நீ இல்லாத நீ

நீயா இது?
என் ஸ்பரிசம் பட்டவுடன்
உன் கன்னங்கள் சிவக்கவில்லையே..
எனைப் பார்த்த பரவசத்தில்
உன் கண்கள் படபடக்கவில்லையே..
நான் பற்றியவுடன் வெட்கப்பட்டு
உன் கைகள் உதறவில்லையே..
நான் கண்டுகொண்டதை அறிந்து நாணி
உன் கால்கள் ஓடவில்லையே..
முத்தம் கேட்டவுடன்
உன் இதழ்கள் வெட்கப்படவில்லையே..
என்னதான் நான் காதலை வெளிப்படுத்தினாலும்
சலனமே இல்லாமல் இருக்கிறாயே..
கண்டிப்பாக இது நீ இல்லை.
நீயே வைத்துக்கொள் உன் புகைப்படத்தை.

Comments

அடுத்தவாட்டியாவது, ஆள நேர்ல பார்த்து சொல்லுங்க :))
ஹேய்.. அட்டகாசமா இருக்கு..
நீங்க இத்தனை நாள் எழுதற கவிதைகள்'ல ஒரு கவிதைத்தனம் இருக்கும். ஆனா இதுல ஒரு ஃபீலிங் இருக்கு. படிச்ச உடனே "அட" போட வைக்குது இந்த உணர்வுகள். ரொம்ப நல்லா இருக்கு. இது போலவே தொடருங்கள்
//சைவகொத்துபரோட்டா..

அடுத்தவாட்டியாவது, ஆள நேர்ல பார்த்து சொல்லுங்க :))//

கண்டிப்பா உங்க ஆலோசனையை பின்பற்றுவேன்.. நன்றி

//கவிதைகாதலன்..

ஹேய்.. அட்டகாசமா இருக்கு..

நீங்க இத்தனை நாள் எழுதற கவிதைகள்'ல ஒரு கவிதைத்தனம் இருக்கும். ஆனா இதுல ஒரு ஃபீலிங் இருக்கு. படிச்ச உடனே "அட" போட வைக்குது இந்த உணர்வுகள். ரொம்ப நல்லா இருக்கு. இது போலவே தொடருங்கள்//

உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் எழுத தூண்டுகின்றன..
தொடர்ந்து உற்சாகபடுதுவதற்கு நன்றி நண்பரே..
My days(Gops) said…
அட்ரா அட்ரா, போட்டோ ஒரு வேலை black and white ah் இருந்து இருக்குமோ?
//My days (Gops)..

போட்டோ ஒரு வேலை black and white ah் இருந்து இருக்குமோ?//

உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது?
அது வண்ணப்படம் தான் தலைவரே..
My days(Gops) said…
ஆமாம்'.ல ... ஆங் இப்ப கண்டுப்புடிச்சோம்'ல, வண்ணப்படத்துல இப்படி முகத்தை மூடிக்கிட்டா எப்படி?