சதை தேடும் சாக்கடைகள்..


பேருந்துகளிலும் பொது இடங்களிலும்
பார்வையாலேயே புணர்கிறாய் யாரோ ஒருத்தியை..!

அலுவலக விபரங்கள் சொல்வதாய்
இரட்டை அர்த்த மழை பொழிகிறாய்..!

யாரையோ கற்பனையாய் துகிலுரித்து சந்தோசப்படுகிறாய்..!

எதிர்வருபவளின் ஸ்தன மேடுகளையும் இடுப்பு வளைவுகளையும்
கேலி செய்தபடி ஏக்கம் தீர்க்கிறாய்..!

யதேச்சையாய் இடிப்பதாய், தவறுதலாய் தொடுவதாய்
சாமர்த்தியமாய் நகர்ந்து செல்கிறாய்...!

இறுதியாய் 
அம்மாவுக்குப் புடவையும் சகோதரிக்குப் பூவும் வாங்கியபடி
வேசைத்தனங்களின் ஒட்டுமொத்த வடிவமாய்..!!
.
.

Comments

அம்மாவும் சகோதரியும் இந்த நாய்களுக்கு இருக்காது...
பாராட்ட வார்த்தைகள் இல்லை .
மிகச் சரியாகப் புரிந்து வைத்துள்ளீர்கள் !
சபாஷ் !
எல்லாம் ஹார்மோன்களின் ஆட்டம் .
அதுதான் பல்வேறு ஆட்டங்களின்
காரணமாகத் தற்போது குறைந்து வருகிறதே ?!
சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான் ...
நச்...


இதுக திருந்தாதுக...
NSK said…
பாதகம் செய்வோரைக் கண்டால் நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா. --(நம்ம பாரதி சொன்னது)
நம் பெண்ங்களுக்கு பேச்சில், எழுத்தில் இருக்கும் தைரியம்,நேரில் எதிர்கொள்வதில் இல்லை என்பது வருத்தமான விசயம்
அதற்க்கு ஆண்கள் மட்டும் தான் காரணமா
ஆண்கள் இப்படின்னா பெண்கள் எப்படி...
ezhil said…
இதைவிட அழுத்தமாகச் சொல்லிவிட முடியாது....
சாட்டையடி...