காதல் ஸ்பெஷல்...
கைகளில் அழகுபடுத்திய மருதாணியுடன்
புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்..
கைபேசியில் பேசிக்கொண்டே எனைக் கடந்தபோது
வெகுநேரம் முன்வந்து தொந்தரவு செய்த என் ஒற்றை முடியை
காதோரம் ஒதுக்கி விட்டுச் சென்றாயே..
அந்த நொடியில்..

அருகமர்ந்து பேசியபடியே
உன் தோள் சாய்ந்து தூங்கியிருந்தேன்..
ஏதும் சொல்லாமல் என் பக்கமாய்
உன் தலையை சாய்த்துக்கொண்டாயே..
அந்த நொடியில்..

நானே செய்ததாகச் சொல்லி
உன்னிடம் நீட்டிய பலகாரத்தை
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
“சூப்பரா இருக்குப்பா“னு சொல்லி சமாளித்தாயே..
அந்த நொடியில்..

பேருந்துப் பயணத்தின் கூட்டத்தினிடையே
என்னை உற்று நோக்கிய யாரோ ஒருவனை
எரித்துவிடுவதாய் பார்வை வீசினாயே..
அந்த நொடியில்..
ஒவ்வொரு முறையும்
எனக்கான பிறந்தநாளை மறந்துவிட்டு,
கோபித்துக்கொண்ட என்னை சமாதானம் செய்ய
ஏதேதோ கோமாளித்தனங்கள் செய்வாயே..
அந்த நொடியில்..
புதிதாய் வாங்கிய பேனாவை
எழுதிப்பார்க்க ஆசைப்பட்டு ஏதோ கிறுக்கினாய்..
என்னவென்பதை எடுத்துப் பார்க்க
என் பெயர் இருந்ததே....
அந்த நொடியில்..
அழைபேசியில் வரும் கணிணி குரலை
“சொல்லுடா செல்லம்“ என அழைத்து
வேண்டுமென்றே வெறுப்பேற்றி
என்னிடம் அடி வாங்குவாயே..
அந்த நொடியில்..
புதிதாய் புடவை உடுத்திவந்த என்னை
செல்லமாய் தலையில் குட்டி
“எப்டி சேலை கட்டிருக்க பாரு“என தரையமர்ந்து
கீழ் மடிப்புகளை சரிசெய்தாயே..
அந்த நொடியில்..
எப்போதும் பேர் சொல்லியே அழைக்கும் நீ
காதல் அதிகமாகும்போது மட்டும்
“கோழிகுஞ்சு“என என்னிடம் சிணுங்குவாயே..
அந்த நொடியில்..சொர்க்கமும் நரகமாய்
நீ அருகிலில்லாத இந்த காதலர் தினம்..
பிரிவின் ஏக்கத்தில் தவித்துக்கிடந்த தருணம்
உன்னிடம் வந்த குறுஞ்செய்தி.. “ஐ மிஸ் யூடி கோழிகுஞ்சு“..
இந்த நொடியில்...
.
.
“ஐ லவ் யூடா
.
.

Comments

அருகினில் இல்லாமல் போனாலும்
தொலைவில் இருந்தாலும் கொண்ட
அன்பினில் மட்டும்என்றும் மாறாமல் ...

மிகவும் அருமை கோழிக்குஞ்சு
இந்திரா. கலக்கல் கவிதைகள். ஸ்டில்ஸ் எல்லாம் அருமை
>>>வெகுநேரம் முன்வந்து தொந்தரவு செய்த என் ஒற்றை முடியை

காதோரம் ஒதுக்கி விட்டுச் சென்றாயே..

அந்த நொடியில்..

இது டாப்பு
Balaji saravana said…
காதலின் நொடிகளை ரொம்ப அழகா வரிசைப் படுத்திட்டீங்க இந்திரா! செம! படங்கள் எல்லாமே சூப்பர்!அந்த கடைசிப் படம் என்னோட பதிவுலயும் வரப்போகுது. :)
மதி said…
கைபேசியில் பேசிக்கொண்டே எனைக் கடந்தபோது
வெகுநேரம் முன்வந்து தொந்தரவு செய்த என் ஒற்றை முடியை
காதோரம் ஒதுக்கி விட்டுச் சென்றாயே..
அந்த நொடியில்..
sema lines.. a good one at right timing ..
read the V-day poem on a lighter tone in blog too when you find time ஆயிரம் friend request கொடுத்த அபூர்வ அழகுராஜா
http://sunshinesignatures.blogspot.com/2011/02/friend-request.html
//உன்னிடம் வந்த குறுஞ்செய்தி.. “ஐ மிஸ் யூடி கோழிகுஞ்சு“..

இந்த நொடியில்...//


அசத்தல் கிறுக்கல்கள் அட்டகாசம்.....

.
//ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..//

:)

அவதாரத்த எந்த கோர்ட்டுல வந்து கெட்டணும்ன்னு சொல்லுங்க கெட்டிடுவோம்..

கோழிக்குஞ்சு புதுசா இருக்கு..

மீதியெல்லாம் சினிமா பார்த்த எஃபெக்ட்டுத்தா..நீங்க ஏன் சினிமா எடுக்கக்கூடாது..

;))

கதை
காதல்
வசனம்
டைரக்சன்

இந்திரா

டைரக்டரி இந்திரா வாழ்க வாழ்க

:))
mahavijay said…
ஒவ்வொரு முறையும்
எனக்கான பிறந்தநாளை மறந்துவிட்டு,
கோபித்துக்கொண்ட என்னை சமாதானம் செய்ய
ஏதேதோ கோமாளித்தனங்கள் செய்வாயே..
அந்த நொடியில்..

இந்த வரிகள் அற்புதமா இருக்கு..
siva said…
புதிதாய் வாங்கிய பேனாவை
எழுதிப்பார்க்க ஆசைப்பட்டு ஏதோ கிறுக்கினாய்..
என்னவென்பதை எடுத்துப் பார்க்க
என் பெயர் இருந்ததே....
அந்த நொடியில்..//


அந்த நொடியில்..

இது டாப்பு
siva said…
டைரக்டரி இந்திரா வாழ்க வாழ்க ....
no no no

no no no

no no no...........

வாழ்க வளமுடன்
siva said…
கோழிகுஞ்சு..//

what is this?கோழிகுஞ்சு
logu.. said…
hyooda...

Kathal anda andava valiuthu...
semma kalakkal.
logu.. said…
\\ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..\\

Hellow... basica nangalam migaperiya
roudi... engaluke merattala?
logu.. said…
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
வாய்ப்பே இல்லைங்க . அவ்ளோ அருமையா இருக்கு ..
எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதறீங்களோ ?
என்னனே தெரியல இன்னிக்கு நான் ஒரு மூணு ப்ளோக்ல கவிதை படிச்சேன் ,
மூணுமே செமையா இருக்கு .. இது எப்படி ? என்னமோ காதலர் தின ஸ்பெஷல் சூப்பர் ..
//சொர்க்கமும் நரகமாய்

நீ அருகிலில்லாத இந்த காதலர் தினம்..//

நல்லாயிருக்குங்க...
sorry.. for the distabance...!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
sulthanonline said…
காதலர் தினத்தில் காதலி அருகில் இல்லாத நாள் நரகம்தான் அருமை . இனிய காதலர் தின வாழ்த்துக்கள் தோழி
இது கவிதைகள் அல்ல நன்கு புரிந்தது உங்கள் கரு விழிகள் சொல்லும் உண்மை இது,,, அருமையான படைப்புகள் என்று நான் ஒத்துக்கொள்ள முடியாது,,,, உங்கள் படைப்பு அனுபவ படைப்பாக இருக்கிறது ,, காதல் அனுபவத்தை உடையவனிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளவும் இது எனது கருத்து,,,,,,,
kalai said…
super alla photosm supera eruku unga kavithai marihappy valentines day
Part Time Jobs said…
Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

MOre info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
////ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..//

:)

அவதாரத்த எந்த கோர்ட்டுல வந்து கெட்டணும்ன்னு சொல்லுங்க கெட்டிடுவோம்..

கோழிக்குஞ்சு புதுசா இருக்கு..

மீதியெல்லாம் சினிமா பார்த்த எஃபெக்ட்டுத்தா..நீங்க ஏன் சினிமா எடுக்கக்கூடாது..

;))

கதை
காதல்
வசனம்
டைரக்சன்

இந்திரா

டைரக்டரி இந்திரா வாழ்க வாழ்க

:))//

நன்றி- கமெண்ட் உபயம் அண்ணன் ப்ரியமுடன் வசந்த் :))
ஓ.... இதுதான் காதலர் தின ஸ்பெஷலா... நல்லாருக்கு நல்லாருக்கு.. :))
//“ஐ லவ் யூடா”//

ஓகே ரைட்டு... வாழ்த்துக்கள் :))
சகோ..இந்திரா..

காதல் கவிதை அருமை..

என்ன சொல்லன்னே தெரியல..

சின்ன சின்ன தருணங்களில் பூக்கும் இயல்பான காதலை சொல்லி இருக்கும் விதம் அழகு..

அன்புடன்
ரஜின்
மிகவும் அருமை.
அருமை அருமை!!!
////ஒவ்வொரு முறையும்

எனக்கான பிறந்தநாளை மறந்துவிட்டு,

கோபித்துக்கொண்ட என்னை சமாதானம் செய்ய

ஏதேதோ கோமாளித்தனங்கள் செய்வாயே..

அந்த நொடியில்..//////

:))

என்னது அபராதமா? (அது சரிக்குச் சரியாயிடுச்சு...!)
R.Gopi said…
காதலின் மிக அருமையான நொடிகள் கவிதையாய் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது...

அனைத்து நொடிகளும் அருமை என்றாலும் முத்தாய்ப்பாக வந்த அந்த முடிவு கவிதைக்கு மெருகூட்டி, அழகூட்டியது...

க்யூட் கோழி குஞ்சு போன்ற அருமையான காதல்...
மிக அருமை...........(Pictures)
பாராட்டுக்களையும் கருத்துக்களையும் பின்னூட்டம் மூலம் தெரிவித்த, தெரிவிக்கப்போகும் நண்பர்களுக்கு என் நன்றிகள்

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..