Thursday, 6 January 2011

பொசசிவ் என்ற போர்க்களம்..ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி.. பொதுவா இந்த குணம் இல்லாத யாரையும் பாக்க முடியாது. சின்ன சின்ன விசயத்துல கூட நம்முடைய பொசசிவ் குணம் நம்மளையும் அறியாம வெளிப்படும். உதாரணத்துக்கு சின்ன குழந்தைங்க தங்களோட விளையாட்டுப் பொருட்கள அடுத்த சிறுவர்கள் எடுத்தா கோவப்பட்டு புடுங்கிடுவாங்க. அதுல கூட பொசசிவ் இருக்கு. அது தப்புனு சொல்ல முடியாது. மனிதர்களுக்கே இருக்குற இயற்கையான குணம் தான். ஆனா வாழ்க்கைல நாம எந்த சூழ்நிலைல எப்படி அந்த குணத்த வெளிப்படுத்துறோம்குறதுல தான் இருக்கு பிரச்சனை.
நீ ஒரு பறவையை நேசிப்பது நிஜமெனில் அதை சுதந்திரமாய் பறக்க விடு.
அது உன்னை நேசிப்பது நிஜமெனில் உன்னிடமே திரும்பி வரும்னு ஒரு கவிதை உண்டு.
இதை யாரும் செய்யலாம். ஆனா அந்தப் பறவை திரும்ப வருமானு யோசிச்சு அது என்ன பண்ணுதுனு கண்காணிச்சுகிட்டே இருக்குறவங்களும் இருக்காங்க..
நாம் நேசிப்பவர்கள் தன்னிடம் பேச வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. தன்னிடம் மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பது தான் பொசசிவின் ஆரம்பம். (எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா?? கஜினி சூர்யா சொன்ன டைலாக்க கொஞ்சம் மாத்தி சொல்லிருக்கேங்க..)
அதிகமான அன்போட வெளிப்பாடு தான் பொசசிவ்னு சிலர் சொல்லலாம். இது வார்த்தைக்கு வேணும்னா அழகா தோணலாம். ஆனா அடிப்படைல யோசிச்சோம்னா ஒரு வித தாழ்வு மனப்பான்மையும் பொறாமையும் நம்பிக்கையின்மையும் கலந்த வெளிப்பாடு தான்னு தோணுது.
நாம ரொம்ப நேசிக்கிறவங்க வேற ஒருத்தர் கூட பேசும்போதும் பழகும்போதும் அந்த மூன்றாவது நபர் மேல ஒருவித கோபம் உண்டாகும். அவங்கள விட நாம எந்த விதத்துலயும் குறையா இல்லயேனு நமக்கு நாமே கேள்வி கேட்டுக்குவோம். அவங்களப் பத்தி பேச்செடுத்தாலே எரிஞ்சு விழுவோம். இது காதலர்களுக்கிடைல அதிகமா நடக்கும்.
தன் காதலி ஒரு பையன்கிட்டயோ, அல்லது காதலன் ஒரு பொண்ணுகிட்டயோ சாதாரணமாப் பேசுறத கூட அவங்க விரும்புறதில்ல.
அத விட.. அவங்க செல்போன்ல வெய்ட்டிங் கால் வந்துச்சுனா போதும்.. யார் கூட பேசிகிட்டு இருந்த? எதுக்கு பேசினனு கேட்டுக் கேட்டுக் கொன்னெடுத்துடுவாங்க.
இது ஆரம்ப நாட்கள்ல சாதாரணமான வாக்குவாதமா ஆரம்பிச்சு நாளாக நாளாக சந்தேகமா மாறுது. நமக்குப் பிடிச்சவங்க நம்மளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நெனக்கிறது தப்பில்ல. அதே சமயத்துல நம்மளோட விருப்பங்கள அவங்கமேல திணிக்கிறது தான் தவறு. இது அடுத்தவங்களோட சுதந்திரத்த பறிக்கிற மாதிரியான செயல் தான்.
காதலிலும் நட்பிலும் இந்த பொசசிவ் குணத்தின் சதவிகிதம் அதிகமாவே இருக்கு. இதுல ஆண் பெண்ணுங்குற பாகுபாடெல்லாம் இருக்குறதில்ல. இங்க பரஸ்பர புரிதல்ங்குறதே இல்லாம போய்டுது.
தனக்குத் தானே ஒரு வட்டத்தைப் போட்டுகிட்டு அடுத்தவங்களையும் அந்தக் கோட்டுக்குள்ளயே இருக்கணும்னு கட்டாயப்படுத்துறாங்க. இது ஒரு நிலைக்கு மேல வெறுப்பைத்தான் உண்டாக்குது.
அந்த மாதிரி சூழ்நிலை ஏற்படும்போது தான் ஒருத்தருக்குப் பிடிக்காத விசயத்த அவங்களுக்குத் தெரியாம மறச்சு செய்யணும்குற கட்டாயம் உண்டாகும். அதாவது நமக்கு ரொம்பப் பிடிச்சவங்க, நமக்குப் பிடிக்காதவங்க கூட பேசுறது நமக்குப் பிடிக்கலைனு சொல்லும்போது, நமக்குப் பிடிச்சவங்க, பிடிக்காத அந்த நபர் கூட நமக்குத் தெரியாம பேசுற சூழ்நிலை உருவாகும்னு சொல்றேன். (தெளிவாப் புரிஞ்சிருக்குமே..).
இன்னும் சொல்லப் போனா இந்தப் பொசசிவ் குணத்தால எந்த சந்தோசமும் நிம்மதியும் வந்துடப்போவதில்ல. மாறாக சண்டையும் மன அழுத்தமும் பிரிவும் தான் வரும்.
ஆனாலும் இந்தப் பிரச்சனைக்கு (நிரந்தரமான அல்லது தற்காலிகமான) பிரிவு மட்டுமே இதுக்கு சரியான தீர்வாகாது. சரியான புரிதலும் பரஸ்பர நம்பிக்கையும் இருந்தாலே போதும். குறிப்பா ஈகோ பாக்காம தங்களோட கோபங்கள தள்ளிவச்சுட்டு ஒருத்தருக்கொருத்தர் மனசு விட்டு வெளிப்படையா பேசினாலே பிரச்சனை தீர்ந்துடும்.
.
.

71 comments:

பாரத்... பாரதி... said...

தன்னிடம் மட்டும் என்று நினைப்பது உறவின் ஆரம்ப கால கட்டத்தில் மட்டும் இருக்கிறது எனில் பரவாயில்லை. ஆனால் அது தொடர்கிறது என்றால் எங்கோ புரிதலில் இடைவெளி இருக்கிறது என்று தான் அர்த்தம்.

பாரத்... பாரதி... said...

படம் வேற கிடைக்கலங்களா?

மங்குனி அமைச்சர் said...

good one

மங்குனி அமைச்சர் said...

பெரியவங்க சொல்றாங்க//

அடடே பெரியவுங்க தான் சொல்லனுமா ??? இது தெரியாம நான் சொல்லிட்டனே .............. நான் இன்னும் குயந்த புள்ளைங்கோ

R.Gopi said...

பதிவு வழக்கம் போல அருமை இந்திரா..

//”நீ ஒரு பறவையை நேசிப்பது நிஜமெனில் அதை சுதந்திரமாய் பறக்க விடு.
அது உன்னை நேசிப்பது நிஜமெனில் உன்னிடமே திரும்பி வரும்”னு ஒரு கவிதை உண்டு//

அதிலும் இந்த கவிதை வரிகள் படு சூப்பர்....

வாழ்த்துக்கள் இந்திரா...

கவிதை காதலன் said...

you can't find the difference between affection and love until possessiveness enters

vinu said...

neenga eppo mananalam kuriththap pathivugal ellam poda aarambicheeeenga

தமிழரசி said...

எல்லாம் தெளிவா தான் சொல்லியிருக்கீங்க..பொசசீவ் அதீத அன்பின் வெளிப்பாட்டின் ஒரு பகுதி அது நம்பிக்கையில்லாமலும் நடக்கிறது.. நட்பு தானே என விட்டு கொடுத்து பார்த்தால் நம்பிக்கை நசித்து போகும் அளவு நடந்து விடுகிறது.அலைபாயும் மனங்கள் மேல் அன்பை காட்டி அவஸ்தை படுவதை விட.....இந்த கான்செப்ட்ல எழுதனுமுன்னு நான் எழுதி சொதிப்பியிருக்கிறேன் இந்திரா..ஏன்னா உண்மையா இருந்து நான் வீணாப் போனவள்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு கமென்ட் போடணுமா? அப்படியே போட்டாலும் என்ன கமெண்ட் போடணும்? # டவுட்டு

அஞ்சா சிங்கம் said...

அருமையான கட்டுரை இந்த குணம் இயற்கையானது நாய்க்குட்டிகளிடம் கூட நீங்கள் பார்க்கலாம் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் என்று நினைக்கிறன் ..............

Balaji saravana said...

மிகச் சிறப்பான புரிதலோட வந்திருக்கு இந்தக் கட்டுரை.
சந்தேகப் பேய் வாசல் நுழையும் இடமே பொசசிவ்.

வால்பையன் said...

இருபாலருக்கும் பொருந்தும் வகையில் நடுநிலையான பார்வை!

பட்டாபட்டி.... said...

நல்ல அலசல்...

சங்கவி said...

பொசசிவ் குணம் அதிக அன்பின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்..

மதார் said...

என்னங்க சொல்றது தாழ்வு மனப்பான்மை என்றும் சொல்ல முடியாது அது அளவு கடந்த பாசத்தின் விளைவுதான் . நம் பாசத்தை புரிந்து கொள்ளவில்லையே என்ற நிலையில்தான் பொசசிவ்நெஸ் ஆரம்பிக்கிறது .

☀நான் ஆதவன்☀ said...

98% இந்த கட்டுரையுடன் ஒத்து போகிறேன். நல்ல அலசல்ங்க

karthikkumar said...

R.Gopi said...
பதிவு வழக்கம் போல அருமை இந்திரா..

//”நீ ஒரு பறவையை நேசிப்பது நிஜமெனில் அதை சுதந்திரமாய் பறக்க விடு.
அது உன்னை நேசிப்பது நிஜமெனில் உன்னிடமே திரும்பி வரும்”னு ஒரு கவிதை உண்டு//

அதிலும் இந்த கவிதை வரிகள் படு சூப்பர்....

வாழ்த்துக்கள் இந்திரா.///
கவிதை சூப்பர்தாங்க... ஆனா எழுதினது இவங்க இல்ல... :)

அருண் பிரசாத் said...

தத்துவ பதிவு #215643


நல்லா அலசி இருக்கீங்க

அம்பிகா said...

பொஸஸிவ்னஸ் என்பது அதீத அன்பின் வெளிப்பாடு போல் தோன்றினாலும், ஆரம்பத்தில் அதை ரசித்தாலும், நாளடைவில் சந்தேகமாக, பொறாமையாக உருவெடுத்து, தன் துணையை பாடாய் படுத்துவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. பொஸஸிவ்னஸ் என்ற பெயரில் அடிமைப் படுத்துவதும் நடக்கிறது. மிக அவசியமான, அருமையான பதிவு.

இந்திரா said...

//பாரத்... பாரதி... said...

தன்னிடம் மட்டும் என்று நினைப்பது உறவின் ஆரம்ப கால கட்டத்தில் மட்டும் இருக்கிறது எனில் பரவாயில்லை. ஆனால் அது தொடர்கிறது என்றால் எங்கோ புரிதலில் இடைவெளி இருக்கிறது என்று தான் அர்த்தம்.//

உண்மை தாங்க..

//படம் வேற கிடைக்கலங்களா?//

தலைப்புக்கு இந்தப் படம் பொருந்துச்சு.. அதுனால தான் செலக்ட் பண்ணேன்.

இந்திரா said...

//மங்குனி அமைச்சர் said...

good one//


என்ன அமைச்சரே..
ரொம்ம்ம்ப ஆணியோ??

இந்திரா said...

//R.Gopi said...

பதிவு வழக்கம் போல அருமை இந்திரா..

//”நீ ஒரு பறவையை நேசிப்பது நிஜமெனில் அதை சுதந்திரமாய் பறக்க விடு.
அது உன்னை நேசிப்பது நிஜமெனில் உன்னிடமே திரும்பி வரும்”னு ஒரு கவிதை உண்டு//

அதிலும் இந்த கவிதை வரிகள் படு சூப்பர்....

வாழ்த்துக்கள் இந்திரா...//


நன்றி கோபி.
அந்தக் கவிதை வரிகள் என் கற்பனை அல்ல, ஒரு திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். அதுவும் ஒரு நண்பர் மூலமாகத் தான் தெரிந்தது.

Chitra said...

nice post. well-written. :-)

இந்திரா said...

//மங்குனி அமைச்சர் said...


அடடே பெரியவுங்க தான் சொல்லனுமா ??? இது தெரியாம நான் சொல்லிட்டனே .............. நான் இன்னும் குயந்த புள்ளைங்கோ//


இன்னும் எத்தனை வருசத்துக்கு தான் சொல்லுவீங்கனு நானும் பாக்குறேன்.

இந்திரா said...

//vinu said...

neenga eppo mananalam kuriththap pathivugal ellam poda aarambicheeeenga//


கொஞ்சம் தமிழ்ல சொல்றீங்களா வினு??

இந்திரா said...

//கவிதை காதலன் said...

you can't find the difference between affection and love until possessiveness enters//


உண்மை தான். ஆனாலும் இத நீங்க தமிழ்ல சொல்லியிருந்தா இன்னும் அழகா இருந்திருக்குமே..

இந்திரா said...

//தமிழரசி said...

எல்லாம் தெளிவா தான் சொல்லியிருக்கீங்க..பொசசீவ் அதீத அன்பின் வெளிப்பாட்டின் ஒரு பகுதி அது நம்பிக்கையில்லாமலும் நடக்கிறது.. நட்பு தானே என விட்டு கொடுத்து பார்த்தால் நம்பிக்கை நசித்து போகும் அளவு நடந்து விடுகிறது.அலைபாயும் மனங்கள் மேல் அன்பை காட்டி அவஸ்தை படுவதை விட.....இந்த கான்செப்ட்ல எழுதனுமுன்னு நான் எழுதி சொதிப்பியிருக்கிறேன் இந்திரா..ஏன்னா உண்மையா இருந்து நான் வீணாப் போனவள்....//


பழைய நினைவுகளின் பாரங்களைத் தூக்கி எறியுங்கள் தமிழ். எப்போதும் மனதை லேசாக வைத்துக்கொள்ள முயலுங்க. வாழ்க்கை சுகமாவதற்கு முதல் தேவை அதுதான்.

இந்திரா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு கமென்ட் போடணுமா? அப்படியே போட்டாலும் என்ன கமெண்ட் போடணும்? # டவுட்டு//


ஓகே நீங்க கிளம்பலாம்..

இந்திரா said...

//வால்பையன் said...

இருபாலருக்கும் பொருந்தும் வகையில் நடுநிலையான பார்வை!//


நன்றி வால்.

இந்திரா said...

//அஞ்சா சிங்கம் said...

அருமையான கட்டுரை இந்த குணம் இயற்கையானது நாய்க்குட்டிகளிடம் கூட நீங்கள் பார்க்கலாம் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் என்று நினைக்கிறன் ..............//

அப்படினும் சொல்ல முடியாது. இதுல ஆண் பெண் பாகுபாடே இல்லங்குறது தான் என்னோட கருத்து.

வார்த்தை said...

ம்...

இந்திரா said...

//பட்டாபட்டி.... said...

நல்ல அலசல்...//


நன்றி பட்டா

இந்திரா said...

//Balaji saravana said...

மிகச் சிறப்பான புரிதலோட வந்திருக்கு இந்தக் கட்டுரை.
சந்தேகப் பேய் வாசல் நுழையும் இடமே பொசசிவ்.//


சரியாக சொன்னீங்க பாலாஜி. ஆனாலும் இந்த குணம் பெரும்பாலும் எல்லாருக்குமே இருக்கத் தான் செய்யும்.

இந்திரா said...

//☀நான் ஆதவன்☀ said...

98% இந்த கட்டுரையுடன் ஒத்து போகிறேன். நல்ல அலசல்ங்க//


98 சதவீதமா???
நன்றி ஆதவன்.

இந்திரா said...

//சங்கவி said...

பொசசிவ் குணம் அதிக அன்பின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்..//


அந்த அன்பே பிரச்சனையாகவும் மாறிவிடுகிறதே..

இந்திரா said...

//மதார் said...

என்னங்க சொல்றது தாழ்வு மனப்பான்மை என்றும் சொல்ல முடியாது அது அளவு கடந்த பாசத்தின் விளைவுதான் . நம் பாசத்தை புரிந்து கொள்ளவில்லையே என்ற நிலையில்தான் பொசசிவ்நெஸ் ஆரம்பிக்கிறது .//


இது ஒருவித அடக்குமுறையின் முயற்சினும் சொல்லலாம்.

இந்திரா said...

//அருண் பிரசாத் said...

தத்துவ பதிவு #215643


நல்லா அலசி இருக்கீங்க//

அட.. அவ்ளோ தத்துவப் பதிவு வந்திடுச்சா???
நல்லா கணக்குப் பண்றீங்க அருண்.

இந்திரா said...

//karthikkumar said...


கவிதை சூப்பர்தாங்க... ஆனா எழுதினது இவங்க இல்ல... :)//


அத பதிவுலயே நா சொல்லிட்டேனே கார்த்திக். ஆனாலும் உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்குங்க. அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்க.

இந்திரா said...

//வார்த்தை said...

ம்...//


கருத்துக்கு (!!!) நன்றிங்க

இந்திரா said...

//Chitra said...

nice post. well-written. :-)//


நன்றி சித்ரா

இந்திரா said...

//அம்பிகா said...

பொஸஸிவ்னஸ் என்பது அதீத அன்பின் வெளிப்பாடு போல் தோன்றினாலும், ஆரம்பத்தில் அதை ரசித்தாலும், நாளடைவில் சந்தேகமாக, பொறாமையாக உருவெடுத்து, தன் துணையை பாடாய் படுத்துவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. பொஸஸிவ்னஸ் என்ற பெயரில் அடிமைப் படுத்துவதும் நடக்கிறது. மிக அவசியமான, அருமையான பதிவு.//

கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி அம்பிகா.

வால்பையன் said...

இன்னும் உள்ளாய்ந்து நான் ஒரு பதிவு போடலாமா!?

karthikkumar said...

அருண் பிரசாத் said...

தத்துவ பதிவு #215643


நல்லா அலசி இருக்கீங்க//


துனிகளையா? டவுட்டு...

சௌந்தர் said...

நல்லா தெளிவா சொல்லி இருக்கீங்க நிறைய பேருக்கு இது உதவும் நானும் ஒருத்தருக்கு இதை காண்பிக்க வேண்டும்

காஞ்சி முரளி said...

//ஆனாலும் இந்தப் பிரச்சனைக்கு (நிரந்தரமான அல்லது தற்காலிகமான) பிரிவு மட்டுமே இதுக்கு சரியான தீர்வாகாது. சரியான புரிதலும் பரஸ்பர நம்பிக்கையும் இருந்தாலே போதும். குறிப்பா ஈகோ பாக்காம தங்களோட கோபங்கள தள்ளிவச்சுட்டு ஒருத்தருக்கொருத்தர் மனசு விட்டு வெளிப்படையா பேசினாலே பிரச்சனை தீர்ந்துடும்.///

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க...!

நடக்கணுமே...!

ஜெ.ஜெ said...

யப்பா... நமக்கு இந்த பிரச்சனை இல்லப்பா....

நல்ல பதிவு இந்திரா... :)

இந்திரா said...

//karthikkumar said...

அருண் பிரசாத் said...

தத்துவ பதிவு #215643


நல்லா அலசி இருக்கீங்க//


துனிகளையா? டவுட்டு...//


படிக்கிற காலத்துல இப்படி டவுட்டு கேட்ருந்தாலாவது ஏதோ உருப்ட்ருக்கலாம்ல..

இந்திரா said...

//வால்பையன் said...

இன்னும் உள்ளாய்ந்து நான் ஒரு பதிவு போடலாமா!?//


ம்ம்ம் சீக்கிரம் எழுதுங்க.
கும்மியடிக்க வந்துகிட்டே இருக்கோம்.

இந்திரா said...

சௌந்தர் said...

நல்லா தெளிவா சொல்லி இருக்கீங்க நிறைய பேருக்கு இது உதவும் நானும் ஒருத்தருக்கு இதை காண்பிக்க வேண்டும்////


காண்பியுங்கள் சௌந்தர்.
எப்டியோ.. அடி வாங்காம இருந்தா சரிதான்.

இந்திரா said...

//ஜெ.ஜெ said...

யப்பா... நமக்கு இந்த பிரச்சனை இல்லப்பா....

நல்ல பதிவு இந்திரா... :)//


இல்லைனு நீங்க சொன்னா போதாது. உங்க கூட இருக்குறவங்க கிட்ட தான் கேக்கணும்.

இந்திரா said...

//காஞ்சி முரளி said...நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க...!

நடக்கணுமே...!//


கஷ்டம் தான். ஆனாலும் அதற்கான முயற்சியாவது இருக்க வேண்டும் என்பது தான் நம் ஆசை.

சே.குமார் said...

வழக்கம் போல் உங்கள் கட்டுரை அருமை.

வெட்டிப்பேச்சு said...

நல்லாயிருக்குங்க...

மாணவன் said...

இப்ப முடிவா என்னதான் சொல்ல வர்றீங்க.... ஹிஹிஹி

சிறப்பா எழுதியிருக்கீங்க பிரமாதம்(வேற என்னத்த சொல்ல)ஹிஹிஹி

சுபத்ரா said...

”நீ ஒரு பறவையை நேசிப்பது நிஜமெனில் அதை சுதந்திரமாய் பறக்க விடு.
அது உன்னை நேசிப்பது நிஜமெனில் உன்னிடமே திரும்பி வரும்”

அருமை!! அழகான அலசல் இந்திரா. ஒவ்வொரு வரியும் உண்மை!

வெங்கட் said...

// நல்ல பதிவு இந்திரா //

நான் இதற்கு முரண்படுகிறேன்..

ஹி.,ஹி., ஹி..!!
( எல்லோரும் " நல்லா இருக்குன்னு "
சொல்லும் போது நாம இப்படி எதாவது
Different-ஆ சொன்னாதான் நமக்கு
Publicity கிடைக்கும்.. )

நான் மறுபடியும் சொல்றேன்..
நான் இதற்கு முரண்படுகிறேன்..

S Maharajan said...

அதித அன்பு தான் காரணம்
//மனசு விட்டு வெளிப்படையா பேசினாலே பிரச்சனை தீர்ந்துடும். //
உண்மை தான் இந்திரா அவர்களே.....

வைகை said...

உண்மைதாங்க! இப்ப பாருங்க..போலிஸ் என் ப்ளாக்ல கமென்ட் போடாம உங்க ப்ளாக்ல போட்டா எனக்கு வருதே அதானே?!!!

logu.. said...

Ada... Neengala ithu?

Namabave mmmmmmmmudiyalanga..

வெறும்பய said...

நல்ல பகிர்வு சகோதரி.. நமக்கு இந்த பிரச்சனை அடிக்கடி வருவதுண்டு...

Lakshmi said...

பொசசிவ் அதீத அன்பின் வெளிப்பாடாதான் இருக்கும். நல்ல அலசல்.

dheva said...

All what i can say.....is...

Such a brilliant post which is writen in well matured mannaer..........

at the same time

It's litter difficult to follow Indhira.....

am i right?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாவ்.... நல்லா எழுதியிருக்கீங்க இந்திரா... நல்ல எழுத்து நடை, சரியான அலசல்..... குட் போஸ்ட்....!

♔ம.தி.சுதா♔ said...

///// நமக்கு ரொம்பப் பிடிச்சவங்க, நமக்குப் பிடிக்காதவங்க கூட பேசுறது நமக்குப் பிடிக்கலைனு சொல்லும்போது, நமக்குப் பிடிச்சவங்க, பிடிக்காத அந்த நபர் கூட நமக்குத் தெரியாம பேசுற சூழ்நிலை உருவாகும்னு சொல்றேன். (தெளிவாப் புரிஞ்சிருக்குமே..)/////

ஆமா ஆமா ரொம்பப் புரிஞ்சிடுச்சு... ஹ..ஹ..ஹ..

Srini said...

" ஈகோ பாக்காம தங்களோட கோபங்கள தள்ளிவச்சுட்டு ஒருத்தருக்கொருத்தர் மனசு விட்டு வெளிப்படையா பேசினாலே பிரச்சனை தீர்ந்துடும் " - Moral
ஈகோ பாக்காம பேசி(தீர்த்து)க்கறதுக்கே ஈகோ பாக்கறது நெறய பேரோட குணம் போல..

sulthanonline said...

பரஸ்பர புரிதல் இருந்தால் இந்த பிரச்சனை வராதுன்னு சொல்ல வற்றீங்க உங்க அலசல் நன்றாக இருந்தது VERY NICE

Madurai pandi said...

என்னோட லைப் ஸ்டோரி படிச்ச மாதிரி இருந்துச்சு!!! நல்லா எழுதி இருக்கீங்க.. நீங்க சொன்னது முற்றிலும் சரி...

கல்பனா said...

அப்பட்டமான உண்மை

mahavijay said...

நல்ல பதிவு
எனக்கு உபயோகமா இருக்கு!!

Sethu said...

நல்ல பதிவு இந்திரா...

HariShankar said...

// அதாவது நமக்கு ரொம்பப் பிடிச்சவங்க, நமக்குப் பிடிக்காதவங்க கூட பேசுறது நமக்குப் பிடிக்கலைனு சொல்லும்போது, நமக்குப் பிடிச்சவங்க, பிடிக்காத அந்த நபர் கூட நமக்குத் தெரியாம பேசுற சூழ்நிலை உருவாகும்னு சொல்றேன். (தெளிவாப் புரிஞ்சிருக்குமே..). //

அதெப்படிங்க.. உங்களால இவ்ளோ தெளிவா சொல்ல (குழப்ப :P ) முடியுது.. :)

by d way நல்ல பதிவு இந்திரா...

Related Posts Plugin for WordPress, Blogger...