எங்க ஆபீசர் அறிவாளியாக்கும்ம்ம்..அலுவலகத்துல நிரந்தரப்பணியாளர்களோட அடிப்படை சம்பளம், இன்க்ரிமென்ட், DA, HRA எல்லாத்தையும் விவரமா டைப் பண்ணி, சமீபத்துல இன்க்ரிமெண்ட் வாங்கின தொகையையும் சேர்த்து, ரிப்போர்ட் அனுப்பசொல்லியிருந்தாங்க. Wordல டைப் பண்ணினா கால்குலேசன் பண்றதுக்கு கஷ்டமாயிருக்கும்னு நா அதையெல்லாம் Excelல டைப் பண்ணேன். கூட்டல் மற்றும் சதவிகிதக் கணக்கையெல்லாம் ஃபார்முலா உபயோகிச்சு ஒரு மணிநேரத்துல முடிச்சுட்டு ஆபீசர்கிட்ட சொன்னேன். சரிபார்க்குறேன்னு வாங்கிப்பார்த்தவர், கால்குலேட்டரை எடுத்து ஒவ்வொண்ணா கணக்குப்போட ஆரம்பிச்சாரு. அப்பவே எனக்குத் தெரிஞ்சுபோச்சு, இன்னைக்குப் பொழுது இதுக்கே சரியாய்டும்னு.
Excelல தான் போட்ருக்கேன் சார். ஃபார்முலா உபயோகிச்சுத் தான் பண்ணேன்னு சொன்னாலும் அவரு கேக்கல. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள்.. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சதவிகிதம், கூட்டல் தொகைனு கணக்குப்போட்டு மொத்தம் பார்த்தா, என்னோட ரிப்போட்டுக்கும் கால்குலேட்டர்ல வந்த பதிலுக்கும் வித்தியாசம் வந்துச்சு. ஆபீசர் என்னைய முறைச்சுப்பார்த்துட்டு, ஏதோ தப்பாயிருக்கு இந்திரா.. சரி பண்ணிட்டு வாங்கனு சொன்னார்.
சரினு சொல்லி, எல்லா ஃபார்முலாவையும் திரும்ப சரிபார்த்தேன். சரியாதான் செய்திருந்தேன். இத சொன்னா அவரு ஒத்துக்க மாட்டார்.. இருந்தாலும் சொன்னேன். அவரு கடுப்பாகி, திரும்பவும் கால்குலேட்டர்ல ஒவ்வொண்ணா போட்டுப்பார்த்தார். (அந்தக் கால்குலேட்டரைத் தூக்கி எறியணும்போல தோணுச்சு... பயபுள்ள ஒன்றைமணிநேரமா உக்கார வச்சுட்டானே..). இப்பவும் ஏதோ தப்பா நம்பர் போட்டார்போல. முன்னாடி அவர் சொன்னத விட, அதிகமான தொகை வந்துச்சு. வேறவழியில்லாம திரும்பவும் சரிபார்க்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அரைமணிநேரத்துல முடியவேண்டிய வேலை.. ஆபீசரோட அலப்பறையால மூணு மணிநேரமாகியும் முடியல. ம்ஹூம்.. இது ஆவுறதில்ல.
கொஞ்ச நேரம் கழிச்சு, நா பண்ணிருந்த ரிப்போர்ட்டையே ப்ரிண்ட் எடுத்து நேரா ஆபீசர்கிட்ட குடுத்துட்டு “நீங்க சொன்னது சரிதான் சார். ஒரு நம்பர் தப்பா போட்ருந்தேன். இப்ப சரி பண்ணிட்டேன்“னு சொல்லி நீட்டினேன். “ம்ம்.. நான்தான் சொன்னேன்ல.. எப்பவும் கவனமா வேலைபாரு இந்திரா“னு சொல்லிகிட்டே (சரிதானானு கூடப் பார்க்காம) கையெழுத்துப்போட்டு மேலிடத்துக்கு அனுப்புனாரு. அவங்களும் சரிபார்த்துட்டு, சரியா இருக்குறதா சொன்னாங்களாம். அவரால தான் ரிப்போர்ட் ரெடியாச்சுனு பெருமை பீத்திக்கிட்டார். (ரொம்ம்ம்ப அறிவாளியாச்சே..!).
“போன வாரம் எம்.டியைப் பார்த்தப்ப கூட, உன்னையப் பத்தி பெருமையா சொல்லிவச்சேன். பணி நிரந்தரமாகுறதுக்கு சிபாரிசெல்லாம் பண்ணிட்டு வந்துருக்கேன். நீ என்னடானா இப்டி கவனக்குறைவா இருக்கியே... சரி சரி வேலையைப்பாரு. இனிமேலாவது கரெக்டா ரிப்போர்ட் ரெடி பண்ணப் பழகிக்க“னு சொன்னார்.
எனக்கு சிரிப்பை அடக்க முடியல. போனவாரம் அவரு எம்.டியைப் பார்க்கப் போனப்ப, எம்.டி ஏதோ அவசர மீட்டிங்னு சொல்லி போய்ட்டாராம். ஆபீசரை பார்க்கவேயில்லனு தகவல் வந்துச்சு.
ஊர்ல இருக்குற பெருமை பீத்தகலையான்களும், அதிமேதாவிகளும் ஆபீசர்களா வந்து தொலைச்சுருக்கானுக..
.
.

Comments

ஹி..ஹி..ஹி...என்ன பண்றது..ஒரு சில ஆளுங்க இந்த மாதிரி தான் இருக்காங்க
ஆபிசர்ன்னா அப்படித்தான்...

நீயும் நாளைக்கு ஆபிசர் ஆகும்போது தான் தெரியும்....

உனக்கு கீழ இருக்கறவங்கள எப்படி வேலை வாங்கப்போறீங்கன்னு...
ஊர்ல இருக்குற பெருமை பீத்தகலையான்களும், அதிமேதாவிகளும் ஆபீசர்களா வந்து தொலைச்சுருக்கானுக..


பாவம் வயித்து பொழைப்பு என்ன செய்யமுடியும்

அரசு இயந்திரத்துல தவறிப்போய் சிக்கிக்கிட்ட (என்னைப்போல) விவரமான என் பிரண்டு இந்திரா மாதிரியானவங்க பாவம்தான்... வேறென்ன சொல்ல...
தலைப்பை பார்த்து நம்ம புட் ஆபிசரை நக்கல் பண்ணுறீங்கன்னு நினைதேன் இந்திரா ............
Robert said…
உங்க ஆபிசர் யாரும் ஏமாத்த முடியாத ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான ஆபிசர் போல!!ம் ம் ம்...
இவராவது பரவாயில்ல.கால்குலேட்டர் யூஸ் பண்ணமாட்டேன்.கையாலதான் போடுவேன்னு 14 க்கு 4 மீதி 1 போட்டுட்டு பீத்திக்கிறவங்களும் இருக்காங்க.
Ramani said…
அரசு அலுவலகம் என்றால்
அதிகாரிக்குரிய தகுதியே இப்படி இருப்பதுதானே
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு.
நாமே செய்யிறதில பிழைகண்டு பிடிக்கிறதுதான் மேலதிகாரிங்கோட வேலையே......
நான் படுகிற + பட்ட பாடுகள்.....அய்யோ
vinu said…
@indra-officer


kindly read this article......
selvan said…
அவருக்கு உங்க கிருக்கள்கள காட்டுங்க,
பணி நிரந்திர வாய்ப்புக்கள் அதிகம்....!?
உங்க ஆபிசர் கணக்கைக் கால்குலேட்டரில் போட்டு சரிபார்ப்பது தவறு என்று சொல்கிறீர்களா?

அது தவறே இல்லை...

என்ன தான் எக்ஸல், பிக்ஸல் என்று நாம் வேகமாக முடித்தாலும், அதில் உள்ள சில தவறுகளை நாம் கண்டறிவது கடினம்.. சரிபார்த்தால் தவறுகள் தெரிந்து விடும்.

நீங்க போட்ட Formula எல்லா செல்களிலும் இருக்கா என்று எப்படி சோதிப்பீர்கள்?

அவர் செந்த தவறு தவறாக உள்ளிட்டது தான்.
மற்றப்படி, ஒரு கணக்கை வேறு வகையில் (கால்குலேட்டர்\ மனக்கணக்கு \ வேறு பயன்பாடு\ வேறொரு கணிணி) சரிபார்ப்பதில் தவறில்லை!!

This comment has been removed by the author.
இதுவும் ஒரு அனுபவம்தான்! :))
அவ்வளவு...
ஸ்டிரிக்டா நடந்துகிட்டாரு ஆபிசரு...
Anonymous said…
ஹீ.ஹீ... நல்லா டெக்னிக்கா அட்டேக் பண்ணி இருக்கீங்க!

ஆனா அவரு உங்களவிட டெக்னிக்கா இருக்கார்! நாட்டுல பல கேஸ் இப்டித்தான் அலையுது! நாமதான் உங்கள மாதிரி உஷாரா இருக்கனும்:))))

---

www.sudarvizhi.com
அதிமேதாவி ஆபீசர் !!