உனக்கோர் செல்லப்பெயர்..
காதல் மிளிர்ந்து
வெகுநாட்களாகியும்
ஏனோ உனை அழைக்கவில்லை
ஒரு செல்லப்பெயரிட்டு..
பலமுறை கேட்டும்
மழுப்பலே பதிலாக.
தேடிக்கொண்டிருக்கிறேன்
என்பதை மறைத்து.
எனக்கு என்றும்
உரிமையானதாய்..
என்னை மட்டும்
நினைவூட்டுவதாய்..
என்னுள்ளே துலாவலானேன்..
உனக்கோர் பெயரை.
தேர்ந்த தேடலுக்குப் பின்
தேர்வு செய்தேன்
என் தேவதை உன்
புதிய பெயர்தனை..
என்னுள்ளே
ஆசையாய் உச்சரித்து
அழகு பார்த்து
ஆவலாய் உனை நெருங்குகையில்..
உன் நண்பர் கூட்டத்தில்
எவனோ உனை அழைக்க..
உடைந்து போய் நின்றேன்.
என் தேடல் முடிவு
அவன் வார்த்தையில்.
நட்பின் உரிமையென்று
சமாதானித்துக் கொண்டாலும்..
ஏனோ தெரியவில்லை.
இன்று வரை அழைக்கிறேன்.
உன் முழுப்பெயரையே.
.
Comments
அழகாய் ஒரு
ஏமாற்றத்தின்
உணர்வுகள்
கவியாய்...
நல்ல இருக்குங்க...
ஆண்கள் கவிதை எழுத லாயக்கில்லைன்னா?
//இன்னொரு தடவை இப்படி எழுதினா மண்டபத்துல எழுதி வாங்கினதான்னு கேட்பேன் சொல்லிட்டேன்//
பொதுவாகப் பெண்கள் பற்றிய கவிதை வரிகளில், உணர்வுகள் அழகாகவும் ஆழமாகவும் வெளிப்படுவதை வால்பையன் உணர்ந்ததில்லையோ??
ஒரு ஆண், பெண் ஸ்தானத்தில் இருந்தும்
ஒரு பெண், ஆண் ஸ்தானத்திலிருந்தும் யோசிப்பது அப்படி ஒன்றும் தவறில்லையே..
அதற்கு மண்டபத்தில் யாரோ எழுதிக்கொடுத்ததாகத்தான் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை.
அப்படியென்றால் உங்கள் “கமா கதை“யில் வரும் வசந்தியின் வசனங்களை எந்த மண்டபத்தில் யார் எழுதிக்கொடுத்தார்கள்??
//ஆண்கள் கவிதை எழுத லாயக்கில்லைன்னா?//
அத நீங்க தான் சொல்லணும்.
போய்ப் புள்ளைங்கள படிக்க வைங்கய்யா... பக்கித்தனமா பேசிகிட்டு....
எவனோ உனை அழைக்க..
உடைந்து போய் நின்றேன்
( Avana chummava viteenga..........!!!!)
என்னாச்சு... நண்பி...!
ஏனிந்த கடுங்கோபம்...!
இல்லையே...!
அமைதியான இந்திரா எங்கே...!
ஆசையாய் உச்சரித்து
அழகு பார்த்து
ஆவலாய் உனை நெருங்குகையில்..///
என்ன ஒரு எதிர்பார்ப்பு....!
weldon...!
///உடைந்து போய் நின்றேன்..
என் தேடல் முடிவு
அவன் வார்த்தையில்.///
நல்ல வரி...!
மொத்தத்தில்...
அழகான....
அருமையான கவிதை...
நட்புடன்...
காஞ்சி முரளி....
Of course, Love demands such sweet nothings,and a unique nickname is also one among them. Cute lines :)
உணர்வு வெளிப்பாடுகள் அருமை! நல்லா இருக்கு இந்திரா..
பெயர் சொல்லி அழைக்காமலே இருப்பதும் ஒரு சுகம் தான் ...
நல்லா எழுதி இருக்கீங்க....
உனக்கோர் செல்லப்பெயர் பதிவு...
வால்பையனின் பின்னூட்டத்துக்கு நான் பதில் கூறியிருந்தது பற்றி காஞ்சி முரளியும் சிவாவும் எனக்கு அட்வைஸ் பண்ணியிருந்தார்கள்.
அட நாங்க நட்பு ரீதியா ஒருத்தருக்கொருத்தர் சும்மா கலாய்ச்சுகிட்டோம்.. இது ஒரு தப்பா??
இதுல சீரியஸா எடுத்துக்குறதுக்கு என்ன இருக்குனு எனக்குத் தெரியல.
எனக்கு நீங்க துணையா இருக்குற தைரியத்தில் நான் இந்த இந்திராவை கேள்வி கேட்டுகிட்டே இருப்பேன், விடுறா மாதிரி இல்லை!
அது எப்படி ஒரு பொண்ணு இம்புட்டு தைரியமா கலாய்க்கலாம், விடக்கூடாதுல்ல, பஞ்சாயத்து கூட்டிரலாம், நீங்க ரெண்டு பேரும் சாட்சி சொல்ல வந்துருங்க நண்பர்களே!
இப்போ தான் என்னவரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தேன்...
முதல் முறையாக வந்தேன் உங்கள் வலைப்பக்கம்... அருமையாக உள்ளது...
அருமையான கவிதை கடசி வரைக்கும் பெயரை சொல்லவில்லை
இன்று வலைச்சரத்தில் அறிமுகம் கண்டமைக்கு வாழ்த்துக்கள்
பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/05/blog-post_29.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-