Tuesday, 16 October 2012

தூக்கம் – ஒரு பார்வைஇப்போதைக்கு இருக்கும் சூழலைப் பார்த்தால், இருபத்திநான்குமணிநேர மின்வெட்டை அமுல்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த இம்சைக்கு நடுவே தூக்கம் என்பதே கஷ்டமான விஷயமாய்டுச்சு. நம்மகிட்ட யாராவது வந்து, “நல்லாத் தூங்கினேன்“னு சொன்னா, நாம சொன்னவனை பொறாமையாகப் பார்க்கிறோம். அந்த தூக்கத்தைப் பற்றி, நான் படித்த ஒரு சில தகவல்களை இங்கே பகிர்ந்துக்குறேன்.
சாதாரணமாய் தூக்கம் இரண்டு வகைப்படும். ஒன்று டீப் ஸ்லீப் (Deep Sleep)  எனப்படும் Orthodox Sleep.  மற்றொன்று (Dreaming Sleep) ட்ரீமிங் ஸ்லீப் எனப்படும் பாரடாக்ஸியல் ஸ்லீப் (Paradoxial Sleep).
இந்த பாரடாக்ஸ் எனப்படும் நிலையில், உள்மனம் அரைகுறை விழிப்பு நிலையில் இருக்கும். கண் மூடி இருந்தாலும், உள்ளுக்குள் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டேயிருக்கும். இதைத்தான் REP (Rapid eye movement)  என்பார்கள். ஆர்தடாக்ஸ் தூக்கம் NREP (Non rapid eye movement) எனப்படும்.
நமது மொத்த தூக்கத்தில் 20 சதவிகித்த்தை பாரடாக்ஸ் ஸ்லீப்பும் 80 சதவிகித தூக்கத்தை ஆர்தடாக்ஸும் பங்கு போட்டுக் கொள்கின்றன.
தூக்க நிலையில் இரண்டும் மாறி மாறி வருகின்றன. தூக்க நேரத்தில் நாலாவது சர்க்கிள் ஆர்தடாக்ஸ் ஸ்லீப் வரும் போது, சட்டென்று எழுந்திருக்க முடியா நிலையில் உடல் உறுப்புகள் அசைவுகள் கட்டுப்பட்டு இருக்கும்.
நம் இந்திய நேரப்படி ஆர்தடாக்ஸ் ஸ்லீப் எனப்படுவது விடியற்காலை நான்கிலிருந்து ஐந்து. இந்த நேரத்தில் தான் திருடர்கள் அதீத விழிப்பு நிலையில் அகப்பட்டதை சுருட்டுகிறார்கள்.
உடம்பின் தசை நார்கள் நன்கு ரிலாக்ஸாவது பாரடாக்ஸியல் ஸ்லீப்பில் தான். பாரடாக்ஸியல் ஸ்லீப்பில் கண் பாப்பா மட்டும் லெஃப்ட் ரைட் போடுவதில்லை. உடம்பின் சில உறுப்புகளும், ஏன் பல உறுப்புகளும் அசையும். பாரடாக்ஸியல் ஸ்லீப்பில் இருக்கும் பூனைகள் வால்களை ஆட்டிக் கொண்டே இருக்குமாம். இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு, மூளையின் வேகத்துடிப்பு எல்லாம் இந்த பாரடாக்ஸியல் நிலையில் தான் ஏற்படும்.
இரண்டு தூக்க நிலைகளுமே மனிதனுக்கு அவசியம் தான். பாரடாக்ஸியல் தூக்கம் வரவில்லை, கனவுகள் வருவதில்லை என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இரண்டுமே நார்மலான தூக்க நிலைதான்.
இந்த பாரடாக்ஸியல் ஸ்லீப் நிலையில்தான் பெரியவர்கள் இருப்பார்கள். வயது ஏற ஏற வயதானவர்களின் மூளையின் செயல்வேகம் அதிக வேகத்துடன் விழிப்பு நிலையிலேயே இருக்கும். எழுபது வயதைத் தாண்டினாலே ஆர்தடாக்ஸ் ஸ்லீப் அவுட்தான்.
இரவில் மயக்க நிலையில் எதிரே வருபவர் முகம் கூட தெரியாத நிலையில் தூக்கத்தில் நடப்பதும் இவர்கள்தாம். மூளைக்கு உள்ளே பதுங்கியிருக்கும் ஆர்கனஸைர் முந்தைய நாளின் புரோக்ராம்களை நினைவில் உசுப்பி விட்டுக் கொண்டே இருக்கும். இதனால் குழப்ப சிந்தனையுடன் நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உங்கள் வீட்டில் இப்படி முதிய ஆசாமிகள் இருந்தால் தகுந்த மருத்துவரிடம் அழைத்துப் போய் சிகிச்சை பெற்று வாருங்கள். நீங்களாக மானாவாரியாக மருந்துக் கடைகளில் கிடைக்கும் தூக்கமாத்திரைகளை வாங்கித் தராதீர்கள். அது விபரீத பின்னடைவுகளை விளைவிக்கும்.
.
(சுப்ரஜா எழுதிய “எதிர்பாராதது“ புத்தகத்தில் படித்தது)
.
.

17 comments:

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல தகவல்...உங்கள் பகிர்வுக்கு நன்றி.....


நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

முத்தரசு said...

ஆஅவ்.....தூக்கம் வருது

பால கணேஷ் said...

தூக்கத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பகிர்வு. அருமைங்க.

T.N.MURALIDHARAN said...

தூக்கம் தூக்கமா வருது.பின்னூட்டம் கூட போட முடியல. மேடம்.

T.N.MURALIDHARAN said...

த.ம. 1

மாதேவி said...

நல்ல பகிர்வு.

காஞ்சி முரளி said...

நல்ல
பயனுள்ள பதிவு...

வாழ்த்துக்கள்...

நான் அவ்வப்போது
நண்பர்களிடம்...
ஏன்?... அனைவரிடமும்..
பயன்படுத்தும் வார்த்தை...

”எனக்கென்னடா... நல்லா... நிம்மதியா... தூங்குறேன்னு”

என்னைப் பொறுத்தவளவில்...

உலகில்..
மாபெரும் செல்வந்தன் யார் என்றால்..?
மகிழ்ச்சியாய் யார் என்றால்...?

ஆழ்தூக்கம் தூங்குபவனே...

என்ன... ஓகேவா...?

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு...

நிம்மதியான நல்ல தூக்கம் = சுறுசுறுப்பின் ஆணி வேர்

tm3

சிட்டுக்குருவி said...

தெரியாத பல தகவல்கள்
பிரயோசனமான பதிவு பகிர்வுகு நன்றி

காஞ்சி முரளி said...

நல்ல பதிவு...

இரவில் நன்றாக தூங்குபவனே மாபெரும் செல்வந்தன்... மகிழ்ச்சியாய் வாழ்பவன்...
அவன் பிச்சைக்காரனாய் இருந்தாலும் சரி... என்பது என் எண்ணம்....

இரவின் புன்னகை said...

அருமை...

எனக்கு தூக்கம் வருது, நான் கிளம்பறேன்... (ஆவ்)

தா.முரளிதரன் said...

எங்க என்னோட கமெண்ட்டெல்லாம் காணாமப்போகுது...

ஆஹா...
யாரோ சூனியம் வச்சிருக்காங்கப்பா...

தா.முரளிதரன் said...

என்னாச்சு...
என்னோட கமெண்ட்டு காணாம போகுது...

காஞ்சி முரளி said...

வாழ்க்கையில்... நீ...
வாங்கி வந்தது வரமா... சாபமா...?
என்றால்....
“தூக்கம்” என்பது வரம்....

அதை பெற்றவன்தான் ‘மனிதன்’...

இராஜராஜேஸ்வரி said...

(சுப்ரஜா எழுதிய “எதிர்பாராதது“ புத்தகத்தில் படித்தது nice..

vinu said...

நன் நல்லாத் தூங்கினேன்“

இந்திரா said...

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே..

Related Posts Plugin for WordPress, Blogger...