கும்மியடிக்கும் பதிவர்களுக்கு..
நண்பர் வால்பையனின் சமீபத்திய பதிவு ஒன்றினைப் படித்தேன். அதில், பதிவுலகம் தற்போது வெகுவாக முன்னேறி வருவதாகவும், செய்தித்தாள்களில் இடம் பிடிக்கத் துவங்கிய வலைப்பதிவர்கள் தற்போது தொலைக்காட்சியையும் விட்டுவைக்கவில்லை என்றும், இது ஆரோக்கியமான விசயம் என்றும் அவர் கூறியிருந்தார்.
அவருடைய இந்தக் கருத்துக்களில் எந்த அளவு உண்மை இருக்கிறதோ, அதற்கு ஈடான வருந்தத்தக்க நடைமுறையும் நிலவுகிறது என்பதே எனது பார்வை. இன்றைய வலைப்பதிவாளர்களும் சரி, புதிதாக வலையுலகில் காலடி எடுத்து வைப்பவர்களும் சரி, பெரும்பாலானவர்கள் தங்களின் நகைச்சுவை உணர்வினை மற்றவர்களுடன் பகிரும் ஊடகமாகவே வலைப்பதிவினை நோக்குகின்றனர். பதிவுகள் போட்டாக வேண்டுமே என்பதற்காக, அன்றன்று தமக்கு நடைபெறும் நிகழ்வுகள், நகைச்சுவையாக மாறிய தருணங்கள், கிண்டல்கள், நையாண்டிகள், பரிகாசங்கள், குறிப்பிட்டவர்களுக்குள் நடைபெறும் கருத்துமோதல்களின் பிரதிபலிப்புகள், திரைப்பட விமர்சனங்கள், புகைப்படங்கள், அதிகம் போனால் சிறுகதைகள் மற்றும் காதல் கவிதைகள் என்று மிகச் சாதாரணமான பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பதிவுகளை இடுகின்றனர். கவலைவேண்டாம், இந்தப் பட்டியலில் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
.
பொதுவாக ஒரு தொலைநோக்குப் பார்வை என்பது வலைப்பதிவர்களிடையே குறைந்து வருகிறது. பெருமைக்காகவும், தமக்கும் பதிவுகள் எழுதத் தெரியும் என்று சக நண்பர்களிடம் பீற்றிக்கொள்ளும் தலைக்கணமும் அன்றி இதற்கு வேறேதும் காரணங்கள் எனக்குப் புலப்படவில்லை.
.
பதிவுகளில் தான் இந்த லட்சணங்கள் என்றால் பின்னூட்டங்களில் இதற்கு மேல் கிண்டல்களும் கேலிகளும் ஆட்டம்போடுகின்றன. கடனே என்று, பதிவுகளை முழுதாகப் படிக்காமல் கூட பின்னூட்டமிடுவதும், ”உள்ளேன் ஐயா” என்பது போல் வருகைப் பதிவு செய்வதும் சகஜமாகிவிட்டது. பதிவில் உள்ள எழுத்துப் பிழைகளை எடுத்துச்சொல்லும் அளவிற்கு அதிலுள்ள தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டுவதற்குப் (பெரும்பாலானவர்களுக்கு) பொறுமையில்லை.
.
சமுதாய நோக்கோடு பதிவுகளிடும் பல வலைப்பதிவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவ்வாறான வலைகள், எண்ணிக்கைக்கு உள்ளடங்கியே இருக்கின்றன. பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமன்றி பொதுப்படையான, உபயோகமான பதிவுகளும் வலையுலகில் வெளியாக வேண்டும் என்பது தான் எனது ஆதங்கம். என்னுடைய பதிவுகளிலும், நான் மேலே குறிப்பிட்ட குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனை மாற்றிக்கொள்ளும் முயற்சியாக இந்தப் பதிவினை இடுகிறேன்.
.
(வலைப்பு ஆரம்பிச்சு ரொம்ப நாளாகுது.. நாமளும் ஏதாவது மெசெஜ் சொல்லணும்ல..)
அடுத்த பதிவுல சந்திப்போம்..
.
Comments
ரைட்டு.
கும்மி அப்பால வந்து வச்சிகிறேன்!
அடுத்த பதிவுல சந்திப்போம்..
//
மெசேஜ் சொல்றதுக்கு தான் அடுத்த பதிவா... அப்படீன்னா இந்த பதிவு எதுக்கு..
எழுத ஆரம்பிக்கும்போது நல்ல விசயங்கள் பகிர்ந்துக்க ஒர் இடம் கிடைத்த சந்தோசம்
அப்புரம் அய்யொ யாரும் கமெண்ட் போடலயேங்கற வருத்தம்
ஸோ இட் ஹாப்பன்ஸ்
எனக்கு தெரிந்து ஒரு டாக்டர் நல்ல விசயங்கள் எழுதுரார்
ஆன அவர் பதிவ படிச்சு கமெண்ட் போடுரவங்க ரொம்ப கம்மி
நல்லது .. நடக்கட்டும்.
ரொம்பச்சரி.
வந்ததுக்கு சொல்லிட்டுப்போறேன்.
தலைக்கணமும் = தலைக்கனமும்
.
(sorry, tamil transliteration is not working).
உண்மையை ஊரறிய சொல்வதும்...
தொலைநோக்கில் பதிவிடலும்.... நாம் ஆற்றவேண்டிய சமூகக்கடமைதான் ஏற்றுக்கொள்கிறேன்...!
இல்லையென்று சொல்லவில்லை.... ஆனால்... நடைமுறை என்பதும்... யதார்த்தங்கள் என்பதும் வேறு தோழி...
///பொதுவாக ஒரு தொலைநோக்குப் பார்வை என்பது வலைப்பதிவர்களிடையே குறைந்து வருகிறது. பெருமைக்காகவும், தமக்கும் பதிவுகள் எழுதத் தெரியும் என்று சக நண்பர்களிடம் பீற்றிக்கொள்ளும் தலைக்கணமும் அன்றி இதற்கு வேறேதும் காரணங்கள் எனக்குப் புலப்படவில்லை.///
அதைப்போலவே தாங்கள் சொல்வதைப்போல..
////அன்றன்று தமக்கு நடைபெறும் நிகழ்வுகள், நகைச்சுவையாக மாறிய தருணங்கள், கிண்டல்கள், நையாண்டிகள், பரிகாசங்கள், குறிப்பிட்டவர்களுக்குள் நடைபெறும் கருத்துமோதல்களின் பிரதிபலிப்புகள், திரைப்பட விமர்சனங்கள், புகைப்படங்கள்,அதிகம் போனால் சிறுகதைகள் மற்றும் காதல் கவிதைகள் என்று மிகச் சாதாரணமான பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே ////
இது இருந்தால்தான்... vote பெறமுடியும்... hits பெறமுடியும்... வானளாவிய புகழ் பெறமுடியும்...! blog hitடாக முடியும்...
இது யதார்த்தமானது...! ஒருவன் புகழ் பெறத்துடிப்பது வாழ்வியலில் சாதாரணமான... நடைமுறையில் உள்ளதுதான்..
தாங்கள் சொல்வதைப் போல வெறும் அறிவுரைகள்... வெறும் மருத்துவக் குறிப்புக்கள்.. வாழ்வியலில் சமூக அக்கறையுடன் இப்படியே இருங்கள் என்ற பதிவினை இட்டால் எத்தனை vote பெறமுடியும்... hits பெறமுடியும்... இல்லை... best blog என்ற பெயர்தான் கிடைக்குமா தோழி..!
என்னை சில பதிவுலக நண்பர்கள் blog ஆரம்பிக்க வலியுறுத்தியபோது...
"எனக்கு தகுதிகள் கிடையாது... ஏதோ.. எனக்கு பிடித்த பதிவர்கள் இடுகையை படித்தோமா... பின்னூட்டமிட்டோமா.. அப்படீன்னு போகும் ஓர் வழிப்போக்கன் நான்... பிளாக் திறக்கிரளவிற்கு... உங்களைப்போல சரக்கு இல்ல நம்ம மண்டையில... அதற்கு.. எங்கோ படித்த... "கற்றல்... கற்பித்தல்... கேட்டல்.. கேட்பித்தல்... சொலல்.. சொல்வதை ஏற்றல்" இவையெல்லாம் இருக்கொனுமுங்க.." என்று சொன்னவன் நான்...
இதனை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்... "செய்வனத் திருந்த செய்" என்பது என் கோட்பாடுகளில் ஒன்று... நாம்பாட்டுக்கு ஒரு பிளாக் ஓபன் பண்ணிட்டு... மண்டைல சரக்கேதும் இல்லாம... தடுமாரக்கூடாது பாருங்க... அதுக்குத்தான்.... அப்படியே நான் பிளாக் ஆரம்பித்தாலும் தத்துவம்... தொலைதூரப் பார்வை... இதெல்லாம் இருக்காது... காரணம்... எனக்கு புகழ்... பெருமை...இதெல்லாம் வேண்டாமா..?
நான் இக்கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்...! கேலி இருக்க வேண்டியதுதான்...! அது பதிவை ஒட்டியே இருக்கவேண்டும்...! நகைச்சுவை இல்லாத ஓர் பதிவு... வெறும் சக்கைதான்...! பின்னூட்டமிடுவதர்க்குமுன் பதிவை முழுதும் படித்து... பதிவர் என்ன சொல்ல வருகிறார்... என்ன சொல்கிறார் என்பதை உணர்ந்து... அதேற்கேற்ற பின்னூட்டமிடுதல் வேண்டும்... நல்லதை பாராட்டுவதும்... குறையை சுட்டிக்காட்டுவதும் நிச்சயம் பின்னூட்டத்தில் இடம்பெற்றால்தான்... அப்பதிவர் தன் தவறை... திருத்திக்கொள்வார்...!
///பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமன்றி பொதுப்படையான, உபயோகமான பதிவுகளும் வலையுலகில் வெளியாக வேண்டும் என்பது தான் எனது ஆதங்கம்.///
தாங்கள் ஆதங்கத்தை அப்படியே வழிமொழிகிறேன்... ஆனால்... பொதுப்படையான, உபயோகமான பதிவுகளும் அவ்வப்போது சில நண்பர்களால்... பதிவர்களால் பதிவிடப்படுகிறது என்பதை மறுக்கமுடியாது தோழி...
////(வலைப்பு ஆரம்பிச்சு ரொம்ப நாளாகுது.. நாமளும் ஏதாவது மெசெஜ் சொல்லணும்ல..)/////
அட்ரா சக்க....! அட்ரா சக்க....! எங்க... "இந்திரா" என்ன சளைத்தவங்களா என்ன?
anyhave...
நல்ல மெசேஜ் பதிவு...!
நட்புடன்...
காஞ்சி முரளி...
அது சரி
நீங்க ரொம்ப நல்லவங்க மேடம்!
"சாரி ஃபார் த இன்ட்ரப்சன் "
வலை உலகத்தில் இத்தனை பதிவர்கள் உருவானதற்கு காரணமே நான் மேற் கூறிய வரி தான் . இந்த சுதந்திரம் தான் , யாரும் நம்மளை கேட்க முடியாது , எழுத்துப் பிழை , இலக்கணப்பிழை எதைப்பற்றியும் கவலைப்படாமல் எழுதுவதற்கு பதிவுலகை விட்டால் வேறு எங்கும் இந்த சுதந்திரம் கிடைக்காது. எல்லாரும் சுஜாதா , கேபிள் சங்கர் , வால்பையன் போல பதிவர்கள் ஆகிவிட முடியாது . அப்படி ஆகிட்டா அவுங்கள அப்புறம் எடுத்துக்காட்டா சொல்லமுடியாது . இங்கும் மிக அருமையாக எழுத்தக்கூடிய பதிவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் . மிக முக்கியமாக இங்கு யாரும் தொழிலாக எழுதுவதில்லை . அனைவருக்கு தங்கள் வேலை பளுவின் ஊடே இது பொழுதுபோக்கு தளம் . (சில பேரை தவிர ). அதை ஏன் சீரியஸ்ஸா யோசிக்க சொல்றிங்க . இதில் நிறைய பேர் சீரியஸ் ஆக எழுதவும் செய்கிறார்கள் , உங்கள் மனம் எந்த நேரத்தில் எதை விரும்புகிறதோ அதைநாம் படிக்கலாம் , யாருக்கும் இதைத்தான் படிக்கணும் என்கிறகட்டாயம் கிடையாது . இதில் எங்கு தொலைநோக்கு பார்வை வந்தது என்று தெரியவில்லை . (இவையெல்லாம் எனது கருத்துக்கள் மட்டுமே )
////
என்னங்க இப்படி சாதாரணமா சொல்லிட்டிங்க , இது உலகத்தில் உள்ள எல்லாருக்கும் உள்ள இயல்பான ஆசை தானே? எல்லாரும் புகழ் அடையத்தான் விரும்புவார்கள் . நண்பர்களிடம் பீற்றிக் கொள்வதில் என்ன தப்பு இருக்கு . எல்லாரும் சீரியஸ் , இலக்கியமா எழுதிக்கிட்டு இருந்தா நல்ல இருக்குமா , நீங்களே சொல்லுங்கள் ???
மேடம் , இந்த பின்னூட்டகும்மி எனபது , வேலை முடிந்து வீட்டிற்கு போகும் வழியில் நண்பர்களை பார்த்து அரட்டை அடித்து விட்டு செல்வது மேடம் , அதுல கேலியும் கிடலும் இருந்தாதான் நல்லா இருக்கும்.
இப்படிக்கு
24 மணிநேரமும் கும்மி அடிப்போர் சங்கம்
மேலே பென்சில் பிடிச்சிருக்கிற குழந்தை...அழகு!
வலைப்பு - வலைப்பூ
அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக மங்குனி அமைச்சர் கூறிய கருத்துக்களை நான் உண்மையாக ஏற்றுக்கொள்கிறேன். நன்றி அமைச்சரே.
நானும் வந்துவிட்டுபோனேன் இந்திரா இந்தபக்கம்..
EPPADI ELLAM OVERA advise ellam panna aarmbital orutharaum varamatanga..parthukonga..
nadakatum naasavelaigal..
nalla erukku unga adangam...
காஞ்சி முரளி மற்றும் மங்குனி அமைச்சர் சொல்வது சரி என்றே எனக்கும் தோனுச்சு. நீங்களே சொல்லீடீங்க . சந்தோஷம் :)