காகத்தின் விடுமுறைக்காக...



காகம் வடை தூக்கிச் சென்றதாம்..
கதை கேட்டபடி சாதம் உண்டேன்..
ஒரு நாளில்..

கிறுக்கலாக வரைந்த படத்தில்
கருமை கொடுத்து காகம் என்றேன்..
இன்னொரு நாளில்..

தொலைந்த பொருள் எங்கே?
எனக் கேட்டவரிடம்
“காக்கா தூக்கிட்டுப் போய்டுச்சு“ என்று
அழகு காட்டினேன்..
மற்றொரு நாளில்..

காகம் கரைந்தால்
விருந்தாளிகள் வருவார்களாம்..
கொணரும் தின்பண்டத்திற்காக
எதிர்நோக்கி இருந்தேன்..
மேலும் ஒரு நாளில்..

இறந்துபோன தாத்தா
மாறுவேடத்தில் வருவாரென
அப்பா கூறியதை நம்பி
ஓட்டின் மீது படையல் வைத்தேன்..
வேறொரு நாளில்..

பட்டாசுக்கு பயந்து
பறந்தோடும் காகங்களை
வேடிக்கையாய்ப் பார்த்தேன்..
பிரிதொரு நாளில்..

மின்சாரக் கம்பத்தில்
மடிந்த ஒன்றைச் சுற்றி
மற்றவை கரைந்தபோது
வெறுமையாய்ப் பார்த்தேன்..
சுடுதலாக ஒரு நாளில்..

வாட்டிய பசியும்
வறண்டு போன இதயமுமாய்
அண்டைவீட்டு சுவற்றில் வைக்கப்பட்ட
பித்ருக்களின் உணவருகே காத்திருக்கிறேன்
காகத்தின் விடுமுறைக்காக..
இன்றெனும் ஒரு நாளில்..


.

Comments

jokkiri said…
நல்லா எழுதி இருக்கீங்க இந்திரா...

ஒரு சில இடங்களில் இருக்கும் எழுத்துப்பிழையை தவிர இந்த பதிவு நன்றாகவே உள்ளது....
நல்லா இருக்கு :-))
நல்லா இருக்கு :-))
காக்கா கதை கேட்டு கேட்டு புளிச்சி போய்; இப்போ காக்கா கவிதையா!
காக்காவுக்கு மரியாதை ! நல்லா இருக்கு கவிதை மற்றும் கருத்துக்கள்.
VELU.G said…
அருமை

உங்கள் காகத்தோடு நானும் கரைந்துவிட்டேன்

அழகான கவிதை
Chitra said…
காகம் வைத்து இத்தனை விஷயங்களை observe பண்ணி, யோசித்து சொல்லி இருக்கீங்களே.... வாவ்! அற்புதம்!
siva said…
மின்சாரக் கம்பத்தில்
மடிந்த ஒன்றைச் சுற்றி
மற்றவை கரைந்தபோது
வெறுமையாய்ப் பார்த்தேன்..
சுடுதலாக ஒரு நாளில்..--

rasithen..
//ஜோக்கிரி
ஜெய்லானி
வெறும்பய
ப்ரின்ஸ்
VELU.G
சித்ரா
siva//

அனைவருக்கும் என் நன்றிகள்
பறவையினத்திலேயே
ஒடுக்கப்பட்ட "சாதி"....
காக்கை சாதி....

ஒடுக்கப்பட்ட இனமான காக்கைக்கும் கவிதையா...!

///வாட்டிய பசியும்
வறண்டு போன இதயமுமாய்
அண்டைவீட்டு சுவற்றில் வைக்கப்பட்ட
பித்ருக்களின் உணவருகே காத்திருக்கிறேன்
காகத்தின் விடுமுறைக்காக..
இன்றெனும் ஒரு நாளில்////

இந்த வரிகள் மிக அருமை தோழி...!

ஓர் மாறுபட்ட கண்ணோட்டத்தில் அருமையான கவிதை...!

நட்புடன்...
காஞ்சி முரளி...
guru said…
அருமை
Kavibharathi said…
arumaiyaana padhivu!
HariShankar said…
காகத்தை மைய பொருளா வச்சு ஒரு வித்யாசமான கவிதை ... நல்ல இருக்கு

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்