ஒரு மழைநாளில்..


ஒரு மழைநாளில்
சாரலின்வழி தீண்டிப்போனது
உன் ஞாபகங்கள்.

துண்டித்த இணைப்பின்கீழ்
வெகுநேர அழுகைகளாய்
நீந்திச்செல்கிறது சில கோபங்கள்.

தவறவிட்ட வார்த்தைகளுக்குள்
அசௌகரியப்படுத்திச் செல்கிறது
மெலிதான பிரளயங்கள்.

கழிவறைச் சுவற்றுக்குள் 
அசூயையாய் திணறிக்கொண்டிருக்கிறது
நாற்றம் கலந்த கண்ணீர்த் துளிகள்.

நூலிழையின் முடிச்சொன்றில்
சிறகுலர்த்திப் பறக்கிறது
வண்ணமில்லாப் பூச்சியொன்று..
.

Comments

Ramani S said…
ஆம் ஒரு சூழலில் காயமாகித் தழும்பாகிவிட்ட
ஞாபகங்கள் மீண்டும் அதே சூழல் குறுக்கிட
புண்ணாகித் துன்புறுத்துதல் யதார்த்தமானதே
மனம் கவர்ந்த கவிதை வாழ்த்துக்கள்
அருமை....................! வாழ்த்துக்கள்....
உணர்வுகள்
உணர்சிகள் என்று
நற்கலவையாய்
அருமையான கவிதை...