மருத்துவ மார்கெட்...



போன வாரம் எனக்கு உடம்பு சரியில்லைனு சொன்னேன்ல.. (சந்தோசப்பட்டதா கேள்விப்பட்டேனே.. ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்...)

ஒண்ணுமில்லீங்க.. லேசா கழுத்து வலி.. தொடர்ந்து பஸ்ல ரொம்ப நேரம் பயணம் பண்றதுனாலயும், கணிணில நாள் பூராவும் வேலை பாக்குறதுனாலயும் வந்துடுச்சு போல. அதுக்கு எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குப் போயிருந்தேன்.

உள்ள போனதும் முதல்ல ரிசப்ஷன்ல பேர குடுத்தேன். அவங்க என்னைப் பற்றிய விவரமெல்லாம் கேட்டாங்க. சொன்னது தான் தாமதம், ஐநூறு ரூபாய் கட்ட சொன்னாங்க. புரியாம முழிச்சபடியே “ட்ரீட்மெண்டுக்கான பணத்தை முதல்லயே வாங்கிடுவீங்களா“னு கேட்டேன். அதுக்கு அவங்க “இது கன்சல்ட்டிங்க ஃபீஸ் மட்டும் தான், ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் அதுக்குத் தகுந்தபடி மிச்ச பணம் வாங்குவோம்“னு சொன்னாங்க.

அப்பவே “எஸ்“ஸாயிடலாம்னு உள்ளுக்குள்ள அசரீரி கேட்டுச்சு. என்ன பண்றது???? குணமாகணுமே.. சரி“னு கட்டித் தொலைஞ்சேன். ஒரு சின்ன கார்டு குடுத்து, வெயிட் பண்ண சொன்னாங்க. கிட்டத்தட்ட ரெண்டேகால் மணி நேரமா உக்காந்திருந்தேன். ஒரு நர்ஸ் வந்து என் பல்ஸ் பாத்தாங்க. அப்புறம் வெயிட் செக் பண்ண சொன்னாங்க. (எவ்ளோனு சொல்ல மாட்டேன்..). அந்த நர்ஸ் ஏதோ ஒரு பேப்பர்ல அதையெல்லாம் எழுதிகிட்டு உள்ள போய்டுச்சு.

ஒவ்வொருத்தரா போய்ட்டு வந்ததுக்கப்புறம் ஒரு வழியா என் பேர் வந்துச்சு. உள்ள போய் டாக்டரப் பாத்தேன். நடிகர் விஜயகுமாருக்கு விக் வச்சதுமாதிரியான ஒரு டாக்டர் இருந்தார். என்ன ப்ரச்சனை?னு கேட்டார். நானும் கழுத்து வலி பத்தி சொன்னேன். அவரும் ஆள்காட்டி விரல்ல என் கழுத்த தொட்டுப் பாத்துட்டு கொஞ்ச நேரம் யோசிச்சார். எல்லாம் நார்மலா இருக்குற மாதிரி தான் இருக்கு. வேணும்னா சின்னதா ஒரு டெஸ்ட் எடுத்துப் பாத்துடலாம்“னு சொல்லி ஒரு பேப்பர்ல எதையோ கிறுக்கி, அந்த நர்ஸ் கிட்ட குடுத்தார். நானும் அது பின்னாடியே போனேன்.

ப்ளட் டெஸ்ட், எக்ஸ்-ரே, கியாபியா டெஸ்ட் (என் காதுல அப்டி தான் வழுந்துச்சுங்க) அப்டினு ஏதேதோ சொல்லுச்சு. கடைசியா ஆயிரத்து ஐநூறு ரூபாய் கட்டுங்க“னு சொன்னது தான் என் காதுல தெளிவ்வ்வ்வா கேட்டுச்சு. (அடப்பாவிகளா...). சாதாரண கழுத்துவலிக்கு இவ்ளோ டெஸ்ட்டா?னு கேட்டேன். அதுக்கு அந்த நர்ஸ் என்ன சொல்லுச்சு தெரியுமா??? இந்த டெஸ்ட், எலும்பு சம்பந்தமா ஏதாவது பிரச்சனையிருக்கானு பாக்குறதுக்கு தான். ஒரு வேளை இல்லைனு தெரிஞ்சுடுச்சுனா அடுத்து நரம்பு சம்பந்தமா ஒரு டெஸ்ட் எடுக்கணும். அது ஏழாயிரத்து இருநூறு ரூபாய் வரும்“னு சொல்லுச்சு.

அவ்ளோதான் டெஸ்ட்டும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம். வலி குறையுறதுக்கு மட்டும் மாத்திரை எழுதிக் குடுக்க முடியுமா“னு கேட்டேன். டெஸ்ட் ரிசல்ட் வந்த்துக்கப்புறம் என்ன ப்ரச்சனைனு பாத்துட்டு டாக்டர் மாத்திரை எழுதிக்குடுப்பாருனு சொல்லிட்டாங்க. சரி, அந்த ஐநூறு ரூபாயாவது திருப்பித் தருவீங்களா“னு கேட்டதுக்கு, அது டாக்டரப் பாத்த்துக்கு ஃபீஸ்னு சொல்லிட்டாங்க படுபாவிங்க.. ஆணியே புடுங்க வேணாம்னு (ஓஓ இப்டி சொன்னா வசந்துக்கு கோவம் வருமோ..) வீட்டுக்கு கிளம்பி வந்துட்டேன். வீணா ஐநூறு ரூபாய தண்டம் பண்ணிட்டியேனு அம்மா கிட்ட திட்டு வாங்கினது தான் மிச்சம்.

(அப்புறம் பக்கத்துல இருக்குற சாதாரண க்ளினிக்ல செக் பண்ணி மாத்திரை வாங்கி சாப்பிட்டேன. ரெண்டே நாள்ல சரியாய்டுச்சு.)

இது மாதிரி சம்பவம் எனக்கு மட்டுமில்லை, பெரும்பாலானவர்களுக்கு நடக்குது. சாதாரண தலைவலினு போனாக்கூட, அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட்“னு சொல்லி காசு பிடுங்கிட்றாங்க. கடைசில எல்லா ரிப்போர்ட்டையும் பாத்துட்டு மாத்திரை எழுதித் தர்றாங்க. இத முன்னாடியே அவங்களால செஞ்சிருக்க முடியும். ஆனா காசு பிடுங்குதே லட்சியமா இருக்குறபட்சத்துல வேறென்ன செய்வாங்க? இன்னைக்கு இருக்குற மருத்துவ உலகத்துல பணம் தான் முக்கிய குறிக்கோளா இருக்கு.

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு தனியார் மருத்துவமனைல நண்பர் ஒருவரை சந்திச்சேன். அவரோட தந்தைக்கு நுரையீரல் குழாயில் அடைப்பு இருக்குதுனும், அதுக்கு ஆப்பரேசன் பண்ணனும்னும் சொன்னாங்களாம். அவரும் சரி“னு சொல்லிருக்கார். பணம் எவ்ளோ செலவாகும்னு கேட்டதுக்கு “ஒரு லட்சத்து எண்பதாயிரம் கட்டினா 65% பிழைக்க வாய்ப்பிருக்கு, இரண்டு லட்சத்து அறுபதாயிரம் கட்டினா 85% பிழைக்க வாய்ப்பிருக்கு, மூணு லட்சத்து நாற்பதாயிரம் கட்டினா 99% நல்லாயிடுவார்“னு சொன்னாங்களாம். இது என்ன மாதிரியான பேரம்னு எனக்குப் புரியலை.

நவீன கருவிகள் பயன்படுத்துறதுனால செலவு அதிகமாகும்குறது உண்மைதான். ஆனாலும் இது ஏதோ உயிர் மீதான பேரம் பேசுறது மாதிரி தான் எனக்குத் தோணுது. இதுக்கு, சம்பந்தப்பட்டவர் என்ன முடிவெடுக்க முடியும்??? கடைசியா சொன்ன தொகைகுத் தான் சம்மதிக்கணும். அதைத்தான் அவங்களும் எதிர்பாக்குறாங்க. அதுக்குதான் இப்படி சதவிகிதமா பிரிச்சு பேரம் பேசுறாங்க.

மருத்துவத்துறையப் பொறுத்தவரை, மனிதநேயம்குறது குறைஞ்சுபோய்.. ஏன் இல்லாமலே போய் மார்க்கெட் நிலவரம் மாதிரி மாறிடுச்சு. மனுஷங்களோட ரத்தத்தையும் வியர்வையையும் மருத்துவம்குற பேர்ல பணமா உருஞ்சுறத விடக் கொடுமை வேறென்ன இருக்க முடியும்.

.

.


Comments

// ஒரு வேளை இல்லைனு தெரிஞ்சுடுச்சுனா அடுத்து நரம்பு சம்பந்தமா ஒரு டெஸ்ட் எடுக்கணும். அது ஏழாயிரத்து இருநூறு ரூபாய் வரும்“னு சொல்லுச்சு.///

ஒடுலேய் மக்கா ஓடிருலேய் கொண்டேபுடுவாயிங்க.....
ஒரு வேளை பதிவு போட மேட்டர் கிடைக்காம அங்கே போநீரோ.....ஹி ஹி ஹி ஹி டவுட்டு....
ஒரு வேளை பதிவு போட மேட்டர் கிடைக்காம அங்கே போநீரோ.....ஹி ஹி ஹி ஹி டவுட்டு....
//(அப்புறம் பக்கத்துல இருக்குற சாதாரண க்ளினிக்ல செக் பண்ணி மாத்திரை வாங்கி சாப்பிட்டேன. ரெண்டே நாள்ல சரியாய்டுச்சு.//

அம்பது ருவாயோடு முடிய வேண்டியது, ஐநூறு ரூவா பறிபோனது...
பெரும்பாலும் - டாகடர் பீஸக்கு பயந்தே ஆஸ்பத்திரிக்கு போறது இல்லை. மெடிக்கல் ஷாப்ல மருந்து வாங்கி சாப்பிட்டுக்கிறோம். நல்ல பதிவாக கொடுத்திருக்கீங்க.
Speed Master said…
ஒரு லட்சத்து எண்பதாயிரம் கட்டினா 65% பிழைக்க வாய்ப்பிருக்கு, இரண்டு லட்சத்து அறுபதாயிரம் கட்டினா 85% பிழைக்க வாய்ப்பிருக்கு, மூணு லட்சத்து நாற்பதாயிரம் கட்டினா 99% நல்லாயிடுவார்“னு சொன்னாங்களாம். இது என்ன மாதிரியான பேரம்னு எனக்குப் புரியலை.



எந்த ஹாஸ்பிட்டல்ங்க இது
பெயர் சொல்லுங்க
logu.. said…
\\அப்புறம் வெயிட் செக் பண்ண சொன்னாங்க. (எவ்ளோனு சொல்ல மாட்டேன்..).\\

250 னு அந்த நர்ஸ் சொன்னதா கேள்விபட்டேன்.
என்ன கொடுமை இது..?

இவங்கள தட்டி கேக்க யாருமே
இல்லையா..?
Chitra said…
இதையெல்லாம் regulate பண்ற மாதிரி ஒரு சிஸ்டம் வந்தா நல்லா இருக்கும்.
Balaji saravana said…
சாதாரண கழுத்து வலி பிரச்சனைக்கே இவ்வளோ பணம் பிடுங்குறாய்ங்களே, கொஞ்சம் சீரியஸ் கேஸுன்னா சொத்தையே எழுதிக் கேப்பாங்க போலயே! :(
//தமிழ் உதயம் said...

பெரும்பாலும் - டாகடர் பீஸக்கு பயந்தே ஆஸ்பத்திரிக்கு போறது இல்லை. மெடிக்கல் ஷாப்ல மருந்து வாங்கி சாப்பிட்டுக்கிறோம். நல்ல பதிவாக கொடுத்திருக்கீங்க.//


உண்மை தான்.
கருத்துக்கு நன்றிங்க..
//MANO நாஞ்சில் மனோ said...

ஒரு வேளை பதிவு போட மேட்டர் கிடைக்காம அங்கே போநீரோ.....ஹி ஹி ஹி ஹி டவுட்டு....//


ஷ்ஷ்ஷ்ஷ்
கம்பெனி ரகசியத்தை வெளில சொல்லக் கூடாதுங்க மனோ சார்..
//☀நான் ஆதவன்☀ said...

:( take care//


நன்றிங்க..
//வெங்கட் said...

என்ன கொடுமை இது..?

இவங்கள தட்டி கேக்க யாருமே
இல்லையா..?//


கேட்டாலும் கேக்க மாட்டாங்க..
//logu.. said...

\\அப்புறம் வெயிட் செக் பண்ண சொன்னாங்க. (எவ்ளோனு சொல்ல மாட்டேன்..).\\

250 னு அந்த நர்ஸ் சொன்னதா கேள்விபட்டேன்.//


ஓஓஓஓ அவ்வளவு குறைஞ்சுட்டேனா..
பரவாயில்லையே...
//Balaji saravana said...

சாதாரண கழுத்து வலி பிரச்சனைக்கே இவ்வளோ பணம் பிடுங்குறாய்ங்களே, கொஞ்சம் சீரியஸ் கேஸுன்னா சொத்தையே எழுதிக் கேப்பாங்க போலயே! :(//

பணத்தை மூட்டைல கட்டி எடுத்துட்டுப் போகணும் போல..
வருகைக்கு நன்றி பாலாஜி.
//Chitra said...

இதையெல்லாம் regulate பண்ற மாதிரி ஒரு சிஸ்டம் வந்தா நல்லா இருக்கும்.//


நல்லாதான் இருக்கும்... வரணுமே...
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சித்ரா.
ஹேமா said…
ம்...உண்மையிலேயே சீரியசா யோசிக்க வைக்கிற பதிவுதான்.
கஸ்டப்படுறவுங்களுக்கு நோய் வந்திட்டா அவ்ளோதானோ !
ஃஃஃஃ ஏதோ உயிர் மீதான பேரம் பேசுறது மாதிரி தான் எனக்குத் தோணுது.ஃஃஃஃ

இப்ப எல்லாமே வியாபாரமாச்சுக்கா...

என் உயிரே.
பயனுள்ள பதிவிற்கு நன்றி ..
Travis Bickle said…
I have lost faith in allopathy.
I follow now siddha and aurvedha, and its gives good results, we are to blame for not recognising our own medical methods.Yoga can do wonders.I have lower back pain and if i do yoga regularly i usually dont feel the pain.Try yoga, then see the difference.
Shankar said…
1000 rupees fine potalum paravala.. siriputhan varuthu..
Shankar said…
:-):-):-):-):-):-)
Shankar said…
But naan summa vidala sanda potututhan vanthen...
Shankar said…
same situation happen recently in Salem for my father's treatment..
My days(Gops) said…
frank ah sollanum'na Rs.500 jaasthi thaaan for consulting. Rs. 200 to Rs. 300 reasonable...

vilai vaasi day by day yerikittey pogudhu.. nammaku avasiyamaana visayathula anavasiyama price raise irukira naala thaan we are notifying and polambifying.....
நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி..

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்