பேனர் பைத்தியங்கள்..


முன்னெல்லாம் யாருக்காவது கல்யாணம் நடந்தா அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேந்து அங்கங்க செவுத்துல சின்னதா வாழ்த்து நோட்டீஸ் ஒட்டுவாங்க. சின்ன பேப்பர்ல வாழ்த்து செய்தி அச்சடிச்சு அதோட சாக்குலேட்ட பின் பண்ணி எல்லாருக்கும் தருவாங்க. ஆனா இப்ப ஃப்ளக்ஸ் பேனர் வந்தாலும் வந்துச்சு, காதுகுத்து, கல்யாணம்னு ஆரம்பிச்சு யாராவது மண்டையப் போட்டா கூட பெருசு பெருசா பேனர் வச்சிட்றாங்க.

இதுல என்ன கொடுமைனா, அந்த பேனர்ல ஒரு கும்பல் போட்டோவே இருக்கும். சம்பந்தப்பட்டவங்க யாரு, வாழ்த்துறவங்க யாருனே நமக்கு வௌங்க மாட்டிங்குது. என்னவோ சினிமால ஹீரோ சான்ஸ்க்கு ஆள் எடுக்குறமாதிரி ஸ்டைலா போஸ் குடுத்துட்டு நிப்பாய்ங்க. பெரிய பெரிய சோ்ல உக்காந்து, ஃபோன் பேசுற மாதிரி, ஏதோ உலக சமாதானத்துக்காக யோசிக்கிற மாதிரி, நகைக் கடை, டூத் பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிற மாதிரினு பயங்கரமான ஸ்டில்ஸ் எல்லாம் வச்சிருப்பாய்ங்க. இவங்க நிக்கிறது மட்டுமில்லாம இவங்க வீட்டு குட்டீஸ் பட்டாளத்தையும் நிக்க வச்சிருப்பாய்ங்க. ஏதோ போனா போகுதுனு சம்பந்தப்பட்ட கல்யாண ஜோடிகளை ஒரு ஓரமா இத்துனூண்டா போட்ருப்பாங்க. பத்தாததுக்கு சினிமா ஹீரோக்களோட போட்டோவையும் பாதி பேனருக்குப் பெருசா போட்ருவாங்க. இதுக்கு நடுவுல யாருக்கு, எப்ப, எங்க கல்யாணம்னு தேட்றதுக்குள்ள விடிஞ்சிடுதுடு.

அதுலயும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷேசம்னா சொல்லவே வேணாம். தலைவன்ல ஆரம்பிச்சு உப தலைவன், செயலாளர், மேயர், உறுப்பினர், தொண்டன்னு மொத்த கட்சியில இருக்குறவங்களயும் அந்த பேனர பாத்தே தெரிஞ்சுக்கலாம். இதுல என்ன ட்விஸ்ட்டுனா, தலைவனோட இதயத்துலயும் காலடியிலயும் இருக்குற மாதிரி க்ராஃபிக்ஸ் எல்லாம் பண்ணிருப்பாங்க பாருங்க... ம்ம் பாசக்கார பயபுள்ளய்ங்களாம்.. அப்புறம் இந்த மாதிரியான ஃப்ளக்ஸ்ல அவங்க எழுதியிருக்குற வாசகங்கள் இருக்கே.. அட அட.. வாலி, வைரமுத்து கூட தோத்துப்போய்டுவாங்க. தமிழகத்தை காக்கவந்தவங்களாம், தென்னாட்டுச் சிங்கமாம், இதயத்தில் குடியிருப்பவராம், கருணை மாதாவாம், இதயத்தின் இமயமாம்.. இந்த வாக்கியங்கள அமைக்கிறதுக்குன்னே தனியா குழு அமைச்சிருப்பாங்க போல.

என்னதான் காக்கா பிடிக்கிறதுனாலும் அதுக்காக இப்படியா மனசாட்சியில்லாம புழுகுறது?? இவங்களுக்குள்ள, யார் பேனர் பெருசா இருக்குனு போட்டி வேற.. கொடும டா சாமி.

ஏதாவது அரசு அறிவிப்புங்குற பேர்ல, பேருக்கு ரெண்டு நாள் பேனர்கள அப்புறப்படுத்திட்டு மறுபடியும் வழக்கம்போல வச்சிட்றாங்க.

அட ஏதோ சந்தோசமான விஷேசம்னா கூட பரவாயில்ல.. எழவு வீட்டுக்கு முன்னாடி கண்ணீர் அஞ்சலி செலுத்துறோம்னு ஃப்ளக்ஸ் வைக்கிறாய்ங்க. அதுலயும் வழக்கம்போல போலீஸ் ஸ்டேசன் நோட்டீஸ் போர்ட்ல இருக்க மாதிரி “உம்“முனு (அப்ப கூட பந்தா குறையாம) போஸ் குடுத்துகிட்டு நிப்பானுக. என்னத்த சொல்றது??

இது மாதிரி பேனர்ங்க வைக்கிறதுல ஒரே ஒரு நல்ல விசயம் என்னனா.. சின்ன குழந்தைங்க சாப்பிடலனா, அதுல இருக்குற போட்டோவ எல்லாம் காட்டி “அதோ பாரு பூச்சாண்டி“னு பயமுறுத்தி சாப்பாடு ஊட்டிடலாம். வேற எந்த மண்ணாங்கட்டி ப்ரயோஜனமும் இல்ல.
.

Comments

//அதோ பாரு பூச்சாண்டி“னு பயமுறுத்தி சாப்பாடு ஊட்டிடலாம். வேற எந்த மண்ணாங்கட்டி ப்ரயோஜனமும் இல்ல//

இது நல்ல ஐடியாவா இருக்கே... அப்ப பேனர் இருக்குற இடத்தில் எல்லாம் குழந்தைகள் நல்லா சாப்பிடும்...
:) மத்த ஊர்ல விட மதுரையில இது அதிகம். இந்த தடவை ஊருக்கு போனப்ப நிறைய போஸ்டரை இது போல பார்த்துட்டு செம சிரிப்பு :)
“அதோ பாரு பூச்சாண்டி“னு பயமுறுத்தி சாப்பாடு ஊட்டிடலாம். வேற எந்த மண்ணாங்கட்டி ப்ரயோஜனமும் இல்ல//

வார்தைங்களை வைச்சி அழகா நையாண்டியோட சொல்லி இருக்கீங்க இந்திரா! சுற்றுப்புற மாசும் இதனால ஏற்படுது.

என்ன நாகரீகமோ என்னமோ போங்க! காலம் கலிகாலம் ஆகிப்போசுடா ன்னு பாடவேண்டியது தான்.
பிரபல பதிவர் இந்திரா அவர்களுக்கு பேனர் பிடிக்காது. அதனால யாரும் பேனர் வைக்க வேண்டாம்னு சொல்லி ஒரு பேனர் வச்சிடுவமா?
எங்க ஊரு பக்கத்துல ஒரு கிராமம் , அந்த கிராமத்துக்கு காலைல ஒரு பஸ் சாயந்திரம் ஒரு பஸ்தான் வந்து போகும் , அங்க நடந்த ஒரு பூப்புனித நீராட்டு விழாவுக்கு , கிட்டத்தட்ட 17 பேனர்கள் ...
நல்ல தலைப்பில் அருமையான விளக்கம்
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரபல பதிவர் இந்திரா அவர்களுக்கு பேனர் பிடிக்காது. அதனால யாரும் பேனர் வைக்க வேண்டாம்னு சொல்லி ஒரு பேனர் வச்சிடுவமா?//

அடக் கொடுமையே.. உங்களுக்கும் ஃப்ளக்ஸோமேனியா வந்துடப்போகுது ரமேஷ்.. ஜாக்கிரதை.
ஏங்க சேலத்துளையும் இப்படித்தான் பண்ணுறாங்க......
raja said…
இது மாதிரி பேனர்ங்க வைக்கிறதுல ஒரே ஒரு நல்ல விசயம் என்னனா.. சின்ன குழந்தைங்க சாப்பிடலனா, அதுல இருக்குற போட்டோவ எல்லாம் காட்டி “அதோ பாரு பூச்சாண்டி“னு பயமுறுத்தி சாப்பாடு ஊட்டிடலாம். வேற எந்த மண்ணாங்கட்டி ப்ரயோஜனமும் இல்ல..............அப்பவும் இந்த முண்டைகலப்பைங்களுக்கு உரைக்கும்னு பாக்குறீங்களா... ம்..ம் ம்ம்...நடக்கவே நடக்காது
vmkumar said…
பேனர் தயாரிப்பாளர்கள் அவர்களைச்சார்ந்தவர்கள் - தூக்கிக்கொண்டு போகிறவன், மேலே ஏறுக்கட்டுபவன் - என்று பலருக்கு வேலை கிடைக்கிறது.

எல்லாவற்றிலேயேயும் பாசிட்டி நெகட்டிவ் உண்டு.

மறந்து விட்டீர்கள்.

மேலும்,

இது ஏன்? ஏன் இந்த வாழ்க்கை கலாச்சாரம் ? இது இப்போது மட்டும்தானா? முன்பு வேறுபல வடிவங்களில் இருந்ததா? இது ந்ல்லதா கெட்டதா? கெட்டது என்றால் இதை ஒழிக்க சமூகம் என்ன செய்யவேண்டும்”

இப்படியெல்லாம் நீங்கள் சிந்தித்து எழ்தியிருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

சும்மா மனக்குமுறலைக்கொட்டிவிட்டேன் என்று சொன்னால் ஓகே.
//இது மாதிரி பேனர்ங்க வைக்கிறதுல ஒரே ஒரு நல்ல விசயம் என்னனா.. சின்ன குழந்தைங்க சாப்பிடலனா, அதுல இருக்குற போட்டோவ எல்லாம் காட்டி “அதோ பாரு பூச்சாண்டி“னு பயமுறுத்தி சாப்பாடு ஊட்டிடலாம்.//


ஹா ஹா ஹா! சூப்பர்!!!!
// Jo Amalan Rayen Fernando//

இந்த பேனர் முறை வந்ததால் அச்சுத்துறை எவ்வளவோ பாதித்து விட்டதே..
எதிலும் பாசிடிவ், நெகட்டிவ் உண்டு என்பதை நான் மறக்கவில்லை நண்பரே..
நான் பேனர்களின் மூலம் தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக்கொள்வதை தான் சுட்டிக்காட்டி உள்ளேன். விழாவுக்கு சம்பந்தப்பட்டவர்கள், விழா பற்றிய தகவல்கள் மட்டுமே இருக்குற பேனர்கள் இப்போது காணமுடிகிறதா???

முழுமையாக எழுத வேண்டுமென்றால் முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கும். படிக்கும் நீங்கள் பாவம் என்று தான் சுருக்கமாக விட்டுவிட்டேன்.

மேலும், உங்கள் மனக்குமுறலுக்கு நன்றி.
பேனர் வெக்கறவங்க பார்த்தா செத்தாங்க பாவம் இந்திரா....

நேற்று போட்டீங்க இந்த பதிவுன்னு நினைக்கிறேன் ஆனால் பேஸ் ஒபன் ஆகலை...
அன்னு said…
ஆஹா....அடுத்த த்டவை ஊருக்கு போறப்ப நமக்கு வருக வருக சொல்லி ரசிகர் மன்றம் சார்பா பேனர் வெக்கலாம்னு நினச்சேன்...அதுக்குள்ள எதிர்ப்பு பலமா இருக்கே???....ஹிஹிஹி...:))

எனக்கு பேனர் வெக்கிற விஷயத்துல எல்லாம் பிரச்சினை இல்லை....ஆனா ட்ராஃபிக்கை சீர்கெட வெக்கிற மாதிரி பேனர்கள் இருக்கறப்பதான் எரிச்சலா வரும்...இதனால் இன்னும் விபத்துக்கள நடக்காம இருக்கணுமேன்னு!!
dharumi said…
// “அதோ பாரு பூச்சாண்டி“னு பயமுறுத்தி..//

நாங்களும் இதை எழுதிட்டோம்ல ..
இந்த மாதிரி பேனரில் எனக்கு என்ன ஆச்சர்யம்னா, முக்கால்வாசி பேருக்கு பக்கத்துல வக்கில் பட்டம் இருக்கு! காசு கொடுத்து வாங்கிருப்பானுங்களோ!?
/இது மாதிரி பேனர்ங்க வைக்கிறதுல ஒரே ஒரு நல்ல விசயம் என்னனா.. சின்ன குழந்தைங்க சாப்பிடலனா, அதுல இருக்குற போட்டோவ எல்லாம் காட்டி “அதோ பாரு பூச்சாண்டி“னு பயமுறுத்தி சாப்பாடு ஊட்டிடலாம். வேற எந்த மண்ணாங்கட்டி ப்ரயோஜனமும் இல்ல.//

இந்த வேலைய வச்சு பலபேர் வண்டிய ஓட்டிக்கிட்டு இருக்காங்க (ஏன் நான்கூட :) ) உங்களுக்கு எதாவது பேனர் வேணும்னா சொல்லுங்க பண்ணிடலாம்.
HariShankar said…
இந்த பேனர் கோஸ்டிய ஒரு புடி புடிசுடீங்க .... கோபம் புரியுது . இது சம்பந்தமா நமக்கு தெரிஞ்சவங்க கிட்டே ஒரு விழிப்புணர்வு நாம உண்டு பண்ணலாம் அதே தாண்டி என்ன பண்ண முடியும் ???

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..