மன்னாதி மன்னன் - தொடர்பதிவு

நம்மளையும் மதிச்சு (!!!) தொடர்பதிவுக்கு கூப்பிட்ட வெறும்பயலுக்கு நன்றி.
இராஜராஜ சோழர், ஆசோகர், அலெக்சாண்டர், கட்டபொம்மன், இம்சை அரசன் 23ம் புலிகேசி (!!) இப்படி நெறைய மன்னாதி மன்னர்கள் இருந்தாலும், தலைப்பைப் படித்ததும் எனக்கு முதலில் தோன்றியது திப்பு சுல்தானின் நினைவு தான். இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து எவ்வளவு போராட்டங்கள் நடந்திருந்தாலும் அதற்கெல்லாம் முதலில் வித்திட்டது இவரது ஆட்சியில் தான்.


நான் எதற்காகவும் அஞ்சவில்லை, திப்பு சுல்தானைத் தவிரஎன்று ஒரு ஆங்கிலேய கவர்னர் சொன்னதாக எங்கோ படித்ததாக நினைவு. அவரைப் பற்றி நான் தெரிந்து கொண்ட தகவல்களை சுருக்கமாக எழுதியுள்ளேன்.
திப்பு சுல்தான் நவம்பர் 20, 1750ல் தேவனஹல்லியில் பிறந்தார். தந்தை ஹைதர் அலி, தாய் ஃபக்ர் உன்னிசா, இளைய சகோதரர் கரீம்.
இவரது தந்தை சாதாரண இளநிலை அதிகாரியாக இருந்து படிப்படியாக அரசரின் நம்பிக்கை மூலம் ஆட்சியை ஒப்படைக்கப்பெற்றவர். திப்பு சுல்தானை ஆரம்பத்தில் இறைபணிக்காக அர்பணிக்க எண்ணிய ஹைதர் அலி, பின் காலப்போக்கில் மனது மாறி வலிமையான அரசனாக உருவாக்கினார்.
திப்பு சுல்தானின் பதினைந்தாவது வயதில், பெத்னூருக்கு தெற்கே அமைந்த பாலம் (Balam) என்ற நகரில் நடைபெற்ற போரில், தந்தையின் போர் முறையை கற்றுக்கொள்வதற்காக, முதன் முதலில் போர்க்களத்தில் இறங்கி, பின் அதில் வெற்றி பெறக் காரணமாகவும் இருந்தார். அதற்காக தம் தந்தையின் உடைவாளினை பாராட்டாகவும் பெற்றார்.
டிசம்பர் 1782, தந்தையின் மரணத்திற்குப் பிறகு முழுமையான ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
வணிகம் செய்ய நுழைந்த ஆங்கிலேயர்களின் உள்நோக்கத்தை, தொலைநோக்குப் பார்வையால் அனுமானித்து அவர்களை எதிர்த்தார். இந்தக் காலகட்டத்தில் தான் புலியின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி திப்பு சுல்தானின் படைக்கு வடிவமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் படைகளின் சிம்மசொப்பணமாக இருந்த திப்பு, ராக்கெட் செலுத்துவதில் சிறப்பான முறையைக் கையாண்டார்.
நம்பிக்கைக்குரிய ஷீக் ஆயாஸ் என்பவன், உள்ளிருந்து ஆங்கிலேயருக்கு வேலைசெய்த தந்திரத்தால் தான், ஏப்ரல் 28, 1783ல் திப்புவின் முக்கியப் பிரதேசமான அனந்தபூர் நகர் கிழக்கிந்திய அரசால் கைப்பற்றப்பட்டது. இதுதான் திப்புவிற்கு கிடைத்த முதல் அடி.
அமைதியை நிலவச் செய்வதே திப்பு சுல்தானின் மேலோங்கிய நோக்கமாக இருந்தது. எதிரிகளானாலும் அவர்களையும் மனிதநேயத்துடன் உள்நோக்கியவர். ஒரு முறை போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் காயமுற்றிருப்பதைப் பார்த்த திப்பு சுல்தான், தமது அரண்மனை மருத்துவர்களிடம் எதிரிப்படைகளுக்கும் கூடாரங்கள் அமைத்து மருத்துவ உதவி செய்ய ஆணையிட்டார்.
1983ல் திப்புவால் இயற்றப்பட்ட ஆணை இது.
எதிரிகளுடன் போரிடும்போது, அவர்களிடமிருந்து எதையும் நாம் அபகரிக்கக் கூடாது. சிறைப்படுத்தப்பட்டவர்களை துன்புறுத்தக் கூடாது. மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மீறினால் நம் ராணுவத்திற்கு கெட்ட பெயர்தான் கிடைக்கும்.
1792ல் ஒரு வழியாக நீண்டகால போராட்டத்திற்குப் பிறகு ஆங்கிலப் படைகளை விரட்டிவிட்டதாக எண்ணி மகிழ்ச்சியாக இருந்த சமயம், இரவோடு இரவாக எதிர்பாராத தருணத்தில் பெங்களுர் கோட்டையை கைப்பற்றினார் கார்ன்வாலிஸ் ஆளுநர். முதன் முறை அடி சறுக்கிய திப்பு, வேறு வழியின்றி போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்.
பிப்ரவரி 26, 1792ல் ஸ்ரீரங்கப்பட்டிணம் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஈடாக ஆங்கில அரசு ஏராளமான பணமும் பிரதேசங்களையும் மட்டுமன்றி திப்புவின் எட்டு வயது அப்துல் காலிக், ஐந்து வயது முய்ஸ்-உத்-தீன் ஆகிய புதல்வர்களையும் பிணையமாக வாங்கிக் கொண்டு பின் இரண்டு வருடங்கள் கழித்து விடுவித்தனர்.
பின்னர் வரலாற்று நிகழ்வாக, புதிய கவர்னர் ஜெனரல் ரிச்சர்ட் வெல்லஸ்லி, திப்புவிற்கு எதிராக பிப்ரவரி 11, 1799ல் பெரும் படையைத் திரட்டி, பெரும்பாலான பிரதேசங்களைக் கைப்பற்றினார்.
இறுதியாக மே 4, 1799ல் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் திப்புவின் கோட்டை முற்றுகையிடப்பட்டது.
மடிந்தவர்களையும் பிரிந்தவர்களையும் எண்ணி வருந்தாது, வாளை கையில் எடுத்து எதிரிப்படைகள் மீது பாய்ந்து, தனியாக நின்று, முடிந்தவரை போரிட்ட திப்பு சுல்தான், கடைசியில் தன் காதுப் பகுதியில் குண்டடி பட்டு, தான் கொன்று வீழ்த்திய எதிரிகளின் பிணக்குவியல் மீதே சரிந்து மடிந்தார்.
ஆங்கிலேய ஆட்சியை கடுமையாக எதிர்த்துப் போராடிய மாமன்னன் திப்பு சுல்தானின் வீர வரலாற்றில் எனக்குத் தெரிந்த தகவல்கள் இவை.
திப்பு சுல்தானைப் பற்றிய மற்றுமொரு தகவல் என்னவெனில், மூன்று முக்கிய துறைகளின் வளர்ச்சிக்கு அவர் வித்திட்டார்.
1. பட்டு உற்பத்தி
2. கடலிலிருந்து முத்து எடுக்கும் பணி
3. பிராணி வளர்ப்பு
இவை மூன்றும் மைசூரை செழிப்படைய வைத்தது பிற்கால சரித்திரம்.
.
.

Comments

siva said…
நல்லா எழுதி இருக்கீங்க.

தங்கள் வீரம்

எழுத்துகளில்

பளிச்சிடுகிறது
தொடர்பதிவு நன்று.
நான் அழைத்ததை மதித்து எழுதிய சகோதரிக்கு நன்றிகள்..

எல்லா விவரமும் ஏற்க்கனவே ரெடியா வச்சிருப்பீங்க போலிருக்கே...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...
RVS said…
திப்புவைப் பற்றி நறுக்குன்னு நானூறு வார்த்தைல சொல்லியிருக்கீங்க.. நல்லா இருக்கு..பாராட்டுகள்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.
இதுவரை நான் அறிந்திராத பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன் நன்றி !!
Chitra said…
நேர்த்தியா - அழகா சொல்லிட்டீங்க..... சூப்பர்! என்னையும் இந்த தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருக்காங்க..... இந்த மாதிரி research பண்ணி எழுத தெரியாதே..... உங்க பதிவை copy அடிக்கவும் முடியாதே..... அவ்வ்வ்வ்......
வீரத்திற்கு மறுப்பெயர் திப்புதான் ..


இன்னும் எட்டபர்கள் இருக்கிறார்களே..இலங்கையிலும் சமீபத்தில் பார்த்தோமே..!!


நல்ல வரலாற்று செய்திகள் சொன்னீங்க :-))
நிறைய விசயங்கள் அறிய தந்தமைக்கு நன்றி!
நல்ல ஒரு வரலாற்று பதிவு....

இந்த திப்புவின் கோட்டையை நேரில் சென்று பார்த்திருக்கிறேன்....!

நட்புடன்...
காஞ்சி முரளி...
சார்,

நான் திப்புவின் கோட்டையை பார்த்ததில்லை, இப்பொழுது அவரின் கோட்டை வேண்டுமென்றே சிதிலமடைய வைத்ததாக சொல்கிறார்களே அது உண்மையா?
HariShankar said…
இவர் வரலாறு படிசிருந்தலும், மைசூர் எல்லாம் சுத்தி பாதிருந்தலும் , தெரியாத தகவல்கள் இங்கே பார்க்க முடிஞ்சுது..
HariShankar said…
இவர் வரலாறு படிசிருந்தலும், மைசூர் எல்லாம் சுத்தி பாதிருந்தலும் , தெரியாத தகவல்கள் இங்கே பார்க்க முடிஞ்சுது..

பகிர்வுக்கு ரொம்ப நன்றி இந்திரா :)

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..