பல்பு வாங்குறதே எனக்குப் பொழப்பா போச்சு....
நா நேத்து ஆபீஸ் நேரத்துல, ரொம்ப சின்சியரா வேலை பாத்துகிட்டிருந்தேன். (ப்ளாக் பாத்துகிட்டிருந்தேன்னு உண்மைய சொல்ல மாட்டேனாக்கும்..)
சார் ஒரு ரிப்போட் ரெடி பண்ணனும், சாயந்திரத்துக்குள்ள ஹெட் ஆபீசுக்கு மெயில் அனுப்பனும்னு சொன்னார். நானும் வேக வேகமா டைப் பண்ணிகிட்டிருந்தேன். திடீருனு என் கம்ப்யூட்டர்ல இருந்த மவுஸ்.. மக்கர் பண்ண ஆரம்பிச்சது. க்ளிக் பண்ணினா தனியா செலக்ட் ஆகாம, மொத்தமா ஓபன் ஆகிகிட்டே இருந்துச்சு. சரி கீ-போர்ட்லயே முடிச்சிடலாம்னு பாத்தா அது அதுக்கு மேல.. Arrow பட்டன் அமுக்கினா தாறுமாறா செலக்ட் ஆகிகிட்டே இருந்துச்சு.
நானும் கம்ப்யூட்டர ஷட்-டவுன் பண்ணினேன், ரீ-ஸ்டார்ட் பண்ணினேன்.. மானிட்டர அமத்திட்டு ஆன் பண்ணினேன்.. கீபோர்ட் வயர கழட்டி மாட்டினேன்.. ம்ஹூம்.. ஒண்ணுமே வேலைக்கு ஆகல. சார் கிட்ட சொன்னேன். அவசரமான வேலை.. இன்னும் ஒரு மணி நேரத்துல முடிக்கணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்.
சரி அந்த ஃபைல காப்பி பண்ணி வேற சிஸ்டம்ல போடலாம்னாலும் முடியல. முக்கியமா இன்டர்நெட் ஓபன் பண்ணவே முடியல.. (நமக்கு அதுதானே முக்கியம்...) வேற வழியில்லாம சிஸ்டம் சர்வீஸ் பண்றவங்களுக்கு போன் பண்ணி சீக்கிரம் வர சொன்னேன்.
அவர் சாவகாசமா அரை மணி நேரம் கழிச்சு வந்தார். எனக்கு டென்சனாயிடுச்சு. அவசரம்னு சொன்னா இப்படிதான் நிதானமா வருவீங்களா??னு அவர்கிட்ட கோவமா பேசினேன். அப்புறம் பிரச்சனைய சொன்னேன். அவரும் செக் பண்ணிப் பாத்தாரு. மவுஸ்லயும் சரி, கீபோர்ட்லயும் சரி, ஃபைலயோ ட்ரைவயோ தனியா செலக்ட் பண்ணவே முடியல.. ரெண்டு நிமிசம் யோசிச்சவரு, டக்குனு என் பக்கம் திரும்பி ”மேடம், நீங்க முன்ன பின்ன கம்ப்யூட்டர்ல வேலை பாத்துருக்கீங்களா? புதுசா வேலைக்கு சேந்துருக்கீங்களா“னு கேட்டார்.
நாலு வருசமா கம்ப்யூட்டரோட தான் குப்பை கொட்டிகிட்டு இருக்கேன். ஆனா எதுக்கு அப்டி கேக்குறாருனு தெரியாம நா திருட்டு முழி முழிச்சிகிட்டே “ஏன் சார்“னு கேட்டேன். கீபோர்ட காட்டி Shift பட்டன பாத்தீங்களா?னு கேட்டார். அப்ப தான் கவனிச்சேன். Shift பட்டன் அமுங்கியே இருந்துச்சு. அதுனால தான் எல்லாமே செலக்ட் ஆகிட்டே இருந்துருக்கு. “அட ஆமா... நா இத கவனிக்கல சார்“னு கேனத்தனமா அவரப் பாத்து சிரிச்சேன்.
அவர் என்ன பாத்து “இதுக்கு எதுக்கு என்ன கூப்டீங்க?? இங்கயே கம்ப்யூட்டர் தெரிஞ்சவங்க யார்கிட்டயாவது கேட்ருந்தா அவங்களே சொல்லிருப்பாங்க மேடம்“னு சொல்லிட்டு எந்திரிச்சுப் போயிட்டார். (இந்த அவமானம் உனக்குத் தேவையா....??). அமுங்கியிருந்த Shift பட்டன எடுத்துவிட்டதுக்கு அவருக்கு சர்விஸ் சார்ஜ் வேற...
என்ன பண்ணித் தொலைக்கிறது??? பல்பு வாங்குறதே எனக்குப் பொழப்பா போச்சு....
.
.
Comments
ஹா ஹா ஹா ஹா "ங்கே".....
பல்பு வாங்க உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல போல....
சுவாரஸ்மாயாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
என்ன கோழிகுஞ்சு நலமா....?
// இராஜராஜேஸ்வரி said...
பல்பு வாங்கியதற்குப் பாராட்டுவிழா எடுப்பீட்களா???//
தினந்தோறும் பாராட்டுவிழா வைக்க முடியாது....
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி தெரிந்திருக்கும்... தினம் ஆயிரம் வாட்ஸ் பல்பு வாங்குற ஒரே ஆளு... நம்ம தோழி பல்பு இந்திரா தான்.
first oru keyboard vaangunga.. appuram bulb vaangikalam...
//அமுங்கியிருந்த Shift பட்டன எடுத்துவிட்டதுக்கு அவருக்கு சர்விஸ் சார்ஜ் வேற//
idhu yaaru kanakku?
எங்க ஆபிஸ்ல நிறைய பேருக்கு இதுமாதிரி நடக்கும். ஐடி ஆளுங்களை கூப்பிடுறதுக்கு முன்ன நான் கீ எல்லாம் அமுங்கியிருப்பான்னு பார்ப்பேன் :)