Monday, 3 October 2011

கணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..கணவன் மனைவிக்கிடையே, திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. இதற்கு காரணம், சரியான, பரஸ்பர புரிதல் இல்லாமையே.
கீழே தரப்பட்டிருக்கும் கருத்துக்கள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள். இங்கு தரப்பட்டிருக்கும் ஆலோசனைகளில் சில, குழந்தைத்தனமானதாகவும் நகைச்சுவையாகவும் தோன்றலாம்.. ஆனாலும் தம்பதிகளுக்குள் கவுரவம் பார்க்காது, கடைபிடிப்பதில் தவறில்லையே..
 1.       எழும்போதே ஒருவருக்கொருவர் புன்னகையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை.
2.       வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம்.
3.       மனைவிக்கு / கணவனுக்கு வேண்டியவர்களிடம் தன்மையாக நடந்துகொள்ளுங்கள.
4. அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து ஆச்சர்யப்படுத்துங்கள்.
5.       எப்போதும் செய்தித்தாள் அல்லது டிவி பார்த்துக்கொண்டே இருக்காமல், கூடுமானவரை ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேச முயலுங்கள்.
6.       சமையல் முதல் அனைத்து வேலைகளிலும் ஒருவருக்கொருவர் உதவ முற்படுங்கள்.
7.       சாப்பிடும் தருணங்களில் டிவி பார்க்காமல் பேசிக்கொண்டே சமையலை ருசித்து சாப்பிடுங்கள். அது எதிர் தரப்பினரை திருப்தியடையச் செய்யும்.
8.       தொடுதல் மிக முக்கியம். தனிமையான தருணங்களில் இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தலைகோதிவிடுவது, மடியில் தலை வைத்துப்படுப்பது, கை கோர்த்துக்கொள்வது போன்ற தொடுதல்கள் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.
9.       எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்ற எதிர்காலக் கனவுகள் பற்றி ஒருவருக்கொருவர் பேசுங்கள்.
10.    இருவருக்கும் பிடித்த, பொதுவான பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கேளுங்கள். அது யதார்த்த சூழலில் கேட்கப்படும்போது மனதுக்குள் புன்னகை உண்டாக்கும்.
11.    பின்கூட்டி அணையுங்கள். இது உடல் சார்ந்தது மட்டுமின்றி மனரீதியாகவும் நெருக்கத்தினை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
12.    நகைச்சுவையான தருணங்களில் ஒருவருக்கொருவர் விஷயத்தைப் பகிர்ந்து சிரியுங்கள்.
13.    I love you அல்லது I miss you போன்ற க்ரீட்டிங் கார்டுகளை அவ்வப்போது பரிமாறிக்கொள்ளுங்கள்.
14.    ஒருவரின் தேவைகள் என்னவேன்று மற்றொருவர் கேட்கும் முன்பே, அதனைப் புரிந்துகொண்டு நிறைவேற்றுங்கள்.
15.    வாதம் செய்யும்போதோ, அறிவுரை கூறும்போதோ, ஒருவர் சொல்வதை மற்றொருவர் அசட்டை செய்யாது கவனிக்க வேண்டும்.
16.    தனக்குப் பிடித்த விஷயங்களை இன்னொருவர் செய்யும்போது மனம் விட்டுப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.
17.    ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும்போது மற்றொருவரின் பார்வையிலும் இருந்து பார்த்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், தன் வாதம் தான் கடைசியாக இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.
18.    வெளியிலிருப்பின், அழைபேசி மூலம் அவ்வப்போது பேசி அக்கறையை வெளிக்காட்டுங்கள்.
19.    தங்கள் விருப்பங்களை மற்றொருவர் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அவசரப்படுத்தாதீர்கள். பொறுமை அவசியம். அதே போன்று நீ இப்படித் தான் இருக்க வேண்டுமென தன்னுடைய விருப்பங்களை அடுத்தவர் மேல் திணிக்கவும் கூடாது.
20.    ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுங்கள். சுய விருப்பு வெறுப்புக்களை தெரிந்துவைத்துக்கொள்வது மிக முக்கியம்.
21.    எந்த சூழ்நிலையிலும் அவரவர்க்குரிய சுய மரியாதையை கெடுக்கும் வண்ணம் நடக்கக் கூடாது.
22.    நண்பர்கள் உறவினர்கள் போன்ற வெளியாட்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொள்ளக் கூடாது.
23.    உறவினர்கள் இருப்பின், மறைமுகமான, காதல் ஜாடைகளில் பேசிக்கொள்ளுங்கள்.
24.    பிறந்த நாள், காதலர் தினம் போன்ற நாட்களை மறந்துவிடாமல் ஒருவருடன் ஒருவர் ஒன்றாக நேரத்தை செலவழியுங்கள்.
25.    தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், தன் மேலுள்ள குறைகளையோ அல்லது தவறுகளையோ ஒத்துக்கொண்டு மனமார மன்னிப்பு கேட்கப் பழகுங்கள்.
26.    கணவனோ மனைவியோ தம்மிடம் தவறினை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கும்போது அவரைக் குத்திக்காட்டாமல் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டு சகஜநிலைக்குத் திரும்புங்கள்.
27.    முத்தம் என்பது காமம் சார்ந்ததில்லை. அது காதலை வெளிப்படுத்தும் ஊடகமே.. தினமும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளுங்கள்.
28.    தான் என்ன செய்தால் மற்றொருவர் மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை அறியமுடியவில்லையெனில், “நான் என்ன செய்தால் உனக்கு சந்தோசமாக இருக்கும்“என வெளிப்படையாக அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
29.    எப்போதும் பாசிடிவ்வாக யோசியுங்கள்.
30.    வீட்டில், குழந்தைகளிடமும் தன்மையாக இனிமையாகப் பேசுங்கள், பழகுங்கள்.
31.    ஏதேனும் சந்தர்ப்பங்களில் பலவீனமாக உணர்ந்தீர்களானால் அதை தாராளமாக தன் துணையிடம் தெரிவித்து அவருடைய உதவியை ஈகோ பார்க்காமல் ஏற்றுக்கொள்ளலாம்.
32.    வேண்டாவெறுப்பாக இருக்காமல், வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் உண்மையான அக்கறையைக் காட்டுங்கள்.
33.    உங்கள் வாழ்வின் கடந்த கால அனுபவங்களை, அதாவது உங்கள் இருவருக்குள் நடந்த ஸ்வாரஸ்யமான காதல் சம்பவங்களை அவ்வப்போது நினைவுபடுத்தி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள்.
34.    மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துவைத்திருக்க வேண்டும். உடல் சார்ந்த நேரங்களில் கூட, காமத்தை விட காதல் ப்ரதானமாக இருக்க வேண்டும்..
35.    சாதாரணமாக கை கோர்க்கும் பிடியில் கூட உனக்காக நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
36.    ஏதாவதொரு பொதுவான விஷயத்தை தேர்ந்தெடுத்து அதை சேர்ந்து ரசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக இசை, மழை, பௌர்ணமி நிலவு, கவிதைகள், புத்தகங்கள் போன்றவைகள்.
37.    தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறும்போது, உதாரணமாக தலைவலி என்று சொன்னால் “எனக்கு அதுக்கு மேல வலிக்குது“ என்று பதிலளிக்காதீர்கள். உண்மையான அக்கறையுடன் பணிவிடை செய்யுங்கள்.
38.    என்னதான் ஒருவருக்கொருவர் அதிகமாக காதலித்தாலும் அதை வெளிக்காட்டப் பழகுங்கள். மனதிற்குள் வைத்து ஒளிக்கும் காதல் ப்ரயோஜனப்படாது.
 விட்டுக்கொடுப்பதும், புரிந்துகொள்வதும் அந்நியோன்யத்தை வலுப்படுத்தும். ஒருவருக்கொருவர் அவமானமோ வெட்கமோ பார்க்காமல் வெளிப்படையாக இருத்தல், ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும், பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விஷயங்களையும் ஒளிவுமறைவின்றி பகிர்தல் போன்றவைகள் கணவன் மனைவி உறவினை மேலும் வலுப்படுத்தும்.
.
.


53 comments:

கணேஷ் said...

இல்லம் சங்கீதம்ன்னு இருக்க அருமையான வழிமுறைகள் சொல்லி இருக்கீங்க. (கவுன்சலிங் செஞ்ச மாதிரி) சூப்பர்.

சி.பி.செந்தில்குமார் said...

டாக்டர் இந்திரா வாழ்க

ராஜா MVS said...

நல்ல ஒரு ஆலோசனை...

ஒருவருக்கொருவர் புரிதலுக்கான வழிமுறைகள்...

அருமை...

Ganesan said...

ரொம்ப நல்ல இருந்தது :) , கண்டிப்பாக திருமணம் முடிந்ததும் நான் இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.இன்னும் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்:) ஆல் தி பெஸ்ட் இந்திரா.

MANO நாஞ்சில் மனோ said...

மனநல டாக்டர் இந்திராகாந்தி ஸாரி இந்திரா வாழ்க.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

செம ஆலோசனைகள், சூப்பரான சிந்தனை வாழ்த்துக்கள் நன்றிகள்....!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல அறிவுரைகள் தான். நீங்கள் சொல்லாமலேயே எனக்கு நல்லாத் தெரிபவை தான். எனக்கு மட்டும் தெரிந்து என்னங்க பிரயோசனம்!

சரி சரி விடுங்க, நான் ஏதாவது உளறப்போய் அதுவே பெரிய பிரச்சனை ஆகிவிடப்போகுது.

எதையும் தாங்கும் இதயத்துடன் வாழப் பழகி விட்டேன்.

நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

வைரை சதிஷ் said...

நல்ல ஒரு ஆலோசனை டாக்டர்

Ramani said...

நல்ல பயனுள்ள பதிவு
இதில் எதுவும் கடைபிடிக்க முடியாத கடினமான் விஷயம்
ஏதும் நிச்சயம் இல்லை
கடைப்பிடித்தால் நிச்சயம் கணவன் மனைவி உறவு
மேம்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை
மிகச் சிறந்த பதிவைத் தந்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ramani said...

த.ம 4

suryajeeva said...

அருமை

Rathnavel said...

அருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

நாய்க்குட்டி மனசு said...

இன்னும் ரெண்டு போட்டு இருந்தா நாற்பது கட்டளைகள் ஆக்கி இருக்கலாம். இளம் தம்பதிகளுக்கு பயன்படும் பதிவுக்கு படம் மட்டும் ஏன் வயதானதாய்?

ஆர்.சண்முகம் said...

எனக்கு இன்னும் திருமணம் ஆகலை. ஆனாலும் அட்வான்சா படிச்சு தெரிஞ்சுக்குறேன்,,,

ஆர்.சண்முகம் said...

நல்ல தகவல் தான் பாஸ்,,,

F.NIHAZA said...

அருமையான கருத்து....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது எல்லாத்தையும் ஞாபகம் வெச்சுக்கனுமே......

அமர பாரதி said...

நல்ல ஆலோசனைகள். ஆனால் தன்னுடைய மனைவி / கணவனிடம் இவற்றை பின்பற்றுதல் சற்று சிரமம்தான். ;-)

baleno said...

நல்ல ஆலோசனைகள். நன்றி.

கந்தசாமி. said...

நல்ல தகவல் ..)

cheena (சீனா) said...

அன்பின் இந்திரா - ஆலோசனைகள் அத்தனையும் அருமை - கடைப்பிடிக்க எளிது தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

விக்கியுலகம் said...

இம்புட்டா ஆத்தாடி!

வெட்டிப்பேச்சு said...

இது 'அடேங்கப்பா' பதிவு.

வாழ்த்துக்கள்.

vinu said...

informatic.... romantic...... usefull tips

vinu said...

me the 25th agin going to be

vinu said...

25thu

baleno said...

எனக்கு நண்பர் ஒருவர் email பண்ணியிருத்தார் நல்ல அறிவுரைகள் இணையத்தில் கண்டேன் படி என்று. பார்த்தால் உங்கள் அருமையான அறிவுரைகளை இன்னொருவர் களவாடி எடுத்து உங்கள் பெயரை கூட போடாமல் எழுதியிருக்கிறார். வருத்தமாக இருந்தது.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=92495

இராஜராஜேஸ்வரி said...

விட்டுக்கொடுப்பதும், புரிந்துகொள்வதும் அந்நியோன்யத்தை வலுப்படுத்தும்/

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இந்திரா said...

//கணேஷ் said...

இல்லம் சங்கீதம்ன்னு இருக்க அருமையான வழிமுறைகள் சொல்லி இருக்கீங்க. (கவுன்சலிங் செஞ்ச மாதிரி) சூப்பர்.//


நன்றிங்க..

இந்திரா said...

//சி.பி.செந்தில்குமார் said...

டாக்டர் இந்திரா வாழ்க//


இதையே சொல்லி பின்னூட்டம் தேத்துறீங்க செந்தில் சார்...

இந்திரா said...

//ராஜா MVS said...

நல்ல ஒரு ஆலோசனை...

ஒருவருக்கொருவர் புரிதலுக்கான வழிமுறைகள்...

அருமை...//


வருகைக்கு நன்றி..

இந்திரா said...

//Ganesan said...

ரொம்ப நல்ல இருந்தது :) , கண்டிப்பாக திருமணம் முடிந்ததும் நான் இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.இன்னும் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்:) ஆல் தி பெஸ்ட் இந்திரா.//


வருகைக்கும் கருத்துக்கும் எதிர்பார்ப்பிற்கும் நன்றி நண்பரே..

இந்திரா said...

//MANO நாஞ்சில் மனோ said...

மனநல டாக்டர் இந்திராகாந்தி ஸாரி இந்திரா வாழ்க.....!!!//


நன்றி நன்றி நன்றி..

இந்திரா said...

//வை.கோபாலகிருஷ்ணன் //


வருகைக்கு நன்றிங்க..
வருகை தொடரட்டும்..

இந்திரா said...

//வைரை சதிஷ் said...

நல்ல ஒரு ஆலோசனை டாக்டர்//


ம்ம்ம் நன்றிங்க..

இந்திரா said...

//Ramani //

//suryajeeva //

//Rathnavel //


நன்றி நன்றி நன்றி..

இந்திரா said...

//நாய்க்குட்டி மனசு said...

இன்னும் ரெண்டு போட்டு இருந்தா நாற்பது கட்டளைகள் ஆக்கி இருக்கலாம். இளம் தம்பதிகளுக்கு பயன்படும் பதிவுக்கு படம் மட்டும் ஏன் வயதானதாய்?//


இந்த ஆலோசனைகளைப் பின்பற்றினால் வயதானாலும் காதல் நிறைந்த தம்பதிகளாய் இருக்க முடியும்னு சிம்பாளிக்கா சொல்றேங்க.. (ஹிஹி எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு..)

இந்திரா said...

//ஆர்.சண்முகம் //

//F.NIHAZA //கருத்துக்கு நன்றி

இந்திரா said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது எல்லாத்தையும் ஞாபகம் வெச்சுக்கனுமே......//


ஞாபகம் வச்சுகிட்டா பத்தாது.. நடைமுறைப்படுத்தணும்..

இந்திரா said...

//அமர பாரதி said...

நல்ல ஆலோசனைகள். ஆனால் தன்னுடைய மனைவி / கணவனிடம் இவற்றை பின்பற்றுதல் சற்று சிரமம்தான். ;-)//


தரப்பட்டிருக்கும் ஆலோசனைகள் எல்லாமே எளிதானவை தானே..

இந்திரா said...

//baleno //

//கந்தசாமி. //

//cheena (சீனா) //

//விக்கியுலகம் //

//வெட்டிப்பேச்சு //


கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்..

இந்திரா said...

//vinu said...

informatic.... romantic...... usefull tips//


உங்களுக்கு இப்ப அவசியம் தேவைப்படும்.. நோட்ஸ் எடுத்துக்கங்க வினு..

இந்திரா said...

//baleno said...

எனக்கு நண்பர் ஒருவர் email பண்ணியிருத்தார் நல்ல அறிவுரைகள் இணையத்தில் கண்டேன் படி என்று. பார்த்தால் உங்கள் அருமையான அறிவுரைகளை இன்னொருவர் களவாடி எடுத்து உங்கள் பெயரை கூட போடாமல் எழுதியிருக்கிறார். வருத்தமாக இருந்தது.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=92495//


தகவலுக்கு நன்றிங்க.. இப்போது தான் நானும் பார்த்தேன்.. மனதிற்கு கஷ்டமாகத் தான் இருக்கிறது. வெறுமனே “படித்ததில் மனதில் பதிந்தது“ என்று குறிப்பு கொடுத்துள்ளார். என் வலைதள முகவரியும் கொடுத்திருந்தால் நன்றாகயிருக்கும். பெரும்பாலும் நிறையபேர் செய்யும் தவறு தான் இது.
நான் பின்னூட்டம் குடுக்கலாம்னு லிங்கை தேடினேன்..
“You cannot reply to this topic“ அப்டினு வருது..
அவ்வ்வ்வ்..

இந்திரா said...

//இராஜராஜேஸ்வரி said...

விட்டுக்கொடுப்பதும், புரிந்துகொள்வதும் அந்நியோன்யத்தை வலுப்படுத்தும்/

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//


நன்றிங்க..

vinu said...

This post is a copy paste post from the following blog-link!
this post posted on 4th September which is some what at 19:00 hrs and where and which the one i refer over here got the first comment at 16:30 hrs on the 3rd September!

so kindly check the link and give a recognition to it's original Author!!!

Thank you

http://chellakirukkalgal.blogspot.com/2011/10/blog-post.html
this report i filed at

http://www.yarl.com/forum3/index.php?app=core&module=reports&rcom=post&tid=92495&pid=694588&st=

you too can register a complaint at this place!

..சபரி.. said...

\\\..தொடுதல் மிக முக்கியம். தனிமையான தருணங்களில் இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தலைகோதிவிடுவது, மடியில் தலை வைத்துப்படுப்பது, கை கோர்த்துக்கொள்வது போன்ற தொடுதல்கள் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும்..///


உங்கள் தளத்தை இன்று தான் (சு)வாசித்தேன்.. அருமை தோழி..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Very useful tips . . .

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Really very useful tips friend . . . .

இந்திரா said...

//vinu //


தகவலுக்கு நன்றி வினு.. ஏற்கனவே ஒரு நண்பர் இந்தப் பதிவு பற்றி குறிப்பிட்டார். வருந்தச் செய்கிறது. நானும் பார்க்கிறேன்.

இந்திரா said...

//..சபரி.. said...


உங்கள் தளத்தை இன்று தான் (சு)வாசித்தேன்.. அருமை தோழி..//


சுவாசி்த்ததற்கு நன்றி சபரி

இந்திரா said...

//"என் ராஜபாட்டை"- ராஜா //


நன்றி நண்பரே..

dhivi said...

காதல் புரிதலில் உள்ளது என்பதை அழகாய் வெளிபடுத்திய தோழி இந்திரா வுக்கு நன்றி !
இன்று தான் தங்கள் பதிவுகளை படித்தேன் அருமை அருமை
சிறப்பான பதிவுகள் தொடருங்கள் தோழி !
அன்பு தோழி திவ்யா....
எனக்கு இப்படி தான் இருக்க வேண்டும் என தோன்றியது !!
நல்ல வரிகள் அற்புதம்
@
http://ariyaakadhal.blogspot.in

கிரேஸ் said...

அருமைங்க..சரியான எளிமையான வழிகள்..

Related Posts Plugin for WordPress, Blogger...