளுகிறேன்
எனக்கான இருத்தல்களை..!

சமூகமெனும் சாக்கடையோரம்
நீந்திக்கொண்டிருக்கும் கழிவுப்புழுவாய்
சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறேன்..!

கடந்துசெல்கையில் சுழிக்கும் முகங்களுக்கு
கடுகளவும் கவலையில்லை..
காணாமல் போன என் கனவுகள் பற்றி..!

எனக்கான மறுவாழ்வென்பது 
மறவாமல் நிரப்பப்படுகிறது
சூன்யம் எனும் மொழிபெயர்ப்பு கொண்டு..!

அத்துணையும் அர்த்தமற்றதாய்,
கண்ணெட்டும் தூரத்திலோர் குழந்தையின் 
பிஸ்கெட் துண்டுகள் கீழே விழக்கோறியபடி 
பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன்
பொறுக்குவதற்கு ஆயத்தமாய்..!!
.

Comments

superb..ur blog design and nan indira imsikiren..woww a nice caption..a nice post..touching one..
ரொம்ப நாள் உங்கள இந்த பக்கம் பார்த்து....

நல்ல வரிகள்.. அடிக்கடி எழுதுங்க...
நல்லதொரு கவிதை! வாழ்த்துக்கள்!
வரிகள் வருத்தமடையச் செய்கின்றன...
அரு‌‌‌மையான வார்த்தைக் கோர்வைகளில் மனதில் இடம் பிடித்த அசத்தலான கவிதை!

வணக்கம்

பிச்சைப் பெருந்துயரைப் பின்னிய இப்பதிவு
அச்சாய்ப் பதியும் அகத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்