Thursday, 3 February 2011

இத படிக்காதீங்க.. கடுப்பாய்டுவீங்க...“ஆபீஸ்ல ஒரு சின்ன மீட்டிங். நான் வீட்டுக்க வர லேட் ஆகும். நீ சாப்ட்டு தூங்கு“.. கிருஷ்ணா போனில் சொன்னதும் வசந்திக்கு கோபம் வந்துவிட்டது. “என்னங்க திடீருனு இப்டி சொல்றீங்க?? இப்பவே மணி 10.30 ஆய்டுச்சு. தனியா இருந்தா நா பயப்புடுவேனு உங்களுக்கு தெரியாதா??? ப்ளீஸ் சீக்கிரம் வந்துடுங்க“னு அழுகாத குறையாக கணவனிடம் கெஞ்சினாள். “வந்துட்றேன் செல்லம். முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வந்துட்றேன்டா. நீ கதவெல்லாம் பூட்டிட்டு லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்கு. நா வந்துட்றேன்“னு சொல்லி மனைவியை ஒருவழியாக சமாதானப்படுத்திவிட்டு மீட்டிங்கை தொடர்ந்தான்.

இங்கு..... வசந்தி வாட்ச்சைக் கவலையோடு பார்த்துவிட்டு எழுந்து மெதுவாக நடந்தாள்.. நடந்தாள்.. வாசலுக்கு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரே இருட்டு. வலதுபுறம் இடதுபுறம் முன்புறம் எல்லா பகுதியும் ஒரே இருட்டாக இருந்தது. அக்கம்பக்க வீடுகள் அதிகமில்லாத ஏரியா அது. இனம்புரியாத பயம் அவளைப் பிடித்துக்கொண்டது. மெதுவாய் உள்ளே சென்று வாசற்கதவைப் பூட்டி தாழ் போட்டாள். மேல் தாழ், நடுத்தாழ் இரண்டையும் போட்டுவிட்டு திரும்பி நடந்தாள்.. நடந்தாள்..

அங்கு..... அலுவலகத்தில் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. கிருஷ்ணா அவர்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தான்.

இங்கு..... திரும்பி நடந்த வசந்தி கிச்சனுக்குள் சென்றாள். சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டுக்கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்று உட்கார்ந்தாள். சாதத்தைப் பிசைந்தாள். வாயருகே கொண்டு சென்றாள்.. திடீரென அப்படியே அசையாமல் இருந்தாள்.. அப்படியே இருந்தாள்.. இன்னும்.. இன்னும்... பிறகு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். பெருமூச்சு விட்டுக்கொண்டபடியே சாப்பிடாமல் அதிலேயே கை கழுவினாள்.

அங்கு..... ஒரு வழியாக மீட்டிங் முடிந்தது. கிருஷ்ணா அலுவலகத்திலிருந்து புறப்பட்டான். மெதுவாக தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

இங்கு..... சாப்பிடாமல் எழுந்த வசந்தி டிவி ஆன் செய்தாள். சோபாவில் உட்கார்ந்து சேனல் மாற்ற ஆரம்பித்தாள். மாற்றினாள்.. மாற்றினாள்.. அடுத்த சேனல்.. அதற்கடுத்த சேனல்.....

“........னங்..........“ திடீரென மாடியில் ஏதோ சத்தம் கேட்க அதிர்ந்தாள். பயத்துடனே மெதுவாக எழுந்தாள். டிவிஐ ஆஃப் செய்துவிட்டு மாடிப்படி அருகே வந்தாள். மெதுவாக எட்டிப் பார்த்துவிட்டு படிகளில் ஏறினாள்......... ஏறினாள்......... ஏறினாள்..

அங்கு........ கிருஷ்ணா பைக்கில் வந்துகொண்டிருந்தான். வேகமாக வந்துகொண்டிருந்தான். வாகனங்களைத் தாண்டி படு வேகமாக வந்துகொண்டிருந்தான்.

இங்கு....... மாடி ஏறிய வசந்தி சத்தம் வந்த திசையில் பார்த்தாள். அங்கே........ அங்கே......... அங்கே............

“மியாவ்.“. ஒரு கருப்புப் பூனை. பயம் தெளிந்து மீண்டும் மாடியிலிருந்து இறங்கினாள். இறங்கினாள். மெதுவாக.. மெதுவாக.. இறங்கினாள்.

அங்கு...... கிருஷ்ணா இன்னும் வந்துகொண்டிருந்தான்.. வந்துகொண்டிருந்தான். வேகமாக வந்துகொண்டிருந்தான்.

இங்கு..... வசந்தி படிகளில் மெதுவாக இன்னும் இறங்கிக் கொண்டிருந்தாள்..

அங்கு.... பைக்கில் கிருஷ்ணா வந்துகொண்டிருந்தான்.

இங்கு....... கடைசிப் படியில் கால் வைத்தாள் வசந்தி... பட்டென கரெண்ட் போனது. எதிர்பாராத அந்த நொடியினால் அவளுக்கு பயத்தால் உடல் வியர்த்து நடுங்கியது. எங்கும் ஒரே அமைதி....... அமைதி.......... அமைதி..

அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது...

“டொக் டொக்“ கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியில் வசந்தி உரைந்துவிட்டாள். தைரியத்தை வரவழைத்து “யாரது“ என்று கேட்டாள். பதிலில்லை. மறுபடியும் தட்டும் ஓசை... “யாருனு கேக்குறேன்ல“ வசந்தியின் குரல் நடுக்கத்துடன் வந்தது. பதிலேதுமில்லை. அந்த இருட்டுக்குள்ளும் அவளுடைய கண்கள் பயத்தில் மின்னியது. “டொக் டொக்“ கதவு தட்டப்பட்டது.. வசந்தி பயத்துடன் உள்ளே நின்றுகொண்டிருந்தாள்.

“டொக் டொக்“...... “டொக் டொக்“....

மெதுவாக கதவருகே சென்றாள் வசந்தி.. கதவின் தாழ்ப்பாளை விளக்கும் நோக்கத்தில் அதன் அருகே கையை கொண்டுசென்றாள். கைகள் நடுங்கியது.

இப்போது கதவு பலமாக தட்டப்பட்டது. “டொக் டொக் டொக்“.. வசந்தியின் கைகள் நடுங்கியது.... “டொக் டொக்“... நடுக்கம்.. “டொக் டொக்“.. நடுக்கம்..

மெதுவாக கதவின் தாழ்ப்பாள் நீக்கித் திறந்தாள். அங்கே.. அங்கே... அங்ங்ங்ங்கே..

தொடரும்“னு கொட்ட எழுத்துல போட்டுட்டாய்ங்க..

என்ன முறைக்குறீங்க??? அதான் படிக்காதீங்கனு சொன்னோம்ல... படிச்சு முடிக்கிறதுக்குள்ள கடுப்பாய்ருப்பீங்களே.. படிச்சதுக்கே இப்டினா டிவில பாத்த எனக்கு எப்டி இருக்கும். அட ஆமாங்க.. இது ஒரு மெகா தொடரோட ஒரு அத்தியாயம்.

சத்தியமா சொல்றேங்க.. எனக்கு சீரியல் பாக்குற பழக்கமே இல்ல. ஆனா மத்தவங்க அதுல வர்ற கதையப் பத்தி பேசும்போது அப்டி என்னதான் இருக்குனு நேத்து ஒரு சீரியல் பாக்கலாம்னு உக்காந்தேன்.

ஐய்யயோ... இனிமே மறந்துகூட சீரியல் பாக்க கூடாதுடா சாமி.. நா மேல சொன்ன காட்சி தான் ஒரு அத்தியாயம் முழுதும் ஓட்டினாய்ங்க. அந்த வசந்தி நிக்கிறது, நடக்குறது, பாக்குறது எல்லாமே ஸ்லோ மோசன்ல் காட்டி கொன்னுட்டானுக. அவ மெதுவா மாடிப்படி ஏறுனத மட்டும் விடாம அஞ்சு நிமிசம் காட்றாங்க. பத்தாததுக்கு பேக்ரவுண்ட் மியூசிக் வேற.. அதோட எட்டு கோணல்ல கேமராவ சுத்த விட்டு விளையாட்றாய்ங்க.

எப்டியும் கதவை திறந்ததும் கிருஷ்ணா தான் நிப்பான்னு நமக்கே தெரியும்.. இந்த லட்சணத்துல பெருசா ட்விஸ்ட் வைக்கிறதா நெனச்சு “தொடரும்“னு வேற போட்டுட்டாங்க. அந்த கிருஷ்ணா பைக் ஓட்றதையும், வசந்தி வாட்ச்சப் பாக்குறதையும் வச்சே ஒரு அத்தியாயம் முடிச்சுட்டாங்க. இந்த மாதிரி சீரியல்ல, மோஷன் போறத தவிற மத்த எல்லாத்தையும் ஸ்லோ மோசன்ல காட்டி நம்ம பொறுமைய ரொம்பவே சோதிக்கிறாங்க.

இதுல எட்டு நிமிசத்துக்கு ஒரு தடவை விளம்பர இடைவேளை வேற. முப்பது நிமிச நாடகத்துல பதினொரு நிமிசம் விளம்பரம். விளங்குமா இது??? இவனுக காசு சம்பாதிக்கிறதுக்காக இப்டி மொக்கையான தொடர்கள வருஷக்கணக்கா ஒளிபரப்பி நம்ம உசுர வாங்குறாய்ங்க. இத, ஒரு நாள்கூட விடாம டெய்லி எப்டிதான் பாக்குறாங்களோ தெரில. இதுல, பாக்காம மிஸ் பண்ணிட்டோம்னு அடுத்தநாள் வந்து, கதைய வேற கேப்பாங்க பாருங்க... பக்கத்துல இருக்குற நமக்கு கடுப்பு தான் வருது. இதுல யார தப்பு சொல்றதுனே புரிய மாட்டீங்குது..

இதுல என்ன கொடுமைனா எந்த சீரியல் பெஸ்ட்டுனு அவார்டு வேற குடுத்துப் பாராட்டுவாங்களாம். ஹய்யோ.. ஹய்ய்ய்யோ..

சரி சரி.. டைம் ஆய்டுச்சு. அவங்கவங்க பாக்குற சீரியல போய்ப் பாருங்க..

அடுத்த பதிவுல சந்திக்கலாம்.

.

.

74 comments:

S Maharajan said...

கொஞ்சம் கடுப்பதான் ஆயிட்டேன்..........

சங்கவி said...

வடை எனக்கு...

இந்திரா said...

//சங்கவி said...

வடை எனக்கு...//


உங்களுக்கே தான்

சங்கவி said...

நீங்க சீரியல் பார்த்து கெடறது இல்லாம எங்களையும் கடுப்பேத்தறீங்க...

இந்திரா said...

//S Maharajan said...

கொஞ்சம் கடுப்பதான் ஆயிட்டேன்..........//


படிச்சா தான் கடுப்பாவீங்க.. சும்மா பாத்தா இல்ல..

ரேவா said...

தோழி அங்கே இங்கேன்னு அலையை வட்சுடேங்க...ஏதோ த்ரில்லர் தொடர்னு நினச்சு படிச்சா உங்கள் tilte பொருத்தம் போங்க..ஹஹாஹா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

Enakkum ippa kaduppu.... Innaikkum VADA poochaenu....

vinu said...

ithellam oru pathivunnu theatththi kaligaalam kaligaalam

எல் கே said...

எங்களைப் பார்த்தா பாவமா இல்லையா இந்திரா ?

R.Gopi said...

இந்த திகில் கதைய படிச்சு நான் ஆடிபூட்டேன்....

sulthanonline said...

சரி சரி.. டைம் ஆய்டுச்சு. அவங்கவங்க பாக்குற சீரியல போய்ப் பாருங்க..

NALLAVELAI NAAN SERIAL PARKIRATHILLAI

UNGALUKKU AWARD THAN KODUKKANUM

Speed Master said...

இதற்குதான் நான் சுட்டி டீவீ மட்டும் பார்க்கிறேன்


இனிமேல் எல்லாரும் அதையே பாருங்க
TO :
அங்கிள்ஸ்
ஆண்டி
அண்ணன்
அக்கா

Arun Prasath said...

நெஜம்மா ஏதோ கதைன்னு தான் நெனச்சிட்டேன்.....

karthikkumar said...

ஒரு பதிவு போடணுமே அப்டின்னு மெனக்கெட்டு அந்த சீரியல் பாத்து இருக்கீங்க.... அந்த கொடுமைய இங்க வேற வந்து சொல்றீங்க...... ஐயோ ராமா........

karthikkumar said...

Arun Prasath said...
நெஜம்மா ஏதோ கதைன்னு தான் நெனச்சிட்டேன்..///

பல்பு வாங்குனியா மச்சி ஹா ஹா ....:) (குறிப்பு நான் இந்த பதிவை படிக்கும்போது மொக்கையா இருக்கும்னு நெனச்சிதான் படிச்சேன்)

ஹேமா said...

இந்திரா....இது கடுப்புக்கே கடுப்பான விஷயமெல்லோ !

ஜெ.ஜெ said...

இதுல என்ன கொடுமைனா எந்த சீரியல் பெஸ்ட்டுனு அவார்டு வேற குடுத்துப் பாராட்டுவாங்களாம். ஹய்யோ.. ஹய்ய்ய்யோ..///

ஹி ஹி..

எங்க வீட்லயும் என்ன டிவி பாக்க விடுறதே இல்ல... ஒரே சீரியல் தான்.. :(

தமிழ் அமுதன் said...

சரி படிக்கல..!;)

MANO நாஞ்சில் மனோ said...

நான் அங்கே வந்தேன்னா கொன்னேபுடுவேன்......
ஹா ஹா ஹா ஹா கடுப்பா ஏத்துறீங்க கடுப்பு....

MANO நாஞ்சில் மனோ said...

இனி இப்பிடி சீரியல் எடுக்குரவங்களை எல்லாம் எகிப்துல கொண்டு போயி விட்ருவோம்னு ஒரு சட்டமே கொண்டு வரணும்.....

MANO நாஞ்சில் மனோ said...

ஆனாலும் சும்மா சொல்லபூடாது மக்கா உங்க வர்ணிப்பு சூப்பரா இருக்கு....

கவிதை காதலன் said...

ஏன் சொல்ல மாட்டீங்க?? நோ கமெண்ட்ஸ்...

Balaji saravana said...

இந்த மாதிரி சீரியல்லாம் பார்த்தா இருக்குகிற கொஞ்ச நஞ்ச சிந்தனை சக்தியும் காணாம போயிரும்! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

im not coming here. avvvvvvvvv

காஞ்சி முரளி said...

ha..!
ha..ha...ha..!
ha..ha..ha.. ha...!

Ramani said...

என்னது சினிமாவில் கட் ஷாட் வருவதைப் போலவே
மிக அழகாக சொல்லிப் போகிறார்களே
படித் து முடித்து ஒரு நல்ல பாராட்டப் போடனும்னு
இருந்தேன் கடைசியில பார்த்தா.....வாழ்த்துக்கள்

தீபிகா said...

கொடுமை கொடுமை...

இங்கும் வாங்க,
http://avanidamnaan.blogspot.com/

Philosophy Prabhakaran said...

சத்தியமா படிக்கலை மேடம்... ஸ்க்ரோல் பண்ணிட்டேன் :)))

வருண் said...

நெசம்மாவே நீங்க என்ன எழுதி இருக்கீங்கனு படிக்கலை. கடுப்பும் ஆகலை!

ஏன் இப்படி எழுதி "கடுப்பை" கிளப்புறீங்க? :(

நீங்க சொன்னபடி படிக்காதனால +1 கொடுக்கிறதா இல்லை -1 கொடுக்கிறானு முடிவு செய்ய முடியலை! :(

siva said...

meeeeeee the first....

:)
:)
:)

wonder....

இந்திரா said...

//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

Enakkum ippa kaduppu.... Innaikkum VADA poochaenu....//


விடாம முயற்சி பண்ணுங்க பாஸ்.. கண்டிப்பா வடை கிடைக்கும்..

இந்திரா said...

//சங்கவி said...

நீங்க சீரியல் பார்த்து கெடறது இல்லாம எங்களையும் கடுப்பேத்தறீங்க...//


ஐயயோ.. எனக்கு சீரியல் பாக்குற பழக்கமில்லீங்க.. ஒரே ஒரு தடவை தான் பாத்தேன். அதுவும் இப்டி ஆய்டுச்சு..

இந்திரா said...

//vinu said...

ithellam oru pathivunnu theatththi kaligaalam kaligaalam//


இப்டி சொன்னா உங்க விட்ருவோமா??? ஒழுங்கா முழு பதிவையும் படிக்கணும் சொல்லிபுட்டேன்.

இந்திரா said...

//ரேவா said...

தோழி அங்கே இங்கேன்னு அலையை வட்சுடேங்க...ஏதோ த்ரில்லர் தொடர்னு நினச்சு படிச்சா உங்கள் tilte பொருத்தம் போங்க..ஹஹாஹா//


ஹாஹா பல்பு வாங்குனீங்களா.. ஹாஹா

இந்திரா said...

//எல் கே said...

எங்களைப் பார்த்தா பாவமா இல்லையா இந்திரா ?//


ஹிஹி..
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...

இந்திரா said...

//R.Gopi said...

இந்த திகில் கதைய படிச்சு நான் ஆடிபூட்டேன்....//


பயபுள்ள பல்பு வாங்குனத எப்டியெல்லாம் சமாளிக்குது..

இந்திரா said...

//Speed Master said...

இதற்குதான் நான் சுட்டி டீவீ மட்டும் பார்க்கிறேன்


இனிமேல் எல்லாரும் அதையே பாருங்க
TO :
அங்கிள்ஸ்
ஆண்டி
அண்ணன்
அக்கா//


அப்டினா என்ன மாதிரி குட்டீஸ்களுக்கு???

இந்திரா said...

//sulthanonline said...


NALLAVELAI NAAN SERIAL PARKIRATHILLAI

UNGALUKKU AWARD THAN KODUKKANUM//


அவார்டா?? என்ன அவார்டு???? நல்ல்ல்ல (!!!!!) பதிவுகளா எழுதி உங்கள கொல்றேன்னா????

இந்திரா said...

//karthikkumar said...

ஒரு பதிவு போடணுமே அப்டின்னு மெனக்கெட்டு அந்த சீரியல் பாத்து இருக்கீங்க.... அந்த கொடுமைய இங்க வேற வந்து சொல்றீங்க...... ஐயோ ராமா........//


பதிவு போட்றதுக்காக சீரியல் பாக்கலங்க.. சீரியல் பாத்த கொடுமைய தான் பதிவுல சொல்லிருக்கேன்.. அவ்வ்வ்வ்

இந்திரா said...

//ஹேமா said...

இந்திரா....இது கடுப்புக்கே கடுப்பான விஷயமெல்லோ !//


ஹிஹி கடுப்பா இருக்கீங்கனு புரியுது ஹேமா..
சரி சரி.. விடுங்க..

இந்திரா said...

//Arun Prasath said...

நெஜம்மா ஏதோ கதைன்னு தான் நெனச்சிட்டேன்.....//


பல்பு வாங்குனீங்களா.. பல்பு வாங்குனீங்களா... நா தான் தலைப்புலயே சொன்னேன்ல..

இந்திரா said...

//ஜெ.ஜெ said...


ஹி ஹி..

எங்க வீட்லயும் என்ன டிவி பாக்க விடுறதே இல்ல... ஒரே சீரியல் தான்.. :(//


உங்க புலம்பல் எனக்கு கேக்குதுங்க..

இந்திரா said...

//karthikkumar said...


(குறிப்பு நான் இந்த பதிவை படிக்கும்போது மொக்கையா இருக்கும்னு நெனச்சிதான் படிச்சேன்)//


நல்லா சமாளிக்கிறாங்கய்யா....

இந்திரா said...

//MANO நாஞ்சில் மனோ said...

ஆனாலும் சும்மா சொல்லபூடாது மக்கா உங்க வர்ணிப்பு சூப்பரா இருக்கு....//


ஹிஹி டாங்க்ஸ்ங்க..

இந்திரா said...

//MANO நாஞ்சில் மனோ said...

நான் அங்கே வந்தேன்னா கொன்னேபுடுவேன்......
ஹா ஹா ஹா ஹா கடுப்பா ஏத்துறீங்க கடுப்பு....//ஐயயோ... மீ பாவமுங்க......

இந்திரா said...

//தமிழ் அமுதன் said...

சரி படிக்கல..!;)//


இல்லன்னாஆஆஆஆலும்....

இந்திரா said...

//கவிதை காதலன் said...

ஏன் சொல்ல மாட்டீங்க?? நோ கமெண்ட்ஸ்...//


ம்ம் ஓகே.. புரிஞ்சிடுச்சுங்க..

இந்திரா said...

//MANO நாஞ்சில் மனோ said...

இனி இப்பிடி சீரியல் எடுக்குரவங்களை எல்லாம் எகிப்துல கொண்டு போயி விட்ருவோம்னு ஒரு சட்டமே கொண்டு வரணும்.....//


எகிப்துல இந்த மாதிரி சீரியல் தொந்தரவெல்லாம் இல்லையா????

இந்திரா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

im not coming here. avvvvvvvvv//


ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..

இந்திரா said...

//Balaji saravana said...

இந்த மாதிரி சீரியல்லாம் பார்த்தா இருக்குகிற கொஞ்ச நஞ்ச சிந்தனை சக்தியும் காணாம போயிரும்! :)//


அப்படி என்னதான் ஜிந்திச்சுகிட்டு இருக்கீங்க பாலாஜி????

இந்திரா said...

//காஞ்சி முரளி said...

ha..!
ha..ha...ha..!
ha..ha..ha.. ha...!//


ஓகே ஓகே.. பல்பு வாங்கிட்டீங்கனு புரியுது..

இந்திரா said...

//Ramani said...

என்னது சினிமாவில் கட் ஷாட் வருவதைப் போலவே
மிக அழகாக சொல்லிப் போகிறார்களே
படித் து முடித்து ஒரு நல்ல பாராட்டப் போடனும்னு
இருந்தேன் கடைசியில பார்த்தா.....வாழ்த்துக்கள்//


பாராட்டுக்கு பதிலாக வாழ்த்தா???? ஏதோ ஒண்ணு.. சந்தோசமுங்க..

அன்புடன் மலிக்கா said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வாருங்கள்..http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_04.html

இந்திரா said...

//Philosophy Prabhakaran said...

சத்தியமா படிக்கலை மேடம்... ஸ்க்ரோல் பண்ணிட்டேன் :)))//


இப்டி சொல்லி எஸ்கேப் ஆக முடியாது.. ஒழுங்கா முழு பதிவையும் படிக்கணும். அது தான் உங்களுக்கு தண்டனை.

இந்திரா said...

//தீபிகா said...

கொடுமை கொடுமை...

இங்கும் வாங்க,
http://avanidamnaan.blogspot.com///


இதோ வரேன் தீபிகா..

இந்திரா said...

//siva said...

meeeeeee the first....

:)
:)
:)

wonder....//


இங்க யாரோ பஸ் நம்பர் மாறி ஏறிட்டாங்கப்பா..

இந்திரா said...

//வருண் said...

நெசம்மாவே நீங்க என்ன எழுதி இருக்கீங்கனு படிக்கலை. கடுப்பும் ஆகலை!

ஏன் இப்படி எழுதி "கடுப்பை" கிளப்புறீங்க? :(

நீங்க சொன்னபடி படிக்காதனால +1 கொடுக்கிறதா இல்லை -1 கொடுக்கிறானு முடிவு செய்ய முடியலை! :(//


+க்கும் -க்கும் சமமாய்டுச்சுங்க...
அப்புறம் உங்க இஷ்டம்.. ஹிஹி

இந்திரா said...

//அன்புடன் மலிக்கா said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வாருங்கள்..http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_04.html//


அப்படியா??? நன்றிங்க.
இதோ வரேன்.

காஞ்சி முரளி said...

///கனவுகள் பூக்கும் தோட்டத்தை
கண்களுக்கு தேக்கி வைத்து
வெள்ளையருவியாய் விழிவழியே
வெளியேற்றும் வித்தைகளறிந்து/// எனும் கவிதை வரிகளால் "வலைச்சரத்"தில் இரண்டாவது இடத்தில் இன்றைய பதிவில் "மலிக்கா" அறிமுகப்படுத்தியுள்ளார்...!

வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....! வாழ்த்துக்கள்....!

IT said...

Aiyo amma..... daily night 6 mani muthal 10 mani verai enga patti enna kolapanranga..... Thanga ve mudiyala.....

பழமைபேசி said...

பொறுமையாப் பார்த்துட்டு, அதே பொறுமையோடு எழுதி இருக்கீங்க பாருங்க.... வாழ்த்துகள்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///இதுல, பாக்காம மிஸ் பண்ணிட்டோம்னு அடுத்தநாள் வந்து, கதைய வேற கேப்பாங்க பாருங்க... பக்கத்துல இருக்குற நமக்கு கடுப்பு தான் வருது.///

ஹா ஹா ஹா... உண்மையில் ரசிச்சு படிச்சேன்... முடியல..

நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.. எனக்கும் சீரியல் பார்க்கவே பிடிக்காது.. டென்ஷன் ஆயிருவேன்.. எப்படித் தான் பொறுமையா பாக்குராங்க்களோ?? ஹ்ம்ம்.. :-)

தேங்க்ஸ்..

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

ஏன் ரென்சன் ஆக்கிறிங்கள் இந்திரா? படிக்கும் போது நல்லா போகுதென்று பாத்திட்டுப்போன.... (: அடுத்த தொடரை பார்த்திட்டு முடிவை போடனும் சரியா இந்திரா...

உளவாளி said...

ரொம்ப கடுபாய்டென்.. இது சீரியல் பாக்ரதவிட கடுப்பு .. :)

அன்னு said...

//இந்த மாதிரி சீரியல்ல, மோஷன் போறத தவிற மத்த எல்லாத்தையும் ஸ்லோ மோசன்ல காட்டி நம்ம பொறுமைய ரொம்பவே சோதிக்கிறாங்க//

இந்திராக்கா... ரெம்பவே நொந்துட்டீங்க போல... ஹெ ஹெ... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அதுக்காக இப்படியா எங்களையும் சேர்த்து நோக வக்கனும்??

:)

சி.பி.செந்தில்குமார் said...

oru ஒரு அட்டண்டன்ஸ்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஒருநாள் ஒரு சீர்யல பார்த்ததுக்கே இப்படியென்றால்.... தினமும் எல்லா சீரியலும் பார்த்தா? நீங்கள் சீரியஸ் சீரியல் கில்லரா மாறிவிடுவீங்க போலிருக்கு... இனி அந்தபக்கம் போகாதீங்க... நமக்கு அந்ததிசை ஜாதகத்துல டைம் சரியில்லனு இப்படியே வேறபக்கம் திரும்பி பார்க்காம வந்துடுங்க...

guna said...

this is a grt thing. a girl s telling that tv serials are mokai.. Naadu thirundhirum...

பாலா said...

சரி. அடுத்தது என்னாச்சுங்க? ஒரே டென்சனா இருக்கு. அடுத்த அத்யாயம் பாத்துட்டு கதை சொல்லுங்க. வந்தது உண்மையிலேயே யாருன்னு.

வெட்டிப்பேச்சு said...

படிச்சதும் நெசமாலுமே கடுப்பாய்ட்டேங்க...

அசோக்.S said...

இந்த திகில் கதைய படிச்சு நான் உண்மையிலேயே கடுப்பாய்ட்டேங்க...

Arunsiva said...

உங்க கதை பரவாயில்லை டைடில் சாங் கேப்ல முடிச்சிட்டேன், ஆனா சீரியலில் தொடரும் போடும் வரை அம்மா பக்கத்திலேயே சத்தம் போடாமல் இருக்க வேண்டும், அப்ப தான் சாப்பாடு. . .

தோழர் வலிப்போக்கன் said...

எனக்கு முன்னாடியே தெரியும்.நடக்குறது.பைக்கில வேகமா வர்ரது.இது டிவியிலதான் வழுமுன்னு??

Related Posts Plugin for WordPress, Blogger...